search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    இந்திய சோதனையில் சிக்கிய ஜீப் கிராண்ட் செரோக்கி - வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    இந்திய சோதனையில் சிக்கிய ஜீப் கிராண்ட் செரோக்கி - வெளியீடு எப்போ தெரியுமா?

    • ஜீப் நிறுவனத்தின் புதிய கிராண்ட் செரோக்கி மாடல் இந்திய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
    • இந்த கார் சோதனை இந்திய சாலைகளில் நடைபெற்று வருகிறது.

    ஜீப் நிறுவனம் தனது புது செரோக்கி மாடல் இந்திய சந்தையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கும் புதிய ஜீப் செரோக்கி மாடல் அம்சங்கள் மற்றும் சில விவரங்களும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    அதன்படி இந்த கார் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் என தெரியவந்துள்ளது. இதன் ஸ்டைலிங் வேகனீர் மற்றும் கிராண்ட் வேகனீர் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. காரின் உள்புறம் மூன்று டிஸ்ப்ளேக்கள்- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், செண்ட்ரல் டச் ஸ்கிரீன் மற்றும் முன்புற பயணிகளுக்காக பிரத்யேக டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.


    கிராண்ட் செரோக்கி மாடல் 5 சீட்டர் மற்றும், மூன்று அடுக்கு இருக்கை கொண்ட கிராண்ட் செரோக்கி L என இரண்டு வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கிறது. இதில் 5-சீட்டர் வேரியண்ட் மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் வெண்டிலேடெட் சீட்கள், பானரோமிக் சன்ரூப், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் பவர்டு டெயில்கேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய கிராண்ட் செரோக்கி மாடல் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைகும் என தெரிகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் கிராண்ட் செரோக்கி மாடல் பல்வேறு என்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் வெர்ஷன்களில் கிடைக்கிறது.

    Photo Courtesy: Motor Beam

    Next Story
    ×