புதிய அறிவிப்பை வெளியிடும் 'பொன்னியின் செல்வன்' தயாரிப்பு நிறுவனம்

தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் லைகா புரொடக்ஷன்ஸ்.இந்நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்
Published on

தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ், மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்திருந்தது. தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' மற்றும் அஜித்தின் ஏகே 62 போன்ற படங்களை தயாரித்து வருகிறது.

லைகா நிறுவனம் வெளியிட்ட போஸ்டர்

இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனம் புதிய அப்டேட் ஒன்று நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதற்கு ரசிகர்கள் அஜித்தின் ஏகே62 படத்தின் அறிவிப்பாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com