என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
குவால்காம் நிறுவன பிராசஸர்களில் அபாயகரமான பாதுகாப்பு குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
உலகில் நாளுக்கு நாள் மொபைல் சாதனங்களுக்கான தேவை அதிகரித்து கொண்டு வரும் நிலையில், சைபர்செக்யூரிட்டி பிரச்சினை பொதுவான ஒன்றாக மாறிவருகிறது. தற்சமயம் குவால்காம் சிப்செட்களில் அபாயகரமான பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக செக்பாயிண்ட் தனது வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது.
புதிய பாதுகாப்பு குறைபாட்டை குவால்காம் ஆச்சிலீஸ் என அழைக்கிறது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகில் விற்பனையாகும் மொபைல் போன்களின் 40 சதவீத மாடல்களில் குவால்காம் பிராசஸர் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது. அந்த வகையில் இந்த பாதுகாப்பு குறைபாடு உலகம் முழுக்க மொபைல் சாதனங்களை பயன்படுத்துவோரில் 40 சதவீத பேரை பாதித்து இருக்கலாம்.

இந்த குறைபாடு காரணமாக மொபைல் சாதனங்களில் தீங்கு விளைவிக்கும் செயலிகள் இன்ஸ்டால் செய்யப்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. குவால்காம் சிப்களில் உள்ள 400 வரி கோட்களை யார் கண்டறிந்தாலும், ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் இதர சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்த முடியும்.
இந்த கோட்களை இயக்கும் உரிமை கொண்டவர்களால், அழைப்புகளை பதிவு செய்ய முடியும். மேலும் ஸ்மார்ட்போன்களில் இருந்து விவரங்களை திருடவும், செயலிகளை இன்ஸ்டால் செய்யவும், சாதனத்தை நிரந்திரமாக பிளாக் செய்யவும் முடியும். இந்த குறைபாடு பற்றிய விவரங்கள் ஏற்கனவே குவால்காம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு விட்டது.
அந்த வகையில் இதனை சரி செய்யும் பணிகளில் குவால்காம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. விரைவில் இதனை சரி செய்வதற்கான அப்டேட்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் மோட்டோரோலா வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக மோட்டோரோலா மோட்டோ இ7 பிளஸ் இருக்கிறது. முன்னதாக மோட்டோ இ7 விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருந்தது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த தகவலை பிரபல ஸ்மார்ட்போன் டிப்ஸ்டரான எவான் பிளாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் ஸ்னாப்டிராகன் 662 மற்றும் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்களுடன் குவால்காம் அறிமுகம் செய்தது. இந்த ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் 11 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்படுகிறது. இதன் சிபியு 8 கோர்கள் மற்றும் 1.8 ஜிகாஹெர்ட்சில் உருவாக்கப்படுகிறது. இத்துடன் அட்ரினோ 610 ஜிபியு வழங்கப்படுகிறது.
இந்த பிராசஸர் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கென உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டோ இ7 பிளஸ் மாடலில் 48 எம்பி பிரைமரி கேமரா மற்றும் இரண்டாவது சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 5000எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.
விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிரடி சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
விவோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. சிறப்பு சலுகையின் கீழ் விவோ ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவங்கிய சிறப்பு விற்பனை இன்று (ஆகஸ்ட் 16) நிறைவு பெற இருக்கிறது.

அந்த வகையில் விவோ சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபிளாக்ஷிப் விவோ எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ரூ. 49,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று விவோ எக்ஸ்50 மாடல் ரூ. 34990 மற்றும் ரூ. 37990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
விவோ நிறுவனத்தின் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடலான விவோ வி19 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் ரூ. 24990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விவோ வி17 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 17,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
4ஜி கனெக்டிவிட்டி கொண்ட புதிய நோக்கியா ஃபீச்சர் போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா போன் டிஏ-1316 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருவது எஃப்சிசி வலைதளம் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் இந்த நோக்கியா போன் 4ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரிகிறது.
இதில் எல்டிஇ பேண்ட் 5, 7 மற்றும் 38 உள்ளிட்டவற்றுக்கான வசதி, 1150 எம்ஏஹெச் பேட்டரி, 3.7 விடிசி பவர் ரேட்டிங் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த அம்சங்களை பொருத்தவரை இது பட்ஜெட் விலையில் ஃபீச்சர் போன் மாடலாக இருக்கும் என தெரிகிறது. விரைவில் இது அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

புதிய நோக்கியா மொபைலின் பின்புறம் ஒற்றை கேமரா சென்சார் மற்றும் நோக்கியா பிராண்டிங் கொண்டிருக்கிறது. இதன் வடிவத்தை வைத்தே இது ஃபீச்சர் போன் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
இதுதவிர விரைவில் நோக்கியா 5.3 மாடல் இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜிபி + 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிசில் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் பெரும்பாலான ஃபிளாக்ஷிப் மாடல்களுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்பட இருப்பதாக சாம்சங் தனது கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிவித்தது.
அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி எஸ் சீரிஸ், கேலக்ஸி நோட் மற்றும் கேலக்ஸி இசட் சீரிஸ் மாடல்களுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் தேர்வு செய்யப்பட்ட சில கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

