என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஏர்டெல் நிறுவனம் தனது இரண்டு பிரீபெயிட் சலுகைகளை நாடு முழுக்க வழங்குவதாக அறிவித்து உள்ளது.

    ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 129 மற்றும் ரூ. 199 பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகைகளை இந்தியாவின் அனைத்து வட்டாரங்களிலும் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த இரு சலுகைகளும் மே மாத வாக்கில் அறிவிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்பட்டு வந்தது.

    அந்த வகையில் தற்சமயம் இந்தியா முழுக்க ஏர்டெல் பயனர்கள் எந்த வட்டாரத்தில் இருந்தாலும் இரு சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இரு சலுகைகளிலும் 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகின்றன. இவற்றில் அதிவேக டேட்டா மட்டுமின்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன.

    கோப்புப்படம்

    முன்னதாக ஜூலை மாதத்தில் இந்த சலுகைகள் 16 வட்டாரங்களில் நீட்டிக்கப்பட்டது. தற்சமயம் ஏர்டெல் ரூ. 129 மற்றும் ரூ. 199 சலுகைகள் புதிய அறிவிப்பின் படி இந்தியா முழுக்க ஏர்டெல் சேவை வழங்கப்படும் 23 வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது.

    தற்போதைய அறிவிப்பு வெளியாகும் முன் இரு சலுகைகளும் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, சென்னை, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட வட்டாரங்களில் வழங்கப்படாமல் இருந்தது. 

    ஏர்டெல் ரூ. 129 சலுகையில் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 24 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 199 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டியும் 24 நாட்கள் ஆகும்.
    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெளியிட்டு உள்ளது.

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். முன்னதாக இதே ஸ்மார்ட்போன் நோக்கியா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது.

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சார்கோல், சியான் மற்றும் சேன்ட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. நோக்கியா 5.3 இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. எனினும், இம்மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

     நோக்கியா 5.3

    நோக்கியா 5.3 சிறப்பம்சங்கள்

    - 6.55 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
    - 13 எம்பி பிரைமரி கேமரா
    - 5 எம்பி இரண்டாவது சென்சார்
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 2 எம்பி மேக்ரோ சென்சார்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி
    - 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி
    - ப்ளூடூத், வைபை
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - எஃப்எம் ரேடியோ

    சர்வதேச சந்தையில் நோக்கியா 5.3 விலை 189 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 15,200 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் இந்திய விலை விவரங்கள் விரைவில் வெளியாகலாம்.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய சி12 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ. 8999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் தனது சி12 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மோனோ கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

     ரியல்மி சி12

    ரியல்மி சி12 சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் 1600x720 பிக்சல் மினி டிராப் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
    - 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
    - ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - 13 எம்பி பிரைமரி கேமரா
    - 2 எம்பி லென்ஸ்
    - 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யுஎஸ்பி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங்

    ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் பவர் புளூ மற்றும் பவர் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ரியல்மி சி12 ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்ட் 24 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் துவங்க இருக்கிறது.
    ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது ரியல்மி சி15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது.

    ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி சி15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மோனோ மற்றும் 2 எம்பி ரெட்ரோ கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     ரியல்மி சி15

    ரியல்மி சி15 சிறப்பம்சங்கள்

    - 6.52 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் 
    - 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
    - ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
    - 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி (eMMC 5.1) மெமபி 
    - 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ், PDAF
    - 8 எம்பி 119° அல்ட்ரா வைடு கேமரா, f/2.25
    - 2 எம்பி ரெட்ரோ சென்சார்
    - 2 எம்பி மோனோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - கைரேகை சென்சார் 
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யுஎஸ்பி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் சார்ஜிங்

    ரியல்மி சி15 ஸ்மார்ட்போன் பவர் புளூ மற்றும் பவர் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி துவங்குகிறது.
    சாம்சங் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களுக்கு மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்குவதாக அறிவித்துள்ளது.

    சாம்சங் நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் மாடல்களுக்கு மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்களை வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 

    முன்னதாக கேலக்ஸி அன்பேக்டு 2020 நிகழ்வில் சாம்சங் தனது கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல்களுக்கு மூன்று ஒஎஸ் அப்டேட்களை வழங்குவதாக அறிவித்து இருந்தது. அந்த வரிசையில், மூன்று ஒஎஸ் அப்டேட்களை பெற இருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சாம்சங் வெளியிட்டு உள்ளது. 

