தன் புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த கௌதம் கார்த்திக்

என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள திரைப்படம் '1947- ஆகஸ்ட் 16'.இப்படத்தின் புதிய அறிவிப்பை கௌதம் கார்த்திக் தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கௌதம் கார்த்திக்
கௌதம் கார்த்திக்
Published on

அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின் ரமணா, கஜினி என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பதித்துக்கொண்டார். இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார்.

1947- ஆகஸ்ட் 16

இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக பணியாற்றிய என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார்.

1947- ஆகஸ்ட் 16

அறிமுக நாயகி ரேவதி நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் சௌத்ரி இவர்களுடன் இணைந்து ஏ.ஆர் முருகதாஸ் இந்த படத்தை தயாரிக்கிறார். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'கோட்டிக்கார பயலே' பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.

1947- ஆகஸ்ட் 16

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, '1947- ஆகஸ்ட் 16' திரைப்படம் வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை கௌதம் கார்த்திக் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com