என் மலர்
இது புதுசு
- கியா இந்தியா நிறுவனத்தின் புதிய சொனெட் X லைன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
- புதிய X லைன் மாடல் டர்போ பெட்ரோல் மற்றும் டர்போ டீசல் வெர்ஷன்களில் கிடைக்கிறது.
கியா இந்தியா நிறுவனம் புதிய சொனெட் X லைன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய சொனெட் X லைன் மாடலின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எடிஷன் விலை ரூ. 13 லட்சத்து 39 ஆயிரம் என துவங்குகிறது. இதன் 1.5 லிட்டர் டர்போ டீசல் விலை ரூ. 13 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கியா சொனெட் X லைன் இரு வேரியண்ட்களும் டாப் எண்ட் ஆட்டோமேடிக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளன.
புதிய X லைன் மாடல் காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. அதன் படி புதிய கியா சொனெட் X லைன் மேட் கிராபைச், சேஜ் என டூயல் டோன் நிற இண்டீரியர், புதிய டிசைன் கொண்ட 16 இன்ச் அலாய் வீல்கள், ஆரஞ்சு நிற ஸ்டிட்ச்களை கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் அதிக விற்பனையாகும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யுவியாக சொனெட் இருக்கிறது. புதிய X லைன் மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனையை மேலும் அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

கியா சொனெட் X லைன் பெட்ரோல் மாடலில் 1 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 118 ஹெச்பி பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ட்வின் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
டீசல் மாடலில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 115 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
புதிய கியா சொனெட் X லைன் மாடலுக்கான முன்பதிவு நாடு முழுக்க அனைத்து கியா விற்பனை மையங்களிலும் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய எஸ்யுவி மாடலை ஆன்லைனிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். சொனெட் மட்டுமின்றி கியா செல்டோஸ் X லைன் மாடலும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் லிமிடெட் எடிஷன் கார் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
- புதிய லிமிடெட் எடிஷன் மாடல் RxZ வேரியண்டை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் கைகர், டிரைபர் மற்றும் க்விட் மாடல்களின் லிமிடெட் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. பண்டிகை காலக்கட்டத்தை ஒட்டி புதிய லிமிடெட் எடிஷன் மாடல்கள் அறிமுகமாகி உள்ளன. லிமிடெட் எடிஷன் கைகர், மற்றும் டிரைபர் மாடல்கள் RxZ வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளன. க்விட் லிமிடெட் எடிஷன் மாடல் கிளைம்பர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ரெனால்ட் லிமிடெட் எடிஷன் கார்களின் முன்பதிவு இன்று (செப்டம்பர் 2) துவங்கியது. லிமிடெட் எடிஷன் விலைகளும் டாப் எண்ட் மாடல்களை போன்றே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. லிமிடெட் எடிஷன் மாடல்களில் காண்டிராஸ்ட் பிளாக் நிற ரூஃப் வழங்கப்பட்டு இறுக்கிறது. மூன்று மாடல்களிலும் கிரில், ஹெட்லேம்ப் மற்றும் பக்கவாட்டுகளில் ரெட் அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளன.

டிரைபர் மற்றும் க்விட் மாடல்களில் பிளாக் பினிஷ் செய்யப்பட்ட வீல் கவர்கள் வழங்கப்பட்டுள்ளன. கைகர் லிமிடெட் எடிஷனில் ஸ்டாண்டர்டு எடிஷனில் உள்ளதை போன்ற அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், பிரேக் கேலிப்பர்கள் ரெட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. தோற்றம் தவிர கார்களின் என்ஜினில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய லிமிடெட் எடிஷன் மாடலை மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட்களில் வாங்கிட முடியும்.
ரெனால்ட் க்விட் கிளைம்பர் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 54 ஆயிரம் என துவங்குகிறது. டிரைபர் RxZ விலை ரூ. 7 லட்சத்து 78 ஆயிரம் என்றும் கைகர் RxZ விலை ரூ. 8 லட்சத்து 39 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் எடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே.
