என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ அசத்தல் அம்சம் கொண்டு உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலினை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் 2021 ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
மேலும் புதிய மாடலின் வடிவமைப்பு மற்றும் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றும், தற்போதைய அம்சங்களே பெரும்பான்மையாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், புதிய மாடலில் இன்-ஏர் ஜெஸ்ட்யூர் வசதி வழங்கப்படலாம் என சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது.

வயர்லெஸ் ஹெட்போன்களில் ஜெஸ்ட்யூர் வசதி சோனி மற்றும் போஸ் நிறுவனங்களின் பிரீமியம் மாடல்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த வரிசையில் தற்சமயம் ஆப்பிள் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இன்-ஏர் ஜெஸ்ட்யூர் கொண்டு ஏர்பாட்சை தொடாமலேயே இசையை இயக்குவும், அழைப்புகளை ஏற்கவும் முடியும்.
இந்த அம்சம் இருந்தால், பயனர் கைகள் ஏர்பாட்சை நோக்கி வருவது கண்டறியப்பட்டு மியூசிக் பிளேபேக், சிரியை இயக்குவது மற்றும் அழைப்புகளை ஏற்பது போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும். இத்துடன் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை ஆன் / ஆஃப் செய்வதற்கான வசதியும் புது மாடலில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய இன்-ஏர் ஜெஸ்ட்யூர் வசதி மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ள அம்சமாக இருக்கும். காப்புரிமை பெறப்பட்ட இந்த அம்சம் புதிய ஏர்பாட்ஸ் மாடலில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் ரகசியமாக உருவாக்கி வரும் ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையை தொடர்ந்து டிவி மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் போன்றவற்றை அறிமுகம் செய்து, தொழில்நுட்ப சந்தையில் தனது சாதனங்கள் பிரிவை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் களமிறங்க ஒன்பிளஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய கிட்டத்தட்ட ஒரு வருடமாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை முன்னாள் ஒன்பிளஸ் ஊழியர் ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து புதிய ஒன்பிளஸ் வாட்ச் பற்றிய விவரங்கள் ஐஎம்டிஏ (இன்போகாம் மீடியா டெவலப்மென்ட் அத்தாரிட்டி) வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதில் புதிய ஒன்பிளஸ் வாட்ச் டபிள்யூ301ஜிபி எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது வாட்ச் மாடலை எப்போது வெளியிடும், அதன் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தவலும் இல்லை. எனினும், ஒரு வருடத்திற்கும் மேலாக உருவாக்கப்படுவதால், விரைவில் அது அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம்.
அதிநவீன கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகும் போக்கோ ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
போக்கோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. போக்கோ எக்ஸ்2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக வெளியாக இருக்கும் புது ஸ்மார்ட்போன் போக்கோ எக்ஸ்3 பெயரில் அழைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய போக்கோ எக்ஸ்3 சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இதுபற்றிய டீசர்களை பொருத்தவரை விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்கோ நிறுவன விளம்பர பிரிவு மேலாளரின் ட்விட்டர் பதிவின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த கேமரா சென்சார் பிக்சல் பின்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 16 எம்பி ரெசல்யூஷனில் புகைப்படங்களை வழங்கும் என கூறப்படுகிறது.
கேமரா விவரங்களுடன், அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில், போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் ப்ரோ மோட், அப்ரேச்சர், எக்ஸ்போஷர், ஐஎஸ்ஒ மற்றும் வைட் பேலன்ஸ் உள்ளிட்டவற்றை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ சீரிஸ் பிரிவில் அறிமுகமாக இருப்பதாகவும் இது கேலக்ஸி ஏ12 பெயரில் அழைக்கப்பட இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ11 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் எஸ்எம்-ஏ125எஃப் எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் எஸ்எம்-ஏ115எஃப் எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இத்துடன் எல்சிடி ஸ்கிரீன், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் மற்றும் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
முந்தைய கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வழங்கப்பட்டு இருந்தது. இத்துடன் பன்ச் ஹோல் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய கேலக்ஸி ஏ12 இதே வடிவமைப்பு கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
அமேசான் மற்றும் பேடிஎம் செயலிகள் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
அமேசான் மற்றும் பேடிஎம் செயலிகள் மூலம், சமையல் கியாஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன.
இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன.

