என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
மோட்டோரோலா நிறுவனத்தின் ரேசர் 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வீடியோ இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
மோட்டோரோலா ரேசர் 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் 360 டிகிரி வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு விவரங்கள் தெரியவந்துள்ளது.
புதிய தலைமுறை மோட்டோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சற்றே பெரியதாக காட்சியளிக்கிறது. எனினும், இது பார்க்க முந்தைய ரேசர் போன் போன்றே தெரிகிறது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 5ஜி அம்சம் மிகப்பெரும் அப்கிரேடாக இருக்கும் என கூறப்படுகிறது.

வீடியோவின் படி புதிய ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனின் நாட்ச்கள் மென்மையாக்கப்பட்டு கைரேகை சென்சார் நீக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மோட்டோரோலா ரேசர் 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலு இந்த மாடலில் 6.2 இன்ச் ஃபிளெக்சிபில் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முந்தைய ரேசர் மாடலில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 5ஜி ரேசர் போனின் சிப்செட் புது வடிவமைப்பு மற்றும் கேமரா மாட்யூல் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், டூயல் சிம் வசதி, அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என தெரிகிறது. புகைப்படங்களை எடுக்க 5ஜி ரேசர் போனில் 48 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி இரண்டாவது கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 499 மற்றும் ரூ. 777 சலுகைகளுடன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவினை இலவசமாக வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 499 கிரிகெட் சலுகை மற்றும் ரூ. 777 காலாண்டு சலுகைகளுடன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவினை வழங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜியோ ரூ. 499 மற்றும் ரூ. 777 இரண்டு சலுகைகளிலும் தினமும் 1.5 ஜிபி டேட்டா, ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 777 சலுகையில் மட்டும் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் கூடுதலாக வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ. 499 கிரிகெட் சலுகையில் தினமும் 1.5 ஜிபி என மொத்தம் 84 ஜிபி டேட்டா 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோ ரூ.777 சலுகையில் தினமும் 1.5 ஜிபி மற்றும் 5 ஜிபி கூடுதல் டேட்டா என மொத்தம் 131 ஜிபி டேட்டா, ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஜியோ அல்லாத எண்களுக்கு 3 ஆயிரம் நிமிடங்கள் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இரு சலுகைகளில் ரீசார்ஜ் செய்யும் போது பயனர்களுக்கு ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி சந்தா வழங்கப்படுகிறது. எனினும், இதை பயன்படுத்த ஏதேனும் சலுகையை வருடம் முழுக்க ரீசார்ஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

நோக்கியா 5.3 சிறப்பம்சங்கள்:
- 6.55 இன்ச் 720x1600 பிக்சல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
- அட்ரினோ 610 ஜிபியு
- 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்பி வைடு ஆங்கில் கேமரா
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 2 எம்பி மேக்ரோ சென்சார்
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- யுஎஸ்பி டைப்-சி
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் சியான், சேண்ட் மற்றும் சார்கோல் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்குகிறது.
இந்தியாவில் புது நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹெச்எம்டி குளபோல் நிறுவனம் இந்திய சந்தையில் நோக்கியா சி3 ஸ்மார்ட்போனினை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நோக்கியா சி3 மாடலில் 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், ஆக்டாகோர் யுனிசாக் பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் வழக்கமான பெசல்கள் மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 3040 எம்ஏஹெச் பேட்டரி, பக்கவாட்டில் எக்ஸ்பிரஸ் பட்டன் வழங்கப்பட்டு உள்ளது.

