என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    யமஹா நிறுவனத்தின் 125சிசி ஸ்கூட்டர் மாடல் பசினோ விரைவில் புது அப்டேட் பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் சமீப காலங்களில் பல்வேறு புது மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த வரிசையில் தற்போது யமஹா பசினோ 125 மாடலை அப்டேட் செய்யும் பணிகளில் யமஹா நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    சமீபத்தில் யமஹா பசினோ 125 மாடல் புதிதாக சில்வர் கிரே என டூயல் டோன் நிறம் கொண்ட வேரியண்ட் காட்சிப்படுத்தப்பட்டது. இதே நிகழ்வில் யமஹா நிறுவனம் இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையும் காட்சிக்கு வைத்து இருந்தது. யமஹா டீலர்கள் மட்டும் பங்கேற்ற இந்த நிகழ்வில் யமஹா நிறுவனம் தனது நியோஸ் மற்றும் இ01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை காட்சிப்படுத்தியது.

     யமஹா பசினோ 125

    புதிய நிற வேரியண்ட் யமஹா பசினோ 125 மற்ற நிற வேரியண்ட்களுடன் சேர்த்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. புது நிறம் சேர்க்கும் பட்சத்தில் யமஹா பசினோ 125 மாடல் மொத்தம் ஒன்பது வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும். யமஹா பசினோ 125 சில்வர் கிரே நிறங்கள் அடங்கிய டூயல் டோன் வேரியண்ட் விலையை இதுவரை அறிவிக்கவில்லை.

    எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி யமஹா பசினோ 125 புது நிறம் கொண்ட மாடல் விலை ரூ. 83 ஆயிரத்து 130, எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. யமஹா பசினோ 125 மற்ற டூயல் டோன் ஆப்ஷன் கொண்ட ஸ்கூட்டர்களும் இதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதிய நிறம் கொண்ட வேரியண்டும் இதே விலையில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
    பி.எம்.டபிள்.யூ. நிறுவனம் இந்திய சந்தையில் F 850 GS மற்றும் பி.எம்.டபிள்.யூ. F 850 GS அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.



    பி.எம்.டபிள்.யூ. மோட்டராட் நிறுவனம் 2022 பி.எம்.டபிள்.யூ. F 900 XR மோட்டார்சைக்கிள் மாடலுடன் 2022 பி.எம்.டபிள்.யூ. F 850 GS மற்றும் 2022 பி.எம்.டபிள்.யூ. F 850 GS அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரண்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் 853சிசி, இன்-லைன், 2 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

    முந்தைய மாடலில் இந்த என்ஜின் சர்வதேச சந்தையில் 94 பி.ஹெச்.பி. பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இந்திய சந்தையில் இந்த என்ஜின் செயல்திறன் 89 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 86 நியூட்டன் மீட்டர் டார்க் என சற்றே குறைக்கப்பட்டு இருந்தது. தற்போதைய பி.எஸ். 6 ரக என்ஜின் சர்வதேச சந்தையில் கிடைக்கும் அதே செயல்திறனுடன் கிடைக்கிறது.

     2022 பி.எம்.டபிள்.யூ. F 850 GS அட்வென்ச்சர்

    அந்த வகையில் புது மாடலில் 853சிசி என்ஜின் 94 பி.ஹெச்.பி. பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. பி.எம்.டபிள்.யூ. F 850 GS மிடில் வெயிட் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆகும். இதில் பி.எம்.டபிள்.யூ. F 850 GS அட்வென்ச்சர் மாடல் இந்தியாவுக்கு சி.பி.யு. முறையில் கொண்டுவரப்பட இருக்கிறது. இந்த மாடல் இந்திய சந்தையில் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். 

    அம்சங்களை பொருத்தவரை புது பி.எம்.டபிள்.யூ. மோட்டார்சைக்கிளில் ABS ப்ரோ, டைனமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல், டைனமிக் எலெக்டிரானிக் சஸ்பென்ஷன், கீலெஸ் ரைடு, கியர் ஷிஃப்ட் அசிஸ்ட் ப்ரோ, ரைடிங் மோட்ஸ் ப்ரோ, ஹீடெட் க்ரிப்ஸ், குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சங்களாக வழங்கப்படுகின்றன. 

