என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    • ராயல் என்பீல்டு நிறுவனம் தனது மீடியோர் 650 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இந்த மாடல் இந்திய சந்தையில் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மீடியோர் 650 மாடல் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய ஸ்பை படங்களில் இந்த மாடல் பிரமாண்ட ஸ்டிரீட் தோற்றம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. தோற்றத்தில் இந்த மாடல் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் போன்றே காட்சியளிக்கிறது.

    இத்தகைய தோற்றம் கொண்டுருக்கும் பட்சத்தில் இது அந்நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் மாடலாக இருக்க வேண்டும். மேலும் இந்த ஸ்பை படங்களின் படி மீடியோர் 650 மாடல் ப்ரோடக்‌ஷன் வடிவம் பெற்று விட்டதாகவே தெரிகிறது. இந்த மாடலின் சஸ்பென்ஷன் செட்டப்-ஐ மட்டும் டியூனிங் செய்தால் மீடியோர் 650 முழுமையாக தயாராகி விடும் நிலையில் காட்சியளிக்கிறது.


    ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடல் ராயல் என்பீல்டு இண்டர்செப்டார் 650 பைக்கின் பவர் மற்றும் டார்க்-ஐ ஒருங்கிணைத்து மீடியோர் 350 வழங்கும் சவுகரிய ரைடிங் அனுபவத்தை வழங்குகிறது. இதன் மூலம் கச்சிதமான டூரிங் மோட்டார்சைக்கிளை உருவாக்க முடியும். இதுவரை வெளியானதில் விலை உயர்ந்த ராயல் என்பீல்டு பைக் என்ற பெருமையை புதிய மீடியோர் 650 பெற இருக்கிறது.

    அதிக விலை காரணமாக இந்த மாடலில் முன்புறம் யுஎஸ்டி போர்க், சற்றே தடிமனான டயர்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். வழக்கமான ராயல் என்பீல்டு மாடல்களில் கன்வென்ஷனல் போர்க்குகள் தான் வழங்கப்பட்டு இருக்கும். மற்றப்படி இண்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மாடல்களை போன்றே இந்த மாடலிலும் 650சிசி, பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது.

    Photo Courtesy: Rushlane 

    • மஹிந்திரா நிறுவனத்தின் 5-டோர் தார் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
    • இதனை உறுதிப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    மஹிந்திரா தார் 5-டோர் வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், 5-டோர் கொண்ட மஹிந்திரா தார் ஸ்பை வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. தோற்றத்தின் படி இந்த கார் ப்ரோடக்‌ஷன் வடிவம் பெற சில மாதங்கள் வரை இருக்கும் என்றே தெரிகிறது.


    Photo Source: Instagram | moto._tourer

    புதிய மஹிந்திரா தார் 5 டோர் வேரியண்ட் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார் போர்ஸ் குர்கா 5-டோர் எஸ்யுவி மற்றும் மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர் எஸ்யுவி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    மஹிந்திரா தார் 5-டோர் எஸ்யுவி மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பியோ N பிளாட்பார்மை சார்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. காரின் ஒட்டுமொத்த எடை அதிகரிக்கும் என்பதால் தார் 5-டோர் மாடலில் 2.2 லிட்டர், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட, நான்கு சிலண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    தற்போதைய தார் 3-டோர் மாடல் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 2 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய CT125X மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்த மாடல் ஹோண்டா ஷைன் மற்றும் ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.

    புதிய பஜாஜ் CT125X மோட்டாரைச்கிள் பஜாஜ் விற்பனை மையத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் பஜாஜ் CT110X மாடலின் 125சிசி வெர்ஷன் ஆகும். இத்துடன் இந்த மாடல் அதிக அம்சங்கள் மற்றும் திறன் கொண்டிருக்கிறது.

    பஜாஜ் CT125X மோட்டார்சைக்கிள் மூலம் பஜாஜ் நிறுவனம் 125சிசி பட்ஜெட் மோட்டார்சைக்கிள் பிரிவில் மீண்டும் களமிறங்குகிறது. முன்னதாக டிஸ்கவர் 125 மற்றும் XCD 125 போன்ற மாடல்களை பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையின் 125 சிசி பிரிவில் விற்பனை செய்து வந்தது.


