என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
- சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார் மாடல்களை வெளியிடுவதை ஏற்கனவே அறிவித்து விட்டது.
- புதிய சிட்ரோன் C3 EV மாடலுக்கான டெஸ்டிங் துவங்கி நடைபெற்று வருகிறது.
சிட்ரோயன் நிறுவனம் தனது C3 ஹேச்பேக் காரின் எலெக்ட்ரிக் வேரியண்டை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் திட்டத்தை சிட்ரோயன் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், சிட்ரோயன் C3 EV மாடல் சோதனை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை உறுதிப்படுத்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களின் படி சிட்ரோயன் C3 EV மாடலின் முன்புறம் வலது புற பெண்டர் பகுதி மட்டும் மறைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த காரின் வலதுபுற பெண்டரில் சார்ஜிங் போர்ட் வழங்கப்படலாம். இந்த எலெக்ட்ரிக் காரில் ஆல்-பிளாக் பம்ப்பர், ட்வின் ஸ்லாட் கிரில் பகுதியில் வைட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது.
புதிய சிட்ரோயன் C3 EV மாடலின் பவர்டிரெயின் விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், முந்தைய தகவல்களின் படி இந்த காரில் 50 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படலாம். இந்த பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 300 கிமீ வரையிலான ரேன்ஜ் கிடைக்கும். இந்த கார் பற்றிய இதர விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
Photo Courtesy: TeamBHP
- ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்திய சந்தையில் அதிரடி தள்ளுபடி வழங்குகிறது.
- பண்டிகை காலக்கட்டத்தை முன்னிட்டு ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டருக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளருக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பண்டிகை காலக்கட்டத்தை முன்னிட்டு S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்த சலுகையை ஓலா எலெக்ட்ரிக் அறிவித்து இருக்கிறது. தள்ளுபடி சலுகையை அடுத்து ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை தற்போது ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது.
முன்னதாக ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போது ஓலா S1 ப்ரோ விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம் என்றே நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டருக்கு அக்டோபர் 5 ஆம் தேதி வரை இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மட்டுமே இந்த தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டு இருக்கிறது. அதிரடி தள்ளுபடி மட்டுமின்றி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பல்வேறு நிதி சலுகைகளையும் வழங்கி வருகிறது. இவற்றின் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதில் ஸ்கூட்டரை வாங்கிட முடியும். இதில் ஐந்து ஆண்டுகளுக்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகையை தேர்வு செய்யும் போது ரூ. 1500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இத்துடன் மாத தவணையில் வாங்கும் போது பிராசஸிங் கட்டணம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மாத தவணையில் வாங்குவோருக்கான வட்டி 8.99 சதவீதம் ஆகும். சமீபத்தில் தான் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது ஸ்கூட்டர் மாடல்களுக்கு அக்சஸரீக்களை அறிமுகம் செய்யும் திட்டம் பற்றி அறிவித்தது. பண்டிகை காலத்தை முன்னிட்டு ஓலா S1 மற்றும் S1 ப்ரோ மாடல்களுக்கு பண்டிகை காலத்தை ஒட்டி அக்சஸரீக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- இந்த சலுகைகளின் கீழ் சிறப்பு நிதி சலுகைகள், முன்பதிவு சலுகை என பல்வேறு பலன்களை உள்ளடக்கியதாகும்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹீரோ கிப்ட் - கிரேட் இந்தியன் பெஸ்டிவல் ஆப் டிரஸ்ட் பெயரில் புது திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு சீரான அப்டேட், சில்லறை பலன்கள், நிதி சலுகைகள், முன்பதிவு சலுகைகள் என ஏராளமான பலன்களை வழங்குகிறது.
இந்த சலுகைகளின் கீழ் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் மாடல் சில்வர் நெக்சஸ் புளூ நிறத்திலும், ஹீரோ கிளாமல் மாடல் கேன்வாஸ் ரெட் நிறத்திலும் கிடைக்கின்றன. இத்துடன் ஹீரோ ஹெச்எப் டீலக்ஸ் மாடல் கோல்டு ஸ்டிரைப்களுடனும், பிளெஷர் பிளஸ் எக்ஸ்-டெக் மாடல் போல் ஸ்டார் புளூ நிறத்திலும் கிடைக்கின்றன. இதேபோன்று ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடல் ஸ்டெல்த் 2.0 எடிஷனில் கிடைக்கிறது.

