search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் புது டீசர் வெளியீடு
    X

    மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் புது டீசர் வெளியீடு

    • மஹிந்திரா நிறுவனம் இன்னும் சில தினங்களில் புது எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய XUV400 எலெக்ட்ரிக் காரின் டீசரை மஹிந்திரா வெளியிட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் செப்டம்பர் 8 ஆம் தேதி மஹிந்திரா நிறுவனம் புது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், புது எலெக்ட்ரிக் கார் டீசர்களை மஹிந்திரா தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது புது டீசர் அந்நிறுவன சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

    புதிய டீசர் வீடியோவில் மஹிந்திரா காரின் வெளிப்புறம் எலெக்ட்ரிக் புளூ நிறம் கொண்டிருக்கும் என்பதை தெரிவித்து இருக்கிறது. இத்துடன் காரின் முன்புறம் முழுமையாக சீல் செய்யப்பட்டு மஹிந்திராவின் புது லோகோ காப்பர் நிறத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் வித்தியாசமான பம்ப்பர், சிறிய ஹெட்லைட்கள், புளூ டோன் கொண்ட எல்இடி டிஆர்எல்கள், புதிய ரியர் பம்ப்பர், டெயில் லைட் மற்றும் வித்தியாசமான கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.


    இந்த டீசரிலும் காரின் இண்டீரியர் பற்றி அதிக விவரங்கள் இடம்பெறவில்லை. எனினும், இதன் உள்புறம் மஹிந்திரா XUV300 மாடலில் இருந்ததை போன்ற டிசைன் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் 9 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புதிய ஏசி வெண்ட்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இவை தவிர புதிய கார் XUV300-ஐ விட அளவில் சற்று நீளமாக உள்ளது.

    புதிய மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலில் 40 முதல் 45 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படலாம். இது 140 முதல் 150 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும். XUV400 எலெக்ட்ரிக் மாடல் நெக்சான் EV மேக்ஸ்-ஐ விட அளவில் பெரியதாக இருக்கும் என தெரிகிறது. இதன் விலை ரூ. 20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×