என் மலர்tooltip icon

    இது புதுசு

    • ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹண்டர் 350 மாடல் விவரங்களை வெளியிட்டு உள்ளது.
    • இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஹண்டர் 350 மாடல் வெளியீடு அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனரான சித்தார்த்தா லால் புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 விவரங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.

    இவர் வெளியிட்டு இருக்கும் யூனிட் டாப் எண்ட் மாடல் ஆகும். இது மெட்ரோ ரிபெல் என அழைக்கப்படுகிறது. டூயல் டோன் பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கும் ஹண்டர் 350 இந்திய சந்தையில் குறைந்த விலை ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


    இந்தியாவில் புதிய ஹண்டர் 350 மாடல் ரெட்ரோ, மெட்ரோ மற்றும் மெட்ரோ ரிபெல் என மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இளைஞர்கள் அவர்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் அவர்கள் விரும்பும் உபகரணங்கள் அடங்கிய மோட்டார்சைக்கிள் வேரியண்டை தேர்வு செய்து கொள்ள முடியும்.

    ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடலிலும் 349சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 19.94 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடல் மொத்தத்தில் எட்டு விதமான நிறங்களில் கிடைக்கும்.

    • ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Q3 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • முன்னதாக ஆடி நிறுவனம் தனது A8L மாடலை அறிமுகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆடி நிறுவனம் பிளாக்‌ஷிப் A8L மாடலை அப்டேட் செய்த கையோடு முற்றிலும் புதிய Q3 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட ஆடி விற்பனையாளர்கள் முற்றிலும் புதிய Q3 மாடலுக்கான முன்பதிவை துவங்கி விட்டன. புதிய தலைமுறை ஆடி Q3 மாடல் Q8 கார் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஆடி Q3 மாடலில் ஹெக்சகன் வடிவம் கொண்ட ரேடியேட்டர் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய டிஆர்எல்-கள், புதிய அலாய் வீல்கள், ரூப் ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய Q3 மாடல் அதிநவீன MQB ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு உள்ளது. காரின் உள்புறம் புதிய இன்போடெயின்மெண்ட் டச் ஸ்கிரீன், புதிய ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டு உள்ளது.


    இத்துடன் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்த காரில் 10 இன்ச் அளவில் டிரைவர் டிஸ்ப்ளே, 8.8 இன்ச் அல்லது 10.1 இன்ச் அளவில் இன்போடெயின்மெண்ட் டச் ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய ஆடி Q3 மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    மேலும் குவாட்ரோ ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் வசதியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும் புதிய ஆடி Q3 மாடல் பி.எம்.டபிள்யூ. X1, மெர்சிடிஸ் பென்ஸ் GLA, வால்வோ XC40 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து புது கார் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.
    • சமீபத்தில் தனது கார் மாடல்கள் விலையையும் டாடா மோட்டார்ஸ் உயர்த்தி இருந்தது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ NRG சீரிசில் புதிதாக XT எனும் வேரியண்டை அறிமுகம் செய்தது. புதிய டியாகோ XT வேரியண்ட் டாப் எண்ட் மாடலை விட ரூ. 41 ஆயிரம் வரை குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த கார் XZ வேரியண்டின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    புதிய டியாகோ NRG XT வேரியண்டில் XZ மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய XT வேரியண்டில் 14 இன்ச் அளவில் ஹைப்பர் ஸ்டைல் வீல்கள், பிளாக் ரூப் ரெயில்கள், ஃபாக் லேம்ப்கள், பிளாஸ்டிக் கிளாடிங் வழங்கப்பட்டுள்ளன.


    காரின் உள்புறம் ஆல் பிளாக் தீம், 3.5 இன்ச் ஹார்மன் கார்டன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. பவர்டிரெயினை பொருத்தவரை டாடா டியாகோ NRG XT மாடலிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த என்ஜின் 84 ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. 

    • மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது.
    • சமீபத்தில் மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக பிரிட்டன் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது.

    இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா தனது பொலிரோ பிக்கப் டிரக்-இன் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் டீசர் வெளியாகி உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பொலிரோ பிக்கப் டிரக் எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.