    பட்ஜெட் மாடல்கள் பிரிவில் பிளாட்டினா 100, பிளாட்டினா 110 மற்றும் CT110X போன்ற மாடல்களை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. 125சிசி மட்டுமின்றி பெட்ரோல் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்யாத காரணத்தால் பஜாஜ் வாகனங்கள் ஒட்டுமொத்த விற்பனை திடீர் சரிவை எதிர்கொண்டது.

    தற்போது பஜாஜ் CT125X மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தன் மூலம் பஜாஜ் நிறுவனம் இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய பிரிவில் பலத்த போட்டியை ஏற்படுத்த முடியும். இந்திய சந்தையில் புதிய பஜாஜ் CT125X மாடல் ஹோண்டா SP125, ஹோண்டா ஷைன், ஹீரோ கிளாமர், ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • ஹோண்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஆக்டிவா 6ஜி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய ஸ்கூட்டர் காஸ்மெடிக் மாற்றங்களுடன் விற்பனைக்கு வருகிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் ஆக்டிவா மாடலின் புது வெர்ஷனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முதன் முதலில் வெளியான டீசர்களில் இது ஆக்டிவா 7ஜி மாடலாக இருக்கும் என கூறப்பட்டது. எனினும், புதிய டீசரில் இது ஆக்டிவா 6ஜி மாடலின் புது வேரியண்ட் என தெரியவந்துள்ளது.

    புது வேரியண்ட் காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த மாடலின் முன்புற அப்ரோன், பக்கவாட்டு பகுதிகளில் கோல்டன் நிற ஆக்டிவா மற்றும் பிரீமியம் பேட்ஜ்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் டோன் மிரர்கள், டூயல் டோன் சீட் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிதாக மேட் கிரீன் நிற பெயிண்ட் கொண்டிருக்கிறது.


    தற்போதைய ஆக்டிவா 6ஜி மாடலில் எக்ஸ்டர்னல் பியூவல் பில்லர் கேப், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் ஸ்விட்ச், சைலண்ட் ஸ்டார்டர், 5.3 லிட்டர் பியூவல் டேன்க், சீட் மற்றும் எக்ஸ்டெர்னல் பில்லர் மூடியை கழற்றும் டூயல் பன்ஷன் ஸ்விட்ச் வழங்கப்பட்டு உள்ளது. புதிய பிரீமியம் வேரியண்டில் கூடுதல் அம்சங்கள் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    ஹார்டுவேரை பொருத்தவரை புதிய ஆக்டிவா 6ஜி பிரீமியம் எடிஷனிலும் 109.5சிசி என்ஜினே வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 7.68 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த என்ஜினுடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 12-10 இன்ச் வீல்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க், மோனோ ஷாக் யூனிட், இருபுறங்களிலும் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    • ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி புது எலெக்ட்ரிக் கார் வெளியீட்டை உணர்த்தும் டீசரை பகிர்ந்து இருக்கிறார்.
    • ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரண்டு அறிவிப்புகளை வெளியிட ஓலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது.

    ஆகஸ்ட் 15, 2021 அன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கிய ஓலா எலெக்ட்ரிக் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    முன்னதாக சில மாதங்களுக்கு முன்பே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எதிர்கால ஸ்டைலிங், இரு யு வடிவ ஹெட்லேம்ப்கள், பொனெட் நெடுக கிடைமட்ட ஸ்டிரைப் அடங்கிய செடான் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருந்தது. ஓலா பேட்ஜிங் கொண்ட இந்த கார் ஸ்ப்லிட் ஸ்டைல் எல்இடி டெயில் லேம்ப்-கள், கனெக்டிங் லைட் பார் வழங்கப்பட்டு இருக்கிறது.


