என் மலர்tooltip icon

    கனடா

    • கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது.
    • காயம் காரணமாக முன்னணி வீரர்கள் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

    டொரன்டோ:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்குகிறது.

    இந்நிலையில், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், நம்பர் 5 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் பிரிட்டனின் ஜாக் டிராபர் ஆகியோர் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

    காயம் காரணமாக கனடா ஓபன் தொடரில் விளையாடவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 2023ம் ஆண்டில் கனடா ஓபன் டென்னிசில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விமானப் பயிற்சியின் போது இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதின.
    • இந்த விபத்தில் இந்திய மாணவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

    டொரண்டோ:

    கனடா நாட்டின் மனிடோபாவில் உள்ள ஸ்டெயின்பாக் பகுதியில் விமானம் ஓட்டும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் கேரளாவின் திருப்பூணித்துறையைச் சேர்ந்த ஸ்ரீஹரி சுகேஷ், கனடாவைச் சேர்ந்த சவானா மே ராய்ஸ் ஆகியோர் பயிற்சி பெற்று வந்தனர்.

    நேற்று முன்தினம் இருவரும் தனித்தனியாக விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வின்னிபெக்கில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தெற்கு விமான நிலையம் அருகே விமானத்தை தரையிறக்க முயன்றனர்.

    அப்போது எதிர்பாரா விதமாக 400 மீட்டர் உயரத்தில் இருவரின் விமானங்களும் மோதி விபத்தில் சிக்கியது. உடனே தீயும் பற்றிக் கொண்டது. இதில் ஸ்ரீஹரி, சவானா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக, கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

    • இது கனடாவின் யதார்த்தம். நீங்கள் இதற்குத் தயாராக இருந்தால் கனடாவுக்கு வாருங்கள்.
    • இல்லையெனில் இந்தியா சிறந்தது என்பது புரியும் என வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    ஒட்டாவா:

    கனடாவில் சாதாரண வேலைக்கு கூட நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் வீடியோவை அங்குள்ள இந்திய பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

    இந்த வீடியோ கனடாவில் வேலை நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மையை எடுத்துக்காட்டுகிறது. அந்த வீடியோவில் அந்தப் பெண் கூறியிருப்பதாவது:

    வெளிநாடுகளில் வாழ்க்கை என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும். ஆனால் சில நேரங்களில் அது இப்படி வெறும் நீண்ட வரிசையாகக்கூட இருக்கும்.

    இது சர்வதேச மாணவர்களிடையே வேலைவாய்ப்புக்கான கடுமையான போட்டியை எடுத்துக்காட்டுகிறது. வெளிநாடுகள் ஏராளமான வேலைவாய்ப்புகளையும் சிறந்த வாழ்க்கை முறையையும் உத்தரவாதம் அளிக்கின்றன என்று இந்தியர் பலர் பொதுவான நினைக்கிறார்கள்.

    இங்குள்ள நிலைமையை பார்த்தால் உங்களுக்கே புரியும், வெளிநாடு சென்றுள்ளவர்கள் வேலைக்கு எப்படி காத்திருக்கிறார்கள் என்று தெரியும்.

    இது கனடாவின் யதார்த்தம். நீங்கள் இதற்குத் தயாராக இருந்தால், கனடாவுக்கு வாருங்கள் ,இல்லையெனில் இந்தியா சிறந்தது என்பது புரியும் என தெரிவித்துள்ளார்.

    கனடாவின் பல நகரங்களிலும் இதே நிலைமை இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


    • பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த உலகளாவிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
    • பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த நாடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

    கனடாவில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:-

    காஷ்மீரின் பகல்காம் மீதான பயங்கரவாத தாக்குதல் ஒவ்வொரு இந்தியரின் ஆன்மா, அடையாளம் மற்றும் கண்ணியத்தின் மீதான தாக்குதல் ஆகும். இது முழு மனிதகுலத்தின் மீதான தாக்குதல் ஆகும்.

    பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த உலகளாவிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையை ஊக்குவிக்க ஜி-7 தலைவர்களை வலியுறுத்துகிறேன். பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி. அதற்கு எதிராக ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்தும் அனைத்து நாடுகளுக்கும் நிற்கிறது. உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்காக, உலகம் அதன் அணுகுமுறையில் தெளிவாக இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த நாடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

    பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். நமது சொந்த விருப் பங்களின் அடிப்படையில் அனைத்து வகையான தடைகளையும் விதிக்க முயன்றாலும் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் நாடுகளுக்கு வெகுமதி அளிக்கப்படுகிறது. பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கையாள்வதில் இரட்டை நிலைப்பாடுகளை பயன்படுத்த கூடாது.

    உலகளாவிய தெற்கு நாடுகள் நிச்சயமற்ற தன்மை மற்றும் மோதல்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. உணவு, எரிபொருள், உரம் மற்றும் நிதி தொடர்பான நெருக்கடிகளால் முதலில் பாதிக்கப்படுவது அவர்கள்தான். தெற்கு நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் கவலைகளை உலக அரங்கிற்கு கொண்டு வருவதை தனது பொறுப்பாக இந்தியா கருதுகிறது. இந்த பிரச்சினையை ஜி-7 நாடுகள் இன்னும் தீவிர மாகக் கையாள வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா-கனடா உறவு மிகவும் முக்கியமானது. பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் வெற்றி அளிக்கும் ஒத்துழைப்பை அடைய இருதரப்பும் இணைந்து செயல்பட வேண்டும் என்று மோடி தெரிவித்தார்.

    மேலும் இந்தியா-கனடா இடையே தூதரக உறவை பலப்படுத்த இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர். கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்தபோது இந்தியா-கனடா இடையே யான உறவில் விரிசல் ஏற்பட்டது என்பது குறிப் பிடத்தக்கது.

    கனடா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி குரோஷியாவுக்கு புறப்பட்டு சென்றார்.

    • பயங்கரவாதத்துக்கும் ஈரான்தான் மூலகாரணமாக இருக்கிறது.
    • சந்தை நிலைத்தன்மையை பாதுகாக்க ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம்.

    ஜி7 மாநாடு கனடாவில் நடைபெற்ற நிலையில் அந்நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட கூட்டறிக்கை இறுதி நாளான நேற்று நேற்று வெளியிடப்பட்டது.

    அதில், "மத்திய கிழக்கில் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவ ஜி7 நாடுகளின் தலைவர்கள் உறுதி பூண்டுள்ளோம். இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இஸ்ரேல் பாதுகாப்புக்கு ஆதரவு அளிக்கிறோம்.

    பொதுமக்கள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில், பிராந்திய நிலையற்ற தன்மைக்கும், பயங்கரவாதத்துக்கும் ஈரான்தான் மூலகாரணமாக இருக்கிறது. எனவே, ஈரான் கையில் அணுகுண்டு போகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும். ஈரான் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டால், காசா உள்பட மத்திய கிழக்கில் பதற்றம் தணியும்.

    சர்வதேச எரிபொருள் சந்தைகளில் ஏற்படும் தாக்கத்தை தொடர்ந்து கண்காணிப்போம். சந்தை நிலைத்தன்மையை பாதுகாக்க ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம்" என்று கூறப்பட்டிருந்தது.

    • ஜி7 தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான பரிமாற்றங்கள் நடைபெற்றன.
    • பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு கனடாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.

    5 நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ள பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்க நேற்று முன்தினம் மாலையில் கனடா சென்றார்.

    கடைசி நாளான நேற்று மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள கனடா நாட்டின் கல்காரி வந்தடைந்தேன். மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்திப்பேன். முக்கிய உலகப் பிரச்சினைகள் குறித்த எனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வேன். தெற்குலக நாடுகளின் முன்னுரிமைப் பிரச்சினைகளை வலியுறுத்துவேன்" என்று பதிவிட்டிருந்தார்.