    - கேலக்ஸி எஸ் சீரிஸ்: கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி, எஸ்20 அல்ட்ரா, எஸ்20 பிளஸ் 5ஜி, எஸ்20 5ஜி, எஸ்20, எஸ்10 5ஜி, எஸ்10 பிளஸ், எஸ்10, எஸ்10இ, எஸ்10 லைட் மற்றும் எதிர்காலத்தில் வெளியாக இருக்கும் எஸ் சீரிஸ் மாடல்கள்

    கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா

    - கேலக்ஸி நோட் சீரிஸ்: கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி, நோட் 20 அல்ட்ரா, நோட் 20 5ஜி, நோட் 20, நோட் 10 பிளஸ் 5ஜி, நோட் 10 பிளஸ், நோட் 10 5ஜி, நோட் 10, நோட் 10 லைட் மற்றும் வெளியாக இருக்கும் நோட் சீரிஸ் மாடல்கள்

    - கேலக்ஸி மடிக்கக்கூடிய சாதனங்கள்: கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 5ஜி, இசட் ஃபோல்டு 2, இசட் ப்ளிப் 5ஜி, இசட் ப்ளிப், ஃபோல்டு 5ஜி, ஃபோல்டு மற்றும் எதிர்காலத்தில் வெளியாக இருக்கும் இசட் சீரிஸ் மாடல்கள்

    - கேலக்ஸி ஏ சீரிஸ்: கேலக்ஸி ஏ71 5ஜி, ஏ71, ஏ51 5ஜி, ஏ51, ஏ90 5ஜி மற்றும் எதிர்காலத்தில் வெளியாகும் ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் தேர்வு செய்யப்பட்ட மாடல்கள்

    - கேலக்ஸி டேப் எஸ்7 பிளஸ் 5ஜி, டேப் எஸ்7 பிளஸ், டேப் எஸ்7 5G3, டேப் எஸ்7, டேப் எஸ்6 5ஜி, டேப் எஸ்6, டேப் எஸ்6 லைட் மற்றும் எதிர்காலத்தில் வெளியாகும் டேப் எஸ் சீரிஸ் சாதனங்கள்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் 3 மற்றும் கேலக்ஸி பட்ஸ் லைவ் மாடல்கள் பிரீமியம் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வாட்ச் 3 மற்றும் கேலக்ஸி பட்ஸ் லைவ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இரு சாதனங்களும் கேலக்ஸி அன்பேக்டு 2020 நிகழ்வில் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கேலக்ஸி பட்ஸ் லைவ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ப்ளூடூத் 5 மற்றும் ஐபிஎக்ஸ்2 ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 29 மணி நேர பேட்டரி பேக்கப் மற்றும் கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     கேலக்ஸி வாட்ச் 3

    கேலக்ஸி வாட்ச் 3 மாடலில் எம்ஐஎல்-எஸ்டிடி-810ஜி சான்று, ஐபி68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், எல்டிஇ போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இவைதவிர இதில் டைசன் சார்ந்த வியரபிள் ஒஎஸ் 5.5 மற்றும் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் மற்றும் பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றன.

    இந்தியாவில் கேலக்ஸி வாட்ச் 3 மாடல் 41எம்எம் மற்றும் 45எம்எம் என இருவித அளவுகளில் கிடைக்கிறது. இதன் 41எம்எம் ப்ளூடூத் மற்றும் எல்டிஇ வெர்ஷன்களின் விலை முறையே ரூ. 29,990 என்றும் ரூ. 34,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதே போன்று 45 எம்எம் ப்ளூடூத் மற்றும் எல்டிஇ மாடல்கள் விலை முறையே ரூ. 32,990 என்றும் ரூ. 38,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

    கேலக்ஸி பட்ஸ் லைவ் மாடல் மிஸ்டிக் பிரான்ஸ், மிஸ்டிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 14990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மூன்று சலுகைகளை குறைந்த விலையில் அறிவித்து இருக்கிறது.

    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் சலுகை எண்ணிக்கையை நீட்டித்து உள்ளது. நொடிக்கு 50 எம்பி வேகத்தில் இணைய சேவை வழங்கும் மூன்று புதிய சலுகைகளை பிஎஸ்என்எல் அறிவித்து இருக்கிறது.