நோக்கியா சி3 சிறப்பம்சங்கள்
- 5.99 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் பிராசஸர்
- ஐஎம்ஜி8322 ஜிபியு
- 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- 3040 எம்ஏஹெச் பேட்டரி
நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் நார்டிக் புளூ மற்றும் சேண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7499 என்றும் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை செப்டம்பர் 17 ஆம் தேதி துவங்குகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2020 ஐபோன்எஸ்இ மாடல் உற்பத்தி இந்தியாவில் துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ2020 மாடல் உற்பத்தி பணிகளை இந்தியாவில் துவங்கி உள்ளது. இதன் உற்பத்தி பணிகள் பெங்களூருவில் அமைந்துள்ள விஸ்ட்ரன் ஆலையில் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ2020 மாடலை ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
முன்னதாக சென்னைக்கு அருகில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் 11 மாடலுக்கான உற்பத்தி பணிகளை துவங்கியது. தற்சமயம் இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன் எஸ்இ2020 மாடல் ஒரு மாத காலத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன் 11 விலை குறைக்கப்படாததால், இங்கு உற்பத்தி செய்யப்பட இருக்கும் ஐபோன் எஸ்இ மாடலின் விலை உடனடியாக குறைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் பட்சத்தில் ஐபோன்களுக்கான இறக்குமதி வரியை ஆப்பிள் சேமிக்க முடியும்.
ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எக்ஸ்எஸ், ஐபோன் எஸ்இ (2016) மற்றும் ஐபோன் 7 போன்ற மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்து இருக்கிறது. முந்தைய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11 ப்ரோ மாடல்களை சென்னை அருகில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தி செய்ய இருப்பதாக தெரிவிக்கப்படு இருந்தது.
ஸ்மார்ட்போன் சந்தையில் வெளியாகும் புது மாடல்களில் பொதுவாக வழங்கப்படும் அதிநவீன அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
நம் வாழ்க்கை முறையில் அதிகளவில் எல்லா தரப்பு மக்களுக்கும் தேவைப்படும் ஒரு முக்கிய உபகரணம் மொபைல் போன். பிறருடன் பேசுவது மட்டுமின்றி பொழுதுபோக்கு, கல்வி, வங்கிச்சேவை, நிதி நிர்வாகம், புகைப்படம், வீடியோ எடுப்பது என்று மொபைல் மூலமே பல வேலைகளை செய்ய நாம் பழகிவிட்டோம்.
எனவே நமக்கு அவ்வப்போது சந்தைக்கு வரும் புதிய தொழில்நுட்பங்களை கொண்ட மொபைல்போன்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் தற்போதைய புதுவரவு போன்களில் வழங்கப்படும் அம்சங்களைப் பற்றி பார்ப்போம்.
சமீபத்தில் வெளிவரும் போன்களில் மூன்று சென்சார் கேமரா முக்கிய இடம் வகிக்கின்றது. இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகத்துல்லியமாக இருப்பதால் இந்த கேமரா உள்ள போன் வைத்திருப்பவர்கள் எல்லாருமே புகைப்பட கலைஞர்கள் போல அசத்துகின்றனர்.