    மற்றொரு பதிவில், "உலகளாவிய முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவோம்! முக்கிய உலகளாவிய சவால்கள் மற்றும் சிறந்த கிரகத்திற்கான பகிரப்பட்ட அபிலாஷைகள் குறித்து ஜி7 தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான பரிமாற்றங்கள் நடைபெற்றன" எனத் தெரிவித்தார்.

    ஜி7 மாநாட்டிற்கு இடையே ஜெர்மன் சான்சலர், கனடா பிரதமர் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த சந்திப்புகளில் எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு கனடாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.

    • கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில், G-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
    • இது அவரது ஆறாவது G-7 உச்சி மாநாட்டுப் பங்கேற்பாகும்.

    பிரதமர் மோட சைப்பிரஸ் நாட்டின் பயணத்தை முடித்துக்கொண்டு ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடாவிற்கு புறப்பட்டார்.

    பிரதமர் நரேந்திர மோடி கனடாவில் தரையிறங்கியபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸில் நடைபெறும் 51வது ஜி7 உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.

    கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில், G-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இது அவரது ஆறாவது G-7 உச்சி மாநாட்டுப் பங்கேற்பாகும். எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் aagiyvatrபோன்ற உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

    • ஊடகங்கள், லாரன்ஸ் அந்த வெற்றியை தனது காதலிக்கு சமர்பித்ததாக புளகாங்கிதத்துடன் செய்தி வெளியிட்டன.
    • கடைசியாக அவளை வேறொரு ஆணுடன் படுக்கையில் பார்த்ததாக அவர் வழக்கில் கூறினார்.

    கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த லாரன்ஸ் கேம்பல் என்ற நபர் வாங்கிய லாட்டரி சீட்டில் 5 மில்லியன் கனடிய டாலர்களை (சுமார் 30 கோடி ரூபாய்) வென்றார்.

    அவருக்கு வங்கிக் கணக்கு கூட இல்லாததால், மேற்கு கனடா லாட்டரி கார்ப்பரேஷன் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், பணத்தை தனது காதலி மெக்கேயின் பெயரில் டெபாசிட் செய்ய ஒப்புக்கொண்டார்.

    இருவரும் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக உறவில் இருந்ததாகவும், அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் கேம்பல் கூறினார்.

    ஊடகங்கள், லாரன்ஸ் அந்த வெற்றியை தனது காதலிக்கு சமர்பித்ததாக புளகாங்கிதத்துடன் செய்தி வெளியிட்டன. அதனபின்னும் இருவரும் பொது இடங்களில் ஒன்றாகவே காணப்பட்டனர்.

    இந்நிலையில் லாட்டரி வென்ற சில நாட்களுக்குப் பிறகு, மெக்கே காணாமல் போனதாகவும், எல்லா தொடர்புகளையும் துண்டித்துவிட்டதாகவும் காம்ப்பெல் குற்றம் சாட்டியுள்ளார்.

    கடைசியாக அவளை வேறொரு ஆணுடன் படுக்கையில் பார்த்ததாக அவர்  தெரிவித்தார்.

    வேறொருவரின் பெயரில் லாட்டரி உரிமை கோருவது குறித்து தனக்கு தவறான ஆலோசனை வழங்கியதாகக் கூறி, லாட்டரி நிறுவனம் மீதும் கேம்பல் வழக்குத் தொடர்ந்தார்.

    இந்த வழக்கு விதியின் விசித்திரமான நாடகம் என்றும் கேம்ப்பெல்லின் வழக்கறிஞர் நொந்துகொண்டார். 

    • கடந்த 2023-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • சமீபத்தில் பிரதமர் மார்க் கெர்னி தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி பொறுப்பேற்றது.

    ஒட்டாவா:

    கனடாவில் அதிகரித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையால் அங்கு வீட்டுவசதி நெருக்கடி, சுகாதாரம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே கடந்த 2023-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் பிரதமர் மார்க் கெர்னி தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி பொறுப்பேற்றது. இதனையடுத்து வருகிற 2028-ம் ஆண்டில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்ற இலக்கை பிரதமர் மார்க் கெர்னி அறிவித்தார். இதற்காக விசா கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் இந்த ஆண்டு இதுவரை 30 ஆயிரத்து 640 இந்திய மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 31 சதவீதம் குறைவு ஆகும்.

