என் மலர்tooltip icon

    இது புதுசு

    ராயல் என்பீல்டு
    X
    ராயல் என்பீல்டு

    உற்பத்திக்கு தயார் நிலையில் ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 - டெஸ்டிங் தொடக்கம்

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஷாட்கன் 650 ப்ரோடக்‌ஷன் ரெடி மாடலின் டெஸ்டிங்கை தொடங்கி இருக்கிறது.


    ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய ஷாட்கன் 650 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய ஷாட்கன் 650 மாடல் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 

    புகைப்படங்களின் படி புதிய ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மாடல் ப்ரோடக்‌ஷன் ரெடி மாடல் வெளிநாடுகளில் டெஸ்டிங் செய்யப்படுகிறது. பொதுவெளி சாலைகளில் புது ஷாட்கன் 650 மாடல் டெஸ்டிங் நடைபெற்று வருகிறது. தற்போதைய புகைப்படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஷாட்கன் 650 மாடல் பற்றிய புது விவரங்கள் வெளியாகி உள்ளது.

    ராயல் என்பீல்டு ஷாட்கன் 650
    Photo Credit: Motorcyclenews.com

    முந்தைய ப்ரோடோடைப் மாடல்களுடன் ஒப்பிடும் போது புதிய ஷாட்கன் 650 மாடலில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் முன்புற ஹெட்லேம்ப் கவுல் புகைப்படங்களில் இருப்பதை போன்றே இறுதி வடிவிலும் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் வழக்கமான பல்பு இண்டிகேட்டர்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாடலில் முழுமையான எல்.இ.டி. ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது. ராயல் என்பீல்டு மாடல்களில் இவ்வாறு வழங்கப்படுவது புது மாற்றமாக பார்க்கப்படுகிறது.

    இந்த மாடலில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் காண்டினெண்டல் ஜி.டி. 650 மற்றும் இண்டர்செப்டார் 650 மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் 650சிசி, டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. எனினும், புது மாடலில் இந்த என்ஜின் வேறு விதமாக டியூனிங் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். 
    Next Story
    ×