search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    ஏற்றுமதியில் புது மைல்கல் எட்டி அசத்திய கியா இந்தியா
    X

    ஏற்றுமதியில் புது மைல்கல் எட்டி அசத்திய கியா இந்தியா

    • கியா இந்தியா நிறுவனம் ஏற்றுமதியில் புது மைல்கல் சாதனையை எட்டி அசத்தி இருக்கிறது.
    • இந்த மைல்கல்லை எட்ட கியா இந்தியா மூன்று ஆண்டுகளையே எடுத்துக் கொண்டுள்ளது.

    கியா இந்தியா நிறுவனம் ஏற்றுமதியில் 1 லட்சத்தி 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இந்திய உற்பத்தியை துவங்கிய மூன்றே ஆண்டுகளில் கியா இந்தியா இத்தகைய சாதனையை எட்டி இருக்கிறது. இந்தியாவில் இருந்து உலகம் முழுக்க 95 நாடுகளுக்கு செல்டோஸ், சொனெட் மற்றும் கரென்ஸ் மாடல்களின் 1 லட்சத்து 50 ஆயிரத்து 395 யூனிட்களை கியா இந்தியா ஏற்றுமதி செய்து இருக்கிறது.

    ஒட்டுமொத்த ஏற்றுமதியில் கியா செல்டோஸ் மட்டும் 72 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து சொனெட் மற்றும் கரென்ஸ் மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 54 ஆயிரத்து 153 யூனிட்கள், ஆகஸ்ட் மாதத்தில் 8 ஆயிரத்து 174 யூனிட்களை கியா இந்தியா ஏற்றுமதி செய்து இருக்கிறது.


    இதன் மூலம் மாதாந்திர ஏற்றுமதியில் கியா புது சாதனை படைத்து இருக்கிறது. மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, மத்திய மற்றும் தென்னமெரிக்கா, மெக்சிகோ மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகளுக்கு கியா இந்தியா தனது கார் மாடல்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

    "சர்வதேச அளவில் கியா நிறுவனத்திற்கு இந்தியா மிக முக்கியமான சந்தை ஆகும். இந்தியா எங்களின் விற்பனை, உற்பத்தி மற்றும் ஆய்வுக்கு மிக முக்கிய களமாக மாறி வருகிறது. கியா நெட்வொர்க்கில் அனந்தபூர் ஆலை ஏற்றுமதிக்கு சிறந்த தளமாக விளங்குகிறது. இந்த ஆலையில் இருந்து இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் தரமான வாகனங்களை அளித்து வருகிறோம்."

    "இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல்கள் உலக அரங்கில் நல்ல வரவேற்பை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது இந்தியாவின் உற்பத்தி திறனுக்கு சான்றாக அமைவதோடு, தரமான வாகனங்களை உற்பத்தி செய்து வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்யும் திறன் நம்மிடம் அதிகம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது," என கியா இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் மியுங் சிக் சோன் தெரிவித்து இருக்கிறார்.

    Next Story
    ×