என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ரெட்மியின் புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 9 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் 6.53 இன்த் ஹெச்டி பிளஸ் டாட் டிராப் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

ரெட்மி 9 சிறப்பம்சங்கள்:
- 6.53 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 ஐபிஎஸ் எல்சிடி டாட் டிராப் ஸ்கிரீன்
- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
- ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
- 4 ஜிபி LPDDR4x ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
- 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- ஸ்பிலாஷ் ப்ரூஃப்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஸ்பார்டி ஆரஞ்சு, ஸ்கை புளூ மற்றும் கார்பன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8999 என்றும், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஏர்டெல் நிறுவன சேவைகளுக்கான கட்டணம் விரைவில் உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் பாரதி மிட்டல் இந்தியாவில் டேட்டா சலுகை கட்டணம் மிகக்குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் விரைவில் விலை உயர்வை எதிர்கொள்ள வாடிக்கையாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார்.
தற்சமயம் பயனர்களுக்கு ரூ. 160 கட்டணத்தில் 16 ஜிபி வழங்கப்படுகிறது. உண்மையில், இந்த விலைக்கு 1.6 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட வேண்டும். அமெரிக்கா அல்லது ஐரோப்பா போன்று இந்தியாவில் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருப்பது போன்று ரூ. 3700 முதல் ரூ. 4400 வரை கட்டணம் வசூலிக்கும் எண்ணில்லை, எனினும், ரூ. 160 விலையில் 16 ஜிபி டேட்டா வழங்குவது கட்டுப்படியாகவில்லை என மிட்டல் தெரிவித்து இருக்கிறார். தற்போதைய சூழலில் ஏர்டெல் 1 ஜிபி டேட்டாவுக்கு ரூ. 8 வசூலித்து வருகிறது.
இந்த துறையில் சீரான வியாபாரத்தை மேற்கொள்ள பயனர் ஒருவரிடம் இருந்து மாதம் ரூ. 300 வருவாய் கிடைக்க வேண்டும். எனினும், தற்சமயம் இது மாதத்திற்கு ரூ. 157 ஆக இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு தனது கே20 ப்ரோ மாடல் விலை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு ரெட்மி கே20 ப்ரோ 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட்டிற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த விலை குறைப்பு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை உயர்த்தப்பட்டது. பின் கடந்த மாதமும் இதன் விலை குறுகிய காலக்கட்டத்திற்கு குறைக்கப்பட்டது.
புதிய விலை குறைப்பின் படி ரெட்மி கே20 ப்ரோ 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 22,999 என மாறி இருக்கிறது. முன்னதாக இதே வேரியண்ட் ரூ. 26,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் கார்பன் பிளாக், ஃபிளேம் ரெட், பியல் புளூ மற்றும் கிளேசியர் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

ரெட்மி கே20 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 AMOLED HDR டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. LPDDR4X ரேம், 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- 8 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. (UFS 2.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் MIUI 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. சோனி IMX586 சென்சார் பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, 0.8μm பிக்சல், 6P லென்ஸ், லேசர் AF, EIS
- 8 எம்.பி. 1/4″ OV8856 டெலிபோட்டோ லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.4
- 13 எம்.பி. 1/3″ சாம்சங் S5K3L6 124.8° அல்ட்ரா-வைடு சென்சார், 1.12μm பிக்சல், f/2.4
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2, 0.8μm பிக்சல்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i கோட்டிங்)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 27 வாட் சோனிக் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் 94 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.
பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் மே மாதத்தில் 56.11 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து இருக்கின்றன. இதே காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக 36.577 லட்சம் வாடிக்கையாளற்களை சேர்த்து இருக்கிறது.
ஜியோ மட்டுமின்றி பிஎஸ்என்எல் நிறுவனமும் சுமார் 2 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து இருக்கிறது. மே மாத இறுதி வரை டெலிகாம் சந்தையில் வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் எண்ணித்தை 114.952 கோடிகளில் இருந்து 114.391 கோடிகளாக சரிந்துள்ளது என மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்து உள்ளது.