    டீசர் வீடியோவின் படி எலெக்ட்ரிக் பொலிரோ பிக்கப் டிரக் முழுக்க லைட்டிங் செய்யப்பட்டு சில பாகங்கள் மட்டும் காட்சியளிக்கிறது. இதன் டிசைன் அம்சங்கள் நீல நிற லைட்டிங் கொண்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் பொலிரோ போன்றே இருக்கிறது. இதில் சதுரங்க வடிவம் கொண்ட ஹெட்லைட் வழங்கப்படுகிறது.


    மேலும் இந்த வாகனத்தில் பழைய மஹிந்திரா லோகோ இடம்பெற்று இருக்கிறது. புது எலெக்ட்ரிக் பொலிரோ மாடல் பிக்கப் வாகனங்களின் எதிர்காலம் என டீசரில் குறிப்பிடப்பட்டு உள்ளது. புது பொலிரோ பிக்கப் எலெக்ட்ரிக் மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன.

    தற்போது மஹிந்திரா நிறுவனம் ஐந்து எலெக்ட்ரிக் வாகனங்களை பயணிகள் வாகன பிரிவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது எலெக்ட்ரிக் வாகனங்கள் EV கோ நிறுவனத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட உள்ளன. பயணிகள் வாகனம் மட்டுமின்றி பிக்கப் டிரக் மற்றும் வர்த்தக வாகனங்களையும் எலெக்ட்ரிக் வடிவில் உருவாக்கும் பணிகளை மஹிந்திரா துவங்கி விட்டது. அந்த வரிசையில், பொலிரோ பிக்கப் டிரக் எலெக்ட்ரிக், வர்த்தக பிரிவில் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும்.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து புது கார் மற்றும் வேரியண்ட்களை அறிமுகம் செய்து வருகிறது.
    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிக விற்பனையாகும் ஹேச்பேக் மாடலாக டியாகோ இருக்கிறது

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ ஹேச்பேக் மூலம் இந்திய சந்தையில் ரி-எண்ட்ரி கொடுத்தது. இந்த கார் தொடர் அப்டேட் மற்றும் குறைந்த விலை போன்ற காரணங்களால் தொடர்ந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. அந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மற்றும் NRG மாடல்களுக்கு அதிக அம்சங்களை வழங்க இருக்கிறது.

    இரு கார்களின் XT வேரியண்டில் டாடா மோட்டார்ஸ் ஓட்டுனர் இருக்கையில் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி, 14 இன்ச் ஹைப்பர் ஸ்டைல் வீல்கள், ரியர் பார்சல் ஷெல்ஃப், வேணிட்டி மிரர், பிளாக்டு-அவுட் பி-பில்லர் போன்ற வசதிகளை வழங்க முடிவு செய்து இருக்கிறது. டியாகோ மாடலின் XT வேரியண்டில் இந்த அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளது. NRG மாடலில் புதிதாக XT வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா டியாகோ மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 84 ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேடெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கிறது.

    இதே என்ஜின் பெட்ரோல்-CNG வடிவிலும் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் 72 ஹெச்.பி. பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டியாகோ மாடல் 1.2 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைத்தது. எனினும், டீசல் என்ஜின் வேரியண்ட் அதிக வரவேற்பு இல்லாத காரணத்தால் நிறுத்தப்பட்டு விட்டது. டாடா டியாகோ மாடலின் விலை ரூ. 5 லட்சத்து 39 ஆயிரம் முதல் துவங்குகிறது.

    டாடா டியாகோ மாடல் XE, XT, XT (O), XZ மற்றும் XZ+ போன்ற வேரியண்ட்களிலும், டாடா NRG மாடல் XZ+ எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. 

    • லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருந்தது.
    • இந்தியாவில் இந்த மாடல் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.

    லேண்ட் ரோவர் நிறுவனம் 2023 டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலை இந்தியாவில் வினியோகம் செய்து வருகிறது. புதிய எஸ்யுவி மாடலின் விலை ரூ. 71 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் ஆர் டைனமிக் SE என ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் GLC, வால்வோ XC60 மற்றும் பி.எம்.டபிள்யூ. X3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் அல்லது 2.0 லிட்டர் டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


    இரண்டு என்ஜின்களும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட யூனிட்கள் ஆகும். இவற்றுடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 250 பி.எஸ். பவர், 365 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடல் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டு நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.

