என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல் செய்திகள்

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் புதிய X4 சில்வர் ஷேடோ எடிஷன் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் X4 சில்வர் ஷேடோ எடிஷன் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய X4 சில்வர் ஷேடோ எடிஷன் மாடல் விலை ரூ. 71 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். 

    முன்னதாக பிளாக் ஷேடோ எடிஷன் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது சில்வர் ஷேடோ எடிஷன் மாடல் எக்ஸ்-டிரைவ் 30 ஐ மற்றும் எக்ஸ்-டிரைவ் 30 டி விடிவில் கிடைக்கிறது. இந்த மாடலை வாங்க விரும்புவோர் பி.எம்.டபிள்யூ. ஆன்லைன் தளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். புதிய சில்வர் ஷேடோ எடிஷன் விலை முந்தைய பிளாக் ஷேடோ எடிஷனை விட ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் வரை அதிகம் ஆகும். 

    பி.எம்.டபிள்யூ. X4 சில்வர்  ஷேடோ எடிஷன்

    பிளாக் தீமிற்கு முற்றிலும் எதிராக, புதிய மாடல்- கார்பன் பிளாக், பைடோனிக் புளூ மற்றும் ஆல்பைன் வைட் என மூன்று வித எக்ஸ்டீரியர் ஷேட்களில் கிடைக்கிறது. இத்துடன் சிக்னேச்சர் கிரில், டூயல் எக்சாஸ்ட் பைப்கள் குரோம் ராப் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் பம்ப்பர்கள் அசென்ச்சுவேட் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய பி.எம்.டபிள்யூ. X4 சில்வர் ஷேடோ எடிஷன் மாடலிலும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் என்ஜின் 251 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 261 பி.ஹெச்.பி. பவர், 620 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இருவித என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. 
    ஆடி நிறுவனம் விரைவில் 2022 A8 பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ஆடி இந்தியா நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் செடான் மாடலான ஆடி A8 காரை இந்திய சந்தையில் அப்டேட் செய்ய இருக்கிறது. மிக விரைவில் 2022 ஆடி A8 பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய A8 பேஸ்லிப்ட் மாடலுக்கான டீசரை ஆடி இந்தியா வெளியிட்டு உஎள்ளது.

    இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும் புதிய 2022 ஆடி A8 பேஸ்லிப்ட் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய S கிளாஸ் மற்றும் பி.எம்.டபிள்.யூ. நிறுவனத்தின் 7 சீரிஸ் கார் போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.

     2022 ஆடி A8 பேஸ்லிப்ட்

    ஆடி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே புதிய A8 பேஸ்லிப்ட் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து விட்டது. சர்வதேச சந்தையை தொடர்ந்து தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது. 

    2022 ஆடி A8 பேஸ்லிப்ட் மாடலில் மேம்பட்ட ஸ்டைலிங், அதிகளவில் புது அம்சங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஆடி A8 மாடலில் பெரிய கிரில், அப்டேட் செய்யப்பட்ட ஹெட்லைட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள புதிய வீல்கள் காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.

    நிறங்களை பொருத்தவரை 2022 ஆடி A8 மாடல் மெட்டாலிக் டிஸ்ட்ரிக்ட் கிரீன் மற்றும் ஃபிர்மனெண்ட் புளூ, மேன்ஹேட்டன் கிரே மற்றும் அல்ட்ரா புளூ போன்ற நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் டேடோனா கிரே, ஃபுளோரெட் சில்வர், டிஸ்ட்ரிக்ட் கிரீன் மற்றும் கிளேசியர் வைட் போன்ற நிறங்கள் மேட் ஃபினிஷிங்கில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    சண்டிகர் மாநிலத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு நபர் ஒருவர் ரூ. 15 லட்சம் செலவிட்டு ஃபேன்சி நம்பர் வாங்கி இருக்கிறார்.
     

    இந்தியாவில் வாகனங்களுக்கு பேன்சி நம்பர்களை வாங்குவது சாதாரண விஷயம் தான். அதிக விருப்பத்துடன் வாங்கும் வாகனங்களுக்கு சில ஆயிரங்களை கொடுத்து பிடித்தமான எண்களை, வாகன பதிவு எண்ணாக வாங்குவது வழக்கமான ஒன்று தான். 

