'வாத்தி' வெற்றிக்கு பிறகு வெளியாகும் என் பாடல் - ஜி.வி.பிரகாஷ்

இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கள்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்
Published on

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் 'கள்வன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கள்வன்

ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, இவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இந்நிலையில், 'கள்வன்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கள்வன் போஸ்டர்

அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'அடி கட்டழகு கருவாச்சி' பாடல் நாளை (மார்ச் 4) வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும், அந்த பதில், 'வாத்தி' பட பாடல்கள் வெற்றிக்கு பிறகு வெளியாகும் என் அடுத்த ஆல்பம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com