    இதன் டீசல் என்ஜின் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது 200 பி.எஸ். பவர், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 209 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் மணிக்கு அதிகபட்சம் 100 கி.மீ. வேகத்தை ஒன்பது நொடிகளில் எட்டிவிடும். 

    • ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கிராண்ட் i10 நியோஸ் CNG வேரியண்டை அறிமுகம் செய்தது.
    • புதிய கிராண்ட் i10 நியோஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கிராண்ட் i10 நியோஸ் மாடல் விவரங்கள் சமீபத்தில் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. இது கிராண்ட் i10 நியோஸ் காரின் புதிய டாப் எண்ட் மாடல் என கூறப்பட்டது. தற்போது இந்த மாடலின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஆஸ்டா CNG மாடல் விலை ரூ. 8 லட்சத்து 45 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.


    புதிய கிராண்ட் i10 நியோஸ் ஆஸ்டா CNG மாடலில் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட, NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 68 ஹெச்.பி. பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஆஸ்டா CNG மாடல் ஸ்போர்ட்ஸ் வேரியண்டின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 15 இன்ச் அலாய் வீல்கள், குரோம் டோர் ஹேண்டில்கள், வயர்லெஸ் சார்ஜிங், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், கூல்டு குளோவ் பாக்ஸ், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட்-ரெஸ்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2022 எக்ஸ்டிரீம் 160R மாடலின் விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது.
    • புது மாடல் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் எக்ஸ்டிரீம் 160R மாடலை அப்டேட் செய்து இருக்கிறது. புதிய 2022 ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 148, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய எக்ஸ்டிரீம் 160R மாடல் இந்தியாவில் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    வேரியண்ட் மற்றும் விலை விவரங்கள்:

    ஹீரோ எக்ஸ்டிரீம் 160R சிங்கில் டிஸ்க் வேரியண்ட் ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 148

    ஹீரோ எக்ஸ்டிரீம் 160R டூயல் டிஸ்க் வேரியண்ட் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்து 498

    ஹீரோ எக்ஸ்டிரீம் 160R ஸ்டெல்த் வேரியண்ட் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 338

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


    2022 எக்ஸ்டிரீம் 160R மாடலின் சீட் டிசைன் மாற்றப்பட்டு புதிதாக ஸ்ப்லிட் கிராப் ரெயில் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டேஷ்போர்டில் கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மாற்றப்பட்டு இருக்கிறது. இவை தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடலில் 163சிசி சிங்கில் சிலிண்டர், ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 15 ஹெச்.பி. பவர், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இதன் கியர் ஷிப்ட் முறை 1-அப், 4-டவுன் ஆகும்.

    • வால்வோ நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் இந்திய சந்தையில் XC40 ரிசார்ஜ் மாடலை அறிமுகம் செய்தது.
    • தற்போது இந்த நிறுவனத்தின் மற்றொரு எலெக்ட்ரிக் கார் வெளியீடு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

    வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது அடுத்த எலெக்ட்ரிக் கார் எப்போது வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன் படி வால்வோ நிறுவனம் C40 மாடலை அடுத்த ஆண்டு வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது. வால்வோ C40 மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட XC40 ரிசார்ஜ் மாடலின் கூப் வெர்ஷன் ஆகும்.

    மேலும் வால்வோ நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ரிக் வாகனமாக உருவாக்கப்பட்ட முதல் கார் இது ஆகும். வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில் லோ மற்றும் ஸ்லோபிங் ரூஃப்லைன் உள்ளது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட போஸ்டீரியர், பூட் லிட் ஸ்பாயிலர் மற்றும் செங்குத்தாக பொருத்தப்பட்ட டெயில் லேம்ப்கள் உள்ளன. இத்துடன் எல்இடி ஹெட்லைட்கள், டி வடிவ டிஆர்எல்கள், ஸ்போர்ட்ஸ் பம்ப்பர், டூயல் டோன் பெயிண்ட் மற்றும் 5 ஸ்போக் அலாய் வீல்கள் உள்ளன.