புது மாடல்கள் தவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் காப்பீடு திட்ட பலன்கள், எளிய நிதி சலுகைகள், குறைந்த முன்பணம், மாத தவணை முறை வசதி, ஐந்து வருடங்களுக்கு ஸ்டாண்டர்டு வாரண்டி, ரொக்க பலன்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஹீரோ ஸ்கூட்டர்களுக்கு ரூ. 13 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.
இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, ரூ. 3 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள வவுச்சர்கள், ஐந்து வருட வாரண்டி, ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி, ரூ. 5 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
- கேடிஎம் நிறுவனம் இந்திய சந்தையில் RC390 மற்றும் RC200 ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்தது.
- இரு ஸ்பெஷல் எடிஷன் மாடல்களும் RC16 மோட்டோஜிபி ரேசிங் பைக்குகளை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கேடிஎம் இந்தியா நிறுவனம் RC390 மற்றும் RC200 மோட்டார்சைக்கிள் மாடல்களின் ஸ்பெஷல் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களும் RC16 மோட்டோஜிபி ரேசிங் பைக்குகளை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
புதிய ஜிபி ஸ்பெஷல் எடிஷன் வேரியண்ட்கள் தற்போது விற்பனை செய்யப்படும் கேடிஎம் RC சீரிஸ் மாடல்களுடன், அதே விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. அந்த வகையில் கேடிஎம் RC390 ஜிபி விலை ரூ. 3 லட்சத்து 16 ஆயிரத்து 070 என்றும் கேடிஎம் RC200 ஜிபி எடிஷன் விலை ரூ. 2 லட்சத்து 14 ஆயிரத்து 688 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஸ்டைலிங்கை பொருத்தவரை இரு மாடல்களிலும் ஆரஞ்சு நிற பேஸ் பெயிண்ட் செய்யப்பட்டு ஃபேரிங் மற்றும் முன்புற ஃபெண்டரில் பிரத்யேக டிகல்கள் வழங்கப்பட்டுள்ளன. காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இரு மாடல்களிலும் வேறு எந்த அப்டேட்டும் செய்யப்படவில்லை.
கேடிஎம் RC390 மற்றும் கேடிஎம் RC200 ஜிபி ஸ்பெஷல் எடிஷன் மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
- போக்ஸ்வேகன் சர்வீஸ் மையம் ஒன்று தனது வாடிக்கையாளருக்கு கொடுத்த கட்டண ரசீது வைரல் ஆகி வருகிறது.
- கார் சரி செய்யும் விவகாரத்தில் ஏற்கனவே பல முறை இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.
இந்தியாவில் செயல்பட்டு வரும் போக்ஸ்வேகன் சர்வீஸ் மையங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அதிக தொகையை பில் செய்து பல முறை சர்ச்சியில் சிக்கியுள்ளன. அந்த வரிசையில், தற்போது போக்ஸ்வேகன் போலோ மாடலை சரி செய்ய அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையம் ஒன்று ரூ. 22 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்து அதிர்ச்சி அளித்து இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தனது அனுபவத்தை லின்க்டுஇன் தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
பெங்களூரில் வசித்து வரும் அனிருத் கனேஷ் என்பவர் போக்ஸ்வேகன் போலோ TSI மாடலை பயன்படுத்தி வருகிறார். சமீபத்திய பெங்களூரு வெள்ளத்தில் போக்ஸ்வேகன் போலோ சேதமடைந்து விட்டது. இதை அடுத்து அனிருத் பெங்களூரை அடுத்த வைட்பீல்டில் உள்ள போக்ஸ்வேகன் ஆப்பிள் ஆட்டோ சர்வீஸ் மையத்திற்கு தனது போலோ காரை சரி செய்ய எடுத்துச் சென்றார். சேதமடைந்த காரை எடுத்துச் செல்ல இரவு நேரத்தில் யாரும் வரவில்லை என அனிருத் குறிப்பிட்டுள்ளார்.

வைட்பீல்டு வொர்க்ஷாப்பில் அனிருத்தின் போக்ஸ்வேகன் போலோ கார் 20 நாட்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதன் பின் போக்ஸ்வேகன் ஆப்பிள் ஆட்டோ சார்பில் அதிகாரி அனிருத்தை தொடர்பு கொண்டு காரை சரி செய்ய ரூ. 22 லட்சம் வரை செலவாகம் என தெரிவித்து இருக்கிறார். இதன் பின் கார் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அனிருத் தொடர்பு கொண்டார். இன்சூரன்ஸ் நிறுவனம் காருக்கு முழு சேதமடைந்து விட்டதாக குறிப்பிட்டு, காரை சர்வீஸ் மையத்தில் இருந்து எடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.
