கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய டேனியல் பாலாஜி

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வடசென்னை, பிகில், அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் டேனியல் பாலாஜி.இவர் தற்போது தனது அம்மாவின் ஆசைக்காக கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார்.
டேனியல் பாலாஜி - ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன்
டேனியல் பாலாஜி - ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன்
Published on

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வடசென்னை, பிகில், அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் டேனியல் பாலாஜி. வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வரும் டேனியல் பாலாஜி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வெளியான அரியவன் படத்தில் நடித்திருந்தார். தற்போது அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

டேனியல் பாலாஜி - ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன்
டேனியல் பாலாஜி - ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன்

டேனியல் பாலாஜி - ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன்

இந்நிலையில் டேனியல் பாலாஜி சென்னைக்கு அருகிலுள்ள ஆவடி பகுதியில் ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை கட்டி இன்று கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். இந்த விழாவிற்கு பொதுமக்கள் பலரும் கலந்துக் கொண்டு அம்மனை வழிப்பட்டனர். தனது அம்மாவின் ஆசைக்காக டேனியல் பாலாஜி இந்த கோயில் கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com