    இந்திய சந்தையில் புதிய பி.எம்.டபிள்.யூ. F 850 GS மாடல் விலை ரூ. 12 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2022 பி.எம்.டபிள்.யூ. F 850 GS அட்வென்ச்சர் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் புதிய சி கிளாஸ் மாடல் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஒருவழியாக 2022 சி கிளாஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய தேதி குறித்து விட்டது. சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பரவல், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள செமிகண்டக்டர் குறைபாடு போன்ற காரணங்களால் இந்த மாடலின் இந்திய வெளியீடு தாமதம் ஆகி வந்தது. 

    புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் இந்திய வேரியண்ட் மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே அருகில் உள்ள சக்கன் ஆலையில் அசெம்பில் செய்யப்பட இருக்கிறது. புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் வெளியீடு மே மாதம் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 

     மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ்

    "வெளியீட்டுக்கு முன்பே எங்களின் வாடிக்கையாளர்கள் மத்தியில் புது சி கிளாஸ் மாடல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் எங்களின் மீது வைத்துள்ள விசுவாசத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் வரலாற்றில் முதல் முறையாக எங்களின் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் புதிய சி கிளாஸ் மாடலுக்கான முன்பதிவை அனுமதித்து இருக்கிறோம்," என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்டின் ஸ்கிவென்க் தெரிவித்தார். 

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷ்களில் கிடைக்கிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்கள் வழங்கப்படுகிறது. மேலும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த காரின் மிகப் பெரும் அப்டேட்களில் ஒன்றாக ரியர் வீல் ஸ்டீரிங் உள்ளது. எனினும் இந்திய மாடலில் இந்த அம்சம் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த 2022 மாருதி சுசுகி எர்டிகா மாடல் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.


    மாருதி சுசுகி நிறுவனம் 2022 எர்டிகா எம்.பி.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2022 மாருதி சுசுகி எர்டிகா மாடல் விலை ரூ. 8 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் முதல் துவங்குகிறது. 2022 மாருதி சுசுகி எர்டிகா மாடல் தவணை முறையிலும் வழங்கப்படுகிறது. மாதாந்திர சந்தா கட்டணங்கள் பெட்ரோல் மாடலுக்கு ரூ. 18 ஆயிரத்து 600, CNG மாடலுக்கு ரூ. 22 ஆயிரத்து 400 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    முன்பை போன்றே புதிய எர்டிகா மாடலும் பிரைவேட் வாடிக்கையாளர்களுக்கு Lxi, Vxi, Zxi மற்றும் Zxi+ என நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. 2022 எர்டிகா மாடலின் Vxi மற்றும் Zxi வேரியண்ட்களில் ஃபேக்டரி CNG கிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

     2022 மாருதி சுசுகி எர்டிகா

    2-22 மாருதி சுசுகி எர்டிகா மாடலில் புது என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க மாற்றங்களாக இருக்கின்றன. மாருதி சுசுகி நிறுவனத்தின் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிடிற்கு மாற்றாக இம்முறை அதிநவீன 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 1.5 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய டூயல்ஜெட் பெட்ரோல் என்ஜின் 102 பி.ஹெச்.பி. பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பெட்ரோல் CNG மாடல் 99 பி.ஹெச்.பி. பவர், 136 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. CNG மோடில் இதே என்ஜின் 87 பி.ஹெச்.பி. பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    கே.டி.எம். நிறுவனத்தின் 200 டியூக் மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய சந்தையில் இரண்டு நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


    கே.டி.எம். 200 டியூக் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் மிகவும் பிரபல மோட்டார்சைக்கிள் மாடலாக இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மாடல் இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் கே.டி.எம். 200 டியூக் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய கே.டி.எம். 200 டியூக் மாடல் வெள்ளை நிற பெயிண்டிங், பியூவல் டேன்க் மீது கருப்பு நிற ரேசிங் கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பெயிண்டிங் உடன் வீல்களில் கே.டி.எம். நிறுவனத்தின் பாரம்பிரயம் மிக்க ஆரஞ்சு நிறம் பூசப்பட்டு இருக்கிறது. 

