என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    • மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய ஆல்டோ காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஆல்டோ மாடலின் பல்வேறு விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகின்றன.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஆல்டோ கார் மாடலை ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், புது ஆல்டோ கார் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. முன்னதாக ஆல்டோ மாடலின் நிறம் பற்றிய விவரங்கள் வெளியான நிலையில், தற்போது இண்டீரியர் விவரங்கள் லீக் ஆகி உள்ளது.

    அதன்படி புதிய ஆல்டோ காரின் கேபின் ஆல் பிளாக் தீம் மற்றும் ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் யூனிட், இருபுறங்களிலும் செங்குத்தான சில்வர் இன்சர்ட்கள் உள்ளன. இத்துடன் நடுவே ஏசி வெண்ட்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இத்துடன் பவர் விண்டோ பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஆல்டோ காரில் மேனுவல் ஏசி மற்றும் மேனுவல் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ORVMகள் உள்ளன.


    Photo Courtesy: Rushlane 

    இத்துடன் முற்றிலும் புதிய ஸ்டீரிங் வீல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. காரின் வெளிப்புறம் ஹார்டெக்ட் பிளாட்பார்மை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இத்துடன் சற்றே பெரிய முன்புற கிரில், ஹெட்லேம்ப்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள், பெண்டரில் மவுண்ட் செய்யப்பட்ட இண்டிகேட்டர்கள் உள்ளன.

    புதிய மாருதி சுசுகி ஆல்டோ கார் Std, LXi, LXi (O), VXi, VXi (O), VXi+, மற்றும் VXi+ (O) வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. 2022 மாருதி சுசுகி ஆல்டோ மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும். இந்த என்ஜின் 66 ஹெச்.பி. பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்படுகிறது.

    • கியா இந்தியா நிறுவனம் தனது சொனெட் மாடல் விலையை இந்திய சந்தையில் மாற்றி இருக்கிறது.
    • முன்னதாக இந்த காரின் விலை ஜனவரி மாத வாக்கில் முதல் முறையாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கியா இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவி சொனெட் மாடலின் விலையை இந்திய சந்தையில் சத்தமின்றி உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வின் படி புதிய சொனெட் மாடல் விலை தற்போது ரூ. 34 ஆயிரம் வரை அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் சொனெட் மாடல் விலை முதல் முறையாக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் கியா சொனெட் மாடல் HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+, மற்றும் ஆனிவர்சரி எடிஷன் போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் பேஸ் வேரியண்டான HTE விலை ரூ. 34 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 10 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 16 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.


    ஏப்ரல் 2022 மாத வாக்கில் கியா நிறுவனம் சொனெட் 2022 வெர்ஷனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புது மாடலில் அதிக ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டையர் பிரெஷர் மாணிட்டிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், இபிஎஸ் போன்ற வசதிகள் உள்ளன.

    புதிய கியா சொனெட் மா்டல் 1.2 லிட்டர் NA பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனவல், 6 ஸ்பீடு iMT, 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    • ஹோண்டா நிறுவனத்தின் அட்வென்ச்சர் ஸ்போர்ட் மாடல் இரண்டு புதிய நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
    • புது நிறம் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    ஹோண்டா நிறுவனம் 2023 ஆப்ரிக்கா ட்வின் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிளாக்‌ஷிப் அட்வென்ச்சர் டூரிங் மோட்டார்சைக்கிள் ஸ்டாண்டர்டு மற்றும் அட்வென்ச்சர் ஸ்போர்ட் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரண்டு வேரியண்ட்களும் தற்போது இறண்டு புது நிறங்களில் கிடைக்கிறது.

    2023 ஸ்டாண்டர்டு CRF1100L ஆப்ரிக்கா ட்வின் மாடல் மேட் பலிஸ்டிக் பிளாக் மெட்டாலிக் மற்றும் க்ளிண்ட் புளூ மெட்டாலிக் டிரைகலர் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் 2022 மாடல்களை போன்றே புது மாடல்களும் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் நிறத்திலும் கிடைக்கிறது.


    மேட் பலிஸ்டிக் பிளாக் மெட்டாலிக் மாடல் ஆல்-பிளாக் பிரேம், க்ளிண்ட் வேவ் புளூ மெட்டாலிக் டிரைகலர் மாடல் புளூ நிற ஹெட்லைட் கௌல், புளூ முன்புற பெண்டர், டெயில் பகுதிகளில் ரெட் மற்றும் வைட் நிற டிடெயிலிங் செய்யப்பட்டு உள்ளது. அட்வென்ச்சர் ஸ்போர்ட் மாடல் மேட் இரிடியம் கிரே மெட்டாலிக் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் பியல் கிளேர் வைட் டிரைகலர் நிறத்திலும் கிடைக்கிறது.

