என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    • மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV700 மாடல் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    • முன்னதாக இதே காரின் சில வேரியண்ட்கள் விலை குறைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மஹிந்திரா நிறுவனம் XUV700 மாடல் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இம்முறை விலை உயர்வு XUV700 அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். விலை உயர்வு ஒவ்வொரு வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 20 ஆயிரத்து 072 துவங்கி அதிகபட்சம் ரூ. 36 ஆயிரத்து 814 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    புதிய மஹிந்திரா XUV700 AX7 டீசல் AT லக்சரி பேக் 7 சீட்டர் வேரியண்ட் விலை அதிகளவாக ரூ. 36 ஆயிரத்து 814 உயர்த்தப்பட்டு இருக்கிறது. XUV700 AX3 டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷ் 5 சீட்டர் வேரியண்ட் விலை ரூ. 20 ஆயிரத்து 072 உயர்த்தப்பட்டு இருக்கிறது.


    விலை உயர்வின் படி மஹிந்திரா XUV700 மாடல் தற்போது ரூ. 13 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 24 லட்சத்து 95 ஆயிரம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் இந்த கார் இருவித இருக்கை அமைப்புகள் மற்றும் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மஹிந்திரா XUV700 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் யூனிட் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 197 ஹெச்.பி. பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டீசல் என்ஜின் மேனுவல் வேரியண்ட் 182 ஹெச்.பி. பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆட்டோமேடிக் வேரியண்ட் 182 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பேஸ் வேரியண்ட்கள் 153 ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் குறைந்த மோட்டார்சைக்கிள் மாடலாக புதிய ஹண்டர் 350 அறிமுகம் செய்யப்பட்டது.
    • இளம் வாடிக்கையாளர்களை குறி வைத்து ஏராள மாற்றங்கள் மற்றும் புது அம்சங்களுடன் இந்த பைக் அறிமுகமாகி இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை ஆகஸ்ட் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இந்த மாடல் இளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. புதிய ஹண்டர் 350 ராயல் என்பீல்டு நிறுவனத்தின் குறைந்த விலை, எடை கொண்ட மோட்டார்சைக்கிள் ஆகும்.

    இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 69 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


    புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல் ரெட்ரோ, மெட்ரோ மற்றும் மெட்ரோ ரிபல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஜெ பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் 349 சிசி, சிங்கில் சிலிண்டர் OHC பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட ஏர் மற்றும் ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் உள்ளது.

    ஆகஸ்ட் 2022 மாதத்தில் மட்டும் ஹண்டர் 350 மாடல் 18 ஆயிரத்து 197 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது ராயல் என்பீல்டு நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்த ஒட்டுமொத்த இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கையில் இரண்டாவது இடம் ஆகும். கடந்த மாத விற்பனையில் அசத்திய கிளாசிக் 350 மாடலை விட ஹண்டர் 350 வெறும் 796 யூனிட்கள் தான் பின்தங்கி இருக்கிறது.

    • கீவே நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த மோட்டார்சைக்கிள் மாடல்கள் மூன்று வித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    கீவே நிறுவனம் இந்தியாவில் K300 N மற்றும் K300 R மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 2 லட்சத்து 65 ஆயிரம் என துவங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள்கள் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    கீவே K300 N விலை விவரங்கள்:

    மேட் வைட் ரூ. 2 லட்சத்து 65 ஆயிரம்

    மேட் ரெட் ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம்

    மேட் பிளாக் ரூ. 2 லட்சத்து 85 ஆயிரம்


    கீவே K300 R விலை விவரங்கள்:

    கிளாசி வைட் ரூ. 2 லட்சத்து 99 ஆயிரம்

    கிளாசி ரெட் ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம்

    கிளாசி பிளாக் ரூ. 3 லட்சத்து 20 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இரு மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் 292சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, DOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27.5 ஹெச்பி பவர், 25 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    கீவே K300 N மாடல் ரோட்ஸ்டர் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது. இதில் குறைந்த பாடி பேனல்கள், அப்ரைட் எர்கோனோமிக்ஸ் கொண்டிருக்கிறது. புதிய K300R மாடல் ஸ்போர்ட் மாடல் ஆகும். இது முழுமையான ஃபேரிங் உள்ளது. இந்த மாடல்கள் பெனலி மற்றும் கீவே விற்பனை மையங்களில் டெஸ்ட் ரைடிற்கு கிடைக்கின்றன. இந்த மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • ஜீப் நிறுவனத்தின் புதிய கிராண்ட் செரோக்கி மாடல் இந்திய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
    • இந்த கார் சோதனை இந்திய சாலைகளில் நடைபெற்று வருகிறது.

