என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடித்துள்ள திரைப்படம் 'ராஜாகிளி'.
    • இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான தம்பி ராமையா கதை, வசனம் எழுதி அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ள திரைப்படம் 'ராஜாகிளி'. இந்த படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இதில் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், ரேஷ்மா, டெப்பா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

     

    வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு தம்பி ராமையா இசையமைத்துள்ளார். கோபிநாத், கேதார்நாத் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சுதர்சன் ஆர் படத்தொகுப்பு செய்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    • நானி தற்போது ‘தசரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.


    நானி

    மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


    கீர்த்தி சுரேஷ்

    இதையடுத்து சமீபத்தில் நடிகர் நானி கையில் ஒரு சிறிய கோழியை வைத்து இந்த கோழியே அவருடன் இணைந்து படத்தில் நடித்திருப்பதாக பதிவிட்டிருந்தார். இவரின் இந்த பதிவால் ரசிகர்கள் ஷாக் ஆகினர். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் அதே கோழியை தன் கையில் வைத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து என்னோடும் படத்தில் நடித்திருப்பதாக நானி பதிவிற்கு பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.




    • அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி விற்பனை செய்யும் நிறுவனத்தின் விளம்பரத்தூதுவராக கவுரிகான் இருக்கிறார்.
    • கவுரிகான் மீது லக்னோவில் வசிக்கும் ஜஸ்வந்த் ஷா என்பவர் புகார் அளித்திருக்கிறார்.

    பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் நடித்த 'பதான்' திரைப்படம் ஜனவரி மாதம் வெளியானது. இது உலகம் முழுவதும் இருக்கும் திரையரங்கில் அதிக நாட்கள் ஓடி 1000 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலைச் செய்து வருகிறது. பதான் படத்தை வெளியிடக்கூடாது என்று ஷாருக்கானுக்கு எதிராக அரசியல் கட்சிகளும், மதம் சார்ந்த சில அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தின. ஷாருக்கானின் உருவ பொம்மையை எரித்தனர். ஆனால் 'பதான்' படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

    இந்த நிலையில் அவரது மனைவி கவுரிகான் மீது சொத்து அபகரிப்பு, நம்பிக்கை மோசடி போன்ற பிரிவுகளின் கீழ் லக்னோவில் வசிக்கும் ஜஸ்வந்த் ஷா என்பவர் புகார் அளித்திருக்கிறார். இதன் அடிப்படையில் லக்னோ போலீசார் கவுரிகான் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.

    லக்னோவில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி விற்பனை செய்யும் நிறுவனத்தின் விளம்பரத்தூதுவராக கவுரிகான் இருக்கிறார். அந்த நிறுவனத்தில் வீடு வாங்க ஜஸ்வந்த் ஷா 86 லட்சம் ரூபாய் கட்டியிருந்ததாகவும் குறித்த நாளில் வீட்டை ஒப்படைக்கவில்லையென்றும் இதனால் நிறுவனர்கள் மீதும் விளம்பர தூதுவராக இருக்கும் கவுரிகான் மீதும் புகார் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.

    • நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.


    இந்தியன் 2

    இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.


    கமல்ஹாசன் - பாரதி ராஜா

    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனும் இயக்குனர் பாரதிராஜாவும் சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. 

    • இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’.
    • இப்படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.


    தற்போது 'சந்திரமுகி 2' என்ற பெயரில் இப்படம் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளதாக அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து 'சந்திரமுகி 2' படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது.


    கங்கனா ரனாவத் பதிவு

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பில் நடிகை கங்கனா ரனாவத் மீண்டும் இணைந்துள்ளார். இதனை அவர் தனது இணையப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

    • நடிகர் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இதைத்தொடர்ந்து ரஜினியின் 170-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் போஸ்டரையும் படத்தில் இணைந்துள்ள பிரலங்கள் பற்றியும் படக்குழு அறிவித்திருந்தது. ஜெயிலர் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில் ரஜினியின் 170-வது படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜெய் பீம்' பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இப்படத்தை இயக்கவுள்ளார். லைகா புரொசக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், ரஜினியின் 170-வது திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' .
    • இப்படம் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    2021-ஆம் ஆண்டு இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பி மலையாளத்தில் உருவான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    தி கிரேட் இந்தியன் கிச்சன்

    இதையடுத்து இந்த படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் தமிழில் ரீமேக் செய்துள்ளார். இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். மேலும், நடிகர் ராகுல் ரவீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    தி கிரேட் இந்தியன் கிச்சன் போஸ்டர்

    கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நாளை (மார்ச் 3) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'.
    • இந்த படத்தில் நடிகர் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    இப்படத்தை பார்த்த திரையுலகினர் பலரும் தங்களின் பாராட்டுக்களை சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு டாடா படத்தை பார்த்த தனுஷ், கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.


    இந்நிலையில், நடிகர் கார்த்தி இப்படத்தை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இணையப்பக்கத்தில், "இறுதியாக 'டாடா' படத்தைப் பார்த்துவிட்டேன். என்ன ஒரு அற்புதமான படம். சிறப்பான எழுத்து மற்றும் படத்தின் உருவாக்கத்தைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கவின் முழுமையான அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். உங்களைக்கண்டு பெருமைப்படுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.


    இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் கவின், "அது ஒரு ஐந்து நிமிட போன் கால். நீங்கள் என்னிடம் சொன்ன எல்லாவற்றிலும், 'இந்தப் படத்தை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்' என சொன்னதை மட்டும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    துணிவு

     போனி கபூர் தயாரித்திருந்த இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் 'துணிவு' திரைப்படத்தை ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் பாராட்டினர்.


    துணிவு போஸ்டர்

     'துணிவு' திரைப்படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகி ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 'துணிவு' திரைப்படத்தில் 50-வது நாள் கொண்டாட்டத்தில் படக்குழு இறங்கியுள்ளது. இதனை வெளிப்படுத்தும் விதமாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.



    • இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘அகிலன்’.
    • இப்படம் வருகிற மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் 'அகிலன்'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.


    அகிலன்

    இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி என்றும் தகவல் வெளியானது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    அகிலன் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'அகிலன்' திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நிறங்கள் மூன்று'.
    • இப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது.

    இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். சுஜித் சாரங்கின் உதவியாளர் டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார்.


    நிறங்கள் மூன்று போஸ்டர்

    இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் நரேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'நிறங்கள் மூன்று' திரைப்படத்தின் டிரைலர் வருகிற மார்ச் 3-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் லைகா புரொடக்ஷன்ஸ்.
    • இந்நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ், மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்திருந்தது. தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' மற்றும் அஜித்தின் ஏகே 62 போன்ற படங்களை தயாரித்து வருகிறது.


    லைகா நிறுவனம் வெளியிட்ட போஸ்டர்

    இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனம் புதிய அப்டேட் ஒன்று நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதற்கு ரசிகர்கள் அஜித்தின் ஏகே62 படத்தின் அறிவிப்பாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    ×