என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 லைட் ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 லைட் ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 990 பிராசஸர் கொண்டிருக்கிறது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டு இருந்தது.

    கீக்பென்ச் தளத்தில் சாம்சங் எஸ்எம்-ஜி780எஃப் எனும் மாடல் நம்பர் கொண்ட மாடல் இந்திய வேரியண்ட் என கூறப்படுகிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் சிங்கில் மற்றும் மல்டி-கோர் டெஸ்டிங்களில் முறையே 588 மற்றும் 2448 புள்ளிகளை பெற்று இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்படுகிறது.

     கேலக்ஸி எஸ்20 லைட்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்20 லைட் மாடலில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஐபி68 தர சான்று, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 6 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார் போல் இந்த மாடல் விலை சற்றே குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    நிறங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி எஸ்20 லைட் மாடல் கிரீன், ஆரஞ்சு, ரெட் மற்றும் வைட் நிறங்களில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இதே நிறங்கள் அனைத்து சந்தையிலும் விற்பனைக்கு வருமா அல்லது வேறுபடுமா என்பது தற்சமயம் கேள்விக்குறியாக இருக்கிறது. 
    லெனோவோ நிறுவனத்தின் புதிய யோகா ஸ்லிம் 7ஐ லேப்டாப் பிரீமியம் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    லெனோவோ நிறுவனம் இந்தியாவில் புதிய யோகா ஸ்லிம் 7ஐ லேப்டாப் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய லேப்டாப்பில் இன்டெல் நிறுவனத்தின் புதிய 10 ஆம் தலைமுறை மொபைல் பிராசஸர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

    இத்துடன் என்விடியா ஜீஃபோர்ஸ் எம்எக்ஸ்350 ஜிபியு, நீண்ட பேட்டரி லைஃப், விண்டோஸ் ஹெலோ முக அங்கீகார வசதி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    புதிய அல்ட்ரா-ஸ்லிம் லேப்டாப் கிளான்ஸ் பை மிராமெட்ரிக்ஸ் எனும் ஏஐ சார்ந்த மென்பொருள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் பவர் பட்டனில் கைரேகை சென்சார் மற்றும் விண்டோஸ் ஹெலோ முக அங்கீகார வசதி போன்ற கூடுதல் செக்யூரிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

     லெனோவோ யோகா ஸ்லிம் 7ஐ

    புதிய லெனோவோ லேப்டாப் மாடலில் 10 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ7 பிராசஸர், என்விடியா ஜீஃபோர்ஸ் எம்எக்ஸ்350 2ஜிபி ஜிடிடிஆர்5, அதிகபட்சம் 512 ஜிபி எஸ்எஸ்டி மற்றும் அதிகபட்சம் 16 ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் 3200 மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதில் 14 இன்ச் ஃபுல் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, டால்பி விஷன் மற்றும் லெனோவோ சூப்பர் ரெசல்யூஷன் மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் வைபை 6, டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் இன்டெல் ஐரிஸ் பிளஸ் கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.

    புதிய லெனோவோ யோகா லேப்டாப் ஸ்லேட் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 79990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் லெனோவோ வலைதளங்களில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி துவங்குகிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் ரேசர் 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.


    மோட்டோரோலா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை செப்டம்பர் 9 ஆம் தேதி அமெரிக்காவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது. முன்னதாக மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டது.

    முன்னதாக கடந்த மாதம் வெளியான ரென்டர்களின் படி புதிய தலைமுறை மோட்டோ ஸ்மார்ட்போன் ஒடிசி எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவது தெரியவந்துள்ளது. இதில் கைரேகை சென்சார் கீழ்புறத்தில் காணப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது.