டிராய் அறிக்கையின் படி பாரதி ஏர்டெல் நிறுவனம் 47.428 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா 47.263 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. அந்த வகையில் இரு நிறுவனங்களும் கூட்டாக சுமார் 94 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.
இது ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது அதிகம் ஆகும். ஏப்ரலில் இரு நிறுவனங்களும் கூட்டாக 75 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து இருந்தன. இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ களமிறங்கியது முதல் முன்னணி நிறுவனங்கள் தொடர் சரிவை எதிர்கொண்டு வருகின்றன.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
டீசர்களை தொடர்ந்து ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. டீசரின்படி ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 65 வாட் சூப்பர் டார்ட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் 2-ஆம் தலைமுறை குவாட் கேமரா செட்டப் வழங்கப்பட இருப்பதையும் ரியல்மி உறுதியாக தெரிவித்து இருக்கிறது. ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மிகவேகமாக சார்ஜ் ஆகும் மாடல்களில் ஒன்றாக இருக்கும். இது பேட்டரியை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 32 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது.

ரியல்மி 7 சீரிஸ் மாடல்களுக்கு பிளைன்ட் ஆர்டர் விற்பனை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 27 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பயனர்கள் ரூ. 1000 செலுத்தி புதிய ஸ்மார்ட்போனை நிச்சயம் வாங்கிக் கொள்ளும் உறுதியை பெற முடியும்.
பின் ஸ்மார்ட்போனிற்கான மீதித் தொகையை செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் செலுத்தலாம். இந்த விற்பனையில் கலந்து கொள்வோர் ரியல்மி ஏஐஒடி சாதனங்களை வாங்கும் போது ரூ. 100 தள்ளுபடி பெற முடியும். ரியல்மி 7 ப்ரோ வாங்குவோருக்கு ரூ. 500 முதல் ரூ. 1000 வரை தள்ளுபடி கூப்பன் வழங்கப்படுகிறது.
ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் ப்ளிப்கார்ட் மொபைல் பொனாசா சேல் எனும் சிறப்பு விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையில் ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 மற்றும் ஐபோன் எக்ஸ்ஆர் போன்ற மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் நடத்தும் சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 28 ஆம் தேதியுடன் நிறைவு பெற இருக்கிறது.
ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி, ஐகூ 3, ஒப்போ ரெனோ 2 மற்றும் ஒப்போ ரெனோ 10எக்ஸ் ஜூம் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தள்ளுபடி மட்டுமின்றி பிரீபெயிட் மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளை ப்ளிப்கார்ட் வழங்கி வருகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட மொபைல்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எக்சேன்ஜ் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

சிறப்பு விற்பனையின் போது புதிய ஸ்மா்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. சலுகைகளை பொருத்தவரை ஐபோன் எஸ்இ 2020 (64 ஜிபி) மாடல் விலை ரூ. 42,500 இல் இருந்து ரூ. 35999 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோன்று ஐபோன் எக்ஸ்ஆர் மாடலின் விலையில் ரூ. 6501 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 45999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி மற்றும் கூடுதல் எக்சேன்ஜ் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஐபோன் மட்டுமின்றி ரெட்மி கே20 சீரிஸ், ஒப்போ ரெனோ 2எஃப், ஒப்போ ஏ5எஸ், ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி, ஐகூ 3, ஒப்போ ஏ12 மற்றும் விவோ வி50 போன்ற மாடல்களுக்கும் சிறப்பு எக்சேன்ஜ் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நோக்கியா நிறுவனம் மிகக்குறைந்த விலையில் இரண்டு நோக்கியா போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 125 மற்றும் நோக்கியா 150 என இரண்டு புதிய மொபைல் போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இரு மாடல்களிலும் 2.4 இன்ச் QVGA ஸ்கிரீன், நீண்ட வடிவமைப்பு, பெரிய பட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் கிளாசிக் கேமான ஸ்னேக், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, பாலிகார்பனைட் பாடி கொண்டுள்ளது. நோக்கியா 150 மாடலில் எம்பி3 பிளேயர் மற்றும் பின்புற கேமரா மற்றும் ஃபிளாஷ் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
நோக்கியா 125 டூயல் சிம் சிறப்பம்சங்கள்
- 2.4 இன்ச் 240x320 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
- மீடியாடெக் பிராசஸர்
- நோக்கியா சீரிஸ் 30+ ஒஎஸ்
- 4 எம்பி இன்டெர்னல் மெமரி
- விஜிஏ கேமரா, ஃபிளாஷ்
- வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ
- டூயல் சிம்
- மைக்ரோ யுஎஸ்பி
- 3.5 எம்எம் ஏவி கனெக்டர்
- 1020 எம்ஏஹெச் பேட்டரி

