search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இரு ஸ்கூட்டர்கள் டெஸ்ட் ரைடு பற்றி அந்நிறுவனம் புது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான டெஸ்ட் ரைடு திட்டத்தை இம்மாதம் துவங்கியது. எனினும், தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் மட்டுமே டெஸ்ட் ரைடு நடைபெற்று வந்தது. 

    இந்த நிலையில், நாடு முழுக்க ஆயிரம் நகரங்கள் மற்றும் டவுன்களில் டெஸ்ட் ரைடு திட்டத்தை நீட்டிக்க இருப்பதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரும் எலெக்ட்ரிக் வாகன டெஸ்ட் ரைடு திட்டமாக இது அமைகிறது.

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    முன்னதாக ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்றன. இரு ஸ்கூட்டர்களுக்கான வினியோகம் இம்மாதமே துவங்க இருக்கிறது. 
    ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் விற்பனை செய்யும் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. 

    அந்த வரிசையில், ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. இந்த கார் சென்னையில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் உண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

     ஹூண்டாய் ஐயோனிக் 5

    சர்வதேச சந்தையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 மாடல் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் ஆட்டோ பிளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், பாராமெட்ரிக் பிக்சல் டிசைன் கொண்டிருக்கிறது. ஐயோனிக் 5 மாடல் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் பிரத்யேக பி.இ.வி. ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கிறது.

    இந்த எஸ்.யு.வி. 58 கிலோவாட் ஹவர் அல்லது 72.6 கிலோவாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 481 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 185 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனம் புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. டிசம்பர் 4-5 தேதிகளில் நடைபெற இருக்கும் இந்தியா பைக் வார நிகழ்வில் புதிய ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    ஏற்கனவே இந்த மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மாடலில் ஆப்லங்-வடிவ ஹெட்லேம்ப், காம்பேக்ட் முன்புற பெண்டர், 11.8 லிட்டர் பியூவல் டேன்க், டால்-சீட் எக்சாஸ்ட்கள் உள்ளன.

     ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ்

    இந்தியாவில் புதிய ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிள் விவிட் பிளாக், மிட்நைட் க்ரிம்சன் மற்றும் ஸ்டோன் வாஷ்டு வைட் பியல் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் 1250சிசி, லிக்விட் கூல்டு, 60-டிகிரி, வி ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 119.3 பி.ஹெச்.பி. திறன், 127.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் ஐந்து ரைடிங் மோட்கள், கார்னெரிங் ஏ.பி.எஸ்., லீன்-சென்சிடிவ் டிராக்‌ஷன் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன. 

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஏ.எம்.ஜி. மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    மெகர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஏ.எம்.ஜி. ஏ45 எஸ் காரை அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய பென்ஸ் கார் விலை ரூ. 79.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் சி.பி.யு. முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது. 

    புதிய 2021 மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஏ45 எஸ் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 416 பி.ஹெச்.பி. திறன், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

     மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஏ45 எஸ்

    புதிய மெர்சிடிஸ் கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 270 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. மாடலில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், அகலமான ஏர் இன்டேக், 19 இன்ச் அலாய் வீல்கள், புதிய எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன.

    டுகாட்டி நிறுவனத்தின் புதிய பணிகல் வி4 எஸ்.பி. மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    டுகாட்டி நிறுவனம் பணிகேல் வி4 எஸ்.பி. மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது பணிகேல் வி4 எஸ் மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் ஆகும். இந்தியாவில் டுகாட்டி பணிகேல் வி4எஸ் விலை ரூ. 28.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    ஒட்டுமொத்த தோற்றத்தில் பணிகேல் வி4எஸ்.பி. மாடல் பணிகேல் வி4எஸ் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய வி4 எஸ்.பி. மாடலில் விண்டர் டெஸ்ட் லிவெரி கொண்டிருக்கிறது. பணிகேல் வி4 எஸ்.பி. மாடலில் மார்ஷெஸ்னி போர்ஜ் செய்யப்பட்ட அலுமினியம் வீல்கள் மற்றும் பைரெளி டையப்ளோ சூப்பர்கோசா எஸ்.பி. டையர்கள் வழங்கப்படுகிறது.