     கே.டி.எம். 200 டியூக்

    இதேபோன்று கே.டி.எம். 200 டியூக் மோட்டார்சைக்கிள் மாடலை முழுமையான ஆரஞ்சு மற்றும் பிளாக் நிற கிராஃபிக்ஸ் உடனும் பெற்றுக் கொள்ள முடியும். 2020 ஆண்டு வாக்கில் கே.டி.எம். நிறுவனம் தனது கே.டி.எம். 200 டியூக் மாடலின் ஸ்டைலிங்கை மாற்றியது. 

    இதில் 250 டியூக் மாடலில் உள்ளதை போன்ற ஆங்குலர் ஹெட்லேம்ப், ஸ்கல்ப்ட் செய்யப்பட்ட பியூவல் டேன்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. கே.டி.எம். 200 டியூக் மோட்டார்சைக்கிளில் 199சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 24.6 பி.ஹெச்.பி. பவர், 19.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஜப்பானை சேர்ந்த கார் உற்பத்தியாளரான ஹோண்டா இந்திய சந்தையில் புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. 

    ஹோண்டா சிட்டி மாடல் டாப் எண்ட் ZX வேரியண்டில் வழங்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. 

     ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட்

    ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் 97 பி.ஹெச்.பி. பவர், 127 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள இரு மோட்டார்களில் ஒன்று இண்டகிரேடெட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் போன்று செயல்படும். 

    இரண்டாவது மோட்டார் முன்புற ஆக்சில் மீது பொருத்தப்பட்டு இருக்கிறது. இது 108 பி.ஹெச்.பி. பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய ஹோண்டா eHEV எலெக்ட்ரிக் மோட்டார்கள் லித்தியம் அயன் பேட்டரியை ஒவ்வொரு முறை பிரேக் போடும் போதும் சார்ஜ் செய்கின்றன. பேடில் ஷிஃப்டர்கள் உதவியுடன் பிரேக் எனர்ஜி மீட்பு சிஸ்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். லித்தியம் அயன் பேட்டரி மீது ஹோண்டா நிறுவனம் எட்டு ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்குகிறது.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மோட்டார்சைக்கிள் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் டூரர் மோட்டார்சைக்கிள் கம்ப்லீட்லி-பில்ட்-அப் யூனிட் வடிவில் கிடைக்கும். இந்திய சந்தையில் 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மோட்டார்சைக்கிள் விலை ரூ. 12 லட்சத்து 30 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு பி.எம்.டபிள்யூ. மோட்டராட் விற்பனை மையங்களில் துவங்கி இருக்கிறது. இதன் வினியோகம் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் துவங்க பி.எம்.டபிள்யூ. நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

     2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ

    வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக மற்றும் கவர்ச்சிகர நிதி சலுகைகள் பி.எம்.டபிள்யூ. பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா மூலம் வழங்கப்படுகிறது. புதிய 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மோட்டார்சைக்கிள் மாடலுக்கு மூன்று ஆண்டுகள் / வரம்பற்ற கிலோமீட்டர்களுக்கு ஸ்டாண்டர்டு வாரண்டி வழங்கப்படுகிறது. சற்றே கூடுதல் தொகை செலுத்தினால் நான்கு மற்றும் ஐந்தாவது ஆண்டுகளுக்கு வாரண்டியை நீட்டித்துக் கொள்ள முடியும்.