காரின் தரவுகளை சேகரிக்க அனிருத் காரின் விற்பனையகம் சென்றார். அங்கு அவரிம் ரூ. 44 ஆயிரத்து 840 கட்டண ரசீது கொடுத்து மீண்டும் ஷாக் கொடுத்துள்ளனர். பின் இந்த பிரச்சினையை போக்ஸ்வேகன் வாடிக்கையாளர் சேவை மையத்திம் அனிருத் தெரிவித்து இருக்கிறார். இதனை 48 மணி நேரத்தில் சரி செய்வதாக அனிருத்திடம் தெரிவித்துள்ளனர். எனினும், அவரது பிரச்சினை சரி செய்யப்படவில்லை.
போக்ஸ்வேகன் போலோ காரை ரூ. 11 லட்சம் கொடுத்து வாங்கிய அனிருத் அதனை சரி செய்ய தனக்கு ரூ. 22 லட்சம் வரை ஆகும் என சர்வீஸ் செண்டர் அதிகாரிகள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன் பின் அனிருத்தை தொடர்பு கொண்ட போக்ஸ்வேகன் அவரிடம் ரூ. 5 ஆயிரம் செலுத்த வலியுறுத்தி உள்ளது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV சீரிஸ் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
- தற்போது நெக்சான் EV மேக்ஸ் மாடல் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்று அசத்தியுள்ளது.
டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தி இருக்கிறது. லடாக்கின் உம்லிங் எல்ஏ பாஸ் பகுதியை எட்டிய முதல் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்சான் EV மேக்ஸ் பெற்றுள்ளது. இதன் மூலம் நெக்சான் EV மேக்ஸ் மாடல் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தி இருக்கிறது.
லடாக்கில் உள்ள உம்லிங் எல்ஏ பாஸ் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து 19 ஆயிரத்து 024 அடி உயரத்தில் உள்ளது. இது சாலை மார்க்கமாக பயணம் செய்யக்கூடிய உலகின் உயரமான பகுதி ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் EV மேக்ஸ் நீண்ட ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் சப்-காம்பேக்ட் எஸ்யுவி ஆகும். சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

செப்டம்பர் 18 ஆம் தேதி அனுபவம் மிக்க ஓட்டுனர்கள் குழு தங்களின் பயணத்தை லே பகுதியில் இருந்து துவங்கியது. டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிப்டிரான் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 40.5 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது. இது நெக்சான் EV மாடலில் உள்ளதை விட 33 சதவீதம் பெரிய பேட்டரி ஆகும்.
டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர் வரை செல்லும் என ARAI தர சான்று பெற்று இருக்கிறது. இதில் உள்ள பேட்டரி மற்றும் மோட்டார் IP67 தர சான்று பெற்றுள்ளன. இத்துடன் எட்டு ஆண்டுகள் அல்லது 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு வாரண்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் காந்த சக்தி கொண்ட ஏசி மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இது காருக்கு 141 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளுக்குள் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. மேலும் மணிக்கு அதிகபட்சமாக 140 கிலோமீட்டர் வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
- சிட்ரோயன் நிறுவனத்தின் C3 எலெக்ட்ரிக் மாடல் இந்திய சந்தையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
- இந்தியாவில் சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பிரெஞ்சு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் சில மாதங்களுக்கு முன் C3 ஹேச்பேக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. சிட்ரோயன் C3 அறிமுகம் செய்யும் முன்பே C3 எலெக்ட்ரிக் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என சிட்ரோயன் அறிவித்து இருந்தது. அந்த வரிசையில் சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
நீண்ட ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்வதற்கு மாற்றாக கார் உற்பத்தியாளர்கள் சிறிய எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. சிட்ரோயன் மட்டுமின்றி டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் சிறிய எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வருகிறது. இது தவிர டாடா மோட்டார்ஸ் விரைவில் தனது டியாகோ எலெக்ட்ரிக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனமும் வுலிங் ஏர் எலெக்ட்ரிக் காரை தழுவி சிறிய காரை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் மாடலின் பெண்டர் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்படுகிறது. தற்போதைய ஸ்பை படத்தில் காரின் முழுமையாக தெரியவில்லை. மஹிந்திரா XUV400 போன்றே இந்த காரிலும் முன்புற பெண்டரில் சார்ஜிங் போர்ட் வழங்கப்படும் என தெரிகிறது.
