என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சர்பேஸ் ப்ரோ எக்ஸ் மாடலில் புது அம்சம் ஒன்றை அறிமுகம் செய்து உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சர்பேஸ் ப்ரோ எக்ஸ் மாடலினை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அறிமுக நிகழ்வில் இந்த சாதனத்தில் வழங்கப்பட இருக்கும் அம்சம் பற்றி மைக்ரோசாப்ட் அறிவித்து இருந்தது. அந்த வகையில், தற்சமயம் ஐ ப்ரோடெக்ட் எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது வீடியோ காலிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது.
இதை கொண்டு சர்பேஸ் ப்ரோ எக்ஸ் பயனர்கள் அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடியுமாம். இதன் காரணமாக பயனர்கள் கேமராவை பார்க்கும் போது அவர்களது கண்களும் அதன் சென்சார்களையே பார்த்து கொண்டிருக்கும்.

மைக்ரோசாப்ட் எஸ்கியூ1 பிராசஸரில் வழங்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு திறன் வீடியோ கால்களின் போது பயனர் திரையை பார்த்து கொண்டிருக்கும் வகையில் மாற்றியமைக்க வழி செய்கிறது. இதனால் பயனர்கள் சர்பேஸ் ப்ரோ எக்ஸ் கேமராவை நேரடியாக பார்த்துக் கொண்டிருப்பதை போன்றே தெரியும் என மைக்ரோசாப்ட் தெரிவித்து உள்ளது.
முன்னதாக இந்த அம்சம் விண்டோஸ் இன்சைடர் திட்டத்தில் இருந்த பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்சமயம் இது மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ எக்ஸ் பயன்படுத்தி வரும் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சத்தை பயனர்கள் தானாக ஆஃப் செய்து கொள்வதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.
இந்த அம்சம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ், ஸ்கைப் மற்றும் இதர சேவைகளில் சீராக இயங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய காலக்கட்டத்தில் வீடியோ கால் மிகவும் அவசியமான அம்சமாக மாறிவிட்டதால், இது பயன்தரும் அம்சமாகவே பார்க்கப்படுகிறது.
போக்கோ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே விவரங்கள் இணையத்தில் லீக் வெளியாகி இருக்கின்றன.
சியோமியின் போக்கோ பிராண்டு புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. போக்கோ குளோபல் விளம்பர பிரிவு மேலாளர் அங்கஸ் கை ஹோ என்ஜி அதிக ரிஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே பற்றிய தகவலை தனது ட்விட்டரில் பதிவிட்டு, பின் அந்த ட்வீட்டை அவர் அழித்து விட்டார்.
அந்த வகையில் புதிய போக்கோ ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதிநவீன டிஸ்ப்ளே கொண்ட புதிய போக்கோ ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நார்டு மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

தற்போதைய தகவல்களின் படி போக்கோவின் புதிய ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய போக்கோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி 5ஜி பிராசஸர், 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 64 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
போக்கோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இதுவரை புதிய ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் இதர விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கின்றன.
கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 5 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 5 ஸ்மார்ட்போன் சீரிஸ் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இத்துடன் பிக்சல் 4ஏ 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்நிலையில், புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் பற்றி கூகுள் வெளியிட்டுள்ள தகவலுடன் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டு பகுதி தெரியும் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போனின் பட்டன்கள் மற்றும் எட்ஜ்கள் மட்டும் காணப்படுகிறது.