    அம்சங்களை பொருத்தவரை 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மோட்டார்சைக்கிள் மாடலில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட 6.5 இன்ச் ஃபுல் கலர் டி.எப்.டி. டிஸ்ப்ளே, ஏ.பி.எஸ்., டிராக்‌ஷன் கண்ட்ரோல், ரைடிங் மோட்ஸ் ப்ரோ, கீலெஸ் ரைடு, என்ஜின் பிரேக் கண்ட்ரோல், அடாப்டிவ் கார்னரிங் லைட்கள் மற்றும் ஹீடெட் க்ரிப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 895சிசி, லிக்விட் கூல்டு, பேரலல் டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103.2 பி.ஹெச்.பி. பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 
    இந்த ஸ்கூட்டர்கள் 6 நிறங்களில் கிடைக்கின்றன. மேலும் இந்த ஸ்கூட்டர் பேட்டரிக்கு 40000 கிமீ வரை வாரண்டியு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Wroley என்ற மின்சார வாகன தயாரிப்பு நிறுவனம் மூன்று புதிய மின்சார ஸ்கூட்டர்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு மார்ஸ், பிளாட்டினா, போஷ் என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 90 கி.மீ வரை செல்லும் என கூறப்படுகிறது. ஒரு கி.மீட்டருக்கு 0.10 முதல் 0.15 பைசா வரை மட்டுமே செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்கூட்டர்கள் சுப்பீரியர் தரத்துடனான லித்தியம் அயன் பேட்டரிகளில் வருகிறது. இது 48V மற்றும் 60V பவரை தரும் வல்லமை கொண்டது. இதில் ரிவர்ஸ் மோட், கீ ஸ்டார்ட், ஆண்டி தெஃப்ட் சென்சார், சைட் ஸ்டாண்டர்ட் சென்சார், க்ரூஸ் கண்ட்ரோல், பார்க்கிங் சென்சார், ரியர் டிஸ்க், லெட் ஹெட்லேம்ப், ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்த ஸ்கூட்டர்கள் 6 நிறங்களில் கிடைக்கின்றன. மேலும் இந்த ஸ்கூட்டர் பேட்டரிக்கு 40000 கிமீ வரை வாரண்டியு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சில மாநிலங்களில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், வாகனத்தின் பதிவுக் கட்டணம் மற்றும் சாலை வரி ஆகிவையும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
    இந்தியாவில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை மின்சார வாகனங்களை நோக்கி செலுத்துகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில் கடன்களும் வழங்கப்படுகின்றன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

    ஒருவர் மின்சார வாகனம் வாங்கினால், வருமான வரி விதி 80EEB பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் விலக்கு அளிக்கப்படும். இந்த விலக்கு 80C இன் கீழ் கிடைக்கும் விலக்கிலிருந்து வேறுபட்டது.  இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கும். 

    இதனுடன், சில மாநிலங்களில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், வாகனத்தின் பதிவுக் கட்டணம் மற்றும் சாலை வரி ஆகிவையும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

    மேலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, மின்சார வாகனங்களுக்கான கடனில் வாடிக்கையாளர்களுக்கு வாகனத்தின் ஆன்ரோடு விலையில் 90 சதவீதம் வரை வங்கி கடன் வழங்குகிறது. 

    இந்த கடனுக்கான வட்டி விகிதம் 7.05 சதவீதம் முதல் 7.75 சதவீதம் ஆகும்.  யூனியன் வங்கி மின்சார வாகனங்களுக்கு 10 லட்சம் வரை கடன் வழங்குகிறது. நான்கு சக்கர வாகனக் கடனை 84 மாதங்களிலும், இரு சக்கர வாகனக் கடனை 36 மாதங்களிலும் திருப்பிச் செலுத்தலாம். ஆக்சிஸ் வங்கி மாத சம்பளம் வாங்கும் நபர்களுக்கு சாலை விலையில் 85 சதவீதம் வரை கடனை வழங்குகிறது. இந்தக் கடனை 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தலாம்.
    குறிப்பாக இந்திய சந்தையில் 25 முதல் 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த மின்சார வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. அவர்களுக்கு பெரிய பாதிப்பை இந்த விபத்துகள் ஏற்படுத்தும் என கூறியுள்ளது.
    இந்தியாவில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை மக்களை மின்சார வாகனங்களை நோக்கி தள்ளுகிறது. இந்தியாவில் இயங்கி வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அதிக அளவில் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.

