மீண்டும் வெளியாகும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'

இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' .இப்படம் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தி கிரேட் இந்தியன் கிச்சன்
தி கிரேட் இந்தியன் கிச்சன்
Published on

2021-ஆம் ஆண்டு இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பி மலையாளத்தில் உருவான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தி கிரேட் இந்தியன் கிச்சன்

இதையடுத்து இந்த படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் தமிழில் ரீமேக் செய்துள்ளார். இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். மேலும், நடிகர் ராகுல் ரவீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தி கிரேட் இந்தியன் கிச்சன் போஸ்டர்

கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நாளை (மார்ச் 3) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com