    இந்த நிலையில்தான், சண்டிகரை சேர்ந்த நபர் ஒருவர் தனது ஹோண்டா ஸ்கூட்டருக்கு ரூ. 15 லட்சத்து 44 ஆயிரம் செலவிட்டு பேன்சி நம்பர் வாங்கி இருக்கிறார். தனது ஹோண்டா ஆக்டிவா மாடலில் CH-01-CJ-0001 என்ற பேன்சி நம்பரை பெற இந்த நபர் இவ்வளவு செலவு செய்து இருக்கிறார். இவர் வாங்கிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விலையே ரூ. 71 ஆயிரம் தான். 

     ஹோண்டா ஆக்டிவா

    சண்டிகரில் வசிக்கும் 42 வயதான ப்ரிஜ் மோகன் விளம்பரத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் சண்டிகர் ஆர்.டி.ஒ.-வில் நடைபெற்ற ஏலத்தில் கலந்து கொண்டு இந்த பேன்சி நம்பரை வாங்கி இருக்கிறார். தான் பேன்சி நம்பர் வாங்குவது இதுவே முதல் முறை என அவர் தெரிவித்தார். 

    CH-01-CJ சீரிசில் மொத்தம் 378 பேன்சி நம்பர்களுக்கான ஏலம் ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 16, 2022 வரை நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் ரூ. 1 கோடியே 5 லட்சம் வை வசூலானது என சண்டிகர் ஆர்.டி.ஒ. அதிகாரி தெரிவித்தார். இது தவிர CH-01-CJ-007 மற்றும் CH-01-CJ-003 போன்ற எண்கள் முறையே ரூ. 4 லட்சத்து 40 ஆயிரமும், ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டன.
    யமஹா நிறுவனம் இருசக்கர வாகனங்களுக்கான பவர் ஸ்டீரிங் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    யமஹா நிறுவனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான பவர் ஸ்டீரிங்கை உருவாக்கி வருகிறது.

    இன்று வரை இந்த தொழில்நுட்பம் கார்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், இந்த தொழில்நுட்பத்தை இருசக்கர வாகனங்களிலும் பயன்படுத்த யமஹா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி எலெக்ட்ரிக் பவர் ஸ்டீரிங் தொழில்நுட்பத்திற்கான ப்ரோடோடைப் இந்த ஆண்டே மோட்டார்சைக்கிள் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது. 

     யமஹா ஸ்டீரிங்

    இந்த மோட்டார்சைக்கிள் மாடல்கள் ஜப்பான் மோட்டோகிராஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பயன்படுத்தப்பட இருக்கிறது. மூன்று வழிகளில் எலெக்டிரானிக் பவர் ஸ்டீரிங் இயங்குகிறது. முதலில் மேக்னெடோ-ஸ்டிரிக்டிவ் டார்க் சென்சார் ஸ்டீரிங் அசைவு, ரைடர் எவ்வளவு ஃபோர்ஸ் போடுகிறார் என்பதை கணக்கிடும். இந்த விவரங்கள் கண்ட்ரோல் போர்டுக்கு அனுப்பப்படும். 

    பின் அந்த போர்டு, ஹெட்-ஸ்டாக் முன்புறத்தில் போல்டெட் மற்றும் ஸ்டீரிங் ஸ்டெம் உடன் கியர் செய்யப்பட்டு இருக்கும் எலெக்டிரானிக் ஆக்டுவேட்டரிடம் எவ்வளவு அசிஸ்டண்ஸ் கொடுக்கப்பட வேண்டும் என்பதை தெரிவிக்கும். 

    மோட்டார்சைக்கிளிங்கின் போது ஏற்படும் ஒட்டுமொத்த சோர்வை போக்குவதற்காகவே இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீரிங் டேம்ப்பர்களை போன்றே இந்த எலெக்டிரானிக் பவர் ஸ்டீரிங் சிஸ்டம் ரைடர்களுக்கு உதவியாக இருக்கும். தொடர்ச்சியான வளர்ச்சி பணிகளை அடுத்து, இந்த தொழில்நுட்பம் நம்மிடையே பயன்பாட்டுக்கு வர மேலும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் வரை ஆகும். 

    ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஃபோர்டு உற்பத்தி ஆலையை வாங்க இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நிறுவனங்கள் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் விற்பனை விவகாரத்தில் அனுமதி வழங்க கோரி இரு நிறுவனங்களும் குஜராத் அரசிடம் கோரிக்கை விடுத்து இருப்பதாக தெரிகிறது. அனுமதி கிடைத்தால் இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என கூறப்படுகிறது. 

    இதன் இடையே, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஃபோர்டு நிறுவனத்தின் சனந்த் உற்பத்தி ஆலையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு லட்சம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 2 ஆயிரம் கோடி முதலீடு செய்து 2026 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது.

     ஃபோர்டு உற்பத்தி ஆலை

    முன்னதாக ஃபோர்டு சனந்த் ஆலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குஜராத் அரசிடம் வாக்குறுதி அளித்து இருக்கிறது. இதன் மூலம் சுமார் 23 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். 

    குஜராத் மாநிலத்தின் சனந்த் நகரில் உற்பத்தியை துவங்கிய முதல் நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் ஒன்றாக இருந்தது. நானோ காரை உற்பத்தி செய்ய ரூ. 4  ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்து இருந்தது. தற்போது  இந்த ஆலையில் டியாகோ, டிகோர் மற்றும் டிகோர் EV போன்ற மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சனந்த் ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 
    ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் சில ஆயிரம் யூனிட்களை ரிகால் செய்து இருக்கிறது.


    ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்த ப்ரைஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் பேட்டரி பிரச்சினையை சரி செய்ய 3 ஆயிரத்து 215 யூனிட்களை ரி-கால் செய்து இருக்கிறது. 

    பாதிக்கப்பட்ட யூனிட்களை பயன்படுத்துவோர் விரைந்து தங்களின் ஸ்கூட்டர்களை கொண்டு வர ஒகினவா எச்சரிக்கை விடுத்து உள்ளது. ரி-கால் நடவடிக்கை பவர் பேக் ஹெல்த் செக்-அப் திட்டத்தின் கீழ் நடத்தப்படுவதாக ஒகினவா தெரிவித்து இருக்கிறது. 

     ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    ரி-கால் செய்யப்படும் இ ஸ்கூட்டர்களின் பேட்டரி பேக்குகளில் லூஸ் கனெக்டர்கள் அல்லது வேறு ஏதேனும் சேதம் அடைந்து இருக்கிறதா என்பதை ஒகினவா நிறுவனம் சோதனை செய்ய இருக்கிறது. ஒருவேளை ஸ்கூட்டர்களில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தால், அவற்றை இலவசமாக சரி செய்து வழங்க இருக்கிறது. 

    பாதிக்கப்பட்ட யூனிட்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் அதன் டீலர்கள் உதவியுடன் தொடர்பு கொண்டு ஸ்கூட்டர்களை சரி செய்து வழங்க இருக்கிறது. இந்த நடவடிக்கை முழுவதும் வாடிக்கையாளர் சவுகரியத்திற்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டும் என ஒகினவா நிறுவனம் தனது டீலர்களிடம் தெரிவித்து உள்ளது. 

    சமீப காலங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடிக்கடி வெடித்துச் சிதறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், பாதிப்பு ஏற்படும் முன்னரே நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த ரி-கால் அறிவிப்பு வெளியிடப்படுவதாக ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஷாட்கன் 650 ப்ரோடக்‌ஷன் ரெடி மாடலின் டெஸ்டிங்கை தொடங்கி இருக்கிறது.


    ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய ஷாட்கன் 650 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய ஷாட்கன் 650 மாடல் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 

    புகைப்படங்களின் படி புதிய ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மாடல் ப்ரோடக்‌ஷன் ரெடி மாடல் வெளிநாடுகளில் டெஸ்டிங் செய்யப்படுகிறது. பொதுவெளி சாலைகளில் புது ஷாட்கன் 650 மாடல் டெஸ்டிங் நடைபெற்று வருகிறது. தற்போதைய புகைப்படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஷாட்கன் 650 மாடல் பற்றிய புது விவரங்கள் வெளியாகி உள்ளது.