ஆண்ட்ராய்டு அப்டேட்கள் வழங்குவது பற்றிய தகவல் சாம்சங் கஸ்டர் கேர் அதிகாரி மூலம் தெரியவந்துள்ளது. புது ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்பட இருக்கும் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்கள் பற்றிய ஆய்வு நடைபெற்று வருவதாக சாம்சங் கஸ்டமர் கேர் அதிகாரி தெரிவித்தார்.
ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் ஹார்டுவேர் அம்சங்களின் திறனை நன்கு ஆய்வு செய்த பின் ஆண்ட்ராய்டு அப்டேட் பற்றிய தகவல்கள் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஐகூ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் ஐகூ 5 எனும் பெயரில் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.
ஐகூ நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் களமிறங்கியது. இந்தியாவில் ஐகூ நிறுவனத்தின் ஐகூ 3 மற்றும் ஐகூ 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில், ஆறு மாதங்கள் கழித்து ஐகூ தனது புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஐகூ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி ஐகூ நிறுவனம் தனது ஐகூ 5 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. முந்தைய ஐகூ 3 போன்றே ஐகூ 5 மாடலிலும் தலைசிறந்த அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

இதனிடையே ஐகூ நிறுவனம் தனது ஐகூ 5 ஸ்மார்ட்போனினை ஆகஸ்ட் 17 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் புதிய ஐகூ 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களும் தெரியவந்து இருக்கிறது.
அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் வளைந்த டிஸ்ப்ளே, ஒற்றை பன்ச் ஹோல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி பற்றி எவ்வித தகவலும் இல்லை எனினும், இதில் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
ரியல்மி பிராண்டின் புதிய பட்ஜெட் ரக மாடலான சி12 ஸ்மார்ட்போன் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரியல்மி நிறுவனம் ரியல்மி சி15 மற்றும் ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் வெளியிட இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களில் ரியல்மி சி15 ஏற்கனவே இந்தோனேசியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அந்த வரிசையில் தற்சமயம் ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி சி12 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டிருக்கும் ரியல்மி சி12 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி12 சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் மினி டிராப் டிஸ்ப்ளே
- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
- ஐஎம்ஜி பவர்விஆர் ஜிபி8320 ஜிபியு
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி லென்ஸ்
- 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் மரைன் புளூ மற்றும் கோரல் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தோனேசிய சந்தையில் இதன் விலை 128 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 9588 என நிர்ணயம் செய்யப்பட்டது.
டெலிகிராம் செயலியில் விரைவில் வீடியோ காலிங் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் செயலிக்கு கடுமையான போட்டியாளராக டெலிகிராம் இருக்கிறது. டெலிகிராமில் அவ்வப்போது புதுப்பது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், இந்த செயலியில் இதுவரை வீடியோ காலிங் வசதி வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலை விரைவில் மாற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெலிகிராம் செயலியில் வாய்ஸ் கால் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில், டெலிகிராம் செயலியில் வீடியோ கால் அம்சம் இந்த ஆண்டு வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் டெலிகிராம் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ள வீடியோ கால் அம்சம் செயலியின் 7.0 வெர்ஷனில் வழங்கப்படலாம்.
உடனடியாக ஆண்ட்ராய்டு செயலியில் இந்த அம்சத்தை இயக்க விரும்பினால், மைக்ரோசாப்ட் ஆப் சென்டர் மூலம் கனெக்ட் செய்து புதிய ஏபிகே வெர்ஷன் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.
தற்போதைய தகவல்களின் படி டெலிகிராமின் வீடியோ காலிங் இன்டர்பேஸ் மற்ற செயலிகளில் உள்ளதை போன்றே காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. பின்புறம் மற்றும் முன்புற கேமராக்களை மாற்ற ஆன் ஸ்கிரீன் பட்டன் வழங்கப்படுகிறது. இதேபோன்று வீடியோ டாகிள், மியூட் மற்றும் குளோஸ் செய்யக்கோரும் பட்டன்களும் ஸ்கிரீனில் காணப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் டிஜிட்டல் சேவைகளை மிகக்குறைந்த விலையில் வழங்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் பல்வேறு டிஜிட்டல் சேவைகளை ஒன்றிணைத்து குறைந்த மாதாந்திர விலையில் வழங்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறைந்த விலை சேவைகள் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இவற்றை கொண்டு ஆப்பிள் அதிக வருவாயை ஈட்ட முடியும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி, ஆப்பிள் ஆர்கேட் மற்றும் பல்வேறு சேவைகள் வழங்கப்பட இருப்பதால், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியயும் என தெரிகிறது. பல்வேறு சேவைகளை ஒன்றிணைத்து காம்போ வடிவில் வெளியிட ஆப்பிள் திட்டமிடுகிறது.

