search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    800 கி.மீ. ரேன்ஜ் கொண்ட எம்ஜி கன்வெர்டிபில் கார் - வேற லெவல் டீசர் வெளியானது!
    X

    800 கி.மீ. ரேன்ஜ் கொண்ட எம்ஜி கன்வெர்டிபில் கார் - வேற லெவல் டீசர் வெளியானது!

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் உருவாக்கி இருக்கும் கன்வெர்டிபில் கார் மாடலில் இரண்டு பேர் பயணிக்க முடியும்.
    • . இந்த கார் ஏற்கனவே அந்நிறுவனம் அறிமுகம் செய்த கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

    எம்ஜி மோட்டார் நிறுவனம் ரிட்டன் ஆப் தி லெஜண்ட் தலைப்பில் ஒரு நிமிட வீடியோ டீசரை வெளியிட்டு உள்ளது. டீசரில் எம்ஜி நிறுவனத்தின் புதிய 2-சீட்டர் எலெக்ட்ரிக் ரோட்ஸ்டர் மாடல் ஆகும். இந்த கார் சைபர்ஸ்டர் கான்செப்ட்-ஐ சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் எம்ஜிபி ரோட்ஸ்டர் மாடலை நினைவு கூறும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

    டீசரின் படி எம்ஜி 2 சீட்டர் கன்வெர்டிபில் கார் ப்ரோடக்‌ஷன் ரெடி வடிவில் காட்சி அளிக்கிறது. இந்த காரில் கன்வெர்டிபில் ரூப் ஓபனிங், ரியர் வியூ மிரர்கள், ஓவல் வடிவ ஹெட்லேம்ப்கள், எல்இடி பார், ஸ்வான் டெயில் ஸ்டைல் ஸ்பாயிலர் வழங்கப்பட்டு இருப்பது டீசரில் தெரியவந்துள்ளது. காரின் உள்புறம் யோக் ஸ்டைல் ஸ்டீரிங் வீல், ஸ்போர்ட்ஸ் சீட்கள் உள்ளன.


    இவை தவிர புதிய எம்ஜி கன்வெர்டிபில் மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், இந்த காரில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். கான்செப்ட் சைபர்ஸ்டெர் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை மூன்றே நொடிகளில் எட்டிவிடும் என எம்ஜி மோட்டார் தெரிவித்து இருக்கிறது. மேலும் முழு சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும்.

    அந்த வகையில் இதே கான்செப்ட்-ஐ தழுவி உருவாகி இருக்கும் எம்ஜி கன்வெர்டிபில் மாடலும் இதே போன்ற செயல்திறன் மற்றும் ரேன்ஜ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். எனினும், இதுபற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும்.

    Next Story
    ×