என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ரெட்மி பிராண்டு தனது புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

    சியோமி இந்தியா நிறுவனம் தனது ரெட்மி 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அறிமுகமாகும் என தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறது. புதிய ரெட்மி 9 ஏற்கனவே மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 9சி மாடலின் மற்றொரு வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.

    முன்னதாக சியோமி நிறுவனம் ரெட்மி 9 ஸ்மார்ட்போனினை ஜூன் மாத வாக்கில் ஸ்பெயின் நாட்டில் அறிமுகம் செய்தது. பின் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரெட்மி 9 பிரைம் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

     ரெட்மி 9

    புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிக ரேம் மற்றும் மெமரி கொண்டிருக்கும் என சியோமி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதன் கேமரா சற்றே மேம்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்பட இருப்பது சியோமி வலைதளத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆரஞ்சு மற்றும் புளூ நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது. முன்னதாக ரெட்மி 9சி ஸ்மார்ட்போன் சன்ரைஸ் ஆரஞ்சு மற்றும் டுவிலைட் புளூ நிறங்களில் வெளியிடப்பட்டது.
    கூகுள் நிறுவனத்தின் சில சேவைகள் உலகம் முழுக்க திடீரென முடங்கி போன நிலையில், தற்சமயம் இவை சீராக்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.

    இணைய உலகில் பிரபல தேடுபெறி நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், கூகுள் டாக்ஸ், கூகுள் டிரைவ் உள்ளிட்டவை திடீரென முடங்கி போனது. இதனால் உலகம் முழுக்க பலர் இந்த சேவைகளை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    திடீர் முடக்கம் காரணமாக ஜிமெயிலை லாக்-இன் செய்யவோ, செய்திகளை அனுப்பவோ, பெறவோ முடியவில்லை. மேலும் கூகுள் மீட் செயலியில் ரெக்கார்டிங் செய்யவோ, கூகுள் டிரைவில் ஃபைல்களை உருவாக்கவோ, கூகுள்சாட்டில் செய்திகளை அனுப்பவோ முடியாமல் போனது.

     கூகுள்

    இதனால் இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள பயனாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து கூகுள் நிறுவனத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன. மேலும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இது குறித்து நெட்டிசன்கள் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி கவலைகளை பகிர்ந்தனர். இது சர்வதேச அளவில் வைரலானது.

    இந்நிலையில், முடங்கிப்போன கூகுள் சேவைகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டு இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது. முன்னதாக பாதிக்கப்பட்ட கூகுள் சேவைகளின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
     
    சேவைகளுக்கு ஏற்பட்ட திடீர் தடங்கலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து சீரான சேவையை வழங்குவதே கூகுளின் குறிக்கோள் ஆகம். நாங்கள் தொடர்ந்து எங்களின் சேவைகளை மேம்படுத்த பணியாற்றி வருகிறோம் என கூகுள் தனது ஜிசூட் ஸ்டேட்டஸ் டேஷ்போர்டில் தெரிவித்து இருக்கிறது.
    கூகுள் நிறுவனத்தின் இ-மெயில் பிரிவான ஜிமெயில் சேவைகள் திடீர் முடக்கத்தால் இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள பயனாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
    புதுடெல்லி:

    இணையதள உலகில் பிரபலமான தேடுபெறியான கூகுள் நிறுவனத்தின் இ-மெயில் பிரிவான ஜிமெயில் நேற்று காலையில் திடீரென முடங்கியது.

    இதனால் இ-மெயிலை லாக்-இன் செய்யவோ, செய்திகளை அனுப்பவோ, பெறவோ முடியவில்லை. மேலும் கூகுள் மீட் செயலியில் ரிக்கார்டிங் செய்யவோ, கூகுள் டிரைவில் பைல்களை உருவாக்கவோ, கூகுள்சாட்டில் செய்திகளை அனுப்பவோ முடியவில்லை.

    இதனால் இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள பயனாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து கூகுள் நிறுவனத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன. மேலும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இது குறித்து நெட்டிசன்கள் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி கவலைகளை பகிர்ந்தனர். இது சர்வதேச அளவில் வைரலானது.