    உள்புறம் புளூ நிற கார்பெட் மற்றும் டோர் பேட் ட்ரிம்கள் உள்ளன. இத்துடன் செங்குத்தாக பொருத்தப்பட்ட தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், பில்ட் இன் கூகுள் மேப்ஸ், கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட், ஓவர் தி ஏர் அப்டேட் பெறும் வசதி என ஏராளமான அம்சங்கள் உள்ளன. இத்துடன் பவர்டு இருக்கைகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், ADAS அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வால்வோ நிறுவனத்தின் XC40 ரிசார்ஜ் மாடலை போன்றே புதிய வால்வோ C40 ரிசார்ஜ் மாடலிலும் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி ஒவ்வொரு ஆக்சில்களில் உள்ள டூயல் எலெக்ட்ரிக் மோட்டார்களுக்கு சக்தியூட்டுகிறது. இவை 400 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இந்த மாடலை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 40 நிமிடங்களே ஆகும். மேலும் முழு சார்ஜ் செய்தால் 420 கி.மீ. ரேன்ஜ் வழங்குகிறது.

    • பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய X5 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த மாடலில் புதிதாக M ஸ்போர்ட் பாடி கிட் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய X5 X-டிரைவ் 30d M ஸ்போர்ட் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கார் ஆடம்பர எஸ்யுவி மாடலில் காஸ்மெடிக் மாற்றங்களை வழங்கி இருக்கிறது. இவை தவிர புது மாடலிலும் 3.0 லிட்டர் டீசல் என்ஜினே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. X5 X-டிரைவ் 30d M ஸ்போர்ட் மாடலின் விலை ரூ. 97 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் இந்த மாடல் X சீரிஸ் எஸ்யுவி காரின் டாப் எண்ட் வேரியண்ட் ஆகி இருக்கிறது. முன்னதாக X5 கார் தான் டாப் எண்ட் மாடலாக இருந்து வந்தது. இதன் விலை ரூ. 94 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. புதிய பி.எம்.டபிள்யூ. X5 X-டிரைவ் 30d M ஸ்போர்ட் மாடலில் M ஸ்போர்ட் டிசைன் பேக்கேஜ், புதிய முன்புற பம்ப்பர், ரியர் டிப்யுசர், டெயில் பைப்கள், M ஸ்போர்ட் பிரேக் கேலிப்பர்கள், M ஸ்போர்ட் லோகோ உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.


    புதிய பி.எம்.டபிள்யூ. X5 X-டிரைவ் 30d M ஸ்போர்ட் மாடலில் 265 ஹெச்.பி. பவர், 620 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 6 சிலிண்டர்கள் கொண்ட டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், எக்ஸ் டிரைவ் சிஸ்டம் மூலம் ஆல் வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்போர்ட் எக்ஸ் பிளஸ் வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது, M ஸ்போர்ட் வேரியண்டில் ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட பேடில் ஷிப்டர்கள், லான்ச் கண்ட்ரோல், அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன், எலெக்ட்ரிக் டெயில்கேட், அடாப்டிவ் எல்இடி ஹெட்லேம்ப்கள், 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், ஹெட்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, 20 இன்ச் M ஸ்போர்ட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் புதிய பி.எம்.டபிள்யூ. X5 X-டிரைவ் 30d M ஸ்போர்ட் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் GLE, லேண்ட் ரோவர் டிஸ்கவரி மற்றும் வால்வோ XC90 போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • டிரையம்ப் நிறுவனத்தின் புது மோட்டார்சைக்கிள் மாடல் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
    • ஸ்டிரீட் ட்வின் மாடல் தான் தற்போது ஸ்பீடு ட்வின் 900 என அழைக்கப்படுகிறது.

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது ஸ்டிரீட் ட்வின் சீரிஸ் மாடல், இனி ஸ்பீடு ட்வின் 900 என பெயர் மாற்றம் செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 8 லட்சத்து 35 ஆயிரம் என துவங்குகிறது. புதிய பெயர் மட்டும் இன்றி டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்த மாடல் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கும் என அறிவித்து இருக்கிறது.