இவை தவிர பிக்சல் 5 பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன. எனினும், பிக்சல் 5 முழு விவரங்கள் தற்சமயம் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. புதிய ரென்டர்களின் படி பிக்சல் 5 ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இத்துடன் புதிய பிக்சல் 5 ஸ்மார்ட்போனின் பின்புறம் பிரைமரி கேமரா சென்சார்கள் சதுரங்க வடிவம் கொண்ட கேமரா பம்ப்பில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த மாட்யூல் பேக் பேனலின் இடதுபுற ஓரத்தில் பொருத்தப்பட்டு உள்ளது. எனினும், இதன் சென்சார் விவரங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
மேலும் புதிய பிக்சல் 5 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய பிக்சல் 5 ஸ்மார்ட்போனில் யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்பீக்கர் கிரில்கள் ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் சிம் டிரே ஸ்லாட்கள் ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் பொருத்தப்பட்டு உள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, கடந்த சில அறிமுக நிகழ்வுகளில் தான் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை தெரிவித்து இருக்கிறார். அறிமுக நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இரண்டு ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் தான் ஈடுபட்டு இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இத்துடன் #BuildingTheFaster7 எனும் ஹேஸ்டேக்கை பதிவிட்டுள்ளார். அந்த வகையில் ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அவர் குறிப்பிடுகிறார். இவை அந்நிறுவனம் மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்த ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோ மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
ரியல்மியின் புதிய ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், தற்போதைய டீசரில் ஸ்மார்ட்போன் பச்சை நிறம் கொண்டிருக்கிறது. அந்த வகையில், புதிய ரியல்மி 7 ஸ்மார்ட்போன் மிஸ்ட் புளூ மற்றும் மிஸ்ட் வைட் நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இத்துடன் ரியல்மி 7 ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 64 ஜிபி, 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி வெர்ஷன்களிலும், ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மிரர் புளூ மற்றும் மிரர் சில்வர் நிறங்களில் கிடைக்கும் என்றும் இது 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி வெர்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி இரு ஸ்மார்ட்போன்களும் செப்டம்பர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இரு மாடல்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படலாம்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் அதிரடி அம்சங்களுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் தற்சமயம் லீக் ஆகி இருக்கின்றன.
அதன்படி புதிய கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஹெச்டி பிளஸ் AMOLED பன்ச் ஹோல் ஸ்கிரீன், 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 64 எம்பி குவாட் கேமராக்கள் மற்றும் 7000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் எஸ்எம்-எம்515எஃப் எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருவதாகவும், இதில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் 8 ஜிபி ரேம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்51 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
- 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 12 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
- 5 எம்பி டெப்த் சென்சார்
- 5 எம்பி மேக்ரோ சென்சார்
- 32 எம்பி செல்ஃபி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 7000 எம்ஏஹெச் பேட்டரி
- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் கிளாஸ்டிக் பாடி கொண்டிருக்கும் என்றும் விரைவில் இது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலையில் ஏர்டோப்ஸ் 131 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது.
இந்தியாவின் பிரபல ஆடியோ சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான போட் ஏர்டோப்ஸ் 131 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய இயர்பட்ஸ் மாடலில் இன்ஸ்டா வேக் என் பேர், ப்ளூடூத் 5.0, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங், மல்டி-பன்ஷன் பட்டன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஏர்டோப்ஸ் 131 இயர்பட் ஒவ்வொன்றும் 3.5 கிராம் எடை கொண்டது ஆகும். இவற்றினுள் 13 எம்எம் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என போட் தெரிவித்துள்ளது. இதை கொண்டு ஆடியோ, திரைப்படங்கள் மற்றும் அழைப்புகளில் சிறப்பான அனுபவத்தை பெற முடியும்.

இந்த இயர்பட்களின் சார்ஜிங் கேசை திறந்ததும் இயர்பட்கள் சாதனத்துடன் இணைந்து கொள்ளும் வசதி கொண்டிருக்கின்றன. இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரிகள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 3 மணி நேர பேக்கப் வழங்கும் திறன் கொண்டவை ஆகும். இதன் சார்ஜிங் கேசில் 650 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.
புதிய போட் ஏர்டோப்ஸ் 131 ஆக்டிவ் பிளாக், மிட்நைட் புளூ மற்றும் செர்ரி பிளாஸம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளில் அதிரடி மாற்றம் செய்திருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளில் அதிரடி மாற்றம் செய்திருக்கிறது. அதன்படி ஏர்டெல் ரூ. 448, ரூ. 499, ரூ. 599 மற்றும் ரூ. 2698 உள்ளிட்ட பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகைகளுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவினை வழங்கி வருகிறது.
தற்போதைய அப்டேட் மூலம் நான்கு ஏர்டெல் பிரீபெயிட் சலுகைகளுடன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கப்படுகிறது.
முன்னதாக ஏர்டெல் ரூ. 401 பிரீபெயிட் சலுகையுடன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா இலவசமாக வழங்கப்பட்டது. இந்த சலுகை தற்சமயம் 28 நாட்களுக்கு 30 ஜிபி டேட்டா வழங்குகிறது. ஏற்கனவே இந்த சலுகையில் 3 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா கொண்டு ஏழு மல்டிப்ளெக்ஸ் திரைப்படங்கள், பிரத்யேக ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்கள், டிஸ்னி பிளஸ் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் குழந்தைகள் விரும்பும் நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க முடியும். இந்த சேவைக்கான வருடாந்திர சந்தா ரூ. 399 ஆகும்.