    • மார்க் கார்னி அமைச்சரவையில் பாதி பேர் பெண்கள் ஆவர்.
    • கனடாவில் கேபினட் அமைச்சரான முதல் இந்து ஆவார்.

    கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், பிரதமர் மார்க் கார்னியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, மெலனி ஜோலிக்குப் பதிலாக அனிதா ஆனந்த் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

    முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையைப் போலவே, மார்க் கார்னி அமைச்சரவையில் பாதி பேர் பெண்கள் ஆவர்.

    ஏப்ரல் 28 அன்று நடைபெற்ற கனேடிய பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 22 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இவர்களில் நான்கு பேர் மார்க் கார்னியின் அமைச்சரவை உறுப்பினர்கள்.

    அனிதா ஆனந்த் கனடாவில் கேபினட் அமைச்சரான முதல் இந்து ஆவார். கனடாவின் பிறந்து வளர்ந்த அனிதா ஆனந்த் (58 வயது), 2019 இல் அரசியலில் நுழைந்தார்.

    • பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் டிராபாசி பகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தேவேந்தர் சிங்.
    • வாடகைக்கு வேறு வீடு பார்க்க செல்வதாக அங்கு தங்கியிருந்த சக மாணவிகளிடம் கூறிவிட்டு வன்ஷிகா சென்றுள்ளார்.

    பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் டிராபாசி பகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தேவேந்தர் சிங். இவரது மகள் வன்ஷிகா (வயது 21).

    கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் கனடா சென்ற வன்ஷிகா ஒட்டாவாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார்.

    இந்நிலையில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மாலை வன்ஷிகா தான் தங்கி இருந்த வீட்டில் இருந்து வெளியே சென்றார். வாடகைக்கு வேறு  வீடு பார்க்க செல்வதாக அங்கு தங்கியிருந்த சக மாணவிகளிடம் கூறிவிட்டு வன்ஷிகா சென்றுள்ளார்.

    இரவு நீண்ட நேரமாகியும் வன்ஷிகா வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் போலீசில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து, மாயமான வன்ஷிகாவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 4 நாட்களாக தேடப்பட்டு வந்த வன்ஷிகா நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    வன்ஷிகாவின் உடல் அவர் தங்கி இருந்த வீட்டிற்கு அருகே கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது. வன்ஷிகாவை யாரேனும் கொலை செய்தனரா? தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 343 தொகுதிகளை கொண்ட கனடா பாராளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது.
    • தொடக்கம் முதலே லிபரல் கட்சி முன்னிலை பெற்றது.

    கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    கடந்த மாதம் 14-ந்தேதி பிரதமராக பதவியேற்றார். இதற்கிடையே அக்டோபர் மாதம் வரை பதவிகாலம் உள்ள நிலையில் பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதாக மார்க் கார்னி அறிவித்தார்.

    மேலும் ஏப்ரல் 28-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னியும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவ்வும் களமிறங்கினர். இதற்கிடையே 343 தொகுதிகளை கொண்ட கனடா பாராளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே லிபரல் கட்சி முன்னிலை பெற்றது. அனைத்து தொகுதிகளிலும் முன்னணி நிலவரம் வெளியானது. இதில் 161 தொகுதிகளில் லிபரல் கட்சி முன்னிலையில் இருந்தது. கன்சர் வேட்டிவ் கட்சி 150 இடங்களிலும், இதர இடங்களில் பிற கட்சிகளும் முன்னிலை பெற்றன.

    இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, லிபரல் கட்சி 167 இடங்களிலும் கன்சர்வேட்டிவ் கட்சி 145 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்மீத் சிங்கின் தேசிய ஜன நாயக கட்சி இந்த தேர்தலில் 343 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அக்கட்சி 8 இடங்களில் மட்டுமே முன்னிலையில் பெற்றது. கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சி 24 இடங்களை கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×