    தற்போது வெளியாகி இருக்கும் டீசர்களின் படி ஓலா எலெக்ட்ரிக் செடான் மாடல் முழு சார்ஜ் செய்தால் 500-க்கும் அதிக கிலோ மீட்டர் ரேன்ஜ் வழங்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் டாடா நெக்சான் EV மேக்ஸ் மற்றும் எம்ஜி ZS EV போன்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கும் டீசர்களின் படி புது ஓலா எலெக்ட்ரிக் வாகனம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட தலைசிறந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக இருக்கும் என தெரியவந்துள்ளது. 

    • கியா நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யுவி மாடல் இந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது.
    • இந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி கியா நிறுவனம் இந்தியாவில் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது செல்டோஸ் கார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான யூனிட் கள் விற்பனையாகி இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமாகி மூன்று ஆண்டுகள் முடிவதற்குள் இந்த இலக்கை எட்டி இருப்பதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்து இருக்கிறது.

    ஆகஸ்ட் 22 ஆம் தேதி கியா இந்தியா தனது மூன்றாவது ஆண்டு விழாவை கொண்டாட இருக்கிறது. இது தவிர கியா செல்டோஸ் அறிமுகமாகியும் மூன்று ஆண்டுகள் முடிகிறது. இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் அதிக பிரபலமான கார் மாடலாக கியா செல்டோஸ் விளங்குகிறது.


    இந்தியாவில் கியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் செல்டோஸ் மாடல் மட்டும் 60 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. விற்பனையில் மூன்று லட்சம் யூனிட்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் 91 நாடுகளுக்கு 1 லட்சத்து 03 ஆயிரத்து 033 செல்டோஸ் யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது.

    சமீபத்தில் தான் கியா நிறுவனம் இந்திய விற்பனையில் ஐந்து லட்சம் யூனிட்களை கடந்து இருந்தது. இதில் செல்டோஸ் மாடல் மட்டும் 60 சதவீத பங்குகளை பெற்று இருந்தது. செல்டோஸ் ஒட்டுமொத்த விற்பனையில் டாப் எண்ட் மாடல் மட்டும் 58 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.

    செல்டோஸ் பாடலை வாங்கிய பத்து பேரில் ஒருவர் iMT வேரியண்டை தேர்வு செய்து இருக்கின்றனர். செல்டோஸ் பாடலை பொருத்தவரை பெட்ரோல், டீசல் வேரியண்ட்கள் சம அளவு விற்பனையை பெற்றுள்ளன. 

    • ஆடி நிறுவனத்தின் 2022 Q3 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்த கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

    ஜெர்மனி நாட்டு ஆடம்பர கார் உற்பத்தியாளரான ஆடி புதிய Q3 மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. 2022 ஆடி Q3 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் ஆகும். இந்த கார் பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த காரை வாங்கும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு (2+3 ஆண்டுகள்) நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகையை பெற முடியும்.


    புதிய ஆடி Q3 மாடலில் 2.0 லிட்டர் TFSI என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் ஆல் வீல் டிரைவ் வசதியை கொண்டுள்ளது.

    காரின் வெளிப்புறம் எல்இடி ஹெட்லைட்கள், பானரோமிக் சன்கிளாஸ், ஹை கிளாஸ் ஸ்டைலிங் பேக்கேஜ், கம்பர்ட் கீ மற்றும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் டெயில்கேட் வழங்கப்பட்டு இருக்கிறது. உள்புறம் ஆடி விர்ச்சுவல் காக்பிட் பிளஸ், MMI நேவிகேஷன் பிளஸ் மற்றும் MMI டச், ஆடி டிரைவ் செலக்ட், வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட ஆடி போன் பாக்ஸ், 30 நிறங்கள் அடங்கிய ஆம்பியண்ட் லைட்டிங் பேககேஜ் பிளஸ் வழங்கப்பட்டுள்ளன. 

    • ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்திய சந்தையில் ஐந்து ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

    ஜீப் காம்பஸ் ஆனிவர்சரி எடிஷன் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 24 லட்சத்து 44 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் களமிறங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் புதிய ஆனிவர்சரி எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ஜீப் காம்பஸ் ஆனிவர்சரி எடிஷன் மாடலை விற்பனை மையங்கள் அல்லது ஜீப் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஸ்பெஷல் எடிஷன் மாடல் என்பதால், இந்த காரில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


    இந்த காரின் வெளிப்புறம் 18 இன்ச் அளவில் அலாய் வீல்கள், கிரானைட் க்ரிஸ்டல் பினிஷிங், நியூட்ரல் கிரே நிறத்தால் ஆன ORVM, பாடி கலர் ஃபெண்டர் ஃபிளேர்கள், அக்செண்ட் நிற ரூஃப் ரெயில்கள், முன்புற கிரில் ரிங்குகள் நியூட்ரல் கிரே நிறம் கொண்டுள்ளன. இவை அனைத்தும் காரின் தோற்றத்தில் மாற்றங்களாக பிரதிபலிக்கின்றன. இதனால் கார் முன்பை விட அதிக பிரீமியம் தோற்றம் பெற்று இருக்கிறது. இத்துடன் ஐந்தாவது ஆனிவர்சரி பேட்ஜிங்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    காரின் உள்புறம் லெதர் இருக்கை, பிளாக் ஹெட்லைனர்களில் டக்ஸ்டன் அக்செண்ட் ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், பியானோ பிளாக் மற்றும் அனோடைஸ்டு கன் மெட்டல் இண்டீரியர் அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன.

    ஜீப் காம்பஸ் ஆனிவர்சரி எடிஷன் மாடல் 162 ஹெச்பி பவர் கொண்ட 1.4 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மல்டி-ஏர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 170 ஹெச்பி பவர், 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மல்டிஜெட் டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்பெஷல் காரை 4x4 வெர்ஷனிலும் பெற முடியும். எனினும், இந்த வசதி டீசல் என்ஜினில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.

    கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை பொருத்தவரை பெட்ரோல் என்ஜினுக்கு 7 ஸ்பீடு DCT, டீசல் என்ஜினுக்கு 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஸ்விப்ட் ஹேச்பேக் கார் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட இருக்கிறது.
    • புதிய ஸ்விப்ட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் மாருதி சுசுகி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

    அடுத்த தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட் ஹேச்பேக் மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் மீண்டும் வெளியாகி உள்ளது. புதிய ஸ்விப்ட் கார் தற்போதைய மாடலுடன் சோதனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே நான்காம் தலைமுறை ஸ்விப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.


    Photo Courtesy: Twitter | @suzuki_garage

    முன்னதாக ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட 2023 சுசுகி ஸ்விப்ட் மாடல் ஸ்பை படங்கள் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி இருந்தது. தொடர் சோதனைகளை அடுத்து, விரைவில் வெளியிடப்பட இருக்கும் சுசுகி ஸ்விப்ட் ஹேச்பேக் காரின் ரோடு டெஸ்ட் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. சோதனை செய்யப்படும் ஸ்விப்ட் கார் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.

    புதிய தலைமுறை சுசுகி ஸ்விப்ட் கார் புல்டு-பேக் ஹெட்லேம்ப்கள், டெயில் லேம்ப் உடன் இணையும் படியான ஷோல்டர் லைன் காணப்படுகிறது. இதன் பின்புற தோற்றம் முதல் தலைமுறை சுசுகி ஸ்விப்ட் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. ஒட்டுமொத்த வடிவமைப்பு கிளாம்ஷெல் பொனெட், பெரிய முன்புற கிரில், ஹெட்லேம்ப்-இன் கீழ்புறம் டிஆர்எல்கள், அகலமான ஏர் இன்டேக்குகள், பெரிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    • ஸ்கோடா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்திய சந்தையில் இது ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. என்யாக் iV எலெக்ட்ரிக் கிராஸ்-ஓவர் மாடலே இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் முதல் கார் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    இந்த நிலையில், வெளியீட்டுக்கு முன் ஸ்கோடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்திய ஸ்பை படங்கள் பூனேவுக்கு அருகாமையில் எடுக்கப்பட்டுள்ளன. சாலையில் காணப்பட்ட ஸ்கோடா என்யாக் iV மாடல் எவ்வித மறைப்பும் இன்றி தெளிவாக காணப்படுகிறது.