    சர்வதேச சந்தையில் இரு மாடல்களும் மேனுவல் அல்லது டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் டிசைன் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. 2023 CRF1100L ஆப்ரிக்கா ட்வின் மாடல்களில் ட்வின் பாட் ஹெட்லைட், உயரமான விண்ட்ஸ்கிரீன், செமி ஃபேரிங், டால் செட் எக்சாஸ்ட் மற்றும் என்ஜின் பாஷ் பிளேட் உள்ளது. அட்வென்ச்சர் ஸ்போர்ட் மாடல் பெரிய பியூவல் டேன்க் கொண்டுள்ளது.

    • ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் சிட்டி ஹைப்ரிட் மாடல் விலையை முதல் முறையாக உயர்த்தி இருக்கிறது.
    • இது மட்டுமின்றி மேலும் சில மாடல்கள் விலையும் மாற்றப்பட்டு உள்ளது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஆகஸ்ட் மாதத்தில் அமலுக்கு வந்தது. முற்றிலும் புதிய சிட்டி, சிட்டி eHEV, ஜாஸ் மற்றும் WR-V போன்ற மாடல்களின் விலை மட்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா சிட்டி eHEV மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 39 ஆயிரத்து 100 விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது சிட்டி eHEV ZX வேரியண்டிற்கு மட்டும் பொருந்தும்.


    இதைத் தொடர்ந்து ஜாஸ் மற்றும் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல்களுக்கு ரூ. 11 ஆயிரம் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

    ஹோண்டா WR-V டீசல் வேரியண்ட்களுக்கும் ரூ. 11 ஆயிரம் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்படவில்லை.

    ஹோண்டா அமேஸ் E MT வேரியண்ட் விலை மட்டும் உயர்த்தப்படவில்லை. மற்ற அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 6 ஆயிரத்து 300-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 11 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    • ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது கவனத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.
    • இந்திய சந்தையிலும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட இருக்கிறது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் கோனா எலெக்ட்ரிக் கார் மாடலை ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. எதிர்காலத்தில் இதே காரின் பேஸ்லிப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 5 சீட்டர் மாடலான ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக், பிரீமியம் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது.

    கோனா எலெக்ட்ரிக் மாடலை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய ஆயத்தமாகி விட்டது. அதன்படி ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த வாரம் புதிய டக்சன் மாடலை தொடர்ந்து புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


    கியா EV6 போன்று இல்லாமல், ஐயோனிக் 5 மாடல் செமி நாக்டு-டவுன் முறையில் இங்கு கொண்டுவரப்படுகிறது. கியா EV6 போன்றே ஐயோனிக் 5 மாடலும் E-GMP பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. சமீபத்தில் தான் இந்த கார் 2022 ஆண்டுக்கான சிறந்த கார் என்ற விருதை வென்று இருந்தது.

    2028 வாக்கில் இந்தியாவில் ஆறு புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகன சந்தையை பொருத்தவரை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மாடல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது மட்டுமின்றி மஹிந்திரா நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

    • பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்தியாவில் தனது 3 சீரிஸ் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது.
    • சமீபத்தில் பி.எம்.டபிள்யூ. X5 350d M ஸ்போர்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை இந்திய சந்தையில் திடீரென உயர்த்தி இருக்கிறது. இம்முறை பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மற்றும் 7 சீரிஸ் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த மாதம் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது கார் மாடல்களை மாற்றியமைத்து, தேர்வு செய்யப்பட்ட மாடல்கள் விலையை உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பி.எம்.டபிள்யூ. 330Li M ஸ்போர்ட் ஃபர்ஸ்ட் எடிஷன் மற்றும் 330Li லக்சரி லைன் மாடல்கள் விலை முறையே ரூ. 80 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. பி.எம்.டபிள்யூ. 320Ld லக்சரி லைன் மாடலின் விலை ரூ. 60 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 740Li M ஸ்போர்ட் எடிஷன் விலை ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.


    முன்னதாக பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில், X5 சீரிசில் மாற்றம் செய்து, புதிதாக X5 எக்ஸ்-டிரவை் 30d M ஸ்போ்ட் மாடலை அறிமுகம் செய்து இருந்தது. இது ஸ்போர்ட் X வேரியண்டின் மேல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் வெளிப்புற டிசைன் மாற்றப்பட்டு பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தது. 