     மோட்டோரோலா ரேசர் 2

    முந்தைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர், ஸ்னாப்டிராகன் எக்ஸ்52 மோடெம் மூலம் 5ஜி வசதி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 2845 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இத்துடன் புகைப்படங்களை எடுக்க சாம்சங்கின் 48 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ரேசர் 2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் குவிக் வியூ டிஸ்ப்ளே சார்ந்த புதிய அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
    டிக்டாக்கில் முதலீடு செய்வது பற்றி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் பைட்-டேன்ஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


    சீனாவை பூர்வீகமாக கொண்டு இயங்கும் பைட்-டேன்ஸ் நிறுவனம் டிக்டாக்கில் முதலீடு செய்வது பற்றி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

    டிக்டாக்கில் முதலீடு செய்வது தொடர்பாக இரு நிறுவனங்களிடையே கடந்த மாதம் பேச்சுவார்த்தை துவங்கி இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ரிலையன்ஸ், பைட்-டேன்ஸ் மற்றும் டிக்டாக் சார்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. 

     ரிலையன்ஸ ஜியோ

    முன்னதாக மத்திய அரசு டிக்டாக் வீசாட் உள்பட சீனாவை சேர்ந்த சுமார் 59 செயலிகளை பயன்படுத்த தடை விதித்தது. சீனாவுடனான எல்லை பிரச்சினை காரணமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு இந்த செயலிகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்பதால் இவை தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிக்டாக் மற்றும் வீசாட் செயலிகளை தடை செய்யப்போவதாக அறிவித்து, சமீபத்தில் அதற்கான கோப்புகளிலும் டிரம்ப் கையெழுத்திட்டார். இதனிடையே மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக்கை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்து இருந்தது.
    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான சர்பேஸ் டுயோ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலான சர்பேஸ் டுயோ செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. புதிய சர்பேஸ் டுயோ இரண்டு ஸ்கிரீன் கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். சர்பேஸ் டுயோ ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது.

     மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ

    மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ சிறப்பம்சங்கள்

    - இரு 5.6 இன்ச் OLED 1350x1800 பிக்சல் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்
    - 6 ஜிபி ரேம்
    - அதிகபட்சம் 256 ஜிபி மெமரி
    - 11 எம்பி பிரைமரி கேமரா
    - 3577 எம்ஏஹெச் பேட்டரி
    - 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
    - யுஎஸ்பி டைப் சி
    - பிரத்யேக ஸ்டைலஸ்

    மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ விலை 1399 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,04,600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமெரிக்காவில் செப்டம்பர் 10 ஆம் தேதி துவங்குகிறது. 
    ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி சி12 மற்றும் சி15 ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

    ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி சி12 மற்றும் சி15 ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

    புதிய ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த சி11 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். ரியல்மி சி15 ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தோனேசியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இரு ஸ்மார்ட்போன்களிலும் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. 

     ரியல்மி சி சீரிஸ்

    ரியல்மி சி15 சிறப்பம்சங்கள்

    - 6.52 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் 
    - 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
    - ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
    - 3 ஜிபி / 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - 4 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ், PDAF
    - 8 எம்பி 119° அல்ட்ரா வைடு கேமரா, f/2.25
    - 2 எம்பி ரெட்ரோ சென்சார்
    - 2 எம்பி மோனோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - கைரேகை சென்சார் 
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - மைக்ரோ யுஎஸ்பி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் சார்ஜிங்

    ரியல்மி சி12 மற்றும் சி15 ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இதன் விலை விவரங்கள் விரைவில் வெளியாகலாம்.
    எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் வெளியீட்டு விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    மைக்ரோசாப்ட் மற்றும் எக்ஸ்பாக்ஸ் இணைந்து அடுத்த தலைமுறை கேமிங் கன்சோலின் விற்பனை மூன்று மாதங்களில் துவங்கும் என தெரிவித்து இருக்கின்றன. புதிய கேமிங் கன்சோல்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சர்வதேச வெளியீடு என்பதால் புதிய எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மாடல் இந்திய சந்தையிலும் நவம்பர் மாத வாக்கில் கிடைக்கும் என தெரிகிறது. மேலும் புதிய எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் நவம்பர் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

     எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ்

    எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் கண்ட்ரோலர் பேக்கேஜிங்கில் நவம்பர் 6 ஆம் தேதிக்கு முன் விற்பனை செய்ய வேண்டாம் என குறிப்பிடப்பட்டு இருப்பதாலேயே இதன் வெளியீடு நவம்பர் 6 ஆம் தேதி நடைபெறலாம் என கூறப்படுகிறது.

