என் மலர்

  பைக்

  2022 பி.எம்.டபிள்.யூ. F 850 GS
  X
  2022 பி.எம்.டபிள்.யூ. F 850 GS

  பிரீமியம் பட்ஜெட்டில் புது பி.எம்.டபிள்.யூ. பைக்குகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பி.எம்.டபிள்.யூ. நிறுவனம் இந்திய சந்தையில் F 850 GS மற்றும் பி.எம்.டபிள்.யூ. F 850 GS அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.  பி.எம்.டபிள்.யூ. மோட்டராட் நிறுவனம் 2022 பி.எம்.டபிள்.யூ. F 900 XR மோட்டார்சைக்கிள் மாடலுடன் 2022 பி.எம்.டபிள்.யூ. F 850 GS மற்றும் 2022 பி.எம்.டபிள்.யூ. F 850 GS அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரண்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் 853சிசி, இன்-லைன், 2 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

  முந்தைய மாடலில் இந்த என்ஜின் சர்வதேச சந்தையில் 94 பி.ஹெச்.பி. பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இந்திய சந்தையில் இந்த என்ஜின் செயல்திறன் 89 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 86 நியூட்டன் மீட்டர் டார்க் என சற்றே குறைக்கப்பட்டு இருந்தது. தற்போதைய பி.எஸ். 6 ரக என்ஜின் சர்வதேச சந்தையில் கிடைக்கும் அதே செயல்திறனுடன் கிடைக்கிறது.

   2022 பி.எம்.டபிள்.யூ. F 850 GS அட்வென்ச்சர்

  அந்த வகையில் புது மாடலில் 853சிசி என்ஜின் 94 பி.ஹெச்.பி. பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. பி.எம்.டபிள்.யூ. F 850 GS மிடில் வெயிட் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆகும். இதில் பி.எம்.டபிள்.யூ. F 850 GS அட்வென்ச்சர் மாடல் இந்தியாவுக்கு சி.பி.யு. முறையில் கொண்டுவரப்பட இருக்கிறது. இந்த மாடல் இந்திய சந்தையில் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். 

  அம்சங்களை பொருத்தவரை புது பி.எம்.டபிள்.யூ. மோட்டார்சைக்கிளில் ABS ப்ரோ, டைனமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல், டைனமிக் எலெக்டிரானிக் சஸ்பென்ஷன், கீலெஸ் ரைடு, கியர் ஷிஃப்ட் அசிஸ்ட் ப்ரோ, ரைடிங் மோட்ஸ் ப்ரோ, ஹீடெட் க்ரிப்ஸ், குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சங்களாக வழங்கப்படுகின்றன. 

  இந்திய சந்தையில் புதிய பி.எம்.டபிள்.யூ. F 850 GS மாடல் விலை ரூ. 12 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2022 பி.எம்.டபிள்.யூ. F 850 GS அட்வென்ச்சர் மாடல் விலை ரூ. 13 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
  Next Story
  ×