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்கள் பட்டியலில் வேகன்ஆர் இடம்பெற்று இருக்கிறது.
    • 2023 முதல் காலாண்டில் மட்டும் மாருதி நிறுவனம் மூன்று கார்களை அறிமுகம் செய்துள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் 2023 முதல் காலாண்டில் மட்டும் 3 லட்சத்து 98 ஆயிரத்து 494 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 2022 முதல் காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 3 லட்சத்து 08 ஆயிரத்து 095 யூனிட்களையே விற்பனை செய்திருந்தது. அந்த வகையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனை வருடாந்திர அடிப்படையில் 62 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.


    2023 முதல் காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 69 ஆயிரத்து 437 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது. 2022 முதல் காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 45 ஆயிரத்து 519 யூனிட்களையே ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாருதி சுசுகி நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 2023 முதல் காலாண்டில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 931 யூனிட்கள் ஆகும். இது முந்தைய ஆண்டில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 614 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய சந்தையில் XL6, எர்டிகா மற்றும் மாருதி பிரெஸ்ஸா என மூன்று புது வாகனங்களை அறிமுகம் செய்து இருப்பதே விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனினும், மாருதி சுசுகி நிறுவனம் தொடர்ந்து சிப்செட் குறைபாடு பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது. கடந்த காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 51 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

    • மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய புது எலெக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்கி வருகிறது.
    • புது எலெக்ட்ரிக் கார்களின் விவரங்கள் செப்டம்பர் மாத வாக்கில் அறிவிக்கப்படலாம்.

    மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் XUV400 மாடல் இந்தியாவில் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் புதிய XUV400 எலெக்ட்ரிக் காரை செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது எலெக்ட்ரிக் கார் தவிர மஹிந்திரா நிறுவனத்தின் எதிர்கால எலெக்ட்ரிக் கார் மாடல்கள் EV கோ நிறுவனத்தின் கீழ் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

    புது நிறுவனத்தை உருவாக்க மஹிந்திரா மற்றும் ப்ரிடிஷ் இண்டர்நேஷனல் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இதை அடுத்து இரு நிறுவனங்களும் ரூ. 1,925 கோடியை புது நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளன. புதிய XUV400 எலெக்ட்ரிக் அறிமுகமாகும் முன் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் எஸ்யுவிக்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.


    Photo Courtesy: Photo Comparo

    முன்னதாக XUV400 எலெக்ட்ரிக் மாடலை மஹிந்திரா நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிப்படுத்தி இருந்தது. சமீபத்தில் மஹிந்திரா வெளியிட்ட தகவல்களின் படி புதிய XUV400 எலெக்ட்ரிக் மாடல் 4 மீட்டர்களை விட பெரியதாக இருக்கும் என தெரியவந்துள்ளது. தற்போதைய ஸ்பை படங்களில் மஹிந்திரா XUV400 மாடல் தற்போதைய எஸ்யுவி மாடல்களை விட வித்தியசமாக காட்சியளிக்கிறது.

    இந்த காரின் மெல்லிய எல்இடி ஹெட்லைட்களின் உள்புறமாக டிஆர்எல்கள் பொருத்தப்பட்டு உள்ளன. காரின் முன்புற கிரில் பகுதி மூடப்பட்டு இருக்கிறது. இத்துடன் பெரிய செண்ட்ரல் ஏர் இண்டேக் உள்ளது. இது 2020 கான்செப்ட் மாடலில் வழங்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கார் சங்யங் டிவோலி பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    • சிட்ரோயன் நிறுவனத்தின் ஹேச்பேக் மாடல் C3 இந்திய சந்தையில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த காரின் துவக்க விலை ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம் ஆகும்.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது C3 ஹேச்பேக் மாடலின் வினியோகத்தை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. இந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சிட்ரோயன் C3 மாடல் விலை கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் C3 மாடலின் விலை ரூ. 5 லட்சத்து 71 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 06 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    சிட்ரோயன் C3 மாடல் லைவ் மற்றும் ஃபீல் என இரண்டு வேரியண்ட்கள் மற்றும் பத்து விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதில் ஆறு டூயல் டோன் மற்றும் நான்கு மோனோ டோன் நிறங்கள் அடங்கும். சிட்ரோயன் C3 மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.


    சிட்ரோயன் C3 மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லைட்கள், ஃபாக் லைட்கள், காண்டிராஸ்ட் கலர் ஸ்கிட் பிளேட்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லைட்கள், 15 இன்ச் ஸ்டீல் வீல்கள், வீல் கவர், 10 இன்ச் அளவில் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், ஹைட் அட்ஜஸ்ட் வசதி கொண்ட டிரைவர் சீட் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் C3 கார் கியா சொனெட், நிசான் மேக்னைட், டாடா பன்ச், ரெனால்ட் கைகர், டொயோட்டா அர்பன் குரூயிசர், ஹோண்டா WR-V மற்றும் மஹிந்திரா XUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புது அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் முற்றிலும் புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மிட் சைஸ் எஸ்யுவி மாடலினை இந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்தது. மேலும புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் வெளியீடு ஆகஸ்ட் மாத வாக்கில் நடைபெற இருக்கிறது.

