என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லியோ
இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லியோ படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

மிஷ்கின் - லோகேஷ் கனகராஜ்
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் மிஷ்கினுக்கு நன்றி தெரிவித்து லோகேஷ் கனகராஜ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மை டியர் மிஷ்கின் சார்.. உங்களுடன் இவ்வளவு நெருங்கிய நிலையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இதை வெளிப்படுத்த ஒரு மில்லியன் நன்றிகள் சொன்னாலும் போதாது. நான் உங்களுக்கு ஒருபோதும் போதுமான அளவு நன்றி சொல்ல முடியாது இருந்தாலும் ஒரு மில்லியன் நன்றிகள்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
My Dear @DirectorMysskin sir,
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 1, 2023
A million thanks won't suffice to express how grateful and fortunate I feel to have had the opportunity to work with you in such close capacity. We had an absolute blast having you on sets Sir.I can never thank you enough but a million thanks ! #Leo pic.twitter.com/0UGHOlsegW
- நடிகை ஷோபிதா துலிபாலா ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- இவர் தற்போது தி நைட் மேனேஜர் என்ற பாலிவுட் வெப் தொடரில் நடித்து வருகிறார்.
மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஷோபிதா துலிபாலா, 2016 -ஆம் ஆண்டு ராமன் ராகவ் 2.0 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தை அனுராஜ் காஷ்யப் இயக்கியிருந்தார். அதன்பிறகு தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் தி நைட் மேனேஜர் என்ற பாலிவுட் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரில் மூத்த பாலிவுட் நடிகர் அனில் கபூருடன் 30-க்கும் மேற்பட்ட முத்தக் காட்சிகளில் இவர் நடித்துள்ளார்.
66 வயதான அனில் கபூருடன் ஷோபிதா துலிபாலா லிப் லாக் காட்சிகளில் நடிப்பதை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும் இதில் பல காட்சிகள் ஷோபிதா துலிபாலா மற்றும் அனில் கபூர் இருவருக்கும் நெருக்கமான காட்சிகளாக உள்ளன. ஒடிடியில் சென்சார் இல்லை என்பதால் இப்படியான காட்சிகள் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
- தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் ரவி மரியா.
- இவர் ‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.
தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த 'ஆசை ஆசையாய்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவி மரியா. தொடர்ந்து இவர் 'மிளகா' படத்தை இயக்கினார். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகிறார். வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்த 'மாயாண்டி குடும்பத்தார்', 'கோரிப்பாளையம்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.மேலும், இவர் காமெடி வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

ரவி மரியா
இந்நிலையில் நடிகர் ரவி மரியா தன் பெயரில் போலி சமூக வலைதள கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது, "எனது இன்ஸ்டாகிராம் ஐடி போன்று போலியாக ஐடி உருவாக்கி மர்ம நபர் ஒருவர் நான் பணம் கேட்பது போன்று பல நண்பர்களிடம் பணம் கேட்டுள்ளார். அதை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இதற்காக காவல் துணை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். தயவு செய்து என்னுடைய போலி கணக்கை பயன்படுத்தி யாராவது பணம் கேட்டால் தயவு செய்து கொடுக்காதீர்கள்" என்று கூறியுள்ளார்.
- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இந்த திரைப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் 'ஓ சாத்தி சால்' என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.

லால் சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கவுள்ளார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

ஜீவிதா ராஜசேகர்
லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 7ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் ரஜினியின் தங்கையாக நடிகை ஜீவிதா ராஜசேகர் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
- நடிகை மாளவிகா மோகனன் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் களம் இறங்கினார்.

மாளவிகா மோகனன்
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'மாறன்' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மாளவிகா மோகனன்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது இவர் படு கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
Fav kinda dresses ? Feminine & whimsical ? pic.twitter.com/jKjgbR2QUP
— Malavika Mohanan (@MalavikaM_) March 1, 2023
- சில தினங்களுக்கு முன்பு நடிகர் வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் என்ற பெயரில் போலியாக விருது வழங்கப்பட்டுள்ளது.
- விருது வழங்கும் போது நடிகர் வடிவேலு இந்த விருது செல்லுமா என்று கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கவுரவ டாக்டர் பட்டத்துக்கான விருதை காமெடி நடிகர் வடிவேலுவை நேரில் சந்தித்து நிகழ்ச்சி நடத்தியவர்கள் வழங்கி உள்ளனர். அப்போது அவரிடம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதை வழங்கி வருகிறோம் என்று தெரிவிக்கிறார்கள்.
இதனை மிகுந்த கவனமுடன் கேட்கும் வடிவேலு அவருக்கே உரித்தான உடல் மொழியுடன் இந்த விருது செல்லுமா! என்று கேட்கிறார். இதற்கும் விழா ஏற்பாட்டாளர்கள் விளக்கம் அளித்து வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவித்து வழங்கி உள்ளனர்.