    முடங்கிப்போன இ-மெயில் சேவையை மீண்டும் செயல்படுத்த கூகுள் நிறுவன அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதனால் பல பகுதிகளில் பயனாளர்கள் இ-மெயில் சேவையை மீண்டும் பெற்றனர். எனினும் அனைத்து பகுதிகளிலும் இந்த சேவையை மீட்டெடுக்க கூகுள் நிறுவனம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    இதைத்தொடர்ந்து அனைத்து பயனாளர்களுக்கும் இ-மெயில் சேவை திரும்ப கிடைப்பதற்காக விரைவில் தீர்வு காணப்படும் என கூகுள் நிறுவனம் நேற்று மாலையில் அறிவித்தது.
    ஒப்போ நிறுவனத்தின் புதிய எஃப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    ஒப்போ நிறுவனத்தின் புதிய எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஒப்போ எஃப்17 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான டீசரையும் வெளியிட்டு உள்ளது. 

    புதிய எஃப்17 ப்ரோ டீசரின் படி இந்த ஸ்மார்ட்போன் 7.48 எம்எம் தடிமனகாவும், இதன் எடை 164 கிராம் என தெரியவந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் மிகவும் மெல்லிய ஸ்மார்ட்போனாக இருக்கும் என ஒப்போ தெரிவித்து இருக்கிறது.

    ஒப்போ எஃப்17 ப்ரோ

    மேலும் டீசரின் படி இந்த ஸ்மார்ட்போனில் வால்யூம் ராக்கர் பட்டன்கள், சிம் டிரே உள்ளிட்டவை இடது புறத்திலும், ஸ்மார்ட்போனின் பின்புறம் கேமரா பம்ப் வழங்கப்படுகிறது. புதிய ஒப்போ எஃப்17 ப்ரோ வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

    முன்னதாக ஒப்போ நிறுவனம் எஃப்15 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் புதிய பிளேசிங் புளூ நிறத்தில் கிடைக்கிறது. தற்சமயம் எஃப்15 வெளியாகி ஆறு மாதங்களுக்கு பின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு நடைபெற இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 150 லட்சம் கோடியை கடந்துள்ளது. அமெரிக்க பங்கு சந்தையில் இத்தகைய மைல்கல் எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் பெற்று இருக்கிறது. 

    முன்னதாக 2018 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதப்பு 1 டிரில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டது. நேற்று ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 468.65 டாலர்களாக இருந்தது. அந்த வகையில் ஆப்பிள் நிறுவன சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டது.

     ஆப்பிள்

    ஆப்பிள் நிறுவனம் துவங்கி 42 ஆண்டு ஆண்டுகள் கழித்து 1 டிரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை எட்டியது. பின் இரண்டே வருடங்களில் (23 வாரங்கள்) இதன் மதிப்பு 2 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்து இருக்கிறது.  

    சவுதி அரேபியாவை சேர்ந்த அராம்கோ எனும் கச்சா எண்ணெய் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பரில் 2 டிரில்லியன் டாலர்கள் அளவு சந்தை மதிப்பை தொட்டது. எனினும், தற்சமயம் இதன் சந்தை மதிப்பு 1.8 டிரில்லியன் ஆகவே உள்ளது. அந்த வகையில் அமெரிக்க சந்தையில் 2 டிரில்லியன் டாலர்களை எட்டும் முதல் நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்த இடத்தில் அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் சுமார் 1.6 டிரில்லியன் சந்தை மதிப்பை கொண்டுள்ளன. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சுமார் 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டியுள்ளது.
    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் முன்பதிவு செய்வோர் உடைந்த ஸ்கிரீன் ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்தால் ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்குகிறது.


    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவை சில தினங்களுக்கு முன் துவங்கியது. இந்நிலையில், முன்பதிவு செய்வோருக்கு அசத்தல் சலுகை ஒன்றை சாம்சங் அறிவித்து இருக்கிறது.

    அதன்படி கேலக்ஸி நோட் 20 அல்லது நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடல்களை வாங்குவோர் தங்களது உடைந்த ஸ்கிரீன் கொண்ட பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி பெற முடியும்.