இவற்றில் துவக்க காம்போ சலுகையில் ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் டிவி பிளஸ் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. அடுத்த சலுகையில் ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி பிளஸ் மற்றும் ஆப்பிள் ஆர்கேட் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.
இதை தொடர்ந்து வழங்கப்படும் காம்போக்களில் முதல் இரு காம்போவில் இருந்த சேவைகளுடன் ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவையும், மேலும் கூடுதல் தொகை செலுத்துவோருக்கு இவற்றுடன் கூடுதல் ஐகிளவுட் ஸ்டோரேஜ் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இவற்றின் டாப் எண்ட் காம்போவில் விர்ச்சுவல் ஃபிட்னஸ் வகுப்புகள் சேர்க்கப்பட இருப்பதாக தெரிகிறது. இவை அனைத்தும் ஆப்பிள் ஃபேமிலி ஷேரிங் சிஸ்டத்துடன் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.
ஐடெல் நிறுவனம் 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனினை இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகம் செய்து உள்ளது.
ஐடெல் நிறுவனம் இந்தியாவில் புதிய விஷன் சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் விஷன் 1 எனும் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 6.088 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், ஆக்டாகோர் யுனிசாக் எஸ்சி9863ஏ பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, விஜிஏ டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐடெல் விஷன் 1 சிறப்பம்சங்கள்
- 6.088 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் பிராசஸர்
- ஐஎம்ஜி8322 ஜிபியு
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9
- டூயல் சிம் ஸ்லாட்
- 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 0.3 எம்பி டெப்த் சென்சர்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- பின்புறம் கைரேகை சென்சார்
- 4ஜி, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐடெல் விஷன் 1 விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 18 ஆம் தேதி துவங்குகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் சென்னை வாடிக்கையாளர்களுக்கு ரூ. 399 விலையில் புதிய சலுகையை அறிவித்து உள்ளது.
சென்னை மற்றும் தமிழ்நாடு வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 399 விலையில் புதிய சலுகையை அறிவித்து உள்ளது. புதிய சலுகை 80 நாட்கள் வேலிடிட்டி கொண்டது ஆகும். இதில் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் தினமும் 250 நிமிடங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக இந்த சலுகை சென்னை மற்றும் தமிழ் நாடு வட்டாரங்களில் வழங்கப்படுகிறது. புதிய சலுகை மற்ற வட்டாரங்களில் வழங்குவது பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த இரு வட்டாரங்களில் ரூ. 399 மற்றும் ரூ. 1699 சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன. புதிய ரூ. 399 பிரீபெயிட் சலுகை ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பிஎஸ்என்எல் சென்னை ரூ. 399 மற்றும் ரூ. 1699 சலுகை நீக்கப்படுவது குறித்த அறிவிப்பை தனது வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் புதிய ரூ. 399 சலுகை பற்றிய தகவலும் இடம்பெற்று உள்ளது. புதிய பிஎஸ்என்எல் ரூ. 39 சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இந்த சலுகையில் வழங்கப்படும் தினசரி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கேபியாக குறைக்கப்பட்டு விடும். மேலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளூர் மற்றும் வெளியூர் ரோமிங்களில் தினமும் 250 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும். அதன்பின் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
டிக்டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் இந்த மாதிரி இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான பேஸ்புக்-குக்கு பிறகு டிக்டாக் செயலியை உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிக்டாக் செயலியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா கூறிவருகிறது.
சீனா, இந்த டிக்டாக் செயலி மூலம் உளவு பார்க்க முயற்சிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகிறது. எனினும், தங்கள் நிறுவன செயல்பாடுகளில் சீன அரசின் பங்கு எதுவும் இல்லை என்று டிக்டாக் நிறுவனம் தொடர்ந்து கூறி வருகிறது.

எனினும், இதை ஏற்க மறுத்த அமெரிக்கா,தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி டிக்டாக் நிறுவனத்திற்கு தடை விதிக்க முடிவு எடுத்துள்ளது. செப்டம்பர் மாதத்தின் 15 ஆம் தேதிக்குள் டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்தின் பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கும் உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார்.
தடையை தவிர்க்கும் வகையில் டிக்டாக் நிறுவனம் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மைக்ரோசாப்ட் மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களும் டிக்டாக்குடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க நிறுவனத்துடன் விற்பனை செய்ய, டிக்டாக் செய்து கொள்ளும் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு நீடித்த பலன் அளிக்கும் வகையிலும் முழு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.