    புதிய சலுகைகள் 200 ஜிபி சிஎஸ்111, 300ஜிபி சிஎஸ்112 மற்றும் பியுஎன் 400ஜிபி என அழைக்கப்படுகிறது. இவை அதிகபட்சம் 400 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகின்றன. இவற்றின் துவக்க விலை மாதம் ரூ. 490 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பியுஎன் 400 ஜிபி சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையையும் வழங்குகிறது.

     போன் பயன்பாடு

    200ஜிபி சிஎஸ்111 சலுகையில் அதிகபட்சம் 200 ஜிபி டேட்டா ரூ. 490 விலையில் வழங்கப்படுகிறது. 300 ஜிபி சிஎஸ்112 சலுகையின் கட்டணம் ரூ. 590 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகையில் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பியுஎன் 400 ஜிபி சலுகையில் மாதம் 400 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 

    பிஎஸ்என்எல் 200 ஜிபி சிஎஸ்111 மற்றும் 300 ஜிபி சிஎஸ்112 மற்றும் பியுஎன் 400 ஜிபி சலுகைகள் தற்சமயம் பஞ்சாப் வட்டாரத்தில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. புதிய சலுகைகள் மற்ற வட்டாரங்களிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது.
     

    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக சாம்சங் கேலக்ஸி எம்01 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்சமயம் விலை குறைப்பின் படி இந்த மாடல் ரூ. 8399 விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. 

    சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்11 மாடலுடன் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

     கேலக்ஸி எம்01

    சாம்சங் கேலக்ஸி எம்01 சிறப்பம்சங்கள்

    - 5.7 இன்ச் 1520×720 பிக்சல் HD+ LCD இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
    - அட்ரினோ 505 GPU
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
    - டூயல் சிம்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 2 எம்பி இரண்டாவது டெப்த் சென்சார்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - ஃபேஸ் அன்லாக்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி

    டெலிகிராம் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ கால் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
     

    டெலிகிராம் செயலியில் வாய்ஸ் கால் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்சமயம் வீடியோ கால் அம்சம் இந்த ஆண்டு வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக டெலிகிராம் பீட்டா பதிப்பில் வீடியோ கால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதிய வீடியோ கால் அம்சம் டெலிகிராம் 7.0.0 வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டில் வீடியோ கால் மட்டுமின்றி அனிமேட்டெட் எமோஜி அம்சமும் வழங்கப்பட்டு உள்ளது. 

     டெலிகிராம்

    டெலிகிராம் செயலியில் வீடியோ கால் அம்சத்தை இயக்க காண்டாக்டின் ப்ரோபைல் பக்கம் சென்று வீடியோ கால் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். தற்சமயம் இந்த இன்டர்ஃபேஸ் எளிமையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் வீடியோவை ஆன் அல்லது ஆஃப் செய்வது மற்றும் வீடியோ மற்றும் வாய்ஸ் கால்களிடையே மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த அம்சத்தில் பிக்சர் இன் பிக்சர் மோட் வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு பயனர்கள் டெலிகிராம் சாட்களில் ஸ்கிரால் செய்வதுடன், வீடியோவை பாஸ் செய்யாமல் மல்டி-டாஸ்கிங் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. அனைத்து அழைப்புகளும் முழுமையான என்க்ரிப்ஷன் செய்யப்படுகிறது.  

    வீடியோ கால் அம்சத்துடன் புதிய அனிமேட்டெட் எமோஜி அம்சம் ஆல்ஃபா அம்சமாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளில் வழங்கப்படுகிறது. டெலிகிராம் செயலியில் க்ரூப் வீடியோ கால் செய்வதற்கான வசதி எதிர்காலத்தில் வழங்கப்படும் என தெரிகிறது.
    பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்குவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பேஸ்புக் நிறுவனம் பதில் அளித்துள்ளது.
     

    பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை பேஸ்புக் கண்டுகொள்வதில்லை என்று வெளிநாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்து இருந்தார். 

    வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கட்டுரையை மேற்கோள் காட்டிய ராகுல் காந்தி, "இந்தியாவில் வாட்ஸ்அப், பேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துகிறது. சமூகவலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.”என்று கூறியிருந்தார்.