- அந்த வகையில் முற்றிலும் புதிய XUV400 எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய கார் உற்பத்தியாளரான மஹிந்திரா நிறுவனம் முற்றிலும் புதிய XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெளியிட்டுள்ளது. டீசர் வீடியோவில் மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி டிசைன் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. இதில் மஹிந்திராவின் புதிய லோகோ காணப்படுகிறது. புதிய XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி இந்தியாவில் செப்டம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.
முற்றிலும் புதிய மஹிந்திரா XUV400 மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய XUV400 மாடல் ப்ரோடக்ஷன் வடிவில் காட்சியளிக்கிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட மஹிந்திராவின் ஆல் எலெக்ட்ரிக் கான்செப்ட்களை விட XUV400 தனித்துவம் மிக்க மாடல் ஆகும். புதிய XUV400 மாடல் XUV300 உருவாக்கப்பட்ட சங்யங் ரெக்ஸ்டன் பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட eXUV300 கான்செப்ட் மாடலில் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. அந்த வகையில் இதன் ப்ரோடக்ஷன் வேரியண்ட் இதே போன்ற செட்டப் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இரு வேரியண்ட்களும் நெக்சான் EV பிரைம் மற்றும் மேக்ஸ் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
புதிய மஹிந்திரா XUV400 மாடல் முழு சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களும் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொண்டிருக்கும். இந்த கார் அதிகபட்சம் 150 ஹெச்பி பவர் கொண்டிருக்கும் என தெரிகிறது.
- ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய Q3 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- இந்தியாவில் புதிய ஆடி Q3 மாடல் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஆடி இந்தியா நிறுவனம் புதிய Q3 மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய ஆடி Q3 மாடல் விலை ரூ. 44 லட்சத்து 89 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
தோற்றத்தில் புதிய ஆடி Q3 மாடல் சிங்கில் ஃபிரேம் கிரில், ஆக்டகோனல் டிசைன், செங்குத்தான ஸ்லாட்கள், புதிய எல்இடி டிஆர்எல்கள், வெட்ஜ் வடிவ ஹெட்லேம்ப்கள், கிளாஸ் பிளாக் கிளாடிங், 18 இன்ச் அலாய் வீல்கள், பிளாக் ஷார்க் பின் ஆண்டெனா மற்றும் ரூஃப் ரெயில்கள், ராப்-அரவுண்ட் 2 பீஸ் எல்இடி டெயில் லைட்கள், டூயல் டோன் பின்புற பம்ப்பர் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த காரின் உள்புறம் பானரோமிக் சன்ரூப், ஆம்பியண்ட் லைட்டிங், ஆடி டிரைவ் செலக்ட், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரண்டாம் அடுக்கு இருக்கைகள், குரூயிஸ் கண்ட்ரோல், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஆடி ஸ்மார்ட்போன் இண்டர்பேஸ், MMI நேவிகேஷன் பிளஸ், வயர்லெஸ் சார்ஜிங், ஜெஸ்ட்யுர் கண்ட்ரோல் டெயில்கேட், 180 வாட் 10 ஸ்பீக்கர் ஆடி சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஆடி Q3 மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட TFSI டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 187 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும்.
2022 ஆடி Q3 காரை வாங்கும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் மூன்று ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் வரை சர்வீஸ் வேல்யூ பேக்கேஜ் வழங்கப்படுகிறது. புதிய ஆடி Q3 டெக்னாலஜி வேரியண்ட் விலை ரூ. 50 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- லம்போர்கினி நிறுவனத்தின் புது சூப்பர்கார் வெளியீடு இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
- புது லம்போர்கினி கார் மற்றொரு ஹரகேன் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இத்தாலி நாட்டை சேர்ந்த சூப்பர்கார் உற்பத்தியாளரான லம்போர்கினி சமீபத்தில் தான் ஹரகேன் டெக்னிகா காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இந்த கார் அறிமுக நிகழ்விலேயே லம்போர்கினி நிறுவனம் டிசம்பர் மாத வாக்கில் மற்றொரு புது மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்து விட்டது. மேலும் இந்த காருக்கான டீசரும் வெளியிடப்பட்டு இருந்தது. இது மற்றொரு ஹரகேன் மாடலாக இருக்கும் என தெரிகிறது.
