search icon
என் மலர்tooltip icon

    பைக்

    பற்றி எரியும் ஸ்கூட்டர்கள்
    X
    பற்றி எரியும் ஸ்கூட்டர்கள்

    பற்றி எரிந்த 20 மின்சார ஸ்கூட்டர்கள்- விபத்துக்கு காரணம் என்ன?

    தொடர்ந்து நடைபெற்றும் வரும் மின்சார ஸ்கூட்டர் தீ விபத்துகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடந்து மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி செல்கின்றனர். 

    பிரபல நிறுவனங்களும் மின்சார பைக், ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் கடந்த ஒரு மாதத்தில் 4 மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டுவிட்டது. இது மக்கள் மனதில் மின்சார வாகனங்கள் குறித்த பயத்தை ஏற்படுத்தியது. 

    இந்நிலையில் தற்போது ஒரே நாளில் டிரக் தீப்பிடித்ததால் 20 மின்சார ஸ்கூட்டர்கள் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பை ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் நாசிக் அருகே 40 மின்சார வாகனங்களை ஏற்றி சென்ற டிரக் ஒன்று தீப்பிடித்தது. இதில் 20 ஸ்கூட்டர்கள் எரிந்து சாம்பலாகின. இதன்பின் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த மின்சார வாகங்களில் உள்ள லித்தியம் அயன் பேட்டரிகள் இந்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. லித்தியம் அயன் பேட்டரியை நீரில் தூக்கியெறிந்தாலும் தீ அணைவதில்லை, மேலும் கொழுந்துவிட்டு எரிகிறது என கூறப்பட்டுள்ளது. காரணம் நீரில் லித்தியம் அயன் பேட்டரியை போடும்போது எலக்ட்ரோலைட்டில் உள்ள லித்தியம் குறைந்து ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது. இது அதிகம் தீப்பற்றக்கூடியது.

    தொடர்ந்து நடைபெற்றும் வரும் மின்சார ஸ்கூட்டர் தீ விபத்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
    Next Story
    ×