என் மலர்
புதுச்சேரி
- சிலரை அழைத்து சடலத்தை பார்த்து அடையாளம் தெரிகிறதா? என விசாரித்துள்ளார்.
- நிரவி போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுச்சேரி:
காரைக்கால் கருக்களாச்சேரி மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர் மனோகரன்(வயது50). இவர் நேற்று காலை வழக்கம் போல், கடற்கரை ஓரம் நடைபயிற்சி மேற்கொண்டார். சவுக்கு தோப்பு அருகே, அடை யாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. தொடர்ந்து, கிராம முக்கியஸ்தர்கள் சிலரை அழைத்து சடலத்தை பார்த்து அடையாளம் தெரிகிறதா? என விசாரித்துள்ளார்.
அடையாளம் தெரியாத காரணத்தால், நிரவி காவல்நிலையத்தில் மனோகரன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவரை பற்றி அடையாளம் யாருக்கேனும் தெரிந்தால், நிரவி போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- புதுவைக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- கண்டெய்னர் லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தில் 8 டன் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
புதுச்சேரி:
புதுவையில் சமீப காலமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சென்னை ஆந்திரா-ஒடிசா மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டு புதுவையில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்று வருகிறார்கள். போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இது தொடர்பாக ஒரு சிலரை கைது செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் 2 கண்டெய்னர் லாரி மற்றும் 2 இருசக்கர வாகனத்தில் புதுவைக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதைதொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவைக்கு கண்டெய்னர் மற்றும் இரு சக்கர வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
கண்டெய்னர் லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தில் 8 டன் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.1 கோடியாகும். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காரைக்காலில் ேபாலீசாரை தாக்கிய சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இந்த குற்ற வழக்கில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே கோட்டுச்சேரி பூவம் சிவன்கோவில் தெருவைச்சேர்ந்தவர் பிரகாஷ்(36). இவர் காரைக்கால் போக்குவரத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜீப் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 29-ந் தேதி அதிகாலை 12.05 மணிக்கு, சொந்தவேலையாக காரைக்கால் பிள்ளைத்தெருவாசல் சந்தைதிடலருகே மோட்டார் சைக்களில் சென்று போது மர்ம நபர்கள் தாக்கி செல்போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்து பிரகாஷ், காரைக்கால் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்நிலையில் திருட்டுப் போன பிரகாஷின் செல்போன் சிக்னலை வைத்து, காரைக்கால் நகர் பகுதியில் நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த அத்திக்கு ரகுமான் (21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவருடன் 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த குற்ற வழக்கில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
- ஜல் ஜீவன் திட்டதின் கீழ் புதுவையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
- புதுவையில் மேம்பாலம் கட்ட ரூ.500 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
மத்திய இணை மந்திரி எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக புதுவை வந்தார்.
இன்று அவர் கட்சி அலுவலகத்தில் பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் சிறப்பு நிதியாக ரூ.1400 கோடி ரூபாய் புதுவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதுவையில் மேம்பாலம் கட்ட ரூ.500 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. புதுவை பெஸ்டு புதுவையாக மாற்ற முதல்-அமைச்சருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். புதுவை-விழுப்புரம் சாலை ரூ.92 கோடியில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். புதுவையில் முதல்கட்டமாக 1400 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் திட்டதின் கீழ் புதுவையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் எல்லையை தாண்டுவதும் அவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இது குறித்து இலங்கை அரசிடம் பேசி மீனவர்களை மீட்டு வருகிறோம்.
சேதராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் புதுவை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.
விமான நிலைய விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாலை 6 மணிக்கு காமராஜர் சாலை ஓட்டல் ஜெயராமில் பயனாளிகளோடு கலந்துரையாடுகிறார்.
- மாலை 7.30 மணிக்கு கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
புதுச்சேரி:
மத்திய மந்திரி எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக புதுவைக்கு வந்தார். இன்று மதியம் 12 மணிக்கு அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரியில் பிரதமரின் கனவு திட்டம் குறித்து கலந்துரையாடினார். இன்று மதியம் 3 மணிக்கு முத்தியால்பேட்டை சோலை நகர் இளைஞர் விடுதியில் மீனவ சமுதாய மக்களுடன் கலந்துரையாடுகிறார்.
