search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    குஷி திரைப்படத்தில் மீண்டும் இணைந்த சமந்தா
    X

    சமந்தா -விஜய் தேவரகொண்டா

    'குஷி' திரைப்படத்தில் மீண்டும் இணைந்த சமந்தா

    • இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘குஷி’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்துள்ளது.

    சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் 'குஷி' திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.


    குஷி படப்பிடிப்பில் இணைந்த சமந்தா

    இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    குஷி படப்பிடிப்பில் இணைந்த சமந்தா

    அதன்படி, 'குஷி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை சமந்தா மீண்டும் இணைந்துள்ளார். இதனை இயக்குனர் ஷிவா நிர்வாணா தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த செய்தியால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    Next Story
    ×