நடிகை தீபிகா படுகோனேவுக்கு ஆஸ்கர் குழு அளித்துள்ள அங்கீகாரம்.. குவியும் வாழ்த்து..

நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் ‘பதான்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.
தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே
Published on

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்தியில் பல படங்கள் நடித்துள்ளார். இவர் தமிழில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 'கோச்சடையான்' திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இவர் பாலிவுட்டில் மிகவும் பிசியாக உள்ளார்.

தீபிகா படுகோனே

சமீபத்தில் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருந்த "பதான்" திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். இப்படம் உலக அளவில் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் 2023 -ஆம் ஆண்டிற்கான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற 12- ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.

ஆஸ்கர் தொகுப்பாளர் பட்டியல்

இதில் தொகுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பேர்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் நடிகை தீபிகா படுகோனே பெயரும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com