search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    புதிய கான்செப்ட் கார் டீசரை வெளியிட்டு அசத்திய ஸ்கோடா
    X

    புதிய கான்செப்ட் கார் டீசரை வெளியிட்டு அசத்திய ஸ்கோடா

    • ஸ்கோடா நிறுவனம் பல்வேறு புது கார் மாடல்களை உருவாக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
    • சர்வதேச சந்தையில் தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்யவும் ஸ்கோடா முடிவு செய்துள்ளது.

    ஸ்கோடா நிறுவனம் கடந்த மாதம் நெக்ஸ்ட் விஷன் கான்செப்ட் மாடல் வரைபடங்களை வெளியிட்டு இருந்தது. தற்போது இந்த காரின் டிசைன் வரைபடங்களை ஸ்கோடா வெளியிட்டு உள்ளது. கான்செப்ட் மாடல் விஷன் 7S என அழைக்கப்படுகிறது. இந்த கார் மூன்று அடுக்கு இருக்கைகள் கொண்ட 7-சீட்டர் மாடல் ஆகும். டிசைன் வரைபடங்களில் இந்த கார் முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    புதிய விஷன் 7S எஸ்யுவி மாடல் என ஸ்கோடா தெரிவித்து உள்ளது. வரைபடங்களின் படி இந்த காரின் வீல் ஆர்ச்கள் மீது பிளாக்டு-அவுட் கிளாடிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முன்புறம் பௌக்ஸ் ஸ்கிட் பிளேட், ஏழு செங்குத்தான ஸ்லிட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் கிரில் மெல்லியதாக மாற்றப்பட்டு, ஹெட்லேம்ப் அதிலேயே பொருத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெல்லிய டிஆர்எல்கள் காணப்படுகிறது.


    காரின் பின்புறம் டி டிசைன் டெயில் லேம்ப்கள், ரேன்க்டு ரியர் விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரூப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளது. ஒட்டுமொத்த டிசைனுக்கு ஏற்ப இந்த காரின் விங் மிரர்கள் மெல்லியதாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

    வரும் வாரங்களில் இந்த கார் பற்றிய இதர விவரங்கள் அறிவிக்கப்படும் என தெரிகிறது. முதற்கட்டமாக கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் ப்ரோடக்‌ஷன் வெர்ஷன் சில ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×