வாத்தி
வாத்தி

வசூலில் அதிரடி காட்டும் 'வாத்தி'.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வாத்தி’.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
Published on

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

வாத்தி

இப்படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இதையடுத்து 'வாத்தி' திரைப்படம் உலகம் அளவில் ரூ.75 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

வாத்தி போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வாத்தி' திரைப்படம் உலக அளவில் ரூ.100 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com