ஏர்டெல் ரூ. 448 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், 28 நாட்களுக்கு 3 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 499 சலுகையில் இதே பலன்கள் வழங்கப்படுகிறது. எனினும், இது முதல் முறை ஏர்டெல் சேவையில் இணைவோருக்கானது ஆகும்.
ஏர்டெல் ரூ. 599 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 2698 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 2 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் புது நோக்கியா ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம், நோக்கியா சி3 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா சி3 மாடலில் ஆக்டாகோர் பிராசஸர், 3040 எம்ஏஹெச் பேட்டரி, 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் வழக்கமான பெசல்கள் மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் ஒரு வருடத்திற்கு ரீபிளேஸ்மென்ட் கியாரண்டியுடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், ஒரு நாள் முழுக்க நீடிக்கும் பேட்டரி, 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் சீனாவில் கிடைப்பதை போன்றே நார்டிக் புளூ மற்றும் கோல்டு சேண்ட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. தற்போதைய தகவல்களில் நோக்கியா சி3 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இடம்பெறவில்லை.
எனினும், இதன் விலை சீனாவில் நிர்ணயிக்கப்பட்டதை போன்றே 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ. 7500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 12 உற்பத்தி செலவை குறைக்க ஆப்பிள் போட்ட மாஸ்டர் பிளான் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களில் 5ஜி வசதியை வழங்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் 5ஜி வசதி வழங்கப்படும் பட்சத்தில் ஐபோன்களின் விலை வழக்கத்தை விட அதிகமாக நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆப்பிள் நிறுவனம் எதிர்கொண்டுள்ளது.
இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோனில் பயன்படுத்தும் இதர உபகரணங்களில் மாறுதலை செய்து உற்பத்தி செலவை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ, சப்-6 ஜிகாஹெர்ட்ஸ் 5ஜி தொழில்நுட்பத்திற்கான செலவு 75 முதல் 85 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 5613 முதல் ரூ. 6436) வரை இருக்கும் என கணித்துள்ளார். இத்துடன் 5ஜி மில்லிமீட்டர் வேவ் தொழில்நுட்பத்தை செயல்படுத்த 125 முதல் 135 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 9355 முதல் ரூ. 10103) வரை செலவாகும் என கணித்துள்ளார்.

இந்த செலவீனத்தை மற்ற பாகங்களில் மாற்றம் செய்து ஈடுகட்ட ஆப்பிள் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆப்பிள் நிறுவனம் பேட்டரி போர்டில் மாற்றங்களை மேறகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கென ஆப்பிள் எளிமையான மற்றும் சிறிய வடிவமைப்பை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஐபோன் 12 மாடலுக்கான போர்டுகளின் செலவீனத்தில் சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை சேமிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆப்பிள் வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இவை ஐபோன் 12 சீரிஸ் விலையை குறைக்க வழிவகுக்கும் என தெரிகிறது.
இத்துடன் ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் சார்ஜிங் அடாப்டர் வழங்காது என கூறப்படுகிறது. இதனால் புதிய ஐபோன் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் தனது ஏ53 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து உள்ளது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் இந்தோனேசியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒப்பொ ஏ53 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 90 ஹெர்ட்ஸ் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 16 எம்பி பிரைமரி கேமரா, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், கலர் ஒஎஸ் 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 மற்றும் மூன்று பிரைமரி கேமராக்கள், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒப்போ ஏ53 சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
- அட்ரினோ 610 ஜிபியு
- 4 ஜிபி LPDDR4x ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர் ஒஎஸ் 7.2
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 2 எம்பி மேக்ரோ சென்சார், 1.75μm, f/2.4
- 16 எம்பி செல்ஃபி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் எலெக்ட்ரிக் பிளாக் மற்றும் ஃபேன்சி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது.
