என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.

     

    டப்பிங் பணிகளில் வடிவேலு

    டப்பிங் பணிகளில் வடிவேலு


    இந்நிலையில் மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலு டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளது. அந்த புகைப்படத்தில் மாரி செல்வராஜ் மற்றும் வடிவேலு இருவரும் இடம்பெற்றுள்ளனர். இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்த படம் 'தி லெஜண்ட்'.
    • இப்படத்தின் கதாநாயகியாக இந்தி பட நடிகை ஊர்வசி ரவுத்தாலா நடித்திருந்தார்.

    லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியது.

     

    தி லெஜண்ட்

    தி லெஜண்ட்


    மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் கடந்த ஜூலை 28ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.


    தி லெஜண்ட்

    தி லெஜண்ட்

    இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் நாளை (03.03.2023) அன்று ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பத்து தல' திரைப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

     

    பத்து தல

    பத்து தல


    கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான 'நம்ம சத்தம்' பாடல் வெளியாகி கவனம் பெற்றது.


    பத்து தல

    பத்து தல

    இப்படத்தின் புதிய அப்டேட் வருகிற மார்ச் 3-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்த நிலையில் இப்படத்தின் டீசரை மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. அதில், புயலுக்கு முன் அமைதியாக இருங்கள். ஏஜிஆர்-இன் உலகத்தை வெளிப்படுத்துங்கள் என குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நிறங்கள் மூன்று'.
    • இப்படத்தின் டிரைலரை வெளியிடும் பிரபலங்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. இதில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். சுஜித் சாரங்கின் உதவியாளர் டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

     

    நிறங்கள் மூன்று

    நிறங்கள் மூன்று


    இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் நரேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். நேற்று 'நிறங்கள் மூன்று' படத்தின் டிரைலர் வருகிற மார்ச் 3-ஆம் தேதி (நாளை) வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

     

    ஏ.ஆர்.ரகுமான் - ஆர்.முருகதாஸ்

    ஏ.ஆர்.ரகுமான் - ஆர்.முருகதாஸ்

    இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை வெளியிடப் போகும் பிரபலங்கள் குறித்த அறிவிப்பை இயக்குனர் கார்த்திக் நரேன் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த டிரைலரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியிடவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சுஷ்மிதா சென்.
    • இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

    நடிகை சுஷ்மிதா சென் தனது சமீபத்திய பதிவில், சில நாட்களுக்கு முன்பு தனக்கு மாரடைப்பு ஏற்பட்டது என தனது உடல் நலம் குறித்து பகிர்ந்து கொண்டார். நடிகை சுஷ்மிதா சென் தனது தந்தை சுபீர் சென்னுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:- உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாகவும் , பலமாகவும் வைத்திருங்கள். அது உங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது அது உங்களுடன் துணை நிற்கும் இது என் தந்தை சுபிர் சென் சொன்ன புத்திசாலித்தனமான வார்த்தைகள்.

     

    சுஷ்மிதா சென்

    சுஷ்மிதா சென்


    இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. ஸ்டென்ட் போடப்பட்டது. மிக முக்கியமாக, எனக்கு பலமான இதயம் இருக்கிறது' என்பதை எனது இருதயநோய் நிபுணர் மீண்டும் உறுதிப்படுத்தினார். நிறையபேருக்கு தங்களின் சரியான நேரத்தில் உதவி மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மற்றொரு இடுகையில் அதைச் செய்கிறேன். எனது நலம் விரும்பிகளுக்கு நன்றி.


    சுஷ்மிதா சென்

    சுஷ்மிதா சென்

     

    இந்த பதிவு உங்களுக்கு (எனது நலம் விரும்புபவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு) தெரியப்படுத்துவதற்காக மட்டுமே. நல்ல செய்தி என்னவென்றால் எல்லாம் நன்றாக இருக்கிறது. நான் மீண்டும் எனது வாழ்க்கைக்கு தயாராக இருக்கிறேன். நான் உங்களை அன்பு செலுத்துகிறேன் நண்பர்களே என கூறியுள்ளார்.

    • இயக்குனர் பா.இரஞ்சித் தற்போது அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் புதிய படத்தை தயாரித்து வருகிறார்.
    • தண்டகாரண்யம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கி வருகிறார்.

    2012-ம் ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இப்படத்தின் கதாநாயகனாக தினேஷ் நடித்திருந்தார். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினி நடிப்பில் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியிருந்தார். தொடர்ந்து சர்பட்ட பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.

     

    தண்டகாரண்யம் 

    தண்டகாரண்யம் 


    இதனிடையே நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பா.இரஞ்சித் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். அட்டக்கத்தி தினேஷ் நடித்திருந்த இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்கியிருந்தார்.

     

    தண்டகாரண்யம் படக்குழு 

    தண்டகாரண்யம் படக்குழு 


    தற்போது பா.இரஞ்சித் மீண்டும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். தண்டகாரண்யம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு பிரதிப் கலிராஜா ஒளிப்பதிவு மேற்கொள்ள இசையை ஜஸ்டீன் பிரபாகரன் கவனிக்கிறார். இந்நிலையில் தண்டகாரண்யம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளதாக படக்குழு புகைப்படங்கள் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

    • நடிகர் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • ரஜினியின் 170-வது படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார்.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ஜெய்பீம்
    ஜெய்பீம்

    ரஜினியின் 170-வது படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, 'ஜெய் பீம்' பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இப்படத்தை இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், ரஜினியின் 170-வது திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.