    ராயல் என்பீல்டு ஷாட்கன் 650
    Photo Credit: Motorcyclenews.com

    முந்தைய ப்ரோடோடைப் மாடல்களுடன் ஒப்பிடும் போது புதிய ஷாட்கன் 650 மாடலில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் முன்புற ஹெட்லேம்ப் கவுல் புகைப்படங்களில் இருப்பதை போன்றே இறுதி வடிவிலும் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் வழக்கமான பல்பு இண்டிகேட்டர்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாடலில் முழுமையான எல்.இ.டி. ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது. ராயல் என்பீல்டு மாடல்களில் இவ்வாறு வழங்கப்படுவது புது மாற்றமாக பார்க்கப்படுகிறது.

    இந்த மாடலில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் காண்டினெண்டல் ஜி.டி. 650 மற்றும் இண்டர்செப்டார் 650 மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் 650சிசி, டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. எனினும், புது மாடலில் இந்த என்ஜின் வேறு விதமாக டியூனிங் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். 
    ஜீப் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல் விலையை திடீரென மாற்றி அமைத்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
     

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் எஸ்.யு.வி. மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது. 2022 ஆண்டில் முதல் முறையாக விலை உயர்வை ஜீப் இந்தியா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. விலை உயர்வின் படி ஜீப் காம்பஸ் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள், டிரையல்ஹாக் வேரியண்ட் உள்பட ரூ. 25 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    விலை உயர்வு கணமாக ஜீப் காம்பஸ் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 04 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் டிரையல்ஹாக் மாடல் விலை ரூ. 30 லட்சத்து 97 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜீப் காம்பஸ் டிரையல்ஹாக் மாடல் இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

     ஜீப் காம்பஸ்

    இதில் 2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4x4 சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. தோற்றத்தில் ஜீப் காம்பஸ் டிரையல்ஹாக் மாடலில் டூயல் டோன் பெயிண்ட் செய்யப்பட்டு, முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் ரி-வொர்க் செய்யப்பட்டுள்ளன. இந்த காரின் பூட் மற்றும் முன்புற ஃபெண்டரில் டிரையல்-ரேட் செய்யப்பட்ட பேட்ஜ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

    ஜீப் காம்பஸ் ஸ்டாண்டர்டு மாடல் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 161 பி.ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டி.சி.டி. யூனிட், டீசல் என்ஜினுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் செட்டப் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
    யமஹா நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்கூட்டர் மாடலை அசத்தலான சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    யமஹா நிறுவனம் 2023 ஃபுளூ 125 ஸ்கூட்டரை பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதே ஸ்கூட்டர் இந்தோனேசியா சந்தையில் ஃபிரீ கோ எனும் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், புது மாடல் தோற்றத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

    டிசைன் மற்றும் ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய யமஹா ஃபுளூ மாடல் முந்தைய தலைமுறை யமஹா ரே இசட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் அப்ரிலியா எஸ்.ஆர். 125 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஃபுளூ மாடல் கூர்மையான தோற்றம் கொண்டிருக்காமல், ஃபன்கியாக காட்சியளிக்கிறது. 

    யமஹா ஃபுளோ

    புதுிய யமஹா ஃபுளூ மாடலில் 125சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9.6 பி.ஹெச்.பி. பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே போன்ற செயல்திறன் வழங்கும் இரு ஸ்கூட்டர்களை யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் வற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    தற்போது இந்திய சந்தையில் கிடைக்கும் யமஹா ரே இசட்.ஆர். 125 மற்றும் பசினோ 125 போன்ற மாடல்களும் இதே போன்ற வெளிப்படுத்துகிறது. எனினும், ஃபுளூ மாடலின் அம்சங்கள் வேற மாதிரி இருக்கும் வகையில் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    அந்த வகையில் புதிய யமஹா ஃபுளூ மாடலில் ஏ.பி.எஸ். வசதி, 25 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ், யு.எஸ்.பி. சார்ஜிங், முழுமையான எல்.இ.டி. லைட்டிங், சிறிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. 
    கியா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீடு பற்றி புது தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.