மாலை 4.30 முதல் 5.30 மணி வரை தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் புதுவை மாநில வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மாலை 6 மணிக்கு காமராஜர் சாலை ஓட்டல் ஜெயராமில் பயனாளிகளோடு கலந்துரையாடுகிறார். மாலை 7.30 மணிக்கு கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
இரவு புதுவையில் தங்கும் மத்திய மந்திரி எல்.முருகன் நாளை காலை 10 முதல் 11 மணி வரை பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்., எம்.பி.யோடு பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
தொடர்ந்து 11.45 மணிக்கு 45 அடி சாலை மகாராஜா மகாலில் நடைபெறும் மண்டல குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து முதலியார்பேட்டை அசோக்பாபு எம்.எல்.ஏ. வீட்டில் உணவருந்தும் மத்திய மந்திரி, மாலை 4 மணிக்கு பாகூரில் பா.ஜனதா நிர்வாகிகளோடு கலந்துரையாடுகிறார். பின்னர் 6.30 மணிக்கு புதுவை ஓட்டல் சற்குருவில் வியாபாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.
மத்திய மந்திரி வருகையையொட்டி புதுவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்கப்படுவதாக, கோட்டுச்சேரி போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே உள்ள கருமாதி மண்டபம் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்கப்படுவதாக, கோட்டுச்சேரி போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு, போலீசார், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர்.
அப்போது போலீசாரை கண்டதும் கஞ்சா விற்ற வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து விசாரித்த போலீசார், காரைக்கால் நேருநகரைச்சேர்ந்த அமர்நாத் (வயது22) என்பது தெரியவந்தது. போலீசார் அமர்நாத்தை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 120 கிராம் எடைகொண்ட 12 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
- புதுவையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கடல் மேலாண்மைத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.
- கவர்னருக்கு அவரது கருத்தைக் கூற உரிமையுள்ளது. அந்த கருத்து பிடிக்கவில்லை என்றால், எதிர்க்கருத்தைக்கூறலாம்.
புதுச்சேரி:
தமிழக கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று கூறுவது தேவையற்றது என, புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
நேரு இளையோர் மையம் சார்பில், புதுவை காலாப்பட்டு பல்நோக்கு சமூக சேவை மையத்தில் அரசு சாரா அமைப்பு மேலாண்மை, ஆதார மேம்பாடு தொடர்பான மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கடல் மேலாண்மைத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. 100 படுக்கைகளுடன் போதை மறு வாழ்வு மையம் அமைய உள்ளது.
அரசு சாரா அமைப்புகள் தவறான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழக கவர்னரைத் திரும்பப் பெற வேண்டும் என சில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுப்பது தேவையற்றது.
கவர்னருக்கு அவரது கருத்தைக் கூற உரிமையுள்ளது. அந்த கருத்து பிடிக்கவில்லை என்றால், எதிர்க்கருத்தைக்கூறலாம்.
கவர்னர் ஒரு கருத்தைக் கூறிவிட்டார் என்பதற்காக, அவரைத் திரும்பப் பெற வேண்டும் என்பது சரியல்ல.
சாதாரண குடிமகன் முதல் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கனமழை எதிரொலியாக புதுச்சேரியில் வெள்ளி, சனியன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது
- புதுவையில் கடந்த இரு தினங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
புதுச்சேரி:
வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. 2 நாட்களாக மழை புதுவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று மதியம் 2 மணிக்கு மேல் விட்டு விட்டு மழை பெய்தது. சாரலாக தொடங்கிய மழை அடுத்தடுத்து வேகம் பிடித்து கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து இரவிலும் விட்டு விட்டு மழை பெய்தது. வில்லியனூர், திருபுவனை, திருக்கனூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
தொடர் மழையால் மாநிலம் முழுவதும் குளிர்ந்து காணப்படுகிறது. கடற்கரை, சுண்ணாம்பாறு படகு குழாம் என சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தொடர்ந்து மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுவை, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுதினம் என 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது என
- கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
- புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 6ம் தேதிவரை மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 6ம் தேதிவரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தொடர்மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
- காரைக்கால் கடற்கரை சாலையில் புதுச்சேரி விடுதலை நாள் இன்று கொண்டாடப்பட்டது.
