என் மலர்tooltip icon

    பைக்

    2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ
    X
    2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ

    ரூ. 12.30 லட்சம் விலையில் புது பி.எம்.டபிள்யூ. மோட்டார்சைக்கிள் அறிமுகம்

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மோட்டார்சைக்கிள் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் டூரர் மோட்டார்சைக்கிள் கம்ப்லீட்லி-பில்ட்-அப் யூனிட் வடிவில் கிடைக்கும். இந்திய சந்தையில் 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மோட்டார்சைக்கிள் விலை ரூ. 12 லட்சத்து 30 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு பி.எம்.டபிள்யூ. மோட்டராட் விற்பனை மையங்களில் துவங்கி இருக்கிறது. இதன் வினியோகம் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் துவங்க பி.எம்.டபிள்யூ. நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

     2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ

    வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக மற்றும் கவர்ச்சிகர நிதி சலுகைகள் பி.எம்.டபிள்யூ. பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா மூலம் வழங்கப்படுகிறது. புதிய 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மோட்டார்சைக்கிள் மாடலுக்கு மூன்று ஆண்டுகள் / வரம்பற்ற கிலோமீட்டர்களுக்கு ஸ்டாண்டர்டு வாரண்டி வழங்கப்படுகிறது. சற்றே கூடுதல் தொகை செலுத்தினால் நான்கு மற்றும் ஐந்தாவது ஆண்டுகளுக்கு வாரண்டியை நீட்டித்துக் கொள்ள முடியும்.

    அம்சங்களை பொருத்தவரை 2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மோட்டார்சைக்கிள் மாடலில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட 6.5 இன்ச் ஃபுல் கலர் டி.எப்.டி. டிஸ்ப்ளே, ஏ.பி.எஸ்., டிராக்‌ஷன் கண்ட்ரோல், ரைடிங் மோட்ஸ் ப்ரோ, கீலெஸ் ரைடு, என்ஜின் பிரேக் கண்ட்ரோல், அடாப்டிவ் கார்னரிங் லைட்கள் மற்றும் ஹீடெட் க்ரிப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    2022 பி.எம்.டபிள்யூ. F 900 XR ப்ரோ மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 895சிசி, லிக்விட் கூல்டு, பேரலல் டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103.2 பி.ஹெச்.பி. பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 
    Next Story
    ×