    கியா நிறுவனம் சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் இரு முக்கிய டிரெண்டிற்கு ஏற்ற வாகனங்களை வெளியிடுவதில் கவனமாக உள்ளது. அதன்படி எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பெரிய எஸ்.யு.வி. போன்ற மாடல்களை அறிமுகம் செய்ய கியா திட்டமிட்டுள்ளது. 

    அதன்படி அமெரிக்க சந்தையில் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் கியா EV9 மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கியா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. புதிய EV9 மாடல் மூன்று ரோ எஸ்.யு.வி. கார் ஆகும். இது உலகிற்கான EV மாடல்களில் முக்கியத்துவம் வாய்ந்த மாடலாக இருக்கும். 

     கியா கான்செப்ட் EV9

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற LA ஆட்டோ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட EV9 மாடல் சமீபத்தில் நியூ யார்க் சர்வதேச ஆட்டோ விழாவில் அமெரிக்க வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹூண்டாய் மோட்டாக் குழுமத்தின் E-GMP பிளாட்பார்மில் உருவாகி வரும் கியா EV9 மாடல் EV6,  EV7 மற்றும் இதர மாடல்களின் மேல் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. 

    கான்செப்ட் வடிவில் கியா EV9 அறிமுகம் செய்யும் போதே இந்த மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் காரை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே போதுமானது என கியா நிறுவனம் தெரிவித்து இருந்தது. புதிய கியா EV9 மாடல் முழு சார்ஜ் செய்தால் குறைந்தபட்சம் 500 கிலோமீட்டர்களுக்கான ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம். 

    சிம்பில் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    சிம்பில் எனர்ஜி நிறுவனம் கடந்த ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை விரைவில் துவங்க இருக்கிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சிம்பில் எனர்ஜி நிறுவனம் புதிய எலெர்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த தகவலை சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான சுஹாஸ் ராஜ்குமார் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார். ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான உற்பத்தி சோதனை ஏற்கனவே துவங்கி விட்டது. வினியோகம் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

     சிம்பில் எனர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி துவங்கும் போதே, இரண்டாவது வாகனமும் அறிமுகம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். "முதல் மாடலை தொடர்ந்து எங்களின் இரண்டாவது வாகனம் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும். இது குறைந்த விலையில் கிடைக்கும் மாடலாக இருக்கும்," என அவர் தெரிவித்தார். 

    ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாடல் முற்றிலும் புதியதாக இருக்கும். இது புதிய பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும். இதில் சிறிய பேட்டரி மற்றும் மோட்டார் வழங்கப்படும். எனினும், இவை தவிர புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி வேறு எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை. இந்த மாடலின் விலை போட்டி நிறுவனங்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என அவர் தெரிவித்தார். 
    ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மாடலின் புது வேரியண்ட் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் மாண்ட் கர்லோ எடிஷனை உருவாக்கி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்கோடா நிறுவனம் புதிய குஷக் மாண்ட் கர்லோ எடிஷனை இந்திய சந்தையில் மே 9 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. 

    ஸ்கோடா நிறுவனத்தின் மற்ற மாண்ட் கர்லோ மாடல்களை போன்றே குஷக் மாண்ட் கர்லோ மாடலிலும் பிளாக்டு-அவுட் எக்ஸ்டீரியர், உள்புறம் காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷனின் வெளிப்புறம் விங் மிரர்கள், ரூஃப், கிரில் மற்றும் பம்ப்பர் இன்சர்ட்களில் பிளாக்-அவுட் டிரீட்மெண்ட் செய்யப்படுகிறது.

     ஸ்கோடா குஷக்

    இதன் முன்புற ஃபெண்டர்கள் மற்றும் டெயில் கேட்களில் மாண்ட் கர்லோ பேட்ஜிங் பொருத்தப்படுகிறது. மேலும் இந்த மாடலில் 205/55 R17 ரக டையர்கள் மற்றும் வித்தியாசமாக காட்சியளிக்கும் அலாய் வீல்கள் வழங்கப்பட இருக்கிறது. 

    ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷனில் 115 ஹெச்.பி. பவர், 175 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1 லிட்டர் TSI என்ஜின் மற்றும் 150 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TSI என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இருவித என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. 
    ×