புதிய லம்போர்கினி கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹரகேன் டெக்னிகா வெளிப்படுத்தும் செயல்திறனை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹரகேன் டெக்னிகா மாடல் ஹரகேன் இவோ RWD மற்றும் ஹரகேன் STO மாடல்களின் இடையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த காரில் 20 இன்ச் அலாய் வீல்கள், கார்பன் பைபர் என்ஜின் கவர், பிக்சட் ரியர் ஸ்பாயிலர், ஸ்போர்டி ரியர் பம்ப்பர், ஹெக்சகன் வடிவ டூயல் எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
காரின் உள்புறம் ஆல் பிளாக் தீம் கொண்டுள்ளது. கூடுதலாக ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி மற்றும் மேம்பட்ட HMI இண்டர்பேஸ் வழங்கப்பட்டு உள்ளது. லம்போர்கினி ஹூரகேன் டெக்னிகா மாடலில் 5.2 லிட்டர் வி10 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 640 ஹெச்பி பவர், 565 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் ஒட்டுமொத்த டிரைவிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த கார் ஸ்டிராடா, ஸ்போர்ட் மற்றும் கோர்சா என மூன்று வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேக்ததை 3.2 நொடிகளில் எட்டிவிடும். மணிக்கு அதிகபட்சம் 325 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
- பெராரி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 296 GTB சூப்பர்காரை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த சூப்பர்கார் பெராரி F8 ட்ரிபுடோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
2022 பெராரி 296 GTB இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பெராரி காரின் விலை ரூ. 5 கோடியே 40 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. இது பெராரி F8 ட்ரிபுடோ காரின் மேம்பட்ட மாடல் ஆகும்.

புதிய பெராரி 296 GTB மாடலில் 3.0 லிட்டர், வி6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 645 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டது ஆகும். இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டார் ஒன்றும் உள்ளது. இது 164 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் ஒருங்கிணைந்து 809 ஹெச்பி பவர், 741 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
டிரான்ஸ்மிஷனுக்கு 8 ஸ்பீடு DCT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள 7.45 கிலோவாட் ஹவர் பேட்டரி, பியுர் எலெக்ட்ரிக் மோடில் காரை 25 கிலோமீட்டர் வரை பயணிக்க செய்யும், இந்த காரில் டியர்டிராப் வடிவ ஹெட்லைட்கள், அகலமான ஏர் டேம், டோர் மவுண்ட் செய்யப்பட்ட ORVMகள், மெல்லிய எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.
- பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது X7 காரின் ஸ்பெஷல் எடிஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
- புதிய ஸ்பெஷல் எடிஷன் கார் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் X7 40i ஜாரெ M எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பிஎம்டபிள்யூ X7 ஸ்பெஷல் எடிஷன் காரின் விலை ரூ. 1 கோடியே 20 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய பிஸ்போக் எஸ்யுவி மாடல் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
இந்த ஸ்பெஷல் எடிஷன் காரில் பெரிய கிட்னி கிரில், கிளாஸ் பிளாக் பினிஷ், முன்புறம் மற்றும் பின்புறம் M சின்னம் இடம்பெற்று இருக்கிறது. இந்த கார் மினரல் வைட் மற்றும் கார்பன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. புதிய X7 மாடலில் 21 இன்ச் ஜெட் பிளாக் அலாய் வீல்கள் உள்ளன. இத்துடன் M அக்சஸரீஸ் பேக்கேஜ் வழங்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ X7 40i 50 ஜாரெ M எடிஷன் மாடலில் 3.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 340 ஹெச்பி பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிமீ வேகத்தை 6.1 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இத்துடன் எபிஷியண்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் பிளஸ் என மூன்று விதமான டிரைவ் மோட்களை இந்த கார் வழங்குகிறது. இவை கார் என்ஜினின் சேசிஸ், ஸ்டீரிங் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவைகளின் செயல்திறனை ஆல்டர் செய்கிறது.
- லம்போர்கினி நிறுவனத்தின் புதிய ஹூரகேன் டெக்னிகா மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்த கார் பந்தய களத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
லம்போர்கினி நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக ஹூரகேன் டெக்னிகா மாடலை அறிமுகம் செய்தது. புதிய லம்போர்கினி காரின் விலை ரூ. 4 கோடியே 04 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இருவர் மட்டும் பயணிக்கக்கூடிய இந்த கார் பந்தய கள பயன்பாட்டை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது ஆகும்.
முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அறிமுகமாகி இருக்கும் வேரியண்ட் ஹூரகேன் இவோ RWD மற்றும் ஹூரகேன் STD மாடல்களின் இடையில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய லம்போர்கினி ஹூரகேன் டெக்னிகா மாடலில் 5.2 லிட்டர் வி10 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 640 ஹெச்பி பவர், 565 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் ஒட்டுமொத்த டிரைவிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த கார் ஸ்டிராடா, ஸ்போர்ட் மற்றும் கோர்சா என மூன்று வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேக்ததை 3.2 நொடிகளில் எட்டிவிடும். மணிக்கு அதிகபட்சம் 325 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
புதிய லம்போர்கினி காரில் 20 இன்ச் அலாய் வீல்கள், கார்பன் பைபர் என்ஜின் கவர், பிக்சட் ரியர் ஸ்பாயிலர், ஸ்போர்டி ரியர் பம்ப்பர், ஹெக்சகன் வடிவ டூயல் எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. உள்புறம் ஆல் பிளாக் தீம் கொண்டுள்ளது. கூடுதலாக ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி மற்றும் மேம்பட்ட HMI இண்டர்பேஸ் வழங்கப்பட்டு உள்ளது.
- ஸ்கோடா நிறுவனம் பல்வேறு புது கார் மாடல்களை உருவாக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
- சர்வதேச சந்தையில் தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்யவும் ஸ்கோடா முடிவு செய்துள்ளது.
ஸ்கோடா நிறுவனம் கடந்த மாதம் நெக்ஸ்ட் விஷன் கான்செப்ட் மாடல் வரைபடங்களை வெளியிட்டு இருந்தது. தற்போது இந்த காரின் டிசைன் வரைபடங்களை ஸ்கோடா வெளியிட்டு உள்ளது. கான்செப்ட் மாடல் விஷன் 7S என அழைக்கப்படுகிறது. இந்த கார் மூன்று அடுக்கு இருக்கைகள் கொண்ட 7-சீட்டர் மாடல் ஆகும். டிசைன் வரைபடங்களில் இந்த கார் முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
புதிய விஷன் 7S எஸ்யுவி மாடல் என ஸ்கோடா தெரிவித்து உள்ளது. வரைபடங்களின் படி இந்த காரின் வீல் ஆர்ச்கள் மீது பிளாக்டு-அவுட் கிளாடிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முன்புறம் பௌக்ஸ் ஸ்கிட் பிளேட், ஏழு செங்குத்தான ஸ்லிட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் கிரில் மெல்லியதாக மாற்றப்பட்டு, ஹெட்லேம்ப் அதிலேயே பொருத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெல்லிய டிஆர்எல்கள் காணப்படுகிறது.

காரின் பின்புறம் டி டிசைன் டெயில் லேம்ப்கள், ரேன்க்டு ரியர் விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரூப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளது. ஒட்டுமொத்த டிசைனுக்கு ஏற்ப இந்த காரின் விங் மிரர்கள் மெல்லியதாக வழங்கப்பட்டு இருக்கின்றன.
