சந்திரமுகி 2: மீண்டும் படப்பிடிப்பில் இணைந்த கங்கனா ரனாவத்.. கவனம் ஈர்க்கும் பதிவு..

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இப்படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்
Published on

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

தற்போது 'சந்திரமுகி 2' என்ற பெயரில் இப்படம் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளதாக அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து 'சந்திரமுகி 2' படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

கங்கனா ரனாவத் பதிவு

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பில் நடிகை கங்கனா ரனாவத் மீண்டும் இணைந்துள்ளார். இதனை அவர் தனது இணையப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com