என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான்.
    • இவரது வீட்டில் இருவர் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். மும்பையில் பாந்த்ரா பகுதியில் இருக்கும் அவரது பிரமாண்டமான மன்னத் வீடு எப்போதும் பாதுகாப்பு நிறைந்ததாகவே இருக்கும். தனியார் பாதுகாவலர்கள் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் ஷாருக்கானை பார்ப்பதற்காக ரசிகர்கள் வீட்டின் முன்பாக குவிந்தபடியே இருப்பார்கள்.

     

    ஷாருக்கான் 

    ஷாருக்கான் 


    இந்நிலையில் நேற்று காலையில் இரு மர்ம ஆசாமிகள் ஷாருக்கான் வீட்டின் முன்புற சுவரைத்தாண்டிக் குதித்து வீட்டின் உள்ளே நுழைய முயற்சி செய்திருக்கிறார்கள். அவர்களை பார்த்து விட்ட பாதுகாவலர்கள் உடனடியாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறை விசாரணையில் அவர்கள் குஜராத்தைச் சேர்ந்த வர்கள் என்றும் ஷாருக்கானின் தீவிர ரசிகர்கள் என்றும் கூறியுள்ளனர். ஆனாலும் பாதுகாப்பை மீறி நுழைந்ததால் அவர்கள் மீது அத்துமீறி நுழைதல் உள்படப் பல பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிந்திருக்கிறார்கள்.

    • இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'.
    • இப்படத்தின் டிரைலரை சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது.

    கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

     

    கண்ணை நம்பாதே

    கண்ணை நம்பாதே


    மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ' இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.


    கண்ணை நம்பாதே

    கண்ணை நம்பாதே

    இந்நிலையில் கண்ணை நம்பாதே படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற மார்ச் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'.
    • இப்படத்தின் புதிய அறிவிப்பை கௌதம் கார்த்திக் தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின் ரமணா, கஜினி என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பதித்துக்கொண்டார். இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார்.


    1947- ஆகஸ்ட் 16

    இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார்.


    1947- ஆகஸ்ட் 16

    அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'கோட்டிக்கார பயலே' பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.


    1947- ஆகஸ்ட் 16

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, '1947- ஆகஸ்ட் 16' திரைப்படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை கௌதம் கார்த்திக் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • நடிகர் ஜெயம் ரவி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘அகிலன்’.
    • இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.


    அகிலன்

    இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியானது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.


    அகிலன் போஸ்டர்

    இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, 'அகிலன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா நாளை சென்னையில் வைத்து நடைபெறவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    'அகிலன்' திரைப்படம் வருகிற மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’.
    • இந்த படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

    லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியுள்ள சொப்பன சுந்தரி படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ அண்மையில் வெளியானது. டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

     


    இந்நிலையில் சொப்பன சுந்தரி படத்தின் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதனை இயக்குனர் மோகன் ராஜா வெளியிட்டார். அதன்பின் அவர் பேசியதாவது, ''என்னுடைய உதவியாளராக பணியாற்றிய இப்படத்தின் இயக்குனர் சார்லஸ் பிரபு கடும் உழைப்பாளி. 'வேலைக்காரன்' படத்தின் வெற்றியில் அவரின் பங்களிப்பு அதிகம். அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இயக்குனராக உயர்ந்திருப்பது எனக்கு பெருமை. அவர் லாக் டவுன் காலகட்டத்தில் 'லாக்கப்' எனும் படத்தை இயக்கினார். 'லாக்கப்' ஒரு உணர்வுபூர்வமான படைப்பு.

    சார்லஸின் கதையை ஒப்புக்கொண்டு நடித்ததற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 'சொப்பன சுந்தரி' என்றதும் அனைவருக்கும் 'கரகாட்டக்காரன்' பட காமெடி காட்சிகள் நினைவுக்கு வரும். இந்த 'சொப்பன சுந்தரி'யை பட வெளியிட்டிற்குப் பிறகு ரசிகர்களின் மனதில் வைத்துக் கொள்வார்கள்.