'என்டர்டெய்ண்ட் மெண்ட்' பிரிவில் இந்த கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக கூறியதும் வடிவேலு அதனை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார். பின்னர் 'ரொம்ப சந்தோசம்' என்று கைகூப்பி வணக்குகிறார். இதன்பின்னர் 'என்றும் அன்புடன் வடிவேலு' என டைரி ஒன்றில் கையெழுத்தும் போட்டு கொடுக்கிறார். ஐயா... நீதியரசர் தலைமையில் நடந்த விருதை எனக்கு அனுப்பி வைத்துள்ளனர். மிகுந்த பெருமையாக உள்ளது.
சாதாரண டீ கடையில் இருந்து வந்த எனக்கு இந்த பட்டம் கிடைத்துள்ளது என்று கூறும் வடிவேலு 'கற்றவர் சபையில் எனக்கு தனி இடம் வேண்டும்... உன் கண்ணில் நீர் வழிந்தால் உலகே அழ வேண்டும் என்கிற பாடலையும் பாடி மகிழ்ச்சியுடன் பட்டத்தை பெற்றுக்கொள்கிறார்.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் போலியாக டாக்டர் பட்டம் கொடுத்ததாக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் வடிவேலுவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற ஜெயிலராகவும், ரம்யா கிருஷ்ணன் ரஜினியின் மனைவியாகவும், வசந்த் ரவி ஐபிஎஸ் அதிகாரியாகவும், தமன்னா மற்றும் சுனில் சினிமா நடிகர்களாகவும் நடித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் நிறைவு பெறவுள்ளதாகவும் இதில் கலகலப்பான ரஜினியை எதிர்பார்க்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet).
- இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லியோ
இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லியோ படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

விஜய் - திரிஷா
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் மற்றும் திரிஷாவுக்கு லியோ படப்பிடிப்பிலிருந்து 5 நாட்கள் ஓய்வு கிடைத்ததாகவும் அப்போது ஓய்வு நேரத்தை பயன்படுத்தி விஜய், திரிஷா உள்ளிட்டோர் சென்னை வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் மீண்டும் காஷ்மீர் படப்பிடிப்புக்கு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட நடிகர் விஜய்யின் புதிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- இவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

வைரமுத்து - மு.க.ஸ்டாலின்
அதில், "தமிழ்நாட்டு முதலமைச்சரின் 70-ஆம் பிறந்தநாளை முன்னிட்டு அவரை முகாம் அலுவலகத்தில் சந்தித்தேன். நீண்டகாலம் வாழவேண்டும்; வாழும்வரை ஆளவேண்டும் என்று வாழ்த்தினேன். பொன்னாடை பூட்டி நான் எழுதிய புத்தகம் கொடுத்தேன் தலைப்பைப் பார்த்ததும் சில்லென்று சிரித்தார், சிகரங்களை நோக்கி". என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு முதலமைச்சரின்
— வைரமுத்து (@Vairamuthu) March 1, 2023
70ஆம் பிறந்தநாளை முன்னிட்டு
அவரை முகாம் அலுவலகத்தில்
சந்தித்தேன்
நீண்டகாலம் வாழவேண்டும்;
வாழும்வரை ஆளவேண்டும்
என்று வாழ்த்தினேன்
பொன்னாடை பூட்டி
நான் எழுதிய
புத்தகம் கொடுத்தேன்
தலைப்பைப் பார்த்ததும்
சில்லென்று சிரித்தார்
"சிகரங்களை நோக்கி" pic.twitter.com/uhnlRfOuZZ
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன் -2'.
- இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

பொன்னியின் செல்வன் -2
இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்து அதற்கான ஏற்பாடுகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

பொன்னியின் செல்வன் -2
சில தினங்களுக்கு முன்பு கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதால் பொன்னியின் செல்வன் 2 ரிலீசை அக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைக்க முடிவு செய்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதனை படக்குழுவினர் மறுத்து திட்டமிட்டபடி ஏப்ரல் 28-ந்தேதி தேதி வெளியாவது உறுதி என்று தெரிவித்தனர்.