    ஜீப் நிறுவனம் தனது புது செரோக்கி மாடல் இந்திய சந்தையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கும் புதிய ஜீப் செரோக்கி மாடல் அம்சங்கள் மற்றும் சில விவரங்களும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    அதன்படி இந்த கார் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் என தெரியவந்துள்ளது. இதன் ஸ்டைலிங் வேகனீர் மற்றும் கிராண்ட் வேகனீர் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. காரின் உள்புறம் மூன்று டிஸ்ப்ளேக்கள்- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், செண்ட்ரல் டச் ஸ்கிரீன் மற்றும் முன்புற பயணிகளுக்காக பிரத்யேக டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.


    கிராண்ட் செரோக்கி மாடல் 5 சீட்டர் மற்றும், மூன்று அடுக்கு இருக்கை கொண்ட கிராண்ட் செரோக்கி L என இரண்டு வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கிறது. இதில் 5-சீட்டர் வேரியண்ட் மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் வெண்டிலேடெட் சீட்கள், பானரோமிக் சன்ரூப், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் பவர்டு டெயில்கேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய கிராண்ட் செரோக்கி மாடல் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைகும் என தெரிகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் கிராண்ட் செரோக்கி மாடல் பல்வேறு என்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் வெர்ஷன்களில் கிடைக்கிறது.

    Photo Courtesy: Motor Beam

    • சிட்ரோயன் நிறுவனம் தனது C3 ஏர்கிராஸ் காரின் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய சிட்ரோயன் கார் C3 பிளஸ் எனும் பெயரில் ஏழு பேர் பயணிக்கும் இருக்கை அமைப்புகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    சிட்ரோயன் நிறுவனம் சமீபத்தில் தான் குறைந்த விலையில் C3 ஏர்கிராஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இந்தியாவில் இது சிட்ரோயன் நிறுவனத்தின் குறைந்த விலை கார் மாடல் ஆகும். ஐந்து பேர் பயணிக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    பிரெஞ்சு நாட்டு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் தனது C3 ஏர்கிராஸ் மாடலை ஏழு பேர் பயணிக்கும் வகையிலும் அறிமுகம் செய்ய முடிவு செய்து இருக்கிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ஏழு பேர் பயணிக்கும் வகையில் இருக்கை அமைப்பு கொண்ட சிட்ரோயன் C3 மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படுகிறது. எனினும், இது பற்றி சிட்ரோயன் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.


    மூன்று அடுக்கு முறையில் இருக்கைகள் பொருத்தப்பட்டு இருக்கும் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் உண்மையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு சோதனை செய்யப்படும் அனைத்து கார் மாடல்களும் ப்ரோடக்‌ஷன் நிலையை எட்டுவதில்லை என்ற அடிப்படையில், இது உண்மையில் விற்பனைக்கு வருமா என்பது தற்போதைக்கு சந்தேகம் தான்.

    சிட்ரோயன் நிறுவனம் தனது புதிய C3 மாடலை கொண்டு டாடா பன்ச், மாருதி சுசுகி இக்னிஸ் போன்ற மாடல்களை எதிர்கொள்ள முடிவு செய்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 5 லட்சத்து 70 ஆயிரம் என துவங்கும் நிலையில், சிட்ரோயன் C3 விலை சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. முன்னதாக இதே காரின் CNG வேரியண்ட் இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியாகி இருந்தன.

    Photo Courtesy: Cartoq / The Car Show

    • வால்வோ இந்தியா நிறுவனம் இரண்டு கார்களின் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புது பேஸ்லிப்ட் மாடல்களின் விலை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட இருக்கிறது.

    வால்வோ இந்தியா நிறுவனம் விற்பனை செய்து வரும் தனது கார்களின் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய பேஸ்லிப்ட் மாடல்கள் விலையை வால்வோ நிறுவனம் செப்டம்பர் 21 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது.