     சாம்சங் சலுகை

    இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் முதலில் மை கேலக்ஸி செயலியில் சைன்-அப் செய்ய வேண்டும். இந்த சலுகை செயலியின் டாப் பேனரில் எக்சேன்ஜ் சலுகை விவரங்கள் வழங்கப்பட்டுள்ள. இதை பெறுவதற்கான விதிமுறைகளை அறிந்து கொள்ள விளம்பர பேனரை க்ளிக் செய்ய வேண்டும்.

    பின் விவரங்களை பதிவிட்டால், செயலி உடைந்த சாதனத்திற்கான சிறந்த விலையை கணக்கிட்டு தெரிவிக்கும். இனி வாடிக்கையாளர்கள் அருகாமையில் உள்ள சாம்சங் ஸ்டோர் சென்று உடைந்த சாதனத்தை ஒப்படைத்து புதிய ஸ்மார்ட்போனிற்கு அப்கிரேடு செய்து கொள்ளலாம். 

    இந்த சலுகை அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும் என்றும் இது ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஜியோனி நிறுவனத்தின் புதிய ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஜியோனி நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இந்நிலையில், ஜியோனி மீண்டும் இந்தியாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறது. ரீ-என்ட்ரியை உறுதிப்படுத்தும் வகையில் ஜியோனி தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

    ஜியோனி மேக்ஸ் எனும் பெயரில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இத்துடன் இதன் விலை ரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என ஜியோனி அறிவித்து உள்ளது. இந்தியாவில் ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாக இருக்கிறது.

    ஜியோனி மேக்ஸ்

    டீசர் புகைப்படத்தின் படி புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் பெரிய பெசல்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போனில் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன் வழங்கப்படலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என தெரிகிறது.
    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பட்ஸ் கிளாசிக் இயர்போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
     

    ரியல்மி பட்ஸ் கிளாசிக் மாடல் இயர்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய இயர்போன் ரியல்மி சி12 மற்றும் ரியல்மி சி15 ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய ரியல்மி பட்ஸ் கிளாசிக் இன்-லைன் ரிமோட் மற்றும் ஹால்ஃப் இன்-இயர் வடிவமைப்பு கொண்டுள்ளது. மேலும் இது பயனர்கள் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 

     ரியல்மி பட்ஸ் கிளாசிக்

    இதில் 14.2 எம்எம் ஆடியோ டிரைவர், பில்ட்-இன் ஹெச்டி மைக்ரோபோன் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்பட்டு உள்ளது. புதிய பட்ஸ் கிளாசிக் மாடலை எளிதில் மடித்து வைத்துக் கொள்ள ஸ்டிராப் ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது. இது இயர்டிப்களுக்கு மாற்றாக ஹால்ஃப் இன்-இயர் வடிவமைப்பு கொண்டுள்ளது. 

    இந்தியாவில் புதிய ரியல்மி பட்ஸ் கிளாசிக் மாடல் விலை ரூ. 399 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 24 ஆம் தேதி துவங்குகிறது. புதிய ரியல்மி பட்ஸ் கிளாசிக் சியோமி நிறுவனத்தின் எம்ஐ இயர்போன்ஸ் பேசிக் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 டம்மி இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 சீரிஸ் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன் புதிய ஐபோன் 12 சீரிஸ் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    அந்த வரிசையில், தற்சமயம் ஐபோன் 12 டம்மி புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இவை ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என்பதை தெரியப்படுத்தி உள்ளன. இந்த புகைப்படங்கள் இஸ்ரேல் நாட்டு வலைதளம் மூலம் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. 

    அதன்படி புதிய ஐபோன் 12 ஃபிளாட் எட்ஜ் டிசைன் கொண்டிருக்கின்றன. இந்த வடிவமைப்பு ஐபோன் 4 சீரிஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்று டம்மி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாவது வாடிக்கையான ஒன்று தான்.