பொன்னியின் செல்வன் -2
இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு நிமிடம் உள்ள இந்த வீடியோவில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஜெயராம் ஆகியோர் படத்தில் தங்களது கதாபாத்திரங்களை விவரிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- சில தினங்களுக்கு முன்பு நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பலருக்கு கவுரவ டாக்டர் பட்டம் என்ற பெயரில் போலியாக வழங்கப்பட்டுள்ளது.
- இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகாரளிக்க அண்ணா பல்கலைக்கழம் முடிவு செய்துள்ளது.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் போலியாக டாக்டர் பட்டம் கொடுத்ததாக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்கலைகழகமே இல்லாத ஒரு அமைப்பு, சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் என்று மெகா மோசடியை அரங்கேற்றி உள்ளது.

இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு, நடன இயக்குனர் சாண்டி, ஈரோடு மகேஷ், நடிகர் கோகுல் ராஜ் இப்படி சில பிரபலங்களை முன்னிறுத்தி 50க்கும் மேற்பட்டோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் என்ற பெயரில் போலியான டாக்டர் பட்டங்களை ஓய்வு பெற்ற நீதிபதி வழங்கி உள்ளார்.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையத்தின் விருது நிகழ்ச்சி என்று நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் அண்ணா பல்கலைகழகம் என்பதை பெரிதாக அச்சிட்டிருந்தனர். அரசு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களில் மட்டுமே அச்சிடக்கூடிய அரசு முத்திரையும் சட்ட விரோதமாக அச்சிட்டிருந்தது. இதனால் அண்ணா பல்கலைகழகமே தங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதாக விழாவுக்கு வந்திருந்தவர்கள் நம்பினர்.

இதே நிகழ்ச்சியில் தனியார் கோயில் நிர்வாகிகள், ஜோதிடர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோருக்கும் டாக்டர் பட்டங்களை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் டாக்டர் பட்டம் பெறுவதற்கு வராமல் வீட்டிலேயே இருந்த நடிகர் வடிவேலுவுக்கு வீடுதேடிச் சென்று டாக்டர் பட்டம் வழங்கினர். வடிவேலுவிடம் தங்கள் கவுன்சில் சார்பில் மதிப்புறு முனைவர் என்கிற கவுரவ டாக்டர் பட்டம் தருவதாக கூறி அந்த போலி ஆவணத்தை கொடுக்கும் வீடியோவும் வெளியானது. யூடியூப்பில் பிரபலமான கோபி, சுதாகரை அழைத்து அவர்களுக்கும் ஆளுக்கொரு அவார்டு கொடுத்தனுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக போலீசில் புகாரளிக்க அண்ணா பல்கலை. முடிவு செய்து உள்ளது. இது குறித்து துணைவேந்தர் வேல்ராஜ் கூறும் போது ஓய்வு பெற்ற நீதிபதியை ஏமாற்றி, அண்ணா பல்கலைக்கழகத்தையும் ஏமாற்றி உள்ளனர். கவர்னர் செயலாளர், உயர்கல்வித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் நடவடிக்கை எடுக்க கவர்னர் மாளிகையும், அரசும் அறிவுறுத்தியுள்ளன என்று கூறினார்.
- சமீபத்தில் செல்வராகவன் நடிப்பில் வெளியான பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
- தற்போது செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

செல்வராகவன்
இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சாணிக் காயிதம் படத்திலும் மோகன் ஜி இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பகாசூரன் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது செல்வராகவன் படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

செல்வராகவன்
அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் மனதில் தோன்றும் விஷயங்களை பதிவிட்டு வரும் செல்வராகவன், தற்போது பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது. எங்கு போய் நட்பை தேடுவேன் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன் ,??? pic.twitter.com/k9MM8vCGSK
— selvaraghavan (@selvaraghavan) March 1, 2023