லாவா நிறுவனம் இதய துடிப்பு, இரத்த அழுத்த சென்சார் கொண்ட மொபைல் போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
லாவா நிறுவனத்தின் புதிய ஃபீச்சர் போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. லாவா பல்ஸ் என அழைக்கப்படும் இந்த மொபைல் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்த சென்சார் கொண்ட உலகின் முதல் மொபைல் போன் என லாவா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்த மொபைலில் வழங்கப்பட்டுள்ள பல்ஸ் ஸ்கேனரில் கைவிரல் நுனியை வைத்தாலே இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு விவரங்களை திரையில் காண்பிக்கப்படும். இந்த விவரங்களை மொபைல் போனில் சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி மற்றும் குறுந்தகவல் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
சந்தையில் தற்சமயம் கிடைக்கும் எலெக்டிரானிக் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை டிராக் செய்யும் டிஜிட்டல் சாதனங்களுக்கு இணையாக லாவா பல்ஸ் சென்சார் செயல்படும் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. எனினும், இது மருத்துவ சாதனத்திற்கு மாற்றான சாதனம் இல்லை என லாவா தெரிவிக்கவில்லை.

லாவா பல்ஸ் சிறப்பம்சங்கள்
- 2.4 இன்ச் 240x320 பிக்சல் QVGA 65K கலர் டிஸ்ப்ளே
- 32 எம்பி ரேம்
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- பாலிகார்போனைட் பாடி, மிலிட்டரி கிரேடு சான்று
- டூயல் சிம் ஸ்லாட்
- 2ஜி ஜிஎஸ்எம் 900/1800மெகாஹெர்ட்ஸ், ப்ளூடூத்
- மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- கேமரா மற்றும் வீடியோ பதிவு செய்யும் வசதி
- நம்பர் டாக்கர், போட்டோ ஐகான்கள்
- வயர்லெஸ் எஃப்எம்
- ஆட்டோ கால் ரெக்கார்டிங்
- ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட ஏழு மொழிகளில் இயக்கும் வசதி
- 1800 எம்ஏஹெச் பேட்டரி
லாவா பல்ஸ் மொபைல் போன் ரோஸ் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.
ஏர்டெல் நிறுவனம் தனது டிஜிட்டல் டிவி வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்டிரீம் பிரீமியம் சந்தாவினை இலவசமாக வழங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏர்டெல் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட ஏர்டெல் டிஜிட்டல் டிவி சந்தாதாரர்களுக்கு ஒரு வருடத்திற்கான எக்ஸ்டிரீம் பிரீமியம் சந்தாவை இலவசமாக வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் குறுந்தகவல் அனுப்பி தகவல் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
எக்ஸ்டிரீம் சந்தா இலவசமாக வழங்கப்பட்ட பயனர்கள் சிலர் இந்த சலுகை பற்றிய தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். ஏர்டெல் சார்பில் அனுப்பப்பட்டுள்ள குறுந்தகவலில் எக்ஸ்டிரீம் பிரீமியம் சந்தா 365 நாட்களுக்கு ஆக்டிவேட் செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஏர்டெல் எக்ஸ்டிரீம் சந்தாவில் பயனர்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஏர்டெல் எக்ஸ்டிரீம் ஸ்மார்ட் ஸ்டிக் மூலம் பல்வேறு தரவுகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகை எக்ஸ்டிரீம் பாக்ஸ் அல்லது ஸ்மார்ட் ஸ்டிக் இல்லாத பயனர்களுக்கும் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் ஏர்டெல் நிறுவனம் புதிய எக்ஸ்டிரீம் ஃபைபர் ஹோம் பிராட்பேண்ட் சேவையை பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஆயிரம் ஜிபி இலவச டேட்டா வழங்குவதாக அறிவித்தது. இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட எக்ஸ்டிரீம் ஃபைபர் சலுகைகளில் குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இலவச டேட்டா அன்லிமிட்டெட் டேட்டா வழங்கும் சலுகைகள் மட்டுமின்றி பிரீபெயிட் சலுகைகளிலும் வழங்கப்படுகிறது. மேலும் ஆயிரம் ஜிபி இலவச டேட்டா ஆறு மாதம் வேலிடிட்டி கொண்டது ஆகும். இதன் சலுகை விலை ரூ. 799 முதல் துவங்குகிறது. இதில் 12 மாதங்களுக்கு அமேசான் பிரைம் சந்தா, ஏர்டெல் எக்ஸ்டிரீம் மற்றும் விண்க் மியூசிக் சேவை வழங்கப்படுகிறது.