தமிழகத்தில் 2.38 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சேவையாக பேடிஎம், அமேசான் ஆகிய செயலிகளின் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி உள்ளன.
இதன்படி, சிலிண்டர் முன்பதிவு செய்ய, அவற்றில் உள்ள ‘பேபில்’ என்ற பகுதிக்குச் சென்று கியாஸ் சிலிண்டர் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், தொடர்புடைய எண்ணெய் நிறுவனத்தைத் தேர்வு செய்து, பதிவு செய்த மொபைல் எண் அல்லது சிலிண்டர் இணைப்பு எண்ணை பதிவு செய்து சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.
கியாஸ் ஏஜென்சி மூலமாக சிலிண்டர் வீட்டுக்கு விநியோகம் செய்யப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகி வருகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் தனது மிட் ரேன்ஜ் மாடலை ஒன்பிளஸ் நார்டு எனும் பெயரில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர் கொண்ட மற்றொரு 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பட்ஜெட் விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் ஒன்றையும் ஒன்பிளஸ் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
க்ளோவர் எனும் குறியீட்டு பெயரில் உருவாகும் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், மூன்று பிரைமரி கேமராக்கள் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்கா உள்பட உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஒன்பிளஸ் க்ளோவர் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.52 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
-ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
- அட்ரினோ 610 ஜிபியு
- 4 ஜிபி LPDDR4x ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 2 எம்பி மேக்ரோ சென்சார்
- 16 எம்பி செல்ஃபி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
ஆப்பிள் நிறுவனம் கூகுளுக்கு போட்டியாக தேடுப்பொறி சேவையை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக தேடுப்பொறி சேவையை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேடுப்பொறி பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானதும் இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.
ஐஒஎஸ், ஐபேட்ஒஎஸ் மற்றும் மேக்ஒஎஸ் தளங்களில் கூகுள் டீபால்ட் சர்ச் என்ஜின் சேவையாக தொடர கூகுள் நிறுவனம் பல கோடி டாலர்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்தி வருகிறது. எனினும், இரு நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்த விவகாரத்தை பிரிட்டன் கூர்ந்து கவனித்து வருவதாக தகவல் வெளியானது.

இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் சொந்த தேடுப்பொறி சேவையை உருவாக்க திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்த சேவை சார்ந்த திட்டத்தில் பணியாற்ற பொறியாளர்களை பணியமர்த்த இருக்கிறது.
இந்த பட்டியலில் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லெர்னிங் மற்றும் நேச்சுரல் லேங்குவேஜ் பிராசஸிங் போன்ற துறையில் பணியாற்றுவோரையும் ஆப்பிள் பணியமர்த்த இருக்கிறது. இத்துடன் ஐஒஎஸ் 14 மற்றும் ஐபேட்ஒஎஸ் 14 பீட்டா பதிப்புகளின் சர்ச் அம்சத்தில் கூகுள் சர்ச் பின்னுக்கு தள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
தேடுப்பொறி சேவை வழங்குவதில் ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரும் இடையூறுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு இருப்பதால் விரைவில் இதற்கு தீர்வு காண ஆப்பிள் முயற்சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் தனது அதிநவீன மூன்றாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து உள்ளது.
சியோமி நிறுவனம் தனது அதிநவீன மூன்றாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து உள்ளது. இது சரியான டிஸ்ப்ளே மற்றும் செல்ஃபி பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என சியோமி தெரிவித்தது.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் சியோமி தனது முதல் தலைமுறை அன்டர் ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. பின் அக்டோபர் மாதத்தில் இரண்டாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய மூன்றாம் தலைமுறை கேமரா தொழில்நுட்பத்தில் OLED ஸ்கிரீன் முற்றிலும் தெரியாத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கென ஸ்கிரீனின் கீழ் இருக்கும் கேமரா பிக்சல்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கின்றன. இவை ஸ்கிரீனில் இருந்து சப்-பிக்சல்களிடையே வெளிச்சத்தை கொண்டு சேர்க்க வழி செய்கின்றன.
சியோமியின் மூன்றாம் தலைமுறை அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பம் வழக்கமான செல்ஃபி கேமராக்களை போன்றே சீராக செயல்படும் திறன் கொண்டுள்ளது. புதிய கேமரா தொழில்நுட்பத்திற்கான உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு வாக்கில் துவங்க இருக்கிறது. இந்த அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது.
பொதுமக்கள் அந்த வலைதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என ரிலையன்ஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோமார்ட் சேவை சமீபத்தில் துவங்கப்பட்டது. துவங்கியது முதல் ஜியோமார்ட் பெயரை தழுவி பல்வேறு இணைய முகவரிகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஜியோமார்ட் பெயரில் பல்வேறு போலி தளங்கள் பயனர் விவரங்கள் மற்றும் பணத்தை அபகரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோமார்ட் பெயரை தழுவி செயல்படும் போலி வலைதளங்கள் பற்றிய எச்சரிக்கை தகவலை வெளியிட்டு உள்ளது. விற்பனையாளர்கள் அல்லது ஃப்ரான்சைஸ் முறையிலான வியாபாரத்தை ஜியோமார்ட் இதுவரை அதிகாரப்பூர்வமாக துவங்கவில்லை என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