    புதிய எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மாடலில் ஆயிரக்கணக்கான கேம்கள் கிடைக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மாடல் பிளே ஸ்டேஷன் 5 சாதனத்திற்கு போட்டியாக அமைகிறது. 

    சோனியின் பிளே ஸ்டேஷன் 5 கேமிங் கன்சோலும் நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இரு கன்சோல்களும் விடுமுறை காலத்தை குறிவைத்து வெளியிடப்பட இருக்கின்றன.
    ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் சொத்து மதிப்பு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் சந்தை மதிப்பு 1 ட்ரில்லியன் (அதாவது ஒரு லட்சம் கோடி) அமெரிக்க டாலர்களை தாண்டியது. இதன் காரணமாக ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியான டிம் குக்கின் சொத்து மதிப்பு முதல் முறையாக 100 கோடி அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தில் 8,47,969 பங்குகளை டிம் குக் வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு தனது சம்பளத்தின் பகுதியாக டிம் குக் 12.5 கோடி டாலர்களை டிம் குக் பெற்றார். கடந்த வாரம் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 10 ஆயிரம் கோடி டாலர்களாக அதிகரித்தது.

    டிம் குக்

    ஆப்பிள் மட்டுமின்றி பேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களின் சொத்து மதிப்பும் கொரோனாவைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில் பலமடங்கு அதிகரித்தது. மக்கள் பெரும்பாலும் ஆன்லைனில் நேரத்தை கழித்ததே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    தற்சமயம் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதல் முறையாக 2 ட்ரில்லியன் (அதாவது இரண்டு லட்சம் கோடி) அமெரிக்க டாலர்களை தாண்ட இருக்கிறது. இரு ஆண்டுகளுக்கு முன் 1 ட்ரில்லியன் சந்தை மதிப்பு கொண்ட முதல் நிறுவனமாக ஆப்பிள் உருவெடுத்தது.
    இந்திய சந்தையில் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவில் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 2 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. மொபைல் போன்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதால் விலை உயர்த்தப்படுவதாக ஒப்போ சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

    எனினும், சமீபத்தில் இதன் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் விலை குறைக்கப்பட்டது. விலை குறைப்பு அறிவிக்கப்பட்ட ஒரே மாதத்தில் ஒப்போ ரெனோ 3 ப்ரோ விலை மீண்டும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஒப்போ ரெனோ 3 ப்ரோ

    ஒப்போ ரெனோ 3 ப்ரோ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 27990 என மாறி உள்ளது. முனனதாக இதன் விலை ரூ. 29990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதேபோன்று 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29990 என மாறி இருக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 32,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    அந்த வகையில் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை அதிகபட்சம் ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. குறைக்கப்பட்ட புதிய விலை ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற வலைதளங்களில் மாற்றப்பட்டு விட்டது. இதே விலை ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் மாற்றப்படும் என தெரிகிறது.
    சியோமி நிறுவனம் சீன சந்தையில் புதிய எம்ஐ டிவி லக்ஸ் OLED டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து உள்ளது.

    சியோமி நிறுவனம் எம்ஐ டிவி லக்ஸ் OLED டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் டிவி மாடலை தனது 10-வது ஆண்டுவிழா நிகழ்வில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த டிவியில் 55 இன்ச் எட்ஜ்-டூ-எட்ஜ் டிரான்ஸ்பேரன்ட் 4K OLED 10 பிட் பேனல், 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் ஏஐ மாஸ்டர் ஸ்மார்ட் என்ஜின், மீடியாடெக் 9650 கஸ்டம் மேட் டிவி சிப், ஏஐ மாஸ்டர் ஆடியோ போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இது வெவ்வேறு மோட்களில் ஆடியோவை வித்தியாசமாக வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. 