இந்திய சூழலுக்கு முழுமையாக ஏற்ற வகையில் சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. எலெக்ட்ரிக் காரில் முன்புற கிரில் மூடப்பட்டு, மற்ற பாகங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படாது என்றே தெரிகிறது. இந்தியாவில் சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் மாடல் விலை அதன் பெட்ரோல் மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும்.
தற்போது சிட்ரோன் C3 பெட்ரோல் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 70 ஆயிரம் என துவங்கி, டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8 லட்சத்து 05 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
Photo Courtesy: Team BHP
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பன்ச் கேமோ எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
- புதிய ஸ்பெஷல் எடிஷன் மூலம் டாடா பன்ச் முதலாம் ஆண்டு விழாவை டாடா மோட்டார்ஸ் கொண்டாடுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பன்ச் கேமோ எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டாடா பன்ச் கேமோ எடிஷன் விலை ரூ. 6 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பன்ச் கேமோ எடிஷன் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய கேமோ எடிஷன் மாடல் டாடா பன்ச் முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டாடா பன்ச் கேமோ எடிஷன் மாடலின் வெளிப்புறம் போலியேஜ் கிரீன் நிறம் மற்றும் டூயல் டோன் கலர் ஆப்ஷன்கள் (பியானோ பிளாக் மற்றும் ப்ரிஸ்டைன் வைட்) கிடைக்கிறது. இந்த காரில் சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள், கேமோ பேட்ஜிங் சார்கோல் நிற அலாய் வீல்கள், ஃபாக் லைட்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

காரின் உள்புறம் மிலிட்டரி கிரீன் இன்சர்ட்கள், கமோபிளேக் செய்யப்பட்ட சீட் கவர்கள், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் போன்ற அம்சங்கள் உள்ளன.
புதிய டாடா பன்ச் கேமோ எடிஷன் மாடலிலும் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 84 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் மற்றும் AMT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் மாடல் உற்பத்தியில் புது மைல்கல் எட்டியுள்ளது.
- புது மைல்கல் யூனிட் அந்நிறுவன ஆலையில் இருந்து வெளியிடப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடல் உற்பத்தியில் நான்கு லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. டாடா நெக்சான் உற்பத்தி துவங்கிய ஐந்து ஆண்டுகளில் இந்த மைல்கல் எட்டப்பட்டு உள்ளது.
2017 செப்டம்பர் மாத வாக்கில் டாடா நெக்சான் உற்பத்தி துவங்கயது. உற்பத்தி துவங்கிய முதல் 15 மாதங்களிலேயே நெக்சான் மாடல் ஒரு லட்சம் யூனிட்களை கடந்தது. அதன் பின் மற்றொரு ஆண்டு மற்றும் 11 மாதங்களில் 2 லட்சம் யூனிட்கள் மைல்கல்லை நெக்சான் எட்டியது.

இதைத் தொடர்ந்து அடுத்த எட்டே மாதங்களில் மூன்று லட்சம் யூனிட்களை கடந்தது. மூன்று லட்சம் யூனிட்களை கடந்த ஏழு மாதங்களில் நெக்சான் மாடல் நான்கு லட்சம் யூனிட்களை கடந்து விட்டது. இந்திய சந்தையில் டாடா நெக்சான் மாடல் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று மிகவும் பாதுகாப்பான கார் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. சர்வதேச NCAP சோதனையில் இத்தகைய புள்ளிகளை பெற்ற முதல் இந்திய கார் என்ற பெருமையை டாடா நெக்சான் வைத்திருக்கிறது.
டாடா நெக்சான் எஸ்யுவி மாடலில் பெரிய டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்மார் கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப், குரூயிஸ் கண்ட்ரோல் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.
- பிஒய்டி நிறுவனம் இந்திய சந்தையில் தனது அடுத்த எலெக்ட்ரிக் கார் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது.
- இது இந்திய சந்தையில் பிஒய்டி நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் ஆகும்.
பிஒய்டி இந்தியா நிறுவனம் தனது அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அக்டோபர் 11 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இ6 மாடலை தொடர்ந்து இந்தியாவில் பிஒய்டி அறிமுகம் செய்யும் இரண்டாவது மாடலாக அட்டோ 3 அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வெளிப்புறம் 2022 பிஒய்டி அட்டோ 3 சிங்கில்-ஸ்லாட் க்ரோம் கிரில், ட்வின்-பாட் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டூயல் டோன் பம்ப்பர்கள், டிஸ்க் பிரேக்குகள், முன்புற பெண்டரில் சார்ஜிங் போர்ட், பாக்ஸ் ஸ்கிட் பிளேட், 18 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், ஷார்க் பின் ஆண்டெனா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கிடைக்கும் பிஒய்டி அட்டோ 3 மாடலில் 50 கிலோவாட் ஹவர் மற்றும் 60 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் ஸ்டாண்டர்டு ரேன்ஜ் மற்றும் எக்ஸ்டெண்டட் ரேன்ஜ் என இருவித வேரிண்ட்களில் கிடைக்கிறது.
இவை முறை 345 மற்றும் 420 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. பேட்டரி திறனுக்கு ஏற்ப இந்த காருடன் 204 பிஎஸ் மற்றும் 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. பிஒய்டி அட்டோ 3 மாடலில் 12.8 இன்ச் சுழலும் இன்போடெயின்மெண்ட் டச்-ஸிகீரன், வயர்லெஸ் சார்ஜிங், பவர்டு முன்புற இருக்கைகள், பானரோமிக் சன்ரூப், ADAS சிஸ்டம், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
- ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய புல்லட் 350 மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது.
- இந்த பைக் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஜெ சீரிஸ் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய புல்லட் 350 மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதில் புதிய புல்லட் 350 மாடலில் ஜெ சீரிஸ் என்ஜின் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதே என்ஜின் மீடியோர் 350, கிளாசிக் 350 மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹண்டர் 350 மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய புல்லட் 350 மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 350சிசி என்ஜின் 20 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. தோற்றத்தில் புல்லட் 350 மாடல் கிளாசிக் 350 போன்றே காட்சியளிக்கிறது. ஸ்பை படங்களில் உள்ள மாடலில் கிளாசிக் 350 பைக்கில் இருப்பதை போன்ற டெயில் லேம்ப், இண்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 48 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 63 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு ஹண்டர் 350 விலை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 68 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350 மாடலின் விலை குறைவாகவே இருக்குமா அல்லது ஹண்டர் 350 மாடலை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தியாவில் ராயல் என்பீல்டு புல்லட் 350 மாடல் ஹோண்டா ஹைனெஸ் 350, பெனலி மற்றும் ஜாவா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
Photo Coutresy: GaadiWaadi
- பிஒய்டி நிறுவனத்தின் அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் மாடல் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
- இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 345 முதல் 420 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
பிஒய்டி நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது கார் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய பிஒய்டி அட்டோ 3 மாடல் சென்னை அருகில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யுவி மாடலில் பிளேடு பேட்டரி பேக் வழங்கப்படுகிறது.
புதிய பிஒய்டி அட்டோ 3 மாடல் வெளிநாட்டு சந்தைகளில் 50 கிலோவாட் ஹவர் மற்றும் 60 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் ஸ்டாண்டர்டு ரேன்ஜ் மற்றும் எக்ஸ்டெண்டட் ரேன்ஜ் என இருவித வேரிண்ட்களில் கிடைக்கிறது. இவை முறை 345 மற்றும் 420 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. பேட்டரி திறனுக்கு ஏற்ப இந்த காருடன் 204 பிஎஸ் மற்றும் 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

பிஒய்டி அட்டோ 3 மாடலில் 12.8 இன்ச் சுழலும் இன்போடெயின்மெண்ட் டச்-ஸிகீரன், வயர்லெஸ் சார்ஜிங், பவர்டு முன்புற இருக்கைகள், பானரோமிக் சன்ரூப், ADAS சிஸ்டம், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் பிஒய்டி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கிராஸ்-ஒவர் அளவில் பெரியதாக இருக்கிறது.
இந்தியாவில் சிகேடி முறையில் கொண்டுவரப்படும் பிஒய்டி அட்டோ 3 விலை ரூ. 30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த எலெக்ட்ரிக் கார் அக்டோபர் மாத பண்டிகை காலத்தை ஒட்டி அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
Photo Courtesy: PoNsam ChaRles






