என் மலர்
இது புதுசு
- போர்ஷே நிறுவனத்தின் புது ஸ்போர்ட்ஸ் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- இந்த கார் பெருமளவு டிராக் சார்ந்த அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு உள்ளது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த முன்னணி ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியாளரான போர்ஷே முற்றிலும் புதிய 911 GT3 RS மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய போர்ஷே கார் விலை ரூ. 3 கோடியே 25 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை உருவாக்கப்பட்ட 911 மாடல்களில் அதிக திறன் மற்றும் டிராக் சார்ந்த அம்சங்களுடன் உருவான மாடலாக GT3 RS இருக்கிறது.
புதிய போர்ஷே 911 GT3 RS மாடலில் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் மற்றும் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ரிஷேப் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், புதிய ஸ்பிட்டர், பொனெட்டில் பெரிய வெண்ட்கள், வீல் ஆர்ச்கள், ரூப் மீது செங்குத்தான பின்கள், கதவுகளின் பின் ஏர் இன்லெட்கள் வழங்கப்பட்டுள்ளன.

காரின் ஸ்பாயிலர் செட்டிங்களை மாற்ற ஸ்டீரிங் வீல் மீது DRS ஸ்விட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய 911 GT3 RS மாடல் முந்தைய 911 GT3 RS மற்றும் 992 ஜென் 911 GT3 மாடல்களை விட முறையே இருமடங்கு மற்றும் மும்மடங்கு டவுன்ஃபோர்ஸ் வழங்குகிறது.
முற்றிலும் புதிய போர்ஷே 911 GT3 RS மாடலில் 4 லிட்டர், ஆறு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 518 ஹெச்பி பவர், 465 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் PDK ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 296 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
- ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் N லைன் மாடல்களை அறிமுகம் செய்வதில் கவனத்தை திருப்பி இருக்கிறது.
- இந்த காரில் டர்போ பெட்ரோல் என்ஜின், டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் N லைன் மாடல்கள் எண்ணிக்கையை இந்திய சந்தையில் அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி வென்யூ காம்பேக்ட் எஸ்யுவி-யின் N லைன் மாடலை அறிமுகம் செய்ய ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என்றும் இது செப்டம்பர் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் மாடலில் i20 N லைன் மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. i20 N லைன் மாடலில் இந்த என்ஜினுடன் iMT மற்றும் DCT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய வென்யூ N லைன் மாடலில் DCT யூனிட் மட்டுமே வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 118 ஹெச்பி பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இந்த காரில் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட அலாய் வீல்கள், ரிவைஸ்டு பம்ப்பர்கள், ரெட் இன்சர்ட்கள், டூயல் டிப் எக்சாஸ்ட், புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இவை வென்யூ N லைன் மாடலை அதன் வெண்ணிலா வெர்ஷனை விட வித்தியாசமாக காட்சிப்படுத்த செய்யும். உள்புறம் ஆல் பிளாக் இண்டீரியர், காண்டிராஸ்ட் நிறமான ரெட் ஸ்டிட்சிங், பேடில் ஷிப்டர்கள், N லைன் 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல், லெதர் கவர் மற்றும் கியர் லீவர் மீது N லைன் மோடிப் வழங்கப்படுகிறது.
புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் மாடல் N6 மற்றும் N8 என இரண்டு வேரிண்ட்களில் கிடைக்கும். இந்த கார் டாப் எண்ட் SX(O) சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய ஹூண்டாய் i20 N லைன் மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 96 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- வால்வோ கார் இந்தியா நிறுவனம் பண்டிகை காலக்கட்டத்தில் புது 2023 வால்வோ XC40 மாடலை இந்தியா கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
- இந்த காரின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
வால்வோ கார் இந்தியா நிறுவனம் 2023 வால்வோ XC40 மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. மேலும் முன்பதிவு செய்த இரண்டு மாதங்களில் கார் டெலிவரி செய்யப்பட்டு விடும் என வால்வோ இந்தியா தெரிவித்து உள்ளது. அந்த வகையில் 2023 வால்வோ XC40 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.
மேம்பட்ட வால்வோ XC40 மாடல் C40 கூப் எஸ்யுவி-யை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் டிஃபைன்டு ஹெட்லேம்ப்கள், ஃபிரேம்லெஸ் கிரில், புதிய முன்புற பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலில் உள்ளதை போன்றே புதிய XC40 மாடலிலும் லெதர் இல்லா இருக்கைகள் வழங்கப்படலாம்.