     பேஸ்புக்

    ராகுலின் குற்றச்சாட்டு அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், பேஸ்புக் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. பேஸ்புக் கூறும் வகையில், “யார் வெறுக்கத்தக்க வகையில் பேசினாலும், அவர்களின் அரசியல் நிலைப்பாட்டையோ அல்லது கட்சி தொடர்பையோ பொருட்படுத்தாமல், ஃபேஸ்புக் பாரபட்சமற்ற தனது  கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

    இது குறித்து  பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “வன்முறையை தூண்டும் வகையிலான  வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கள் மற்றும் கருத்துக்களை நாங்கள் தடை செய்கிறோம். எந்த ஒரு நபரின் அரசியல் அந்தஸ்து அல்லது கட்சி சார்பற்று உலக அளவில், எங்களது கொள்கைகளை அமல்படுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் சேவைகள் பாஜக கட்டுப்பாட்டில் இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

    இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய தனியார் நிறுவன சமூக வலைதள சேவைகளை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

    இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அவர்கள் போலியான செய்தியை பரப்பி, அதன் வழியே வெறுப்புணர்வை தூண்டுகிறார்கள்.  தேர்தலில் அதனை பயன்படுத்தி செல்வாக்கை பெற முயற்சிக்கின்றனர்.  இறுதியாக அமெரிக்க ஊடகம், பேஸ்புக்கின் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

     வாட்ஸ்அப்

    சமூக ஊடகங்களில் வெளியிடும் செய்திகளை திரித்து கூறும் வேலைகளில் பாஜக ஈடுபடுகிறது என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு சான்றாக, அமெரிக்காவில் இருந்து வெளிவரும் தி வால் ஸ்டிரீட் ஜர்னல் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை கவனியுங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    அந்த செய்தியில், வெறுப்பு பேச்சுகளுக்கான பேஸ்புக்கின் விதிகள் இந்திய அரசியலில் வேறுபடுகிறது என்ற வகையில் தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.  ஆளும் பாஜகவின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வெறுப்பு பேச்சுகள் மற்றும் ஆட்சேபனைக்குரிய பதிவுகளை நீக்குவதில் பேஸ்புக் பாரபட்சம் காட்டுகிறது.

    இந்த விவகாரம் குறித்த விசாரணையை துவங்க கூட்டு பாராளுமன்ற கமிட்டி ஒன்றை உருவாக்க வேண்டும் என காங்கிஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய் மேகென் தெரிவித்து இருக்கிறார். 
    ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஸ் கிளாசிக் மாடல் இயர்போனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் ரியல்மி பட்சின் அடுத்த வெர்ஷன் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என கடந்த மாதம் அறிவித்து இருந்தார். அந்த வரிசையில், ரியல்மி பட்ஸ் கிளாசிக் இந்திய வெளியீடு உறுதியாகி இருக்கிறது.

    அதன்படி புதிய ரியல்மி பட்ஸ் கிளாசிக் இந்தியாவில் நாளை (ஆகஸ்ட் 18) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய இயர்போன் மட்டுமின்றி ரியல்மி நிறுவனம் ரியல்மி சி12 மற்றும் சி15 போன்ற ஸ்மார்ட்போன்களையும் இந்தியாவில் நாளை அறிமுகம் செய்ய இருக்கிறது. 

     ரியல்மி பட்ஸ் கிளாசிக்

    புதிய இயர்போன் ஹால்ஃப் இன்-இயர் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. மேலும் இந்த இயர்போன் 14.2 எம்எம் டிரைவர்களை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் அழைப்புகள் மற்றும் மியூசிக் கண்ட்ரோல்களை இயக்க ஒற்றை பட்டன் வழங்கப்படுகிறது.

    ரியல்மி பட்ஸ் கிளாசிக் மாடல் பிளாக் மற்றும் வைட் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் வடிவமைப்பு பயனர்கள் காதுகளில் கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு உள்ளது என ரியல்மி இந்தியா தெரிவித்து இருக்கிறது. 

    புதிய ரியல்மி பட்ஸ் கிளாசிக் தற்சமயம் கிடைக்கும் ரியல்மி பட்ஸ் மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ரியல்மி இந்தியா ஆன்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.
    ×