    அதன்படி இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் ஸ்பீடு ட்வின் 900 மாடல் - டிரையம்ப் ஜெட் பிளாக், மேட் ஐயன்ஸ்டோன் மற்றும் மேட் சில்வர் ஐஸ் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய பெயிண்ட் பியூவல் டேன்க் மீது மேட் சில்வர் ஐஸ் பினிஷ் மற்றும் எல்லோ நிற கிராபிக்ஸ் கொண்டு இருக்கிறது. இத்துடன் ஜெட் பிளாக் நிற சைடு பேனல்கள், ஜெட் பிளாக் நிற மட் கார்டுகள் உள்ளன.


    விலை விவரங்கள்:

    ஜெட் பிளாக் ரூ. 8 லட்சத்து 35 ஆயிரம்

    மேட் ஐயன்ஸ்டோன் ரூ. 8 லட்சத்து 48 ஆயிரம்

    மேட் சில்வர் ரூ. 8 லட்சத்து 48 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


    இதன் ஸ்டைலிங் எவ்வித மாற்றமும் பெறவில்லை. புதிய டிரையம்ப் ஸ்பீடு ட்வின் 900 மாடலில் வட்ட வடிவ ஹெட்லைட், ரியர் வியூ மிரர்கள், டியர் டிராப் வடிவ பியூவல் டேன்க், ஒற்றை பீஸ் சாடில், ட்வின் சைடு எக்சாஸ்ட் கேரியர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய டிரையம்ப் ஸ்பீடு ட்வின் 900 மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 900சிசி, பேரலெல் ட்வின் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 64.1 ஹெச்.பி. பவர், 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்த மாடலில் டியுபுலர் ஸ்டீல் ட்வின் கிரேடில் பிரேம், டெலிஸ்கோபிக் முன்புற போர்க்குகள், ட்வின் ரியர் ஸ்ப்ரிங்குகள், இரண்டு சக்கரங்களிலும் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • சீனாவின் தேடுப்பொறி சேவை வழங்கும் நிறுவனம் பைடு தனது புது தானியங்கி வாகனத்தை அறிமுகம் செய்தது.
    • இந்த கார் ரோபோ -டாக்சி சேவைக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

    சீன தேடுப்பொறி சேவை நிறுவனமான பைடு புதிய தானியங்கி வாகனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வாகனத்தின் ஸ்டீரிங் வீலை கழற்றி விடும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு வாக்கில் சீனாவில் இந்த வாகனம் ரோபோ-டாக்சி சேவையை வழங்க பயன்படுத்தப்பட இருக்கிறது.


    புதிய தானியங்கி வாகனத்தின் விலை 2 லட்சத்து 50 ஆயிரம் யுவான்கள் வரை இருக்கும் என பைடு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதே வாகனத்தின் முந்தைய தலைமுறை மாடலின் விலை 4 லட்சத்து 80 ஆயிரம் யுவான்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


    "பெருமளவு விலை குறைப்பின் மூலம் சீனா முழுக்க தானியங்கி வாகனங்கள் எண்ணிக்கையை எங்களால் அதிகப்படுத்த முடியும். நாங்கள் எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம். ரோபோ-டாக்சியில் பயணம் செய்யும் போது தற்போதைய டாக்சிக்காக கொடுக்கும் பணத்தில் பாதியை மட்டுமே கொடுத்தால் போதும்," என பைடு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராபின் லி தெரிவித்து உள்ளார்.

    புதிய வாகனத்தில் ஆட்டோனோமஸ் லெவல் 4 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மனித தலையீடு இன்றி காரை முழுமையாக இயக்கும். இந்த காரில் மொத்தம் எட்டு லிடார்களும், 12 கேமராக்களும் உள்ளன. லிடார்கள் டிடெக்‌ஷன் சிஸ்டம்கள் ஆகும். இவை ரேடார்களுக்கு இணையான சேவையை வழங்கும். இந்த வாகனத்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் பற்றி பைடு எந்த தகவலையும் வழங்கவில்லை.

    ×