என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    புயலுக்கு முன் அமைதியாக இருங்கள்.. புதிய அப்டேட் கொடுத்த பத்து தல படக்குழு
    X

    பத்து தல - சிம்பு

    புயலுக்கு முன் அமைதியாக இருங்கள்.. புதிய அப்டேட் கொடுத்த பத்து தல படக்குழு

    • பத்து தல' திரைப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

    பத்து தல


    கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான 'நம்ம சத்தம்' பாடல் வெளியாகி கவனம் பெற்றது.


    பத்து தல

    இப்படத்தின் புதிய அப்டேட் வருகிற மார்ச் 3-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்த நிலையில் இப்படத்தின் டீசரை மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. அதில், புயலுக்கு முன் அமைதியாக இருங்கள். ஏஜிஆர்-இன் உலகத்தை வெளிப்படுத்துங்கள் என குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    Next Story
    ×