இத்துடன் தனிநபரை ஃப்ரான்சைசியாக நியமிக்க எவ்வித கட்டணத்தையும் வசூலிப்பது இல்லை என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. ஜியோமார்ட் பெயரில் செயல்படும் போலி வலைதளங்கள் பற்றி எச்சரிக்கை விடுத்தது மட்டுமின்றி சில போலி வலைதளங்களின் பெயர்களையும் ரிலையன்ஸ் நிறுவனம் பட்டியலிட்டு உள்ளது.
போலி வலைதளங்களில் டிரேட்மார்க் தவறாக பயன்படுத்துவது அப்பட்டமான உண்மை. இந்த விவகாரத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக ரிலையன்ஸ் தெரிவித்து இருக்கிறது. இதே தகவலை ரிலையன்ஸ் தனது சமூக வலைதள பக்கங்களிலும் பதிவிட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஸ் ஏர் ப்ரோ மாடல் ஏர்பாட்ஸ் ப்ரோ தோற்றத்தில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி நிறுவனம் வயர்லெஸ் இயர்பட்ஸ் சந்தையில் பட்ஸ் ஏர் மாடலுடன் கடந்த ஆண்டு களமிறங்கியது. ரூ. 3999 விலையில் ரியல்மி தனது வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் ரியல்மி புதிய இயர்பட்ஸ் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய இயர்பட்ஸ் ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ எனும் பெயரில் அறிமுகமாகும் என்றும் இதில் பிரீமியம் அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இது பார்க்க ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

புதிய இயர்பட்ஸ் உருவாக்குவதற்கான காப்புரிமை கோரி ரியல்மி சீனாவில் விண்ணப்பித்து இருப்பதாக தெரிகிறது. காப்புரிமையில் புதிய இயர்பட்ஸ் பெயர், அம்சங்கள் பற்றி எந்த தகவல்களும் இடம்பெறவில்லை. எனினும், இது ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்று இயர்டிப்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
பிரீமியம் மாடல் என்ற வகையில் புதிய இயர்பட்ஸ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால், இந்த இயர்பட்சில் பேசிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்கோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்3 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் கேமரா விவரங்கள் அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மூலம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் புது போக்கோ ஸ்மார்ட்போன் வித்தியாசமாக கேமரா செட்டப் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதன் பின்புற பேனல் வடிவமைப்பு அமெரிக்காவின் எஃப்சிசி வலைதளத்திலும் லீக் ஆகி இருந்தது. இதில் வித்தியாசமான கேமரா லே-அவுட், டைமண்ட் வடிவம் கொண்டுள்ளது.

போக்கோவின் புது ஸ்மார்ட்போன் வடிவமைப்பை அம்பலப்படுத்தும் நான்கு படங்களை பதிவிட்டு, அவற்றில் எது உண்மையான கேமரா செட்டப் கொண்டிருக்கும் என போக்கோ செய்தி தொடர்பாளரும், விளம்பர பிரிவு மேலாளருமான அங்கஸ் கை ஹோ என்ஜி தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
முந்தைய எஃப்சிசி வலைதள விவரங்களின் படி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் எம்2007ஜெ20சிஜி எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய போக்கோ ஸ்மார்ட்போனில் 64 எம்பி ஏஐ சூப்பர் கேமரா லேபெலுடன் 64 எம்பி பிரைமரி சென்சார் வழங்கப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 5ஜி ஸ்மார்ட்போனினை செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான டீசரை சாம்சங் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அன்பேக்டு பார்ட் 2 விர்ச்சுவல் நிகழ்வில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது.
கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனில் 7.6 இன்ச் எட்ஜ்-டு-எட்ஜ் , பெசல் லெஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே மற்றும் 6.2 இன்ச் இன்ஃபினிட்டி ஒ கவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இதன் உள்புறம் பன்ச் ஹோல் கேமராவும், கவர் டிஸ்ப்ளேவில் மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்பேக்டு பார்ட் 2 விர்ச்சுவல் நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது.