    அதிகம் எதிர்பார்க்கப்படும் வால்வோ XC40 இம்முறை பெட்ரோல் மட்டுமின்றி மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கும் என தெரிகிறது. இதே காரின் டீசல் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்பட்டு பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலுக்கு மாற்றாக 2023 வேரியண்ட் அறிமுகமாகிறது.


    புதிய பேஸ்லிப்ட் மாடலில் கூர்மையான ஹெட்லைட்கள், ஃபிரேம்லெஸ் கிரில், ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள், புதிய எக்ஸ்டீரியர் பெயிண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. XC40 மாடல் மட்டுமின்றி வால்வோ XC90 மாடலும் அப்டேட் செய்யப்பட இருக்கிறது.

    வால்வோ XC90 புது வெர்ஷனில் புதிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த கார்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் விலை அறிவிக்கப்பட்ட பின் துவங்கும்.

    • ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • அனைத்து ஆடி விற்பனை மையங்களில் 22 கிலோ வாட் சார்ஜர் பொறுத்தப்பட்டு இருக்கிறது.

    ஜெர்மன் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தியாளராக ஆடி இந்தியா முழுக்க 60 நகரங்களில் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கட்டமைத்து இருக்கிறது. ஆடி விற்பனை மையங்கள் மற்றும் வொர்க்ஷாப் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் விற்பனை மையங்களில் பாஸ்ட் சார்ஜர் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது.

    இது மட்டுமின்றி நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளிலும் ஆடி பாஸ்ட் சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அனைத்து ஆடி விற்பனை மையங்களிலும் 22 கிலோ வாட் சார்ஜர் இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளது. 16 விற்பனை மையங்களில் 50 கிலோ வாட் டிசி பாஸ்ட் சார்ஜர் பொறுத்தப்பட்டு இருக்கிறது.


    சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் ஆடி இந்திய சந்தையிலும் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது ஆடி நிறுவனம் இ-டிரான் எஸ்யுவி, இ-டிரான் ஸ்போர்ட் பேக், இ-டிரான் ஜிடி மற்றும் ஆர்எஸ் இ-டிரான் ஜிடி போன்ற எலெக்ட்ரிக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    "மாற்று எரிசக்தி கொண்ட மாடல்களை அறிமுகம் செய்ய தெளிவான திட்டம் தீட்டி இருக்கிறோம். நாங்கள் நாடு முழுக்க 100-க்கும் அதிக சார்ஜர்களை இன்ஸ்டால் செய்து இருக்கிறோம். வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த இருக்கிறோம். எதிர்காலம் எலெக்ட்ரிக் தான், அதற்கு ஆடி இந்தியா தயாராக இருக்கிறது," என ஆடி இந்தியா நிறுவன தலைவர் பால்பிர் சிங் திவான் தெரிவித்து இருக்கிறார்.

    • கியா இந்தியா நிறுவனம் ஏற்றுமதியில் புது மைல்கல் சாதனையை எட்டி அசத்தி இருக்கிறது.
    • இந்த மைல்கல்லை எட்ட கியா இந்தியா மூன்று ஆண்டுகளையே எடுத்துக் கொண்டுள்ளது.

    கியா இந்தியா நிறுவனம் ஏற்றுமதியில் 1 லட்சத்தி 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இந்திய உற்பத்தியை துவங்கிய மூன்றே ஆண்டுகளில் கியா இந்தியா இத்தகைய சாதனையை எட்டி இருக்கிறது. இந்தியாவில் இருந்து உலகம் முழுக்க 95 நாடுகளுக்கு செல்டோஸ், சொனெட் மற்றும் கரென்ஸ் மாடல்களின் 1 லட்சத்து 50 ஆயிரத்து 395 யூனிட்களை கியா இந்தியா ஏற்றுமதி செய்து இருக்கிறது.

    ஒட்டுமொத்த ஏற்றுமதியில் கியா செல்டோஸ் மட்டும் 72 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து சொனெட் மற்றும் கரென்ஸ் மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 54 ஆயிரத்து 153 யூனிட்கள், ஆகஸ்ட் மாதத்தில் 8 ஆயிரத்து 174 யூனிட்களை கியா இந்தியா ஏற்றுமதி செய்து இருக்கிறது.