- அமைச்சர் சந்திரபிரியங்கா தேசியக் கொடியை ஏற்றி போலீசார் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
புதுச்சேரி:
காரைக்கால் கடற்கரை சாலையில் புதுச்சேரி விடுதலை நாளையொட்டி, அமைச்சர் சந்திரபிரியங்கா தேசியக் கொடியை ஏற்றி போலீசார் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
- ரஷ்யா தொடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு பிரெஞ்சு நாடு ஆதரவாக உள்ளது.
- புதுவை பிரெஞ்சு துணை தூதரகத்தில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
புதுச்சேரி:
ரஷ்யா தொடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு பிரெஞ்சு நாடு ஆதரவாக உள்ளது.
புதுவை பிரெஞ்சு துணை தூதரகத்தில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
நீலம்-மஞ்சள் நிறத்தில் இடம்பெறும் உக்ரைன் தேசியக்கொடி வண்ணத்தைப் பதிந்து அதில் பிரான்ஸ் உக்ரைனுடன் இருக்கிறது என்ற வாசகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரெஞ்சு துணை தூதரகத்தில் மேலே பிரான்ஸ் தேசியக்கொடி பறக்க, கீழே உக்ரைன் கொடி வண்ணம் இட்டு அதில் தனது ஆதரவை மக்கள் அறியும் வகையில் பிரான்ஸ் அரசு பதிவு செய்துள்ளது.
- நிசாலை சீரமைக்க ஒதுக்கப் பட்ட நிதியை கையாடல் செய்து, சாலை முழுமை பெற்று விட்டதாக எழுத்து பூர்வமாக அதி காரிகள் பதில் கூறினார்கள்.
- நிதியை கையா டல் செய்த அதிகாரிகள் மீது முறையான நடவடி க்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.
புதுச்சேரி:
காரைக்காலில் போடப்ப படாத சாலைக்கு ரூ.43.27 லட்சம் செலவு கணக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் காட்டப்பட்ட தால், நிதி மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி, கிராம மக்கள் சாலையில் செடிகளை நட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் அம்மன் கோவில் பத்து பகுதியில் சுமார் 125 குடும்பங்களும், எம்.எம்.ஜி நகரில் 155 குடும்பங்களும், பறவை பேட்டில் 26 குடும்பங்களும் உள்ளன. இப்பகுதி சாலை கள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வந்ததின் பேரில், கடந்த 2018-ம் ஆண்டு, 3 பகுதியையும் ஒருங்கிணைத்து, ஆதி திரா விடர் நலத்துறை சார்பில், ரூ.43.27 லட்சம் செலவில் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்ப ட்டது.
ஆனால், 26 வீடுகள் உள்ள பறவைபேட் பகுதி யில் மட்டும் சாலை சீரமை க்கப்பட்டது. கோரிக்கை விடுத்து 4 ஆண்டுகள் ஆகியும் சாலை சீரமைக்க ப்படாததால், எம்.ஜி.ஆர். நகரைச்சேர்ந்த பூங்கொடி என்பவர், காரைக்கால் பொதுப்பணி த்துறை, நகராட்சி மற்றும் ஆதிதிரா விடர் நலத்து றைக்கு, சாலையை சீரமைப்பு குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரம் கேட்டார்.
இதில், பொதுப்பணி த்துறை, நகராட்சி தங்க ளுக்கு சம்பந்த மில்லை யென பதில் கூறிய நிலையில், ஆதிதிராவிட நலத்துறை மட்டும் 2018-ல் ரூ.43.27 லட்சத்தில் சாலை போடப்பட்டுவிட்டது என பதில் அளித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இது குறித்து புகார் மனு அளித்தனர்.
அதில் சரியான பதில் வராத காரணத்தால், கிராம மக்கள் தங்கள் பகுதி சாலையில், செடிகளை நட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின் போது, சாலை சீரமைக்க ஒதுக்கப் பட்ட நிதியை கையாடல் செய்து, சாலை முழுமை பெற்று விட்டதாக எழுத்து பூர்வமாக பதில் கூறிய அதி காரிகள், நிதியை கையா டல் செய்த அதிகாரிகள் மீது முறையான நடவடி க்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.
இல்லையேல், தொடர் போராட்டம் நடத்துவோம் என வலியுறுத்தியுள்ளனர். இச்சமவம் நடிகர் வடிவேலுவின் கிணற்றை காணோம் என்ற புகார் நகைச்சுவை ஞாபகம்படுத்துவதாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் நகைத்து வருகின்றனர்.