    இந்நிலையில் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் மின்சார ஸ்கூட்டர் தீவிபத்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து அடுதடுத்த மின்சார வாகன விபத்துக்கள் ஏற்படுத்துகின்றன. இந்த விபத்துகள் மின்சார வாகன துறையில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என சிரிசில் என்ற ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

    மின்சார வாகனங்கள் குறித்த தவறான எண்ணத்தை மக்களின் மனதில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தி விடுவதாகவும் கூறியுள்ளது.

    நேற்று மகாராஷ்டிரா நாசிக் அருகே 20 ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்தன. இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை அதேபோல ஒகினாவா, ஓலா உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் ஸ்கூட்டர்களும் தீப்பற்றுகின்றன.

    குறிப்பாக இந்திய சந்தையில் 25 முதல் 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த மின்சார வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. அவர்களுக்கு பெரிய பாதிப்பை இந்த விபத்துகள் ஏற்படுத்தும் என கூறியுள்ளது.

    இந்த விபத்துகளுக்கு காரணமாம் லித்தியம் அயன் பேட்டரி தான் என கூறப்படுகிறது. விபத்து ஏற்படாத வகையில் பேட்டரியை அமைக்க வேண்டியது. போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் அவசியம் என சிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

     மக்களின் நன்மதிப்பை மீட்டு எடுப்பது மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அவசியம் என கூறியுள்ளது.
    டெல்லியை தொடர்ந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் விலை உயர்வு அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
    மக்கள் பயணிப்பதற்கு உபர், ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள் வாகன உரிமையாளர்களுடன் இணைந்து சேவையை வழங்கி வருகின்றன.

    இந்நிலையில் உபர் நிறுவனம் தனது பயணிகளுக்கு கட்டணத்தில் 12 சதவீதத்தை உயர்த்திள்ளது. டெல்லி-என்சிஆர் பகுதியில் தற்போது இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணத்தினால் வாகன உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதால் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பெட்ரோ, டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    டெல்லியை தொடர்ந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் விலை உயர்வு அறிவிக்கப்படலாம் என்றும், ஓலா உள்ளிட்ட பிற நிறுவனங்களும் விலையை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.
    தொடர்ந்து நடைபெற்றும் வரும் மின்சார ஸ்கூட்டர் தீ விபத்துகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடந்து மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி செல்கின்றனர். 

    பிரபல நிறுவனங்களும் மின்சார பைக், ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் கடந்த ஒரு மாதத்தில் 4 மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டுவிட்டது. இது மக்கள் மனதில் மின்சார வாகனங்கள் குறித்த பயத்தை ஏற்படுத்தியது. 

    இந்நிலையில் தற்போது ஒரே நாளில் டிரக் தீப்பிடித்ததால் 20 மின்சார ஸ்கூட்டர்கள் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பை ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் நாசிக் அருகே 40 மின்சார வாகனங்களை ஏற்றி சென்ற டிரக் ஒன்று தீப்பிடித்தது. இதில் 20 ஸ்கூட்டர்கள் எரிந்து சாம்பலாகின. இதன்பின் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த மின்சார வாகங்களில் உள்ள லித்தியம் அயன் பேட்டரிகள் இந்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. லித்தியம் அயன் பேட்டரியை நீரில் தூக்கியெறிந்தாலும் தீ அணைவதில்லை, மேலும் கொழுந்துவிட்டு எரிகிறது என கூறப்பட்டுள்ளது. காரணம் நீரில் லித்தியம் அயன் பேட்டரியை போடும்போது எலக்ட்ரோலைட்டில் உள்ள லித்தியம் குறைந்து ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது. இது அதிகம் தீப்பற்றக்கூடியது.

    தொடர்ந்து நடைபெற்றும் வரும் மின்சார ஸ்கூட்டர் தீ விபத்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
    ×