     டுகாட்டி பணிகல் வி4 எஸ்.பி.

    புதிய டுகாட்டி பணிகேல் வி4 எஸ்.பி. மாடலிலும் 1103சிசி, டெஸ்மோடிசி ஸ்டிரேடேல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 214 பி.ஹெச்.பி. திறன், 124 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் ஓலின்ஸ் மற்றும் பிரெம்போ சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய எஸ்.பி. மாடலில் குவிக்‌ஷிப்டர், ரைடிங் மற்றும் பவர் மோட்கள், டிராக்‌ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் லான்ச் கண்ட்ரோல் போன்ற எலெக்ட்ரிக் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
    வோக்ஸ்வேகன் நிறுவனம் 2021 டிகுவான் பேஸ்லிப்ட் மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.


    வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் 2021 டிகுவான் பேஸ்லிப்ட் மாடல் டிசம்பர் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த பேஸ்லிப்ட் மாடல் வோக்ஸ்வேகன் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அறிமுகமாகிறது.

    முன்னதாக மேம்பட்ட டிகுவான் மாடல் 2020 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. இந்தியாவில் புதிய பேஸ்லிப்ட் மாடல் ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டக்சன் மற்றும் சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     2021 வோக்ஸ்வேகன் பேஸ்லிப்ட்

    பேஸ்லிப்ட் டிகுவான் மாடல் மட்டுமின்றி வோக்ஸ்வேகன் நிறுவனம் மிட்-சைஸ் பிரீமியம் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய இருக்கிறது. புதிய டிகுவான் பேஸ்லிப்ட் மாடலில் எல்.இ.டி. மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    2021 வோக்ஸ்வேகன் டிகுவான் பேஸ்லிப்ட் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    கியா நிறுவனத்தின் புதிய இ.வி.9 கான்செப்ட் மாடல் 2021 எல்.ஏ. ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
     

    தென் கொரிய கார் உற்பத்தியாளரான கியா இ.வி.9 கான்செப்ட் எஸ்.யு.வி. மாடலை 2021 எல்.ஏ. ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்தது. இது கியா நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் ஆகும். இந்த மாடல் இ.வி.9 பெயரிலேயே விற்பனைக்கு வர இருக்கிறது.

    அளவில் புதிய இ.வி.9 கான்செப்ட் மாடல் 4928 எம்.எம். நீளமும், 2057 எம்.எம். அகலம், 1778 எம்.எம். உயரமாக இருக்கிறது. இந்த காரின் வீல்பேஸ் 3099 எம்.எம். அளவு ஆகும். இதில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி மற்றும் மோட்டார் விவரங்கள் மர்மமாகவே இருக்கிறது. 

    கியா இ.வி.9 கான்செப்ட்

    எனினும் இ.வி.9 மாடலில் 350 கிலோவாட் பாஸ்ட் டி.சி. சார்ஜிங் வழங்கப்படுகிறது. இது காரை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 20 முதல் 30 நிமிடங்களை எடுத்துக் கொள்ளும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 483 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் எக்ஸ்.இ. பிளஸ் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ரோஸ் எக்ஸ்.இ. பிளஸ் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுவந்த எக்ஸ்.எம். வேரியண்ட் நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக புதிதாக எக்ஸ்.இ. வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 6.34 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 7.54 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய எக்ஸ்.இ. பிளஸ் வேரியண்ட் டாடா அல்ட்ரோஸ் பேஸ் வேரியண்ட் எக்ஸ்.இ. காரின் மேல் அல்ட்ரோஸ் எக்ஸ்.எம். பிளஸ் வேரியண்டின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய எக்ஸ்.இ. பிளஸ் மாடல் விலை எக்ஸ்.எம். பிளஸ் வேரியண்டை விட ரூ. 15 ஆயிரம் குறைவு ஆகும். 