    டம்மி யூனிட்களை ஸ்மார்ட்போன் கேஸ் உற்பத்தி செய்வோர் பயன்படுத்துகின்றனர். இவை ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டுக்கு முன்பே உற்பத்தி செய்யப்படுகின்றன. சில கேஸ் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே ஆப்பிள் ஐபோன் 12 கேஸ்களை ஆன்லைனில் விற்பனை செய்ய துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

     ஐபோன் 12 டம்மி

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐபோன் 12 பேஸ் வேரியண்ட் 5.4 இன்ச் BOE OLED சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே பயன்படுத்தும் என்றும் இது 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் அலுமினியம் பாடி, புதிய ஏ14 சிப், டூயல் கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஐபோன் 12 மேக்ஸ் வேரியண்ட்டில் 6.1 இன்ச் BOE OLED சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் அலுமினியம் பாடி, புதிய ஏ14 சிப், டூயல் கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஐபோன் 12 ப்ரோ வேரியண்ட் 6.1 இன்ச் BOE OLED சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே, 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்றுவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி, புதிய ஏ14 சிப், மூன்று கேமராக்கள் மற்றும் LiDAR சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் வேரியண்ட்டில் 6.7 இன்ச் சாம்சங் OLED சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே, 6 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்றுவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி, புதிய ஏ14 சிப், மூன்று கேமராக்கள் மற்றும் LiDAR சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    ரெட்மி பிராண்டு தனது புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.


    சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி 9 ஸ்மார்ட்போனினை ரெட்மி 9 பிரைம் எனும் பெயரில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் எஃப்ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஹீலியோ ஜி80 பிராசஸர் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    மேலும் ரெட்மி தனது புதிய ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டு உள்ளது. டீசர் விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 9 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. 

     ரெட்மி 9

    முன்னதாக ரெட்மி 9சி மற்றும் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்களை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. அந்த வகையில் இந்தியாவில் ரெட்மி 9சி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரெட்மி 9 பிராண்டிங்கில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரெட்மி 9சி ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் எல்சிடி டாட் டிராப் நாட்ச் ஸ்கிரீன், ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2020 ஐபிஎல் கிரிகெட் போட்டிகளை இலவசமாக நேரலை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


    ஜியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இணைந்து ஐபிஎல் 2020 கிரிகெட் போட்டிகளை ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சேவை தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகள் மற்றும் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சலுகைகளுடன் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

    தற்போதைய தகவல்களின் படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 401 மற்றும் ரூ. 2599 பிரீபெயிட் சலுகைகளில் இலவச ஸ்டிரீமிங் சேவையை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த இரண்டு சலுகைகளிலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்பட்டு வருகிறது.

    ஜியோ ஃபைபர்

    ஜியோ ஃபைபர் பயனர்களை பொருத்தவரை ரூ. 849 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சேவைக்கான வருடாந்திர சந்தா இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. எனினும், இதில் இலவச ஐபிஎல் ஸ்டிரீமிங் வழங்குவது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    எனினும், ஜியோ ரூ. 401 மற்றும் ரூ. 2599 என இரண்டு ஜியோ பிரீபெயிட் சலுகைகள் மற்றும் ஜியோ ஃபைபர் ரூ. 849 மற்றும் அதற்கும் அதிக விலை கொண்ட சலுகைகளுடன் இலவச ஐபிஎல் 2020 ஸ்டிரீமிங் சேவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்7 விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சாம்சங் நிறுவனம் விரைவில் தனது கேலக்ஸி டேப் எஸ்7 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர்கள் அமேசான் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன. முன்னதாக கேலக்ஸி டேப் எஸ்7 மாடல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய சாம்சங் டேப்லெட் மாடலின் சரியான வெளியீட்டு தேதி அமேசானில் தற்சமயம் குறிப்பிடப்படவில்லை. எனினும், புதிய சாதனத்திற்கான நோட்டிஃபை மி பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த டேப்லெட் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

     கேலக்ஸி டேப் எஸ்7

    சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 மாடலில் 11 இன்ச் WQXGA எல்டிபிஎஸ் டிஎஃப்டி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் 4ஜி (ஆப்ஷனல்), வைபை 6, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட், 8000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இதன் விலை 699 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 62,200) துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 879 யூரோக்கள், (இந்திய மதிப்பில் ரூ. 78,200) என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 
    ×