search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    கியா சொனெட் X லைன் இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
    X

    கியா சொனெட் X லைன் இந்தியாவில் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

    • கியா இந்தியா நிறுவனத்தின் புதிய சொனெட் X லைன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
    • புதிய X லைன் மாடல் டர்போ பெட்ரோல் மற்றும் டர்போ டீசல் வெர்ஷன்களில் கிடைக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் புதிய சொனெட் X லைன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய சொனெட் X லைன் மாடலின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எடிஷன் விலை ரூ. 13 லட்சத்து 39 ஆயிரம் என துவங்குகிறது. இதன் 1.5 லிட்டர் டர்போ டீசல் விலை ரூ. 13 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கியா சொனெட் X லைன் இரு வேரியண்ட்களும் டாப் எண்ட் ஆட்டோமேடிக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளன.

    புதிய X லைன் மாடல் காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. அதன் படி புதிய கியா சொனெட் X லைன் மேட் கிராபைச், சேஜ் என டூயல் டோன் நிற இண்டீரியர், புதிய டிசைன் கொண்ட 16 இன்ச் அலாய் வீல்கள், ஆரஞ்சு நிற ஸ்டிட்ச்களை கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் அதிக விற்பனையாகும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யுவியாக சொனெட் இருக்கிறது. புதிய X லைன் மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனையை மேலும் அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.


    கியா சொனெட் X லைன் பெட்ரோல் மாடலில் 1 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 118 ஹெச்பி பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ட்வின் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டீசல் மாடலில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 115 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    புதிய கியா சொனெட் X லைன் மாடலுக்கான முன்பதிவு நாடு முழுக்க அனைத்து கியா விற்பனை மையங்களிலும் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய எஸ்யுவி மாடலை ஆன்லைனிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். சொனெட் மட்டுமின்றி கியா செல்டோஸ் X லைன் மாடலும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×