வரும் வாரங்களில் இந்த கார் பற்றிய இதர விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிகிறது. முதற்கட்டமாக கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் சில ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
- மஹிந்திநரா நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய XUV300 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- இந்த கார் சக்திவாய்ந்த டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜினுடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் முற்றிலும் புதிய மேம்பட்ட மஹிந்திரா XUV300 எஸ்யுவி-க்கான டீசரை வெளியிட்டு உள்ளது. வெளிப்புறம் இந்த கார் சிறிதளவு மாற்றங்களை கொண்டிருக்கிறது. இந்த காரில் சக்திவாய்ந்த டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
சப்-4 மீட்டர் எஸ்யுவி-யான மஹிந்திரா XUV300 தோற்றத்தில் புதிதாக காட்சியளிக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக காரின் முன்புறம் வழங்கப்பட்டு இருக்கும் புதிய மஹிந்திரா நிறுவன லோகோ தெரிகிறது. இந்திய சந்தையின் சப்-4 மீட்டர் எஸ்யுவி பிரிவில் அதிக போட்டி நிறைந்து இருக்கும் நிலையில், மஹிந்திரா தனது XUV300 மாடலை அப்டேட் செய்து இருக்கிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய XUV300 மாடலின் பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் எந்த மாற்றமும் செய்யப்பட்டு இருக்காது என்றே தெரிகிறது. இந்த காரில் சற்றே வித்தியாசமான பாக் லைட் ஹவுசிங், பெரிய அலாய் வீல்கள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் வைட் நிற ரூஃப் மற்றும் புதிய ஷேட் ரெட் நிறம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதிய XUV300 மாடலில் 1.2 லிட்டர் T-GDI டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 130 ஹெச்பி பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. தற்போதைய மாடலில் 109 ஹெச்பி பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்கும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 115 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
- டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார் மாடல்களில் ஒன்றாக லேண்ட் குரூயிசர் LC 300 இருக்கிறது.
- இந்த மாடலின் இந்திய முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புதிய லேண்ட் குரூயிசர் LC300 மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் ஆகும். ஏற்கனவே இந்த லேண்ட் குரூயிசர் LC300 மாடல் பல்வேறு உலக நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த காருக்கான காத்திருப்புக் காலம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில நாடுகளில் இந்த காரை பெற மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
எனினும், இந்தியாவில் புதிய லேண்ட் குரூயிசர் LC300 மாடல் வினியோகம் ஒரு ஆண்டுக்கும் மேல் துவங்கி விடும் என தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய LC200 போன்றே புதிய டொயோட்டா LC300 மாடலும் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட யூனிட் வடிவில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட இருக்கிறது.

தற்போது முன்பதிவு மட்டும் துவங்கி இருக்கும் நிலையில், இதன் விலை பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்திய சந்தையில் புதிய டொயோட்டா லேண்ட் குரூயிசர் LC300 மாடலின் விலை ரூ. 2 கோடி வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த காரை வாங்குவோர் லேண்ட் குரூயிசர் LC300 மீது மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கி.மீ வாரண்டியை பெற முடியும்.
வரும் மாதங்களில் புதிய லேண்ட் குரூயிசர் LC300 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அறிமுகமானதும் இந்த கார் லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் காருக்கு போட்டியாக அமைகிறது.
- கியா இந்தியா நிறுவனம் தனது சொனெட் மாடல் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- இந்த சப்-4 மீட்டர் எஸ்யுவி மாடல் 2020 செப்டம்பர் மாத வாக்கில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
கியா இந்தியா நிறுவனம் சொனெட் X லைன் மாடலுக்கான முதல் டீசரை வெளியிட்டு இருக்கிறது. இந்த சப்-4 மீட்டர் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் 2020 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில், கியா சொனெட் X லைன் மாடல் விலை விவரங்கள் அந்நிறுவனத்தின் இரண்டாவது ஆண்டு விழாவின் போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
கியா சொனெட் X லைன் மாடல் எக்ஸ்க்ளூசிவ் மேட் கிராபைட் நிறத்தில் கிடைக்கிறது. இந்த மாடல் முதன் முதலில் செல்டோஸ் X லைன் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. டீசரின் படி X லைன் பேட்ஜிங் காரின் பின்புறமாக வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த காரில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு பெரிய அலாய் வீல்கள், ஆரஞ்சு அக்செண்ட்கள், பிளாக்டு அவுட் எலிமெண்ட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
காரின் உள்புறம் சொனெட் X லைன் மாடலில் புளூ நிற ஷேட் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிறத்தை கியா நிறுவனம் இண்டிகே பெரா என அழைக்கிறது. புதிய X லைன் வேரியண்ட் சொனெட் டாப் எண்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதால், இதில் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
கியா சொனெட் X லைன் மாடலிலும் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். சமீபத்தில் கியா நிறுவனம் தனது சொனெட் மாடல் விலையை ரூ. 34 ஆயிரம் வரை உயர்த்தியது.






