search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒன்பிளஸ்
    X
    ஒன்பிளஸ்

    ரகசியமாக உருவாகும் ஒன்பிளஸ் வாட்ச் - இணையத்தில் லீக் ஆன விவரங்கள்

    ஒன்பிளஸ் நிறுவனம் ரகசியமாக உருவாக்கி வரும் ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையை தொடர்ந்து டிவி மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் போன்றவற்றை அறிமுகம் செய்து, தொழில்நுட்ப சந்தையில் தனது சாதனங்கள் பிரிவை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் களமிறங்க ஒன்பிளஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய கிட்டத்தட்ட ஒரு வருடமாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை முன்னாள் ஒன்பிளஸ் ஊழியர் ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

     ஒன்பிளஸ் வாட்ச்

    இதைத் தொடர்ந்து புதிய ஒன்பிளஸ் வாட்ச் பற்றிய விவரங்கள் ஐஎம்டிஏ (இன்போகாம் மீடியா டெவலப்மென்ட் அத்தாரிட்டி) வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதில் புதிய ஒன்பிளஸ் வாட்ச் டபிள்யூ301ஜிபி எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.  

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது வாட்ச் மாடலை எப்போது வெளியிடும், அதன் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தவலும் இல்லை. எனினும், ஒரு வருடத்திற்கும் மேலாக உருவாக்கப்படுவதால், விரைவில் அது அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம்.
    Next Story
    ×