தற்போது பெருகி வரும் பல வகையான செயலிகளினால் நம்முடைய பாதுகாப்பிற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது உண்மையே. இதை மனதில் கொண்டு இந்த ஆண்டு வெளிவந்துள்ள எல்லா போன்களிலுமே, போனை பயன்படுத்துபவரின் தகவல்கள் திருடு போகாமல் காப்பாற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளன.
புதிய போன்கள் பெரும்பாலானவற்றில் வாட்டர் ப்ரூப் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அதிக விலை போன்களில் இந்த அம்சம் நிறைவாக கொடுக்கப்பட்டுள்ளது. போன்களில் உள்ள சார்ஜ் செய்யும் போர்ட், ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் க்ரில் போன்றவைகளில் தண்ணீர் புகாத வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
தற்போதைய போன்களில் அதிதுல்லிய கேமராக்கள், அதிவேக கிராபிக் சிப்செட் மற்றும் அதிவேக பிராசஸர் இருக்கிறது. இத்துடன் மோஷன் ட்ராக்கிங், 3டி டெப்த் ப்ரொஜக்ஷன் மற்றும் முகத்தை அடையாளம் காணும் ஸ்கேனிங் சிஸ்டம் போன்ற அம்சங்களும் சேர்க்கப்படுவதால் ‘ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) சாப்ட்வேர்’ வெற்றிகரமாக இயகக முடிகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனினை சற்றே குறைந்த விலையில் கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் பிரீமியம் ஃபிளாக்ஷிப் மாடலில் இருந்ததை விட சற்றே குறைவான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த வரிசையில் ஒன்பிளஸ் நிறுவனம் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மாடல் தவிர ஒன்பிளஸ் நிறுவனம் பல்வேறு புதிய மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 அல்லது குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பட்ஜெட் ரக ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத இறுதியில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் உருவாக்கி வரும் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பிராசஸர் தவிர வேறு எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
சியோமி நிறுவனத்தின் புதிய எம்ஐ டிவி ஹாரிசான் எடிஷன் மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது எம்ஐ டிவி ஹாரிசான் எடிஷன் மாடலை செப்டம்பர் 7 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இது சியோமி நிறுவனத்தின் முதல் பிரீமியம் டிவி மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி நிறுவன வலைதத்தில் புதிய ஸ்மார்ட் டிவி அம்சங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த டிவி சியோமியின் பேட்ச்வால் மற்றும் ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய டிவி மாடல் வெளியாகி சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், சியோமி புதிய டிவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய எம்ஐ டிவி ஹாரிசான் எடிஷன் பண்டிகை கால விற்பனையை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. டீசரில் புதிய ஸ்மார்ட் டிவி வெளியீட்டு தேதி மற்றும் சில அம்சங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த டிவி பேட்ச்வால் லான்ச்சரில் 5 ஆயிரம் செயலிகளை இயக்குவதற்கான வசதி வழங்கப்படுகிறது.
இத்துடன் புதிய எம்ஐ டிவி மாடலில் குவிக் வேக் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இதை கொண்டு டிவியை ஸ்டான்ட்பை மோடில் இருந்து வேகமாக ஸ்விட்ச் ஆன் செய்ய முடியும். முன்னதாக சியோமி டிவி மாடல்களில் குவிக் வேக் அம்சம் இல்லாததை பலர் குற்றச்சாட்டாக தெரிவித்து வந்தனர்.
சாம்சங் நிறுவனம் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புது விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்கி வருவதாக இணையத்தில் தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் பிரீமியம் மிட்-ரேன்ஜ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சாதனம் SM-F415 எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதும், இது வைபை அலையன்ஸ் சான்று பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய தகவல்களின் படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் இது கிரீன், புளூ மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
புதிய சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை 900 டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் ரூ. 67 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் விற்பனையாகும் கேலக்ஸி இசட் ப்ளிப் மாடல் விலை 1379 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி9 பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் மேக்ஸ் விஷன் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்கள், பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 20 வாட் டர்போபவர் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

மோட்டோ ஜி9 சிறப்பம்சங்கள்:
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 2 எம்பி டெப்த் கேமரா
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 20 வாட் டர்போபவர் சார்ஜிங்
புதிய மோட்டோ ஜி9 ஸ்மார்ட்போன் ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் சஃபையர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் டிக்டாக் நிறுவனத்திற்கு தடை விதிக்கும் டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க டிக்டாக் முடிவு செய்துள்ளது.
டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மாத துவக்கத்தில் கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தவுடன் அமெரிக்காவை சேர்ந்த எந்த நிறுவனமும் டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுடன் எவ்வித பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக டிக்டாக் தெரிவித்து இருந்தது. மேலும் இதனை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக தெரிவித்தது. அந்தவரிசையில் தற்சமயம் டிரம்ப் உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக டிக்டாக் தெரிவித்து இருக்கிறது.
இது தொடர்பான பணிகளை இந்த வாரத்திலேயே துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சீனாவின் வீசாட் நிறுவனம் அதிபர் டிரம்ப்பின் தடை உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருந்தன.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 பிளஸ் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 மற்றும் நோட் 20 அல்ட்ரா சீரிஸ் ஃபிளாக்ஷிப் மாடல்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்சமயம் சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் மாடல்களை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறது.
முன்னதாக கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா விவரங்கள் இணையத்தில் லீக் ஆன நிலையில், கேலக்ஸி எஸ்21 பிளஸ் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய சாம்சங் எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 60 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் எஸ்எம்-ஜி996 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி இபி-பிஜி996ஏபிவை எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 1000 / குவால்காம் ஸ்னாப்டிராகன் 875 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