    Photo Courtesy: Twitter / @madhavrajpuroh2

    இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் என்யாக் iV மாடல் தான் ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இருக்கும் என ஸ்கோடா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்திய சந்தையில் புதிய ஸ்கோடா என்யாக் iV மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஸ்கோடா என்யாக் iV மாடல் 55 கிலோவாட் ஹவர், 62 கிலோவாட் ஹவர் மற்றும் 82 கிலோவாட் ஹவர் என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இவை முறையே 340 கிமீ, 360 கிமீ மற்றும் 510 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன. சர்வதேச சந்தையில் ஸ்கோடா என்யாக் மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

    • டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கார் இந்திய சந்தையில் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான எம்பிவி கார் மாடல்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா இருந்து வருகிறது.

    ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டொயோட்டா, தனது எம்பிவி மாடல் இன்னோவா விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருவதாக தெரிவித்து உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த மாடலின் விற்பனை சீராக இருந்ததோடு, எம்பிவி பிரிவில் அசைக்க முடியாத மாடலாகவும் விளங்குகிறது.

    டொயோட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவு டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தனது பிரபல எம்பிவி மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து உள்ளது. இந்திய சந்தை விற்பனையில் இன்னோவா மாடல் பத்து லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதாக அறிவித்து டொயோட்டா நிறுவனம் அறிவித்து இருக்கிறது.


    சில நாட்களுக்கு முன்பு தான் ஜூலை மாத விற்பனையில் 19 ஆயிரத்து 693 கார்களை விற்பனை செய்ததாக டொயோட்டா நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்தியாவில் வியாபாரத்தை துவங்கியதில் இருந்து இதுவரை ஒரே மாதத்தில் டொயோட்டா நிறுவனம் இத்தனை யூனிட்களை விற்பனை செய்ததே இல்லை. 2021 ஜூலை மாதத்தில் டொயோட்டா நிறுவனம் 13 ஆயிரத்து 105 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

    அந்த வகையில் கடந்த மாதம் மட்டும் டொயோட்டா நிறுவன வருடாந்திர விற்பனை 50 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. இதே போன்று ஜூன் 2022 மாத விற்பனையில் டொயோட்டா 16 ஆயிரத்து 500 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இது 19 சதவீதம் அதிகம் ஆகும்.

    • ராயல் என்பீல்டு நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை வெளியிடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
    • புது எலெக்ட்ரிக் வாகனத்திற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பல்வேறு முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களும் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றன. இந்த நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் வெளியாக மேலும் நான்கு ஆண்டுகள் வரை ஆகும் என ஈச்சர் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சித்தார்தா லால் தெரிவித்து இருக்கிறார்.

    "எலெக்ட்ரிக் வாகன பிரிவு குறித்த திட்டங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்த மிக எளிய வழியை தேர்வு செய்ய மாட்டோம். இதன் பின்னணியில் அதிக வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன," என்று அவர் தெரிவித்தார். அந்த வகையில் ராயல் என்பீல்டு பெயரில் முதல் எலெக்ட்ரிக் வாகனம் வெளியாக அதிக ஆண்டுகள் ஆகும் என்றே தெரிகிறது.


    "தற்போது ஆரம்பகட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சில பிரச்சினைகளை சரி செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. ஆனால் இப்போது வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. நகர பயன்பாட்டுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்."

    "தற்போதைய பிளாட்பார்மில் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் வழங்கும் எண்ணம் இல்லை. இது முழுக்க ராயல் என்பீல்டு மாடலாகவே இருக்கும். அறிமுகமாகும் போது சிறப்பான ஒன்றாக இருப்பதோடு, அனைவரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையிலஅ இருக்கும்," என சித்தார்தா  லால் தெரிவித்து இருக்கிறார்.

    ×