நோக்கியா 150 டூயல் சிம் சிறப்பம்சங்கள்
- 2.4 இன்ச் 240x320 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
- மீடியாடெக் பிராசஸர்
- நோக்கியா சீரிஸ் 30+ ஒஎஸ்
- 4 எம்பி இன்டெர்னல் மெமரி
- விஜிஏ கேமரா, ஃபிளாஷ்
- வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ
- டூயல் சிம்
- மைக்ரோ யுஎஸ்பி
- 3.5 எம்எம் ஏவி கனெக்டர்
- 1020 எம்ஏஹெச் பேட்டரி
நோக்கியா 125 ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் பவுடர் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. நோக்கியா 150 மாடல் ரெட், சியான் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் புதிதாக இணையவழி சேவை ஒன்றை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் இணையவழி தொலைகாட்சி சேவை (இண்டர்நெட் ப்ரோடோகால் டெலிவிஷன்-ஐபிடிவி) துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புதிய ஐபிடிவி சேவை முதற்கட்டமாக கேரளா மாநிலத்தில் துவங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சேவை இரண்டு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு அதன்பின் வணிக ரீதியில் வெளியிடப்படும் என தெரிகிறது.
கேரளா மாநிலத்தின் எர்னாகுளம், அலப்பி மற்றும் த்ரிசூர் என மூன்று வட்டாரங்களில் வழங்கப்பட இருக்கிறது. ஐபிடிவி சேவைக்கான முதற்கட்ட சோதனை ஆகஸ்ட் 27 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 31 வரை நடைபெற இருக்கிறது.
பிஎஸ்என்எல் ஐபிடிவி சேவைக்கான சோதனையில் கலந்து கொள்ள செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் விருப்பம் தெரிவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு அனைத்து சேனல்களும் இலவசமாக வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜியோனி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
ஜியோனி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ஜியோனி மேக்ஸ் சிறப்பம்சங்கள்
- 6.1 இன்ச் 1560×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் யுனிசாக் பிராசஸர்
- ஐஎம்ஜி8322 ஜிபியு
- 2 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- போக்கெ லென்ஸ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போன் பிளாக், ரெட் மற்றும் ராயல் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 5999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்7 சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி டேப்லெட்களான- கேலக்ஸி டேப் எஸ்7 மற்றும் டேப் எஸ்7 பிளஸ் சாதனங்களை அறிமுகம் செய்தது. கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா முன்பதிவு துவங்கிய நிலையில், தற்சமயம் கேலக்ஸி டேப் எஸ்7 சீரிஸ் முன்பதிவு துவங்கி உள்ளது.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 வைபை 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 55,999 என்றும், எஸ்7 4ஜி வேரியண்ட் 128 ஜிபி மாடல் விலை ரூ. 63,999 என்றும் கேலக்ஸி டேப் எஸ்7 பிளஸ் 4ஜி வேரியண்ட் விலை ரூ. 79,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய சாம்சங் டேப்லெட்கள் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்கள், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி டேப் எஸ்7 பிளஸ் வைபை வேரியண்ட் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 மாடலில் 11 இன்ச் WQXGA எல்டிபிஎஸ் டிஎஃப்டி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி (ஆப்ஷனல்), வைபை 6, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட், 8000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் விவோ வை20ஐ மற்றும் வை20 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
விவோ நிறுவனம் இந்தியாவில் வை20 மற்றும் வை20ஐ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றில் 6.51 இன்ச் ஹெச்டி பிளஸ் ஹாலோ ஐவியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்ரம் வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ வை20 மற்றும் வை20ஐ சிறப்பம்சங்கள்:
- 6.51 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
- அட்ரினோ 610 ஜிபியு
- 3 ஜிபி (வை20ஐ) / 4 ஜிபி (வை20) ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10.5
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விவோ வை20ஐ ஸ்மார்ட்போன் டான் வைட் மற்றும் நெபுளா புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்குகிறது. விவோ வை20 ஸ்மார்ட்போன் ஆப்சிடியன் பிளாக் மற்றும் டான் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய தகவல்களின் படி புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனில் 7000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா சென்சார், AMOLED டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் டிசைன் மற்றும் சாம்சங்கின் புதிய ஒன் யுஐ வழங்கப்படும் என தெரிகிறது. இதில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் வழங்கப்படுகிறது.

இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை எல்டிஇ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், என்எஃப்சி போன்ற வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் 7000 எம்ஏஹெச் பேட்டரியுடன், 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
புதிய கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதன் வெளியீடு செப்டம்பர் மாத இரண்டாவது வாரத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விலை ரூ. 25 ஆயிரத்தில் துவங்கி ரூ. 30 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.