    இந்திய சந்தையில் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் E, S, G மற்றும் V என நான்கு வித வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும் இந்த கார் ஏழு விதமான மோனோ டோன் நிறங்கள், நான்கு விதமான டூயல் டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


    புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலில் 1.5 லிட்டர் K15C பெட்ரோல் என்ஜின், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 101 ஹெச்.பி. பவர், 135 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது. மேலும் ஆல் வீல் டிரைவ் வசதியும் வழங்கப்படுகிறது.

    இது மட்டுமின்றி புதிய அர்பன் குரூயிசர் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் டொயோட்டா ஹைப்ரிட் சிஸ்டம் வசதியுடன் வருகிறது. இந்த யூனிட் 91 ஹெச்.பி. பவர் மற்றும் 122 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் இ டிரைவ் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் 2022 ஹெக்டார் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • விரைவில் இந்த மாடலுக்கான வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது புதிய ஹெக்டார் மாடலுக்கான முதல் டீசரை வெளியிட்டு உள்ளது. ஒற்றை டீசரில் புது கார் 14 இன்ச் அளவில் போர்டிரெயிட் ஸ்டைல் செண்டர் கன்சோல்-மவுண்ட் செய்யப்பட்ட தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் கொண்டு இருக்கும் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.

    இன்போடெயின்மெண்ட் யூனிட் தவிர இந்த மாடலில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் புதிய ஹெக்டார் மாடல் ரிடிசைன் செய்யப்பட்ட டேஷ்போர்டு, நடுவில் ஏர்கான் வெண்ட்கள், சதுரங்க வடிவம் கொண்ட ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், ரி-வொர்க் செய்யப்பட்ட செண்டர் கன்சோல், ரி-ஷேப் செய்யப்பட்ட கியர் லீவர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.


    இத்துடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. புதிய ஹெக்டார் மாடலில் முற்றிலும் புது முன்புற கிரில், முன்புறம் மற்றும் பின்புறம் ரி-ப்ரோஃபைல் செய்யப்பட்ட பம்ப்பர்கள், ரி-டிசைன் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப் யூனிட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படலாம்.

    இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டார் மாடல் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் கார் மாடலாக ஹெக்டார் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் ஆறு மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.

    • மசிராட்டி நிறுவனம் லிமிடெட் எடிஷன் ஸ்போர்ட்ஸ் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த கார் மசிராட்டி MC20 ஸ்போர்ட்ஸ் காரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    மசிராட்டி நிறுவனம் பிராஜக்ட் 24 கார் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்த மாடல் மசிராட்டி MC20 ஸ்போர்ட்ஸ் காரை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. பிராஜக்ட் 24 மாடல் ஆனது உலகம் முழுக்க மொத்தத்திலேயே 62 யூனிட்கள் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது பந்தய பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக 2006 ஆம் ஆண்டு மசிராட்டி நிறுவனம் MC12 மாடலை அறிமுகம் செய்து இருந்தது. இந்த கார் வெரிசோன் கோர்ஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது. இதுவும் பந்தய களத்தில் பயன்படுத்துவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது ஆகும்.


    புதிய பிராஜக்ட் 24 மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டேம்ப்பர்கள், ஆண்டி ரோல் பார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 18 இன்ச் வீல்கள் உள்ளன. பிரேக்கிங்கிற்கு பிரெம்போ கார்பன்-செராமிக் யூனிட்கள் உள்ளன. இந்த கார் கார்பன் ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் எக்ஸ்டண்ட் செய்யப்பட்ட ரியர் விங், ஸ்லைஸ்டு முன்புற ஸ்ப்லிட்டர், மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப், டெயில் லைட்கள் உள்ளன.

    இந்த ஸ்போர்ட்ஸ் காரின் மத்தியில் ட்வின் பைப்கள் உள்ளன. இதில் எக்சாஸ்ட் மவுண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏராளமான வெண்ட்கள், ஸ்கூப்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை காருக்கு ஸ்போர்ட்ஸ் தோற்றத்தை வழங்குகின்றன. FIA பாதுகாப்பு தரத்திற்கு ஏற்ப இந்த மாடலில் ரோல் கேஜ், கார்பன் பைபர் ஸ்டீரிங் வீல், இண்டகிரேடெட் டிஸ்ப்ளேக்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பெடல்கள், ஸ்டீரிங் காலம் மற்றும் ரேசிங் சீட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ×