என் மலர்

  இது புதுசு

  ரூ. 97 லட்சம் விலையில் புது பி.எம்.டபிள்யூ. கார் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
  X

  ரூ. 97 லட்சம் விலையில் புது பி.எம்.டபிள்யூ. கார் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய X5 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்த மாடலில் புதிதாக M ஸ்போர்ட் பாடி கிட் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

  பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய X5 X-டிரைவ் 30d M ஸ்போர்ட் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கார் ஆடம்பர எஸ்யுவி மாடலில் காஸ்மெடிக் மாற்றங்களை வழங்கி இருக்கிறது. இவை தவிர புது மாடலிலும் 3.0 லிட்டர் டீசல் என்ஜினே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. X5 X-டிரைவ் 30d M ஸ்போர்ட் மாடலின் விலை ரூ. 97 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

  அந்த வகையில் இந்த மாடல் X சீரிஸ் எஸ்யுவி காரின் டாப் எண்ட் வேரியண்ட் ஆகி இருக்கிறது. முன்னதாக X5 கார் தான் டாப் எண்ட் மாடலாக இருந்து வந்தது. இதன் விலை ரூ. 94 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. புதிய பி.எம்.டபிள்யூ. X5 X-டிரைவ் 30d M ஸ்போர்ட் மாடலில் M ஸ்போர்ட் டிசைன் பேக்கேஜ், புதிய முன்புற பம்ப்பர், ரியர் டிப்யுசர், டெயில் பைப்கள், M ஸ்போர்ட் பிரேக் கேலிப்பர்கள், M ஸ்போர்ட் லோகோ உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.


  புதிய பி.எம்.டபிள்யூ. X5 X-டிரைவ் 30d M ஸ்போர்ட் மாடலில் 265 ஹெச்.பி. பவர், 620 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 6 சிலிண்டர்கள் கொண்ட டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், எக்ஸ் டிரைவ் சிஸ்டம் மூலம் ஆல் வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

  ஸ்போர்ட் எக்ஸ் பிளஸ் வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது, M ஸ்போர்ட் வேரியண்டில் ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட பேடில் ஷிப்டர்கள், லான்ச் கண்ட்ரோல், அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன், எலெக்ட்ரிக் டெயில்கேட், அடாப்டிவ் எல்இடி ஹெட்லேம்ப்கள், 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், ஹெட்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, 20 இன்ச் M ஸ்போர்ட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

  இந்திய சந்தையில் புதிய பி.எம்.டபிள்யூ. X5 X-டிரைவ் 30d M ஸ்போர்ட் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் GLE, லேண்ட் ரோவர் டிஸ்கவரி மற்றும் வால்வோ XC90 போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது.

  Next Story
  ×