search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    இந்தியாவில் அறிமுகமான பிஎம்டபிள்யூ ஸ்பெஷல் எடிஷன் கார் - விலை ரூ. 1 கோடியே 53 லட்சம் தான்
    X

    இந்தியாவில் அறிமுகமான பிஎம்டபிள்யூ ஸ்பெஷல் எடிஷன் கார் - விலை ரூ. 1 கோடியே 53 லட்சம் தான்

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிஷன் கார் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இது பிஎம்டபிள்யூ M பிரிவின் 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளரான பிஎம்டபிள்யூ இந்திய சந்தையில் M4 காம்படிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த காரின் விலை ரூ. 1 கோடியே 53 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் M பிரிவு 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக M340i எக்ஸ்டிரைவ், 6 சீரிஸ் GT மற்றும் 5 சீரிஸ் கார்களின் 50 ஜாரெ எம் எடிஷன் கார்களை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்து இருந்தது. இந்த நிலையில், தற்போது M4 காம்படிஷன் 50 ஜாரெ எம் எடிஷன் காரை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கார் மகவ் புளூ மற்றும் இமோலா ரெட் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் அலாய் வீல்கள் மேட் கோல்டு பிரான்ஸ் நிறம் கொண்டிருக்கிறது.


    காரின் உள்புறம் ஹை-கிரேடு மெரினோ லெதர், ஆல் பிளாக் டோன், சீட் மற்றும் டோர் சில்களில் 50 எம் ஜாரெ பேட்ஜகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் செண்டர் கன்சோலில் ஸ்பெஷல் மெட்டல் பிளேக் மற்றும் 50 M ஜாரெ எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    M4 காம்படிஷன் 50 ஜாரெ M எடிஷன் மாடலில் 2993 சிசி, சிங்கில் சிலிண்டர், ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு M ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 503 ஹெச்பி பவர், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும்.

    Next Story
    ×