    இதன் மூலம் மாதாந்திர ஏற்றுமதியில் கியா புது சாதனை படைத்து இருக்கிறது. மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, மத்திய மற்றும் தென்னமெரிக்கா, மெக்சிகோ மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகளுக்கு கியா இந்தியா தனது கார் மாடல்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

    "சர்வதேச அளவில் கியா நிறுவனத்திற்கு இந்தியா மிக முக்கியமான சந்தை ஆகும். இந்தியா எங்களின் விற்பனை, உற்பத்தி மற்றும் ஆய்வுக்கு மிக முக்கிய களமாக மாறி வருகிறது. கியா நெட்வொர்க்கில் அனந்தபூர் ஆலை ஏற்றுமதிக்கு சிறந்த தளமாக விளங்குகிறது. இந்த ஆலையில் இருந்து இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் தரமான வாகனங்களை அளித்து வருகிறோம்."

    "இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல்கள் உலக அரங்கில் நல்ல வரவேற்பை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது இந்தியாவின் உற்பத்தி திறனுக்கு சான்றாக அமைவதோடு, தரமான வாகனங்களை உற்பத்தி செய்து வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்யும் திறன் நம்மிடம் அதிகம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது," என கியா இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் மியுங் சிக் சோன் தெரிவித்து இருக்கிறார்.

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது X4 மாடலின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த ஸ்பெஷல் எடிஷன் எஸ்யுவி மாடல் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது X4 மாடலின் 50 ஜாரெ எம் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ X4 ஜாரெ எம் எடிஷன் மாடல் விலை ரூ. 72 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பிஸ்போக் எஸ்யுவி மாடல் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித பவர்டிரெயின்களில் கிடைக்கிறது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் கார் அதன் ஸ்டாண்டர்டு மாடல்களை விட ரூ. 1 லட்சம் வரை விலை அதிகம் ஆகும். ஸ்பெஷல் எடிஷன் மாடலில் பெரிய கிட்னி கிரில், கிளாஸ் பிளாக் பினிஷ், முன்புறம் மற்றும் பின்புறம் M லோகோ இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் M ஏரோடைனமிக் பேக்கேஜ் வழங்கப்படுகிறது. இது பாடி கலர் அப்ரான் மற்றும் சைடு சில்களை வழங்குகிறது. இத்துடன் 20 இன்ச் ஜெட் பிளாக் அலாய் வீல்கள் மற்றும் M ஸ்போர்ட் பிரேக் கேலிப்பர்கள் வழங்கப்பட்டு உள்ளன.


    காரின் உள்புறம் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ஸ்போர்ட்ஸ் சீட்கள், மெமரி ஃபன்ஷன், ரியர் இருக்கைகளில் ரிக்லைன் வசதி, லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், M ஹெட்லைனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய பிஎம்டபிள்யூ X4 ஜாரெ எம் எடிஷன் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த என்ஜின்கள் முறையே 251 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 261 ஹெச்பி பவர், 620 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ X4 30i 50 ஜாரெ எம் எடிஷன் விலை ரூ. 72 லட்சத்து 90 ஆயிரம் என்றும் பிஎம்டபிள்யூ X4 30d 50 ஜாரெ எம் எடிஷன் விலை ரூ. 74 லட்சத்து 90 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அபாச்சி RTR 160 மற்றும் RTR 180 மோட்டார்சைக்கிள் மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது.
    • புது அபாச்சி RTR சீரிஸ் மாடல்கள் அதிநவீன தோற்றம் மற்றும் அம்சங்களை கொண்டிருக்கிறது.

    டிவிஎஸ் நிறுவனம் தனது அபாச்சி RTR 160 மற்றும் அபாச்சி RTR 180 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அப்டேட் செய்துள்ளது. புதிய அபாச்சி RTR 160 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 17 ஆயிரம், RTR 180 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 31 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புது மோட்டார்சைக்கிள்கள் அதிநவீன தோற்றம் பெற்றுள்ளன. இத்துடன் புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள், டெயில் லைட் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இண்டிகேட்டரில் மட்டும் பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. அபாச்சி RTR 160 மற்றும் RTR 180 மாடல்களில் மேம்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் அர்பன், ரெயின் மற்றும் ஸ்போர்ட் என மூன்று வித ரைடிங் மோட்களை கொண்டுள்ளன.