     டாடா அல்ட்ரோஸ்

    டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்.இ. பிளஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 85 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 89 பி.ஹெச்.பி. திறன், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அவெனிஸ் 125 ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    சுசுகி நிறுவனம் அவெனிஸ் 125 மாடலினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் புதிய சுசுகி அவெனிஸ் 125 விலை ரூ. 86,700 (எக்ஸ்-ஷோரூம்) என துவங்குகிறது. இந்த ஸ்கூட்டர் டி.வி.எஸ். என்டார்க் 125, ஹோண்டா கிரேசியா, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் அப்ரிலியா எஸ்.ஆர். 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    இந்த மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், யு.எஸ்.பி. சார்ஜர், சைடு ஸ்டாண்டு இண்டர்லாக் போன்ற அம்சங்கள் உள்ளன. சுசுகி அவெனிஸ் மாடலில் 125சிசி, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     சுசுகி அவெனிஸ் 125

    புதிய சுசுகி அவெனிஸ் மாடல் கிரே, ஆரஞ்சு, வைட் மற்றும் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் மோட்டோ ஜிபி எடிஷன் விலை ரூ. 87,600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ரெனால்ட் நிறுவனத்தின் எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியது.


    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது க்விட் ஹேட்ச்பேக் மாடல் இந்திய விற்பனையில் 4 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் க்விட் மாடல் ரெனால்ட் நிறுவன விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    பத்தாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் அங்கமாக ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் 2021 க்விட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரெனால்ட் க்விட் விலை ரூ. 4.11 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 5.56 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     ரெனால்ட் க்விட்

    ரெனால்ட் க்விட் மாடல் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 53 பி.ஹெச்.பி. திறன், 72 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 67 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 91 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் மாடல் மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ, ஹூண்டாய் சாண்ட்ரோ மற்றும் டேட்சன் ரெடி-கோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது.

     
    ஹூண்டாய் மோட்டார் கம்பெனி நிறுவனம் செவன் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. எல்.ஏ. ஆட்டோ விழாவில் அறிமுகமாகி இருக்கும் புது எலெக்ட்ரிக் கார் செவன் கான்செப்ட் என அழைக்கப்படுகிறது.

    செவன் கான்செப்ட் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் எலெக்ட்ரிக் குளோபல் மாட்யூலர் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இந்த மாடல் நீண்ட வீல்பேஸ் மற்றும் பிளாட் பிளாட்பார்ம் கொண்டிருக்கிறது. இது பயனர்களுக்கு முற்றிலும் புது அனுபவத்தை வழங்குகிறது.

     ஹூண்டாய் செவன்

    புதிய ஹூண்டாய் செவன் மாடல் 350 கிலோவாட் சார்ஜர் உடன் வரும் என தெரிகிறது. இந்த சார்ஜர் காரை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 20 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது. இந்த கான்செப்ட் மாடல் முழு சார்ஜ் செய்தால் 483 கிலோமீட்டர் வரை செல்லும்.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 2 சீரிஸ் கிரான் கூப் பிளாக் ஷேடோ எடிஷனை அறிமுகம் செய்தது.


    பி.எம்.டபிள்யூ. குழுமம் இந்திய சந்தையில் 2 சீரிஸ் கிரான் கூப் பிளாக் ஷேடோ எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 220ஐ பிளாக் ஷேடோ எடிஷன் விலை ரூ. 43.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். 

    இந்த கார் சென்னையில் உள்ள பி.எம்.டபிள்யூ. ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு பி.எம்.டபிள்யூ. ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த காரின் விலை எம் ஸ்போர்ட் லைன் வேரியண்டை விட ரூ. 1.6 லட்சம் அதிகம் ஆகும். இதன் ஆல்பைன் வைட் மற்றும் பிளாக் சபையர் நிற வேரியண்ட்கள் மொத்தத்தில் 24 யூனிட்களே விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

     பி.எம்.டபிள்யூ. 220ஐ பிளாக் ஷாடோ எடிஷன்

    பி.எம்.டபிள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப் பிளாக் ஷேடோ எடிஷன் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 189 பி.ஹெச்.பி. திறன், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ×