'சந்திரமுகி -2' படப்பிடிப்பு தளத்தில் ஹோலி கொண்டாடிய நடிகை கங்கனா

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’.இப்படத்தின்படப்பிடிப்பு தளத்தில் கங்கனா ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
கங்கனா ரனாவத் 
கங்கனா ரனாவத் 
Published on

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

சந்திரமுகி 2 படக்குழு
சந்திரமுகி 2 படக்குழு

சந்திரமுகி 2 படக்குழு

'சந்திரமுகி 2' என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

படப்பிடிப்பில் ஹோலி கொண்டாடிய கங்கனா
படப்பிடிப்பில் ஹோலி கொண்டாடிய கங்கனா

'சந்திரமுகி 2' படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் நடிகை கங்கனா ரனாவத் ஹோலி பண்டிகையை படக்குழுவுடன் கலர் அடித்து கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com