    அபாச்சி RTR 160 மாடலில் 160 சிசி ஒற்றை சிலிண்டர், இரண்டு வால்வுகள் கொண்ட ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 15 ஹெச்பி பவர், 13.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மேம்பட்ட அபாச்சி RTR 180 மாடலிலும் ஒற்றை சிலிண்டர், இரண்டு வால்வுகள் கொண்ட ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 17 ஹெச்பி பவர், 15.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    டிவிஎஸ் அபாச்சி RTR 160 மாடல் - புளூ, ரெட், பிளாக், கிரே மற்றும் வைட் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது. அபாச்சி RTR 180 மாடல் - பிளாக் மற்றும் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. அபாச்சி RTR 160 மாடல் டிரம், டிஸ்க் மற்றும் ப்ளூடூத் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 18 ஆயிரம், ரூ. 1. லட்சத்து 22 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 31 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் மற்றும் ராங்ளர் மாடல் கார்களின் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
    • விலை மாற்றம் ராங்ளர் காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும் என ஜீப் தெரிவித்து இருக்கிறது.

    ஜீப் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது. விலை உயர்வில் ஜீப் காம்பஸ் மற்றும் ராங்ளர் மாடல்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி ஜீப் ராங்ளர் மாடலின் அன்லிமிடெட் மற்றும் ரூபிகான் வேரியண்ட் விலை முன்பை விட ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. ஜீப் காம்பஸ் மாடல் விலை ரூ. 50 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. விலை உயர்வை தொடர்ந்து ஜீப் காம்பஸ் பேஸ் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 29 ஆயிரம் முதல் துவங்குகிறது.


    ஜீப் காம்பஸ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 32 லட்சத்து 22 ஆயிரம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போதைய விலை உயர்வை அடுத்து ஜீப் காம்பஸ் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக இதே ஆண்டின் ஏப்ரல் மற்றும் ஜூலை மாத வாக்கில் ஜீப் காம்பஸ் விலை முறையே ரூ. 25 ஆயிரம் மற்றும் ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மஹிந்திரா நிறுவனம் இன்னும் சில தினங்களில் புது எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய XUV400 எலெக்ட்ரிக் காரின் டீசரை மஹிந்திரா வெளியிட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் செப்டம்பர் 8 ஆம் தேதி மஹிந்திரா நிறுவனம் புது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், புது எலெக்ட்ரிக் கார் டீசர்களை மஹிந்திரா தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது புது டீசர் அந்நிறுவன சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

    புதிய டீசர் வீடியோவில் மஹிந்திரா காரின் வெளிப்புறம் எலெக்ட்ரிக் புளூ நிறம் கொண்டிருக்கும் என்பதை தெரிவித்து இருக்கிறது. இத்துடன் காரின் முன்புறம் முழுமையாக சீல் செய்யப்பட்டு மஹிந்திராவின் புது லோகோ காப்பர் நிறத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் வித்தியாசமான பம்ப்பர், சிறிய ஹெட்லைட்கள், புளூ டோன் கொண்ட எல்இடி டிஆர்எல்கள், புதிய ரியர் பம்ப்பர், டெயில் லைட் மற்றும் வித்தியாசமான கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.


    இந்த டீசரிலும் காரின் இண்டீரியர் பற்றி அதிக விவரங்கள் இடம்பெறவில்லை. எனினும், இதன் உள்புறம் மஹிந்திரா XUV300 மாடலில் இருந்ததை போன்ற டிசைன் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் 9 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புதிய ஏசி வெண்ட்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இவை தவிர புதிய கார் XUV300-ஐ விட அளவில் சற்று நீளமாக உள்ளது.

    புதிய மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலில் 40 முதல் 45 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படலாம். இது 140 முதல் 150 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும். XUV400 எலெக்ட்ரிக் மாடல் நெக்சான் EV மேக்ஸ்-ஐ விட அளவில் பெரியதாக இருக்கும் என தெரிகிறது. இதன் விலை ரூ. 20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    ×