search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahindra XUV400 EV"

    • மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய புது எலெக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்கி வருகிறது.
    • புது எலெக்ட்ரிக் கார்களின் விவரங்கள் செப்டம்பர் மாத வாக்கில் அறிவிக்கப்படலாம்.

    மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் XUV400 மாடல் இந்தியாவில் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் புதிய XUV400 எலெக்ட்ரிக் காரை செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது எலெக்ட்ரிக் கார் தவிர மஹிந்திரா நிறுவனத்தின் எதிர்கால எலெக்ட்ரிக் கார் மாடல்கள் EV கோ நிறுவனத்தின் கீழ் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

    புது நிறுவனத்தை உருவாக்க மஹிந்திரா மற்றும் ப்ரிடிஷ் இண்டர்நேஷனல் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இதை அடுத்து இரு நிறுவனங்களும் ரூ. 1,925 கோடியை புது நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளன. புதிய XUV400 எலெக்ட்ரிக் அறிமுகமாகும் முன் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் எஸ்யுவிக்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.


    Photo Courtesy: Photo Comparo

    முன்னதாக XUV400 எலெக்ட்ரிக் மாடலை மஹிந்திரா நிறுவனம் 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிப்படுத்தி இருந்தது. சமீபத்தில் மஹிந்திரா வெளியிட்ட தகவல்களின் படி புதிய XUV400 எலெக்ட்ரிக் மாடல் 4 மீட்டர்களை விட பெரியதாக இருக்கும் என தெரியவந்துள்ளது. தற்போதைய ஸ்பை படங்களில் மஹிந்திரா XUV400 மாடல் தற்போதைய எஸ்யுவி மாடல்களை விட வித்தியசமாக காட்சியளிக்கிறது.

    இந்த காரின் மெல்லிய எல்இடி ஹெட்லைட்களின் உள்புறமாக டிஆர்எல்கள் பொருத்தப்பட்டு உள்ளன. காரின் முன்புற கிரில் பகுதி மூடப்பட்டு இருக்கிறது. இத்துடன் பெரிய செண்ட்ரல் ஏர் இண்டேக் உள்ளது. இது 2020 கான்செப்ட் மாடலில் வழங்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கார் சங்யங் டிவோலி பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    ×