இத்துடன் இந்த கார் முற்றிலும் புதிய எக்ஸ்டீரியர் நிற ஆப்ஷன்கள், அலாய் வீல் ஆப்ஷன்களுடன் கிடைக்கும். 2023 வால்வோ XC40 மாடல் அதிக மைலேஜ் வழங்குகிறது. இதில் உள்ள மைல்டு ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்கள் இதனை உறுதிப்படுத்துகிறது. வால்வோ நிறுவனத்தின் எதிர்கால திட்டப்படி மைல்டு ஹைப்ரிட், பிளக்-இன் மற்றும் முழுமையான எலெக்ட்ரிக் மாடல்களை மட்டுமே அறிமுகம் செய்ய இருக்கிறது.
முன்னதாக 2030 வாக்கில் முழுமையான எலெக்ட்ரிக் வாகன பிராண்டாக மாற இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக வால்வோ நிறுவனம் அறிவித்து இருந்தது. இதே காரின் முழுமையான எலெக்ட்ரிக் வெர்ஷன் ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது எலெக்ட்ரிக் கார் விவரங்களை அறிவித்து இருக்கிறது.
- மேலும் புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட்-ஐ வெளியிட்டு உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தனது முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை XUV மற்றும் BE பிராண்டிங்கில் விற்பனை செய்யப்பட உள்ளன. 2024 முதல் 2026-க்குள் ஐந்து எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. தற்போது அறிமுகமாகி இருக்கும் BE.07 கான்செப்ட் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் கார் ஆகும்.
மற்ற எலெக்ட்ரிக் எஸ்யுவி-க்களை போன்றே இந்த மாடலும் INGLO பிளாட்பார்மில் உருவாக்கப்பட இருக்கிறது. இந்த பிளாட்பார்ம் கொண்டு வெவ்வேறு பாடி ஸ்டைல்களில் வாகனங்களை உருவாக்க முடியும். மேலும் இது 60 கிலோவாட் ஹவர் முதல் 80 கிலோவாட் ஹவர் வரையிலான பேட்டரிகளை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டுள்ளது.

இத்துடன் 175 கிலோவாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை சப்போர்ட் செய்யும். இதை கொண்டு பேட்டரியை 35 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ளலாம். புதிய மஹிந்திரா BE.07 சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாகவே உள்ளன. இந்த கார் 4.565 மில்லிமீட்டர் நீளம், 1900 மில்லிமீட்டர் அகலம், 1600 மில்லிமீட்டர் உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2ஸ775 மில்லிமீட்டர்கள் ஆகும்.
மற்ற எஸ்யுவி மாடல்களை போன்று இல்லாமல், BE.07 மாடலில் உடயரமான ஸ்டான்ஸ், பிளாட் ரூப்லைன், சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள், நீண்ட செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், டெயில் லேம்ப்க்லள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ப்ரோடக்ஷன் மாடல் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் மாடலை விட கணிசமான மாற்றங்களை கொண்டிருக்கும்.
இந்த எலெக்ட்ரிக் கார் கேபினில் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளேக்கள், 12.3 இன்ச் அளவில் மூன்று ஸ்கிரீன்கள், பானரோமிக் சன்ரூஃப், ஓடிஏ அப்டேட்கள், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. மஹிந்திரா BE.07 மாடல் 2026 அக்டோபர் மாத வாக்கில் அறஇமுகம் செய்யப்பட இருக்கிறது.
- மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ கிளாசிக் கார் மாடல் விவரங்களை அறிவித்து இருக்கிறது.
- இந்த காரின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தான் ஸ்கார்பியோ N காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. முற்றிலும் புது தோற்றம் கொண்ட ஸ்கார்பியோ N காருடன் விற்பனை செய்ய ஏதுவாக ஸ்கார்பியோ கிளாசிக் காரை மஹிந்திரா தற்போது அறிவித்து இருக்கிறது.
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்த கார் கிளாசிக் S மற்றும் கிளாசிக் S11 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். ஸ்கார்பியோ கிளாசிக் மாடல் முற்றிலும் புது முகம் பெற்று இருக்கிறது.
ரி-டிசைன் செய்யப்பட்ட கிரில் நடுவே மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய லோகோ பொருத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள் மற்றும் டிஆர்எல்-கள் உள்ளன.
இந்த காரில் ரி-டிசைன்டு 17 இன்ச் அலாய் வீல்கள், டூயல் டோன் லுக் அழகாக காட்சியளிக்கின்றன. பின்புறம் டவர் எல்இடி டெயில் லேம்ப்-கள் நீண்ட இடைவெளிக்குப் பின் வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டு கதவுகளில் கிளாசிக் பேட்ஜ் உள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மாடலில் புதிய தலைமுறை ஜென் 2 எம் ஹாக் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 128 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த காரில் பெட்ரோல் என்ஜின், ஆட்டோ அல்லது 4x4 வெர்ஷன் வழங்கப்படவில்லை. பாதுகாப்பிற்கு ஏபிஎஸ், 2 ஏர்பேக் உள்ளிட்டவை ஸ்டாண்டர்ட் அம்சமாக உள்ளது.
- பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிஷன் கார் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இது பிஎம்டபிள்யூ M பிரிவின் 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளரான பிஎம்டபிள்யூ இந்திய சந்தையில் M4 காம்படிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த காரின் விலை ரூ. 1 கோடியே 53 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் M பிரிவு 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
முன்னதாக M340i எக்ஸ்டிரைவ், 6 சீரிஸ் GT மற்றும் 5 சீரிஸ் கார்களின் 50 ஜாரெ எம் எடிஷன் கார்களை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்து இருந்தது. இந்த நிலையில், தற்போது M4 காம்படிஷன் 50 ஜாரெ எம் எடிஷன் காரை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கார் மகவ் புளூ மற்றும் இமோலா ரெட் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் அலாய் வீல்கள் மேட் கோல்டு பிரான்ஸ் நிறம் கொண்டிருக்கிறது.

காரின் உள்புறம் ஹை-கிரேடு மெரினோ லெதர், ஆல் பிளாக் டோன், சீட் மற்றும் டோர் சில்களில் 50 எம் ஜாரெ பேட்ஜகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் செண்டர் கன்சோலில் ஸ்பெஷல் மெட்டல் பிளேக் மற்றும் 50 M ஜாரெ எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
M4 காம்படிஷன் 50 ஜாரெ M எடிஷன் மாடலில் 2993 சிசி, சிங்கில் சிலிண்டர், ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு M ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 503 ஹெச்பி பவர், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும்.
- மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய தலைமுறை ஆல்டோ K10 காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- இந்த மாடல் விரைவில் மாருதி சுசுகி அரினா விற்பனை மையங்களை வந்தடையும் என எதிர்பார்க்கலாம்.
மாருதி சுசுகி நிறுவனம் புதிய தலைமுறை ஆல்டோ K10 மாடலின் முதல் படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. முற்றிலும் புதிய மாருதி சுசுகி ஆல்டோ K10 மாடல் அதிக மாற்றங்களுடன் புது தோற்றம் பெற்று இருக்கிறது. இத்துடன் மேம்பட்ட பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது.
ஆல்டோ K10 ஹேச்பேக் மாடலுக்கான முன்பதிவை மாருதி சுசுகி நிறுவனம் துவங்கி விட்டது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். புதிய தலைமுறை மாருதி சுசுகி ஆல்டோ K10 மாடலின் விற்பனை ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்க இருக்கிறது. விரைவில் இந்த கார் நாடு முழுக்க செயல்பட்டு வரும் மாருதி சுசுகி அரினா விற்பனை மையங்களை வந்தடையும்.

"43 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிக வாடிக்கையாளர்களுடன் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் கார் பிராண்டாக ஆல்டோ இருக்கிறது. 22 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க நிறுவனத்தின் ஆல்டோ கார் பெருமை, நம்பிக்கை மற்றும் சார்ந்திருத்தலின் அடையாளமாக மாறி இருக்கிறது. சுசுகி நிறுவனத்தின் வெற்றிகர வாகனமாக ஆல்டோ இருக்கிறது."
"முற்றிலும் புதிய ஆல்டோ K10 புதிய தலைமுறை தொழில்நுட்பம் மற்றும் அம்சங்கள் நிறைந்த ஹேச்பேக் மாடலாக இருக்கும். ஆல்டோ 800 உடன் சேர்ந்து முற்றிலும் புதிய ஆல்டோ K10 மாடல் இந்திய வாடிக்கையாளர்களில் பலருக்கும் மகிழ்ச்சி மற்றும் பெருமையை சேர்க்கும் என நம்புகிறோம்," என்று மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு மூத்த நிர்வாக அதிகாரி சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்து இருக்கிறார்.
- 2022 எம்ஜி ஹெக்டார் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- புதிய எம்ஜி ஹெக்டார் மாடல் 14 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் கொண்டுள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய ஹெக்டார் மாடலுக்கான டீசர் வீடியோவை வெளியிட்டு உள்ளது. இதில் புதிய காரின் வெளிப்புற டிசைன் எப்படி இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்திய சந்தையில் புதிய எம்ஜி ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடல் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம்.
2022 எம்ஜி ஹெக்டார் மாசலில் குரோம்-ஸ்டட் செய்யப்பட்ட கிரில் வழங்கப்பட இருக்கிறது. இது அர்கைல் சார்ந்த டைமண்ட் மெஷ் கிரில் போன்ற வடிவமைப்பு ஆகும். இத்துன் ரி-வொர்க் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், புதிய ஏர் டேம் மற்றும் ஸ்கிட் பிளேட் உள்ளது. காரின் உள்புறம் 14 இன்ச் அளவில் செங்குத்தாக பொருத்தப்பட்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு உள்ளது.