    சொப்பன சுந்தரி 

    சொப்பன சுந்தரி 


    அண்மை காலமாக 'தரமற்ற படத்தை பார்வையிட்டாலே தவறு' என்று ரசிகர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், ரசிகர்களாகிய நீங்கள் திரையரங்கத்திற்கு சென்று படத்தை பார்வையிட்டு, நீங்கள் தான் நல்ல படமா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வேண்டும். அதனால் அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தர வேண்டும். நீங்கள் வருகை தருவதால் தான் எங்களுடைய வாழ்வாதாரம் நடைபெறுகிறது. விமர்சனம் நன்றாக இருந்தால்தான் திரையரங்கத்திற்கு வருவோம் என்ற மனநிலையை ரசிகர்களும், பார்வையாளர்களும் மாற்றிக் கொள்ள வேண்டும்.


    மோகன் ராஜா 

    மோகன் ராஜா 


    விமர்சகர்கள் மற்றும் விமர்சனங்களால் நடுத்தரமான படைப்புகள் என்ற ஒரு சினிமா இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. ஒன்று சூப்பர் ஹிட் அல்லது அட்டர் பிளாப் என்ற இரட்டை நிலை மட்டுமே தற்போது இருக்கிறது. ஆவரேஜ் ஃபிலிம் என்ற ஒரு நிலை உருவாக வேண்டும். இதற்கு அனைவரும், அனைத்து திரைப்படங்களையும், திரையரங்கத்திற்கு சென்று கண்டு ரசித்தால்தான் உருவாகும். தெரிந்து செல்வது சினிமா அல்ல. தெரியாமல் சென்று இருட்டறைக்குள் நீங்கள் ரசித்து முடிவு செய்வது தான் சினிமா. எனவே அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து திரைப்படங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

    • இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கள்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் 'கள்வன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


    கள்வன்

    ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, இவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இந்நிலையில், 'கள்வன்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    கள்வன் போஸ்டர்

    அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'அடி கட்டழகு கருவாச்சி' பாடல் நாளை (மார்ச் 4) வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும், அந்த பதில், 'வாத்தி' பட பாடல்கள் வெற்றிக்கு பிறகு வெளியாகும் என் அடுத்த ஆல்பம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் ‘விடுதலை’.
    • இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.

    வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

     

    விடுதலை

    விடுதலை


    இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் முதல் பாடலான 'ஒன்னோட நடந்தா' என்ற பாடல் சுகா வரிகளில் தனுஷ், அநன்யா பட் குரலில் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    விடுதலை அறிவிப்பு
    விடுதலை அறிவிப்பு

    இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி விடுதலை படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை வருகிற மார்ச் 8-ம் தேதி வெளியாகப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

    • இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்த படம் 'தி லெஜண்ட்'.
    • இப்படம் இன்று டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது.

     

    தி லெஜண்ட்

    தி லெஜண்ட்


    மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் கடந்த ஜூலை 28ம் தேதி வெளியானது.


    தி லெஜண்ட்

    தி லெஜண்ட்


    இந்நிலையில் தி லெஜண்ட் திரைப்படம் இன்று (03.03.2023) டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 12.30 மணிக்கு ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளதாக தி லெஜண்ட் தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    • நடிகை வரலட்சுமி தற்போது 'கொன்றால் பாவம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'கொன்றால் பாவம்'. இதில், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மார்ச் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

     

    வரலட்சுமி - சந்தோஷ் பிரதாப்

    வரலட்சுமி - சந்தோஷ் பிரதாப்


    இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலகினர், படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பேசியதாவது, "'கொன்றால் பாவம்' உண்மையிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் நீண்ட நாட்கள் கழித்து ஒரு கதாநாயகிக்கு முழு நீளமாக நடிக்க வாய்ப்புள்ள ஒரு படம் என்று சொல்வேன். நாம் நிறைய படங்களில் நடிப்போம். ஆனால் திருப்தி என்பது சில படங்களில் தான் கிடைக்கும். அப்படியான ஒரு நிறைவு இந்த படத்தில் எனக்கு கிடைத்தது. 'விக்ரம் வேதா' படத்திற்கு பிறகு ஒரு மிரட்டலான இசையை இந்த படத்தில் சாம் கொடுத்துள்ளார். 