    மேலும் இதில் 5.7 எம்எம் அல்ட்ரா தின் பாடி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கஸ்டம் மேட் எம்ஐயுஐ பிரத்யேக ஹோம் பேஜ், செட்டிங்ஸ், மை ஆப் மற்றும் உறுதியான டிரான்ஸ்பேரன்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. 

     எம்ஐ டிவி லக்ஸ் OLED டிரான்ஸ்பேரன் எடிஷன்

    சியோமி எம் ஐடிவி லக்ஸ் OLED டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் சிறப்பம்சங்கள்:

    - 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K OLED டிஸ்ப்ளே
    - குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ73 மீடியாடெக் எம்டி9650 பிராசஸர்
    - மாலி ஜி52 எம்சி1 ஜிபியு
    - புரொஃபஷனல் கேம் மோட், ஆட்டோமேடிக் லோ லேடென்சி மோட்
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி மெமரி
    - எம்யுஐ டிவி
    - வைபை, ப்ளூடூத் 5, 3xஹெச்டிஎம்ஐ 2.1, 2x யுஎஸ்பி
    - டால்பி அட்மோஸ், டிடிஎஸ் ஆடியோ

    சியோமி எம் ஐடிவி லக்ஸ் OLED டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் மாடல் விலை 49999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 537210 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சீனாவில் இதன் விற்பனை ஆகஸ்ட் 16 ஆம் தேதி துவங்குகிறது.
    அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 3 மாடலின் புது வேரியண்ட் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
     

    அசுஸ் நிறுவனம் தனது ரோக் போன் 3 மாடலினை இந்தியாவில் கடந்த மாதம் அறஇமுகம் செய்தது. ரோக் போன் 3 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி விற்பனை செய்யப்பட்டது. தற்சமயம் இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விற்பனை ஆகஸ்ட் 21 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை அசுஸ் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED ஹெச்டிஆர் 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

     ரோக் போன் 3

    இதில் புது வடிவமைப்பு கொண்ட காப்பர் 3டி வேப்பர் சேம்பர், பெரிய கிராஃபைட் பிலிம் வழங்கப்பட்டுள்ளது. இது ரோக் போன் 2 மாடலில் உள்ளதை விட ஆறு மடங்கு சிறப்பானதாக இருக்கிறது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 24 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    அசுஸ் ரோக் போன் 3 மாடலில் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வோல்ட் 3ஏ 30 வாட் ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய ரோக் போன் 3 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 57999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 49,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    கொரோனாவைரஸ் பற்றி தவறான தகவல் அடங்கிய சுமார் 70 லட்சம் பதிவுகள் பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


    பேஸ்புக் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் மட்டும் கொரோனாவைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட சுமார் 70 லட்சம் பதிவுகளை நீக்கி உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. 

    இதே காலக்கட்டத்தில் பேஸ்புக் செயலியில் இருந்து மற்றவர்களை இழிவுப்படுத்தும் தகவல் அடங்கிய சுமார் 2.25 கோடி பதிவுகள் நீக்கப்பட்டு இருப்பதாக பேஸ்புக் தெரிவித்து உள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது சுமார் 96 லட்சம் அதிகம் ஆகும். 

    பேஸ்புக்

    இத்துடன் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்த சுமார் 87 லட்சம் பதிவுகள் பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 63 லட்சம் வரை அதிகம் ஆகும். 

    தரவுகளை ஆய்வு செய்ய ஆட்டோமேஷன் முறையை பயன்படுத்துவதாக கடந்த ஏப்ரல் மாதம் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அலுவலகத்தில் தரவுகளை ஆய்வு செய்வோர் மிக குறைந்த எண்ணிக்கையில் இருப்பதே ஆட்டோமேஷன் முறையை பயன்படுத்த காரணமாக கூறப்பட்டது.
    ×