    டிஜே ஞானவேல்

    டிஜே ஞானவேல்

    இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து மகிழ்ச்சியோடு இயக்குனர் டி.ஜே.ஞானவேல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மகிழ்வான தருணம்.. புதிய பயணம் இனிதே ஆரம்பம்.. என்று பதிவிட்டுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • நடிகர் சிம்பு தற்போது ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த பேச்சு எழுந்துள்ளது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிம்பு சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுடன் இணைந்து கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     


    இந்நிலையில் சிம்பு நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி இணையத்தில் எழுந்துள்ளது. அதன்படி இப்படத்தை துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை கமல் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்குமுன்பு தேசிங்கு பெரியசாமி ரஜினியை வைத்து படம் இயக்கப்போவதாக வலைத்தளங்களில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சமீபத்தில் வெளியான 'வாத்தி' திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
    • இப்படம் உலக அளவில் ரூ.75 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான சம்யுக்தா தமிழில் களரி, ஜூலை காற்றில் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.75 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது.


    சம்யுக்தா

    இந்நிலையில், நடிகை சம்யுக்தாவை மலையாள தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் புகழ்ந்துள்ளார். அவர் கூறியதாவது, "நான் தயாரித்த 'எடக்காடு பட்டாலியன்' படத்தில் நடித்ததற்காக சம்யுக்தாவுக்கு 65 சதவிகித சம்பளத்தைதான் கொடுத்தேன். படம் ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெறவில்லை. பாக்கி ஊதியத்தைக் கொடுக்க முயன்றபோது அவர் வாங்க மறுத்துவிட்டார்.

    முழு ஊதியமும் தரவில்லை என்றால் டப்பிங் பேசவும் படத்தின் புரமோஷனுக்கும் வர மறுக்கும் நடிகர்களுக்கு மத்தியில் சம்யுக்தா ஒரு பாடப்புத்தகம் போன்றவர். வருடத்துக்கு 300 படங்களுக்கு மேல் தயாராகும் மலையாள சினிமாவில் 5 சதவிகித படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. இந்த நிலையில் சம்யுக்தா போன்றவர்கள் தயாரிப்பாளர்களுக்குத் தேவை என்பதை என் அனுபவத்தில் சொல்கிறேன்" இவ்வாறு சாண்ட்ரா தாமஸ் கூறியுள்ளார்.

    • தெலுங்கு நடிகர் நாக சவுர்யா ’பலனா அப்பாயி பலனா அம்மாயி’ படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.
    • காதலியை அடித்த காதலனின் கையை பிடித்து தடுத்து நிறுத்தி மன்னிப்பு கேட்குமாறு நடிகர் நாக சவுர்யா வலியுறுத்தியுள்ளார்.

    இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தில் சாய் பல்லவிக்கு ஜோடியாக நடித்தவர் நாக சவுர்யா. இவர் 'பலனா அப்பாயி பலனா அம்மாயி' என்ற தெலுங்கு படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். ஹைதராபாத்தின் பிசியான சாலை ஒன்றில் வாலிபர் ஒருவர் இளம் பெண்ணை அடித்து உள்ளார். இதை பார்த்த நாக சவுர்யா தடுத்துள்ளார். மேலும் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்குமாறு வாலிபரிடம் கூறினார்.


    ஆனால் அந்த வாலிபரோ கோபப்பட்டு, அவள் என் காதலி என்று கூறி மன்னிப்பு கேட்க மறுத்தார். காதலியாக இருந்தாலும் அடிப்பது தவறு என்றார். மேலும் அந்த வாலிபரின் கையை பிடித்து தடுத்து நிறுத்தி மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினார் நாக சவுர்யா. இதை பார்த்த அந்த பெண் தன் காதலரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    யார் யாரை அடித்தால் நமக்கென்னவென்று செல்லாமல் சாலையில் இறங்கி அந்த வாலிபரை கண்டித்த நாக சவுர்யா நிஜ ஹீரோ என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். படம் ரிலீஸாவதால் விளம்பரம் தேடி தான் நாக சவுர்யா இப்படி செய்திருக்கிறாரோ என்றும் சிலர் பேசுகிறார்கள். நாக சவுர்யாவுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி திருமணம் நடந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபரான அனுஷா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடித்துள்ள திரைப்படம் 'ராஜாகிளி'.
    • இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான தம்பி ராமையா கதை, வசனம் எழுதி அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ள திரைப்படம் 'ராஜாகிளி'. இந்த படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இதில் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், ரேஷ்மா, டெப்பா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

     

    வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு தம்பி ராமையா இசையமைத்துள்ளார். கோபிநாத், கேதார்நாத் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சுதர்சன் ஆர் படத்தொகுப்பு செய்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    • நானி தற்போது ‘தசரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.


    நானி

    மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


    கீர்த்தி சுரேஷ்

    இதையடுத்து சமீபத்தில் நடிகர் நானி கையில் ஒரு சிறிய கோழியை வைத்து இந்த கோழியே அவருடன் இணைந்து படத்தில் நடித்திருப்பதாக பதிவிட்டிருந்தார். இவரின் இந்த பதிவால் ரசிகர்கள் ஷாக் ஆகினர். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் அதே கோழியை தன் கையில் வைத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து என்னோடும் படத்தில் நடித்திருப்பதாக நானி பதிவிற்கு பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.




    ×