புதிய எம்ஜி ஹெக்டார் மாடல், தற்போதைய வெர்ஷனுடன் சேர்த்தே விற்பனை செய்யப்பட இருக்கிறது. எம்ஜி ஹெக்டார் புது வெர்ஷனிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் மோட்டார் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கிறது.
அறிமுகமானதும் புதிய 2022 எம்ஜி ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடல் டாடா ஹேரியர் மற்றும் மஹிந்திரா XUV700 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
- எம்ஜி மோட்டார் நிறுவனம் உருவாக்கி இருக்கும் கன்வெர்டிபில் கார் மாடலில் இரண்டு பேர் பயணிக்க முடியும்.
- . இந்த கார் ஏற்கனவே அந்நிறுவனம் அறிமுகம் செய்த கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் ரிட்டன் ஆப் தி லெஜண்ட் தலைப்பில் ஒரு நிமிட வீடியோ டீசரை வெளியிட்டு உள்ளது. டீசரில் எம்ஜி நிறுவனத்தின் புதிய 2-சீட்டர் எலெக்ட்ரிக் ரோட்ஸ்டர் மாடல் ஆகும். இந்த கார் சைபர்ஸ்டர் கான்செப்ட்-ஐ சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் எம்ஜிபி ரோட்ஸ்டர் மாடலை நினைவு கூறும் வகையில் இருக்கும் என தெரிகிறது.
டீசரின் படி எம்ஜி 2 சீட்டர் கன்வெர்டிபில் கார் ப்ரோடக்ஷன் ரெடி வடிவில் காட்சி அளிக்கிறது. இந்த காரில் கன்வெர்டிபில் ரூப் ஓபனிங், ரியர் வியூ மிரர்கள், ஓவல் வடிவ ஹெட்லேம்ப்கள், எல்இடி பார், ஸ்வான் டெயில் ஸ்டைல் ஸ்பாயிலர் வழங்கப்பட்டு இருப்பது டீசரில் தெரியவந்துள்ளது. காரின் உள்புறம் யோக் ஸ்டைல் ஸ்டீரிங் வீல், ஸ்போர்ட்ஸ் சீட்கள் உள்ளன.

இவை தவிர புதிய எம்ஜி கன்வெர்டிபில் மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், இந்த காரில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். கான்செப்ட் சைபர்ஸ்டெர் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை மூன்றே நொடிகளில் எட்டிவிடும் என எம்ஜி மோட்டார் தெரிவித்து இருக்கிறது. மேலும் முழு சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும்.
அந்த வகையில் இதே கான்செப்ட்-ஐ தழுவி உருவாகி இருக்கும் எம்ஜி கன்வெர்டிபில் மாடலும் இதே போன்ற செயல்திறன் மற்றும் ரேன்ஜ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். எனினும், இதுபற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும்.
- சிட்ரோயன் நிறுவனம் சமீபத்தில் தான் தனது குறைந்த விலை காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
- சிட்ரோயன் நிறுவனம் மற்றொரு புது காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்டெலாண்டிஸ் நிர்வகிக்கும் சிட்ரோயன் பிராண்டு சமீபத்தில் தனது சிட்ரோயன் C3 ஹேச்பேக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய சிட்ரோயன் C3 மாடல் கடும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய சிட்ரோயன் C3 மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சிட்ரோயன் நிறுவனம் மீண்டும் சந்தையில் கலக்கத்தை ஏற்படுத்த முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி சிட்ரோயன் நிறுவனம் முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்ட புது காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் C3 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது.