    கொன்றால் பாவம்
    கொன்றால் பாவம்

    படத்தின் கதாநாயகன் சந்தோஷ் மிகவும் அமைதியானவர் இந்த 14 நாட்களும் நாங்கள் எல்லாருமே ஒன்றாகவே இருந்து குடும்பம் போலவே ஆனோம். இயக்குனர் தயாள் சாரும் என்னைப் போலவே மிகவும் துறுதுறுப்பாக இருப்பார். மூன்று நான்கு டேக் என்று போகாமல் அந்த காட்சிக்கு என்ன தேவையோ அதை மட்டும் மிகச் சரியாக எடுப்பார். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குனர் கிடைத்துள்ளார். சின்ன படம் பெரிய படம் என்பதை எல்லாம் தாண்டி கதைக்காக இந்த படம் வெற்றியடைய வேண்டும் என விரும்புகிறேன். அப்பாவுக்கும் நன்றி. நான் சினிமாவில் வந்த போது அவர் எனக்கு பின்புலமாக இருந்தார். ஆனால் உண்மையிலேயே எந்த பின்புலமும் இல்லாமல் அவர் இந்த உயரத்தை அடைந்திருப்பது என்பது எனக்கு பெருமையான விஷயம்" என்றார். 

    • பத்து தல' திரைப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

     

    சிம்பு

    சிம்பு


    கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான 'நம்ம சத்தம்' பாடல் வெளியாகி கவனம் பெற்றது.


    பத்து தல

    பத்து தல


    இப்படத்தின் டீசர் இன்று மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு புயலுக்கு முன் அமைதியாக இருங்கள். ஏஜிஆர்-இன் உலகத்தை வெளிப்படுத்துங்கள் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த டீசரை பார்த்த நடிகர் சிம்பு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இப்பதான் பத்துதல டீசர் பார்த்தேன். நம்ம பாயின் சம்பவத்திற்கு தயாராகுங்கள் என்று தான் என்னால் சொல்ல முடியும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ரஞ்சித் ஜெயகொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மைக்கல்.
    • இப்படம் விதியை மீறி ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டதாக தியேட்டர்களில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தமிழில் யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான சந்தீப் கிஷன் நடிப்பில் மைக்கேல் படம் தயாராகி கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இதில் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருந்தார்.

     

    மைக்கல்

    மைக்கல்


    புதிய படங்களை திரையரங்குகளில் வெளியான பிறகு 4 வாரங்கள் கழித்தே ஓ.டி.டி. தளங்களில் வெளியிட வேண்டும் என்று திரையரங்க அதிபர்கள் சங்கம் கட்டுப்பாடு விதித்து உள்ளது. ஆனால் மைக்கேல் படத்தை 3 வாரத்திலேயே ஓ.டி.டி.யில் வெளியிட்டு விட்டதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் தியேட்டர்களில் மைக்கேல் படத்தை திரையிட தடை விதிக்க முடிவு செய்துள்ளனர்.


    சந்தீப் கிஷன்

    சந்தீப் கிஷன்

    இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகி ஸ்ரீதர் கூறும்போது, "மைக்கேல் திரைப்படத்தை 3 வாரத்திலேயே ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டதால் மற்ற தயாரிப்பாளர்களும் அதுமாதிரி செய்வார்களோ என்ற அச்சம் வருகிறது. இதுசம்பந்தமாக திரையரங்க அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் கூட்டம் நடத்தி மைக்கேல் படத்தின் தயாரிப்பாளர், பட நிறுவனம், இயக்குனர் ஆகியோருக்கு வருங்காலங்களில் ஒத்துழைப்பு அளிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்'' என்றார்.

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.

     

    டப்பிங் பணிகளில் வடிவேலு

    டப்பிங் பணிகளில் வடிவேலு


    இந்நிலையில் மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலு டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளது. அந்த புகைப்படத்தில் மாரி செல்வராஜ் மற்றும் வடிவேலு இருவரும் இடம்பெற்றுள்ளனர். இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    ×