search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
    X
    ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    இ ஸ்கூட்டர்களை உடனே கொண்டு வாங்க - ஒகினவா அதிரடி நடவடிக்கை

    ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் சில ஆயிரம் யூனிட்களை ரிகால் செய்து இருக்கிறது.


    ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்த ப்ரைஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் பேட்டரி பிரச்சினையை சரி செய்ய 3 ஆயிரத்து 215 யூனிட்களை ரி-கால் செய்து இருக்கிறது. 

    பாதிக்கப்பட்ட யூனிட்களை பயன்படுத்துவோர் விரைந்து தங்களின் ஸ்கூட்டர்களை கொண்டு வர ஒகினவா எச்சரிக்கை விடுத்து உள்ளது. ரி-கால் நடவடிக்கை பவர் பேக் ஹெல்த் செக்-அப் திட்டத்தின் கீழ் நடத்தப்படுவதாக ஒகினவா தெரிவித்து இருக்கிறது. 

     ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    ரி-கால் செய்யப்படும் இ ஸ்கூட்டர்களின் பேட்டரி பேக்குகளில் லூஸ் கனெக்டர்கள் அல்லது வேறு ஏதேனும் சேதம் அடைந்து இருக்கிறதா என்பதை ஒகினவா நிறுவனம் சோதனை செய்ய இருக்கிறது. ஒருவேளை ஸ்கூட்டர்களில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தால், அவற்றை இலவசமாக சரி செய்து வழங்க இருக்கிறது. 

    பாதிக்கப்பட்ட யூனிட்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் அதன் டீலர்கள் உதவியுடன் தொடர்பு கொண்டு ஸ்கூட்டர்களை சரி செய்து வழங்க இருக்கிறது. இந்த நடவடிக்கை முழுவதும் வாடிக்கையாளர் சவுகரியத்திற்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டும் என ஒகினவா நிறுவனம் தனது டீலர்களிடம் தெரிவித்து உள்ளது. 

    சமீப காலங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடிக்கடி வெடித்துச் சிதறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், பாதிப்பு ஏற்படும் முன்னரே நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இந்த ரி-கால் அறிவிப்பு வெளியிடப்படுவதாக ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
    Next Story
    ×