சிட்ரோயன் C3 காரை தழுவி உருவாகும் எலெக்ட்ரிக் கார் டிசம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து விற்பனை ஏப்ரல் 2023 வாக்கில் துவங்க இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டு இருக்கும். இதில் உள்ள பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 300 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
புதிய எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல் மாட்யுலர் CMP பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. இந்த கார் வழக்கமான ICE மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் ஏராளமான பாகங்கள் உள்நாட்டில் இருந்தே பயன்படுத்த இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் காரில் குரூயிஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜிங், ஆட்டோமேடெட் கிளைமேட் கண்ட்ரோல், 10 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
விலையை பொருத்தவரை இந்திய சந்தையில் சிட்ரோயன் எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலின் விலை ரூ. 13 லட்சத்தில் இருந்து துவங்கும் என தெரிகிறது. அந்த வகையில் இந்த கார் டாடா டிகோர் EV மற்றும் எம்ஜி அறிமுகம் செய்ய இருக்கும் சிறிய எலெக்ட்ரிக் கார் போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாளராக அமையும்.
- லம்போர்கினி நிறுவனம் புதிய ஹரகேன் டெக்னிகா மாடலை இந்தியாவில் வெளியிட இருக்கிறது.
- இந்த கார் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான லம்போர்கினி இந்திய சந்தையில் புதிய ஹரகேன் டெக்னிகா மாடல் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி லம்போர்கினி ஹரகேன் டெக்னிகா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.
வி10 சூப்பர்காரின் புது வேரியண்ட் ஹரகேன் RWD மற்றும் ஹரகேன் STO மாடல்களின் இடையில் நிலை நிறுத்துப்பட இருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புது லம்போர்கினி ஹரகேன் டெக்னிகா மாடல் லம்போர்கினி நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த RWD வேரியண்ட் ஆகும்.

இதில் 5.2 லிட்டர் NA வி10 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 640 ஹெச்பி பவர், 565 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும்.
இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 325 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. புதிய லம்போர்கினி காரில் 20 இன்ச் அலாய் வீல்கள், ரி-வொர்க் செய்யப்பட்ட விண்டோ லைன், கார்பன் பைபர் என்ஜின் கவர், டிப்யுசர் அடங்கிய புது ரியர் பம்ப்பர், ரியர் ஸ்பாயிலர், ஹெக்சகன் வடிவம் கொண்ட டூயல் எக்சாஸ்ட் பைப்கள் உள்ளன.
- ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் காம்பஸ் மாடல் காரை 2017 ஆகஸ்ட் மாத வாக்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
- கடந்த ஆண்டு ஜீப் காம்பஸ் மாடல் மிட்-லைஃப் அப்டேட் செய்யப்பட்டது.
இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இதனை கொண்டாட ஜீப் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. அதன்படி ஜீப் காம்பஸ் 5-ஆவது ஆனிவர்சரி எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் ஜீப் நிறுவனத்தின் முதல் மாடலாக ஜீப் காம்பஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விற்பனை ஆகஸ்ட் 2017 வாக்கில் துவங்கியது.
விற்பனை துவங்கியதில் இருந்தே ஜீப் காம்பஸ் மாடல் கணிசமான யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டு இந்த காருக்கு மிட்-லைஃப் அப்டேட் வழங்கும் முன் பல முறை இந்த காரின் லிமிடெட் எடிஷன் வேரியண்ட்களை ஜீப் இந்தியா தொடர்ந்து அறிமுகம் செய்து வந்தது. இதன் மூலம் கார் மாடலை உயிர்ப்புடன் வைத்திருந்தது.

இந்த ஆண்டு துவக்கத்தில் கூட ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் மாடலின் நைட் ஈகிள் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இது தற்போதைய காம்பஸ் மாடலின் ஆல்-பிளாக் தீம் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் கிளாஸ் பிளாக் நிற கிரில், 18 இன்ச் பிளாக் அலாய் வீல்கள், பிளாக் ரூப் ரெயில்கள், கிளாஸ் பிளாக் விங் மிரர்கள் மற்றும் ஃபாக் லேம்ப் பெசல்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஜீப் காம்பஸ் 5-ஆவது ஆனிவர்சரி எடிஷன் மாடலின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் அதிக மாற்றங்களை எதிர்பார்க்கலாம். காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இந்த காரில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றே